அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

ஞாயிறு, ஆகஸ்ட் 30, 2009

காசாங்காடு PLB - அணியினர் முதல் பரிசு

நாட்டுச்சாலை கிராமத்தில் நேற்று இரவு(28.08.2009) முசுகுந்த அளவிளான கபடிப் போட்டி நடைபெற்றது இதில் காசாங்காடு PLB-அணியினர் முதல் பரிசு பெற்று சாதனை படைத்தனர். இவர்களுக்கு காசாங்காடு இணையக்குழு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறது.

தகவல் உதவி: தீபக் குமார், காசாங்காடு


வியாழன், ஆகஸ்ட் 27, 2009

ஏழை மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன்


தகவல் உதவி: வீரபால், காசாங்காடு


தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களின் கல்விக் கடனுக்கான முழு வட்டியையும் மத்திய அரசே மானியமாக ஏற்றுக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று புதுடெல்லியில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

முழு வட்டி மானியத்தை பெற மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 4.5 லட்சமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்வியானாலும், பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு கிடைப்பதற்கு, இந்த வட்டி மானியம் உதவும் என்றும் அவர் கூறினார்.

நாடு முழுவதும் இத்திட்டத்தால் மொத்தம் 5 லட்சம் மாணவர்கள் பலனடைவார்கள் என்றும் கூறிய சிதம்பரம், கடந்த மார்ச் 31ஆம் தேதி வரையிலான காலத்தில் மொத்தம் 16 லட்சம் மாணவர்கள் கல்விக்கடன் பெற்றுள்ளதாகவும், 24 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மாதம் ரூ. 1500/- யில் 60 நாடுகளுக்கு அளவில்லாமல் தொலைபேசி மூலம் பேசலாம்

உலகத்தில் எப்பகுதியிலிரிந்தும் இந்தியாவிற்கு ஒரு மாதத்திற்கு அளவில்லாமல் பேச ரூ. 1500/- மட்டுமே. இதை அமெரிக்காவில் உள்ள "வோநேஜ்" என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து தொலைபேசி எண்களுக்கும், கை தொலைபேசி எண்களுக்கும் இதன் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் உங்களுக்கு தெரிந்தவர்கள் இதே சேவையில் இருந்தால் நீங்கள் இரண்டு மாதம் இலவசாமாக பேசலாம்.

இந்த சேவை மூலம் இந்தியா மட்டுமன்றி மேலும் 60 நாடுகளுக்கும் அளவில்லாமல் பேசலாம். அதில் சிங்கப்பூர், ஐரோப்பா நாடுகள், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் அடங்கும்.

இது ஒலியை இணையம் மூலம் அனுப்பும் தொழில் நுட்பத்தால் ஆனது.

கிராம மக்கள் தங்கள் வசிக்கும் நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து இந்த சேவையை பயன்படுத்தவும்.

நன்றி.

சனி, ஆகஸ்ட் 22, 2009

கிராமத்தில் ஒரு வாரமாக இரவில் கனத்த மழை

கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக இரவில் கனத்த மழை பெய்துள்ளது. கடுமையான வெயிலில் தவித்து கொண்டிருந்த கிராமத்திற்கு இது பெரும் அளவில் வெப்பத்தை தனிக்க உதவும் என நம்புகிறோம்.

தகவல் உதவி: தவமணி, பட்டுகோட்டை

ஞாயிறு, ஆகஸ்ட் 16, 2009

கிராமத்தில் நடந்த கபடி போட்டி முடிவுகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு ,காசாங்காடு PLB 25-வது வெள்ளி விழா கபடி போட்டியில்

உள்ளூர் புதுக்கோட்டை அணியினர் முதல்யிடத்தையும்,
ஆலம்பள்ளம் அணியினர் இரண்டாம்யிடத்தையும்,
பள்ளத்தூர் அணியினர் மூன்றாம்யிடத்தையும்,
காசாங்காடு அணியினர் நான்காம்யிடத்தையும்

தட்டி சென்றனர்.வெற்றிப் பெற்ற அணியினருக்கு விழாக்குழுவினர் பரிசு வழங்கி பாராட்டினர்.
வெற்றிப் பெற்ற அணியினருக்கு காசாங்காடு இணையக்குழுவின் வாழ்த்துக்கள்.

தகவல் உதவி: தீபக் குமார், காசாங்காடு

வெள்ளி, ஆகஸ்ட் 14, 2009

கிராமத்தில் மாபெரும் கபடி போட்டி

62-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, காசாங்காடு கிராமத்தில் இளைஞர்களால் நடத்தப்படும் PLB, 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மாபெரும் கபடி தொடர்ப்போட்டி வரும் 15.08.2009, சனிக்கிழமை இரவு 9-மணி அளவில் மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற உள்ளது.

அனைவரும் பங்குகொண்டு சிறபிக்க வேண்டுகிறோம்.

மேலும் கபடியை பற்றி தெரிந்து கொள்ள,

சர்வதேச கபடி பேரவை
சர்வதேச கபடி பேரவை


தகவல் உதவி: தீபக்குமார், காசாங்காடு

மாரியம்மன் கோவிலில் லட்ச அர்ச்சனை

காசாங்காடு மாரியம்மன் கோவிலில் இன்று மாலை 05:00 மணியளவில் லட்ச அர்ச்சனை நடைபெற இருக்கின்றது. பொது மக்கள் அனைவரும் பங்கு கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

நன்றி.

தகவல் உதவி: நெடுஞ்செழியன், காசாங்காடு

புதன், ஆகஸ்ட் 12, 2009

பன்றி காய்ச்சல் - கிராமத்திற்கு தெரியவேண்டியவை

காசாங்காடு கிராமத்தில் இருந்து வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அதிகம். வெளிநாட்டு போக்குவரத்து அதிகம் இருப்பதால் பன்றி காய்ச்சல் பற்றி விழிப்புணர்வு மிகவும் அவசியம்.

பின்வரும் இணைய சுட்டிகள், கிராம மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் என நம்புகிறேன்.

பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க‌ சில யோசனைகள்
பன்றி காய்ச்சல்
ஸ்வைன் ஃப்ளு - சில குறிப்புக்கள் (பன்றி காய்ச்சல்)
பன்றி காய்ச்சல் H1N1 பரவலும், கணிதமும்
பன்றி காய்ச்சல் பரவுவது எப்படி?
பன்றி காய்ச்சல் நோய் பரவுவதை தடுக்க ...
பன்றி காய்ச்சல்: பலியான மாணவியின் குடும்பம் ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு
கூகிள் செய்திகள் தேடு தளத்திலிருந்து

தகவல் உதவி: ஞானசெல்வி, திருநெல்வேலி

செவ்வாய், ஆகஸ்ட் 11, 2009

கிராமத்தில் கன மழை

கிராமத்தில் தற்போது இடியுடன் கூடிய கனமழை பெய்து கொண்டு இருக்கின்றது.

நன்றி.

தகவல் உதவி: தவமணி, பட்டுகோட்டை.

ஞாயிறு, ஆகஸ்ட் 09, 2009

பட்டுக்கோட்டை Times பத்திரிக்கையில் காசாங்காடு இணையத்தளம் பற்றி

பட்டுக்கோட்டை Times வார இதழ் பத்திரிக்கையில், 07.08.2009 அன்று வெளியான செய்தி பற்றிய தொகுப்பு கீழே.
நன்றி.




தகவல் உதவி: பட்டுக்கோட்டை Times, பட்டுக்கோட்டை .

சென்னை பல்கலைகழகத்தில் செல்வி. வித்யா தங்க பதக்கம்

சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரிந்து வரும் திரு. ஷண்முகம் & தேன்மொழி அவர்களின் மகள் செல்வி. வித்யா அவர்கள் சென்னை பல்கலைகழகத்தில் M.Sc Bioinformatics பிரிவில் மூன்றாம் இடம் பெற்று தங்க பதக்கம் பெற்றுள்ளார்.

கிராமத்திற்கு பெருமை சேர்க்கும் செல்வி. வித்யாவை காசாங்காடு இணைய குழு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

நன்றி.