பசுக்குளத்தில் மழைநீர் சேமிப்புத்திட்டத்தின் கீழ் குளம் ஆழப்படுத்தப்பட்டு அதன் நடுவில் கான்க்ரீட் கலவையினாலான சுவற்றுடன் கூடிய நீர்சேமிக்கும் வகையில் ஒரு அமைப்பினை ஏற்படுத்தியுள்ளனர். அதன் கிழக்குக்கரையில் ஒரு படித்துறை புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது.
மஞ்சுகுப்பன் ஏரியில் ஊரகவேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ஆழப்படுத்தும் பணி நம் ஊரைச் சார்ந்தவர்களால் செய்யப்பட்டுவருகிறது.
மேலும் மஞ்ச்க்குப்பன் ஏரியின் மழைவெள்ளத்தால் உடைந்த மதகு கடந்த ஆண்டு புதிதாகக்கட்டப்பட்டது. அதன் உயரம் முன்பு இருந்ததைவிட குறைவாக கட்டப்பட்டிருந்தது. இதனை அரசுகவனத்திற்கு கொண்டுவரப்பட்டு மீண்டும் பழைய உயரத்திற்கு உயர்த்தவும் இதன் மூலம் ஏரியின் கொள்ளளவை அதிகப்படுத்தி நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தப்ப்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இது சம்பந்தமாக நிகழ்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.
தகவல் & நிழற்பட உதவி: திரு. சுகுமாரன், துபாய்
கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/58b689921cacdce5
பிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்
7 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக