காசாங்காடு கிராமம் முழுவதும் கேபிள் தொலைகாட்சி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக கேபிள் தொலைகாட்சி இணைப்பு இல்லை, என்று கிடைக்கும் என்பதும் தெரியவில்லை. இதற்கான முன் அறிவிப்புகளும் இந்த நிறுவனத்திடமிருந்து மக்களுக்கு தர படவில்லை.
தொலைகாட்சி இணைப்பு துண்டிக்கபட்டுள்ளதால் கிராமம் முழுவதும் செய்திகள், பொழுதுபோக்கு போன்ற தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மக்களிடம் போய் சேரவில்லை.
இந்த பிரச்னை ஒரு பக்கம் இருக்க, நிலையான இணைப்பை வழங்குவதற்கு மக்கள் மற்ற நிறுவனங்களிடம் கேட்டுள்ளனர். அதில் ஹாத்வே நிறுவனமும் அடங்கும்.
முறையாக இயக்கபடாத நிறுவனங்கள் இவ்வாறு சேவைகளை துண்டிப்பது எந்த நாட்டிலும் இருக்க தான் செய்கின்றது. அனைத்திலும் அவதிப்படுவது அப்பாவி மக்களே. இதை கண்டிக்க கிராமத்திலும் ஒரு முறையான கட்டுபாடுகள் இல்லை.
என்று தான் இந்திய கிராமங்களுக்கு முறையான சேவைகள் தரும் நிறுவனங்கள் வரபோகின்றதோ? இதை அரசாங்கம் இவ்வாறு பிரச்சனைகள் வராமல் தடுக்க நடைமுறை முறைபடுத்த போகின்றதோ?
இரநூருக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் உள்ள இந்த கிராமத்திலே இந்த நிலை !!!
கிராமத்தில் அனைவரும் சேர்ந்து இதற்கான தீர்வை கொண்டு வர முயற்சிக்கலாமே?
வீடு வீடாக வந்து ஓட்டு வாங்கிய கிராம தலைவர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இந்த போன்ற பிரச்சனைகளுக்கு என்ன பதில் தர போகின்றார்கள்?
செய்தி உதவி: கிருபாகரன், பட்டுக்கோட்டை
பிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்
7 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக