அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

செவ்வாய், ஜூலை 27, 2010

முசுகுந்தன் குடும்பநலக் குழுவின் குடும்பதின விழா - 2010

முசுகுந்தன் குடும்பநலக் குழு 2010
சிங்கப்பூரில் வாழும் முசுகுந்த நாட்டைச்சேர்ந்தவர்களால் தொடங்கி "முசுகுந்தன் குடும்பநலக் குழு" நடத்தப்பட்டு வருகிறது. இதன் குடும்பதின விழா- 2010, கடந்த 25/07/2010 அன்று மாலை 4.00 மணியளவில் சிங்கப்பூர் டெசன்சன் சாலையில் உள்ள சிலோன் விளையாட்டு மையத்தில் நடைபெற்றது.

அதனை முன்னிட்டு குழந்தைகள் பெரியவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகளும், குழந்தைகள் பங்கேற்ற பாட்டு மற்றும் பேச்சு நிகழ்சிகளும் பரிசளிப்பும் அரங்கேறின. தொடர்ந்து முசுகுந்த நாட்டைச்சேர்ந்த சிங்கப்பூர் பெரியவர்களின் கலந்துரையாடல்கள் நடைபெற்றது. பின்பு அனைவருக்கும் சுவையான விருந்து கொடுக்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை முசுகுந்தன் குடும்பநலக்குழு சிறப்பாகச் செய்திருந்தது.

நிகழ்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.

தகவல் & நிழற்பட உதவி: திரு. சுகுமாரன், துபாய்
கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/7cfa8ae708cec2b7

கருத்துகள் இல்லை: