அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

வெள்ளி, டிசம்பர் 02, 2011

ஆத்திக்கோட்டை கிராம இணைய தளம்

ஆத்திக்கோட்டை இணையதளத்திற்கு தங்களை வரவேற்கிறோம் !!

http://athikkottai.yolasite.com/

குறிகிய வரவேற்புரை:

"அடி ஆத்தி!" யென்று மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்கு நஞ்சையும்,புஞ்சையும் கொஞ்சி கூடி விளையாடும் குதூகல ஊரிது கண்ணில் ஏற்றிக் கொள்ள வைக்கும் பச்சைப் பசேலென்ற பாங்கான ஊரிது கிராமம் என்ற பேர் இருந்தபோதும் நகரத்திற்குரிய நாகரிகம் தழைத்த நறுக்கென்ற நல்லூரிது பலரின் மனக்கோட்டைகளுக்கு பாதை வகுத்துக் கொடுத்த ஊரிது கோட்டை போட்டுக் கொண்டு கோட்டைக்கு செல்லவும் வழிகாட்டும் ஊரிது வயிற்றுப் பசியையும்,அறிவுப் பசியையும் ஒரு சேர தீர்க்கும் ஒய்யார ஊரிது இந்த அழகிய ஆத்திக்கோட்டையை என்றென்றும் ஆராதிப்போம்!!!