அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

திங்கள், பிப்ரவரி 21, 2011

இணையம் மூலமாக காசாங்காடு கிராமம் பற்றிய தகவல்களை இலவசமாக பெரும் வசதி


காசாங்காடு கிராம மக்களுக்கு இணையம் மூலமாக இலவச தகவல் பெரும் வசதியை இணைய குழு ஏற்படுத்துகிறது. இதன் மூலம் காசாங்காடு கிராமம் சம்பந்தமான தகவல்களை அரசாங்கத்திளிரிந்து  / பொது சேவை நிறுவனங்களிருந்து பெற்று வெளியிடப்படும். நீங்கள் கேட்கும் அனைத்து தகவல்களும் இணையதளத்தில் வெளியிடப்படும்.

தகவல் கேட்கும் படிவம்http://rti.kasangadu.com/takaval-urimai-cevai
விண்ணப்பத்தின் தற்போதைய நிலை: http://rti.kasangadu.com/takaval-urimai-cevai/vinnappattin-nilai

இதன் மூலம் தனி நபரை அல்லது குடும்பங்களை மிரட்டுவதோ அல்லது வன்முறை செயல்களில் விண்ணப்பதாரரை ஈடுபடுத்துவதோ தவிர்கபடும். மேலும் விண்ணப்பதாரரின்  தனியுரிமை காக்கப்படும்.

இந்த சேவை காசாங்காடு கிராம மக்களுக்காக இலவசமாக வழங்கபடுகிறது. இதற்காக ஆகும் தபால், நீதிமன்ற செலவை கிராம இணைய குழு ஏற்று கொள்ளும்.

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/a63f00799dd18ad3

கருத்துகள் இல்லை: