அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

செவ்வாய், மார்ச் 15, 2011

ஜப்பான் நிலநடுக்கம் - காசாங்காடு கிராமத்தினரின் பங்கு

சமீபத்தில் ஜப்பானில் நிலநடுக்கம் நடந்தது அனைவருக்கும் தெரிந்த விடயமே. ஜப்பான் நாட்டில் வாழும் மக்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

காசாங்காடு கிராமம், கீழத்தெரு, வெல்லாம் வீட்டை சேர்ந்த திரு. பழனிவேல் அவர்கள் சில காலமாக ஜப்பானில் குடிபெயர்ந்துள்ளார். பாதுகாப்பாக இருகின்றேன் என்று தனது குடும்பத்திற்கு தொலைபேசியில் தெரிவித்ததோடு, வீட்டில் உள்ள உறவினர் அனைவரும் ஊருக்கு வரும்படி வற்புறுத்தினர். தான் வசிக்கும் நாட்டில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் தம்மால் முடிந்த உதவியை தான் வசிக்கும் நாட்டிற்கு செய்ய வேண்டும். இந்த நிலையில் ஊர் வருவது என்பதிற்கு இடமில்லை என்று மறுத்துவிட்டார்.காசாங்காடு கிராமத்தை பெருமை படுத்தும் வகையில் தான் வசிக்கும் இடத்தில் சிரமங்கள் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில் தம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று முன் வந்ததற்கு இணைய குழுவின் வாழ்த்துக்கள். விரைவில் ஜப்பான் இந்த  சிரமமான சூழலில் இருந்து வெளிவர இறைவனை வேண்டுகிறோம்.

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/97e1c2ba953b1acf

கருத்துகள் இல்லை: