அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

சனி, மார்ச் 19, 2011

காசாங்காடு கிராம தேர்தல் களம் - 2011

நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் காசாங்காடு கிராமத்தின் பங்கு, மற்றும் தேர்தல் பற்றிய அரசாங்க தகவல்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

தேர்தல் நாள்: விக்ருதி பங்குனி 30  [13 ஏப்ரல் 2011] 
உட்பிரிவு: (Ward)


1. நடுத்தெரு
2. கீழத்தெரு மற்றும் தெற்குதெரு
4 . வடக்குத்தெரு மற்றும் மேலத்தெரு
(உட்பிரிவு 3 அரசு பதிவேட்டில் இல்லை)

உட்பிரிவு - 2  க்காண  வாக்கு சாவடி:
அரசு மேல் நிலை பள்ளி 


(வடக்குபார்த்தஒட்டுக்கட்டிடம்) 
மேற்குபகுதி,
காசாங்காடு 614613உட்பிரிவு - 1,4  க்காண  வாக்கு சாவடி:
அரசு மேல் நிலை பள்ளி 
(வடக்குபார்த்தஒட்டுக்கட்டிடம்)
கிழக்குபகுதி,
காசாங்காடு 614613


வடக்கு பார்த்த ஒட்டு கட்டிடம் உள்ளதா என்பது தெரியவில்லை, ஏனெனில்  மேல் நிலை பள்ளிக் கட்டிடங்கள் அனைத்தும் புதுபிக்கபட்டுள்ளது.காசாங்காடு கிராமத்தில் வாக்களிக்கும் தகுதி உடையோர் பற்றிய விபரங்கள்.

ஆண்கள் - 1055
பெண்கள் - 1204
----------------------
மொத்தம் - 2259
----------------------

இது பட்டுகோட்டை தொகுதிக்கு வாக்களிக்க தகுதியானவோர் 182,191 ஒப்பிடுகையில் 1.23% சதவிகிதமாகும். தஞ்சை மாவட்டம் முழுவதும் வாக்களிக்க தகுதியானவோர் 1,521,430 ஒப்பிடுகையில் 0.15% சதவிகிதமாகும்.

அது மட்டுமன்றி காசாங்காடு கிராமத்திளிரிந்து வெளிநாடுகள் சென்றவர்கள் எண்ணிக்கை அதிகம், அவர்களின் பட்டியலும் இதில் அடங்கும்.

போட்டியிடும் வேட்பாளர்கள் விபரங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும். கடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கபட்ட மக்கள் பிரதிநிதிகள் காசாங்காடு கிராமத்திற்கு என்ன செய்தார்கள், கிராம மக்களின் வாழ்க்கை தரத்தினை எவ்வாறு உயர்த்தி இருகின்றார்கள் என்பதும் பகிர்ந்து கொள்ளப்படும்.

வாக்களிக்கும் உரிமையை முழுமையாக பயன்படுத்துவோம். மேலும் சிறந்த ஆட்சியாளர்கள் மூலம் தேசத்தை முன்னேற்றமடைய செய்வோம்.

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/d33ca1a406d77e74

கருத்துகள் இல்லை: