அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

சனி, அக்டோபர் 29, 2011

கிராமத்தில் தேவைப்படும் நிர்வாக மாற்றங்கள்


சமீபத்தில் கிராமத்தில் வாழ்க்கை தரம் மேம்பட என்ன செய்தால் சிறப்பாக இருக்கும் என்று யோசித்தோம். பின்வருபவைகள் அதில் சில,

 1. பண வசூல் செய்வதை முறைபடுத்த வேண்டும்.
  1.  பொது மக்கள் கொடுக்கும் நன்கொடைகளுக்கு ரசீது வழங்க வேண்டும்.
  2. அதை செய்ய போகிறோம், இதை செய்ய போகிறோம் என்று பணம் வசூல் செய்யமால். என்ன செய்ய போகின்றீர்கள், எவ்வளவு பணம் தேவைபடுகின்றது மற்றும் அதன் திட்ட ஆவணங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் அதற்க்கு போருபேற்பவர்கள் யார் என்ற விபரமும் அளிக்கவும்.
  3. காசாங்காடு கிராமத்தில் மேலோட்டமாக என்ன செய்ய போகிறோம் என்று மட்டுமே பகிர்ந்து கொள்ளபடுகின்றது. முறையான விபரங்கள், திட்டங்கள் பற்றிய பகிர்ந்து கொள்ளபடுவதில்லை.
  4. வெளிநாட்டில் இருந்து வசூலிக்கப்படும் நிதிகளை முறைப்படி வங்களில் அனுப்பும் முறையினை பயன்படுத்த வேண்டும். அதற்கான ரசீது மற்றும் நன்கொடை கொடுத்த நபர்களின் பெயர்களை பாதுகாத்தல் அவசியம்.
  5. இதற்கான முறையை காசாங்காடு நிர்வாகம்  முறைபடுத்த வேண்டும்.
 2. பொது மக்கள் கேட்கும் தகவலினை (தகவல் உரிமை படியோ அல்லது வாய் வழியாகவோ) முறைப்படி மக்களுக்கு அளிக்கவும்.
 3. நிர்வாகத்தின் வரவு செலவினை அனைத்து மக்களுக்கும் நிர்வாகம் பகிர்ந்து கொள்ளவும். இதற்காக ஆகும் செலவினை மக்களிடம் இருந்து பெரும் வரிபனத்தில் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
  1. நேர்மையான நிர்வாகத்தின் மற்றும் அதன் திட்டங்களை பொது மக்களுக்கு தெளிவாக பயன்படுத்தி கொள்ள உதவும்.
 4.  பொது இடங்களில் வரிசை
  1. அரசாங்க, தனியார், பேருந்து மேலரும்போது, கடைகளில், வங்கிகளில் முதலில் வருபவருக்கே அதற்கான சேவைகளை வழங்கிட வேண்டும். அனைவரும் சமம் என்ற கருத்து அனைவரின் மனதில் உருவாகும் வண்ணம் அமைய  வேண்டும்.
  2. தற்போது வரிசை எங்குமே பயன்படுத்துவதில்லை, இதன் மூலம் அனைவரின் சமஉரிமை பாதிக்கபடுகின்றது.
  3. அனைத்து இடங்களிலும் பாரபட்சமின்றி வரிசை மூலம் சேவைகள் வழங்குவது கிராம மக்களின் வாழ்க்கை தரம் உயரும். நிர்வாகம் பற்றிய தன்னம்பிக்கையும் உயரும்.
 5. பொது இடத்தில் சிறுநீர் அல்லது மலம் கழித்தல் முற்றிலும் தவிர்க்கவேண்டும்.
  1. இதன் மூலம் எண்ணற்ற வியாதிகள் தவிர்க்க வழிவகை உண்டு. நிலம் மற்றும் காற்று வழியாக பரவும் வியாதிகள் தவிர்க்கப்படும்.
 6. குடிமகன்கள் அருந்தும் மது மற்றும் புகைபிடிக்கும் வியாதிகள் மற்றும் அதன் பின் விளைவுகள் பற்றி விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும்.
  1. கிராமத்தில் மது / புகைபிடிக்கும் பொருட்களை/பானங்களை தயாரிக்க மற்றும் விற்க அனுமதி இல்லை என்று தான் நாம் வரையரைத்துள்ளோம். கிராம குடிமகன்கள் இதை பயன்படுத்துவதற்கான தடையும் கொண்டு வந்தால், கிராம மக்களின் வாழ்க்கை தரம் உயரும்.
 7. வீட்டின் / தொழில்களின் குப்பைகளை சாலைகளில் கொட்டுதல்.
  1. குப்பைகளை சாலைகளில் கொட்டி சாலைகளின் அழகினை கெடுக்கும். மேலும் கொசு, மற்றும் எண்ணற்ற வியாதிகளை இவை உருவாகுவதை இவை அதிகமாக்கும்.
  2. மீறி நடப்பவர்களுக்கு உரிய அபராதம் விதிக்கும் நடைமுறை வேண்டும்.
 8. கிராம நிர்வாகம் சாலைகளின் குப்பைகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும் அல்லது தெரு மக்களாக சேர்ந்து (அவரவர் வீடுகளின் முன்பு) சாலைகளை சுத்தம் செய்யும் பழக்கத்தை முறைபடுத்த வேண்டும்.
 9. வாகனம் வேக அளவு (25 கிலோமீட்டர்) தடை வேண்டும். நிர்வாகமும் அதை முறைபடுத்த வேண்டும்.
  1. அளவிற்கு மேலான வேகத்தில் வாகனங்கள் செல்வதால் காசாங்காடு குடிமகன்களின் அமைதி பதிக்கப்படும். சில நேரங்களில் குடிமகன்களின் வாழ்க்கையும் இழந்துள்ளோம். எனவே சிறந்த வாழ்க்கை தரத்திற்கு வேக அளவு தடை வேண்டும்.
  2. அதிகமான வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
 10. தொழில்களின் / நபர்களை காசாங்காடு குடிமகன்களை / குடும்பங்களை தொடர்பு கொள்ளும் விதம் முறைபடுத்த வேண்டும்.
  1. காப்புரிமை திட்டங்கள் கொண்டு உறவினர்கள் என்ற உரிமை கொண்டும் தனது சுயநலத்திற்காகவும் வருமானத்திற்காகவும் காப்புரிமை திட்டங்களை கொண்டு காசாங்காடு குடிமகன்களின் அமைதியை சீர்குலைத்தல்.
  2. காப்புரிமை திட்டத்தின் மூலம் நீங்கள் கட்டும் பாலிசி தொகையில் 50% தொகை (தோராயமாக) அந்த ஏஜெண்டுகளுக்கு போய் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.
  3. இது போன்று வேறு பல திட்டங்கள் கொண்டு வீடு தேடி வரும் தொழில்களை முறைபடுத்த வேண்டும்.

தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

கருத்துகள் இல்லை: