skip to main |
skip to sidebar

நம் ஊரின் முனீஸ்வரர் ஆலயத்தின் திருப்பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக உரில் ஒரு குழு அமைக்கப்பட்டு முதற்கட்ட சீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன.
முனீஸ்வரருக்கு சிலையெடுப்பவர்கள், சிலையெடுத்து அதனை ஊர்வலமாகக் கொண்டுவந்து கோவில் உள்ள இடத்தில் நிறுவுவது என்பது காலம் காலமாக நடந்து வரும் நிகழ்ச்சியாகும்.
இதனால் போதிய இடமின்மை மற்றும் பராமரிப்பு செய்ய இயலாமை போன்ற நடைமுறைச் சிக்கல்கள் தோன்றுகின்றன. எனவே முனீஸ்வரர் உத்தரவு பெற்று புதிய சிமெண்ட் கலவையால் ஆன மூலவர் சிலை அமைக்க கிராமத்தினரால் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பழைய முனீஸ்வரர் சிலைகள் கோவில் வளாகத்தின் இருபுறங்களிலும் (தெற்கு மற்றும் வடக்கு) மாற்றி வைக்கும் பணிகள் கடந்த மூன்று தினங்களாக நடந்துவருகிறது.
மூலவர் சிறப்பு:
புதிதாக நிறுவ இருக்கும் முனீஸ்வரரின் மூலவர் சிலை நம் சோழமண்டலத்திலேயே மிக உயரமானதாகவும் (சுமார் 21 அடி) கம்பீரம் மிக்கதாகவும் அமைக்கவுள்ளதாக இதனை நிறுவும் ஸ்தபதி கூறியுள்ளார்.
திருப்பணி நிறைவு:
கிராமத்தினரின் மிகுந்த ஒத்துழைப்போடு இத்திருப்பணி இவ்வருடம்(2010) ஆடிமாததிற்குள் நிறைவு செய்யப்பட்டு ஆடிமாதத்தில் கண்திறப்பு மற்றும் சிறப்பு பூஜை செய்யப்படும் என திருப்பணியை மேற்கொண்டுள்ள ஐயா.விஸ்வலிங்கம் உள்ளிட்ட குழுவினர் தெரிவித்து வருகிறார்கள்.
தகவல் உதவி: திரு. சுகுமாரன், துபாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக