அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

ஞாயிறு, பிப்ரவரி 27, 2011

ஆரம்ப சுகாதார நிலையம் - அடிக்கல் நாட்டு விழா

(உண்மையான நிழற்படம் அல்ல)

அரசாங்கத்தின் குறைந்தபட்ச தேவை மற்றும் அடிப்படை குறைந்த பட்ச சேவை  திட்டத்தின் மூலம் காசாங்காடு கிராமத்திற்கு ஆராம்ப சுகாதார நிலையம் வர இருகின்றது. பகுதி நேர சுகாதார நிலையமாக இருந்த மருத்துவ வசதி தற்போது முழு நேர ஆரம்ப சுகாதார நிலையமாக மாறியுள்ளது.
இந்நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழா கோவில் தோப்பு பகுதியில் இன்று நமது மத்திய நிதி துறை இணை அமைச்சர் மாண்புமிகு திரு. பழனிமாணிக்கம் அவர்களின் முன்னிலையில் நடைபெற உள்ளது.

இதன் மூலம் காசாங்காடு கிராமத்தானின் நீண்ட நாள் கனவு நினைவாகின்றது.

கிராமஅரசு மருத்துவமனை: http://history.kasangadu.com/aracu-aluvalakankal/utavi-maruttuvamanai
கிராம ஆரம்ப சுகாதார நிலையம்: http://history.kasangadu.com/aracu-aluvalakankal/arampa-cukatara-nilaiyam

ஆரம்ப சுகாதார நிலையத்தால் கிராமத்திற்கு கிடைக்கும் வசதிகள்:
  1. 24 மணி நேர மருத்துவ சேவை
  2. படுக்கை வசதி (4-6)
  3. ஒரு மருத்துவர்
  4. தொகுதி விரிவாக்க கல்வியாளர் (Block Extension Officer)
  5. மருந்துகலப்பவர்
  6. வாகன ஓட்டுனர்
  7. பரிசோதனை நுட்பவிலாளர்
  8. நோயாளிகளை கொண்டு வரும் வாகனம்
  9. சிறிய அறுவை சிகிச்சை செய்வதற்கான வசதிகள்
மருத்துவ வசதியை ஏற்படுத்தி கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாக இருந்தாலும் அதை சிறப்புடன் இயங்க செய்வது காசாங்காடு கிராமத்தானாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும். 

முக்கியமாக இந்த சேவைக்கு ஒதுக்கப்படும் நிதி முழுமையாக சென்றடைகின்றதா என்று கவனித்து கொள்ளவேண்டியது நம் கடமையாகும்.

இந்த வசதி காசாங்காடு கிராமத்திற்கு கொண்டு வர முயற்சி செய்த அனைத்து அதிகாரிகளுக்கும், காசாங்காடு கிராம மக்களுக்கும் இணைய குழுவின் மனமார்ந்த நன்றிகள்.

கிராம குழும இணைய சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/695e8ec761d90df4

கருத்துகள் இல்லை: