அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

செவ்வாய், செப்டம்பர் 27, 2011

தகவல் உரிமை சட்டம் - கிராமத்தானின் நிலைமை - மாவட்ட நிர்வாகம் ஆணை - 349 நாட்கள்


எங்கள் நாட்டிலும் தகவல் உரிமை சட்டம் உள்ளது என்று தோள் தட்டி கொள்ளும் இந்தியாவின் தகவல் உரிமை சட்டத்தின் உண்மையான நிலவரம் என்ன என்பதை ஒரு கிராமத்தானின் பார்வையில். அதன் தொடரே இது. இன்னும் தகவல் கிடைத்த பாடில்லை என்பதே அதன் உண்மையான நிலவரம்.

http://news.kasangadu.com/search/label/rti 

மேல் முறையீட்டு விண்ணப்பத்திற்கு மாவட்ட அதிகாரி அனுப்பியுள்ள பதில் கீழே காண்பிக்கப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்போம் எப்போது பதில் வருகிறது என்று. முழுமையாக கேட்ட தகவல்களை கிராம நிர்வாகம் அளிக்க வேண்டும்.

மேலும் அனைத்து தகவல்களையும் எந்தவித கட்டணமின்றி இலவசமாக அளிக்க உத்தரவிட்டதையும் காணலாம்.கருத்துகள் இல்லை: