அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

வெள்ளி, மார்ச் 26, 2010

2008-2009 ஆண்டில் கிராம வருமானம் 37% சதவிகிதமாக உயர்வு

2008-2009 ஆண்டு கிராம வருமானம் 37% சதவிகிதம் உயர்ந்துள்ளது. உலகெங்கிலும் பொருளியல் சரிவு நிலை காணப்பட்டலும் காசாங்காடு கிராமம் தனது வருமானத்தில் 37% சதவிகிதம் லாபத்தை ஈட்டியுள்ளது. இந்தியாவில் உள்ள கிராமங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்பதை இது தெளிவாக எடுத்துகாட்டியுள்ளது.

இதன் விபரங்கள் காசாங்காடு கிராம தகவல் உரிமை தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. படிவம் அனுப்பிய விபரங்களும் அரசு அதிகாரிகளின் பதில்களும் அதில் விரைவில் வெளியிடபடும்.

மேலும் இத்தகவல்கள் கேட்டு அனுப்பிய முப்பது நாட்களுக்குள் பதில் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் இணைய சுட்டி இங்கே:

http://rti.kasangadu.com/kirama-kanakkukal/2008---2009-am-antu

2008 - 2009 ஆம் ஆண்டின் வரவு செலவு சுருக்கம்:

ஆரம்ப இருப்பு: ரூ. 9,35,128.50
வரவு: ரூ. 7,92,830.00
கூடுதல்: ரூ. 17,27,958.50
செலவு: ரூ. 4,45,391.00
முடிவு இருப்பு: ரூ. 12,82,567.50

2008 - 2009 ஆம் ஆண்டில் காசாங்காடு கிராமத்திற்கு 2007-2008 ஆண்டை விட கிடைத்த அதிக வருவாய்: ரூ. 3,47,439.௦௦ (2007-2008 விட, 37% சதவிகிதம் அதிகம்)கருத்துகள் இல்லை: