அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

திங்கள், ஆகஸ்ட் 02, 2010

அருள்மிகு மின்னடியார்,அருள்மிகு நொண்டிமுனியன் திருப்பணி

இன்று (02/08/2010) இரவு 7.00 மணியளவில் காசாங்காடு அருள்மிகு முனீஸ்வரர் ஆலயத்தில் 11 அடி உயரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மின்னடியார் மற்றும் 7 அடி உயரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு நொண்டி முனியன் சாமி சிலைகளின் கண்திறப்பும், சுடுமண்ணால் செய்த அருள்மிகு முனீஸ்வரர் சாமி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு முனீஸ்வரர் ஆலயத்தில் நிலைநிறுத்தப்பட்டு கண்திறப்பு மற்றும் சிறப்புவழிபாடும் செய்யப்பட உள்ளது. அது சமயம் பக்தகோடிகளும் மெய்யன்பர்களும் தவறாது கலந்துகொண்டு முனீஸ்வரர் அருளைப் பெற்றுய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இங்ஙனம்,
ஆலய பொதுநிர்வாகக்குழு மற்றும் கிராமவாசிகள்

தகவல் உதவி: திரு. சுகுமாரன் அருணாசலம், துபாய்
கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/1fd2b6bdac69fb1eகருத்துகள் இல்லை: