அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

சனி, ஜூலை 03, 2010

கிராமத்தில் உலாவரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவங்கள்

உலகம் முழுவதும் 2010 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து கொண்டிருகின்றது. கிராமத்தில் தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து கொண்டிருகின்றது. அந்த படிவங்களின் சுட்டிகள்.

மக்கள் தொகை பதிவேடு படிவம்: 

http://www.censusindia.gov.in/2011-Schedule/Shedules/NPR%20Tamil.pdf

வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு படிவம்:

http://www.censusindia.gov.in/2011-Schedule/Shedules/Houselist%20Tamil.pdf

தமிழில் படிவங்கள் வெளியுட்டுள்ளதை கண்டதும் மிக்க மகிழ்ச்சி.

அதில் தமிழில் விளங்காத வார்த்தைகள் பின் வருமாறு:

மக்கள் தொகை பதிவேடு படிவத்தில்:


தாலுகா:
வீட்டுப்பட்டியல் பிளாக் எண்:
வார்டு எண்:

வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு படிவத்தில்:

தாலுகா:
வீட்டுப்பட்டியல் பிளாக் எண்
வார்டு எண்:
சென்சஸ் வீட்டு எண்:
ஷே. வகுப்பு
ஷே. பழங்குடி
ரேடியோ / டிரான்சிஸ்டர்:
இன்டர்நெட்-இணைப்புடன்:
சைக்கிள்:
ஸ்கூட்டர் / மோட்டார் சைக்கிள்  / மொபெட்:
கார் / ஜீப் / வேன் :
சிமெண்ட்:
மொசைக் / தரை ஓடுகள்:
பிளாஸ்டிக் / பாலிதீன்:
கைபம்பு:

ஆங்கிலேயன் நம் நாட்டை தெளிவாக ஆண்டுள்ளான் என்பதற்கு இதுவே சாட்சிகள்.

கம்பன் கட்டுத்தறியும் கவிபாடும், உலக அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் போன்ற எண்ணற்ற தமிழ் புலவர்கள் பெருமை அடைய மொழியை நமது அரசாங்கம் தமிழ் மொழியின் தரத்தை இது போன்ற படிவங்கள் மூலம் குறைகின்றது.

முறையான மொழிபெயர்ப்பாளர்கள் அரசாங்கத்தில் இல்லையெனில், எங்கள் கிராமத்தில் இருந்து வேலையற்றோரை வேலைக்கு கொடுத்து  நியமியுங்கள். அரசாங்கத்தில் இது போன்ற மொழி கலவை தவறுகள் ஏற்படாமல் இருக்க உதவி புரிகின்றோம்.

அமெரிக்க அரசாங்கத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு படிவத்தில் எதாவது தமிழ் எழுதப்பட்ட ஆங்கில வார்த்தைகள் இருகின்றதா என்று தேடி பார்த்தோம்.


மற்ற நாடுகளில் தமிழ் மொழி நல்ல முறையில் தான் பயன்படுத்தபடுகின்றது. இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் தான், அதுவும் சங்கத்தமிழை மக்களுக்கு புகட்டும் அரசாங்கத்தில் பயன்படுத்தப்படும் படிவங்களில் தான் தமிழ் மொழியின் தரம் கீழே தள்ளபடுகின்றது.

இறைவன் தான் இது போன்று மொழி கொண்டு மக்களை ஏமாற்றும் திட்டங்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். மக்கள் கேட்பதாக தெரியவில்லை. ஏனெனில் இங்கு அரசியல் செய்வதற்கே பயன்படுத்தபடுகின்றது மக்கள் நலனுக்காகவோ அல்லது மொழி வளர்சிக்க்காகவோ பயன்படுத்துவதாக தெரியவில்லை.

வாழ்க ஜனநாயகம் !

தகவல் உதவி:  திரு. கோ. வீரமணி, சென்னை
கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/60aa4cbbcf2ed09c?hl=ta_US

கருத்துகள் இல்லை: