அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

வியாழன், ஜூன் 10, 2010

கிராமத்தினரின் "பெண்ணின் பெருமை" என்ற கவிதை படைப்பிற்கு பாராட்டு


சிங்கப்பூரில் நடந்த மகளிர் தின சிறப்பு கவிச்சோலையில், "பெண்ணின் பெருமை" என்ற தலைப்பில் பதினைந்து கவிஞர்கள் கவிதை படைத்தனர். இருவரின் சிறந்த படைப்புகள் தேர்ந்தேடுக்கபட்டதில், காசாங்காடு கிராமத்தை சேர்ந்த கவிஞர். அமிர்தலிங்கம் அவர்கள் ஒருவராக தேர்ந்தெடுக்கபட்டார்.

அதுபற்றி தினமலரில் வெளிவந்த செய்தியின் சுட்டி இங்கே.

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=4067&Country_name=South%20East%20Asia&cat=new

அந்த கவிதை இங்கே.

http://article.kasangadu.com/kavitai/kavinar-amirtalinkam/pennin-perumai


>>>>>>>>>>>>>>>>
சிங்கப்பூர் : சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக்கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து மாதந்தோறும் நடத்தும் இலக்கிய நிகழ்வு மார்ச் 07ம் தேதியன்று மாலை மகளிர் தின சிறப்பு கவிச்சோலையாக மலர்ந்தது. கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் வரவேற்புரை நிகழ்த்தி, சிறப்புப் பேச்சாளர் புலவர் அரங்க நெடுமாறனை அறிமுகப்படுத்தினார். முதல் அங்கமாக படித்த, பிடித்த, வடித்த கவிதைகளைக் கவிஞர்கள் படித்தனர். இம்மாதக் கவிதைப் போட்டியின் தலைப்பு, பெண்ணின் பெருமை.
5 பெண்பாற் கவிஞர்கள் உள்ளிட்ட பதினைந்து கவிஞர்கள் தங்கள் கவிதைகளைப் படைத்தனர். இவர்களில் கவிஞர் கி.கோவிந்தராசு, காசாங்காடு அமிர்தலிங்கம், சுப.சத்தியமூர்த்தி ஆகியோரின் படைப்புக்கள் இம்மாத சிறந்த கவிதைப் படைப்புகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ரொக்கப் பரிசு அளிக்கப்பட்டது. அரங்க நெடுமாறன் பரிசளித்துச் சிறப்பித்தார். கேரளக் கவிஞர் செருதுருத்தி உன்னிகிருஷ்ணன் தமது கவிதையை மலையாளத்திலும் பின்னர் தமிழிலும் படைத்தார். இவருக்குப் பொன்னாடை போர்த்திச் சிறப்பிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர் அரங்க நெடுமாறன் பெண்பாற் புலவர்கள் என்ற பொருளில் சுமார் ஒரு மணி நேரம் இசைச்சுவை கலந்த சொற்பொழிவை நிகழ்த்தி அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றார். கழகத் தலைவர் ஆண்டியப்பன் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். செயலாளர் கவிஞர்.இராம.வைரவன் நன்றி நவில, நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.
>>>>>>>>>>>>>


கவிஞர் அவர்களுக்கு காசாங்காடு இணைய குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை: