அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

ஞாயிறு, ஏப்ரல் 17, 2011

சித்திரை பௌர்ணமி சுப்பிரமணியர் கோவில் திருவிழா







நிகழும் கர, திருவள்ளுவர் ஆண்டு 2042, சித்திரை மாதம் 4 ஆம் நாள் பௌர்ணமி நாளான இன்று சுப்பிரமணியர் கோவில் திருவிழா நடைபெற உள்ளது.

பக்தகோடிகளும் கிராம மக்களும் திருவிழாவில் கலந்து கொண்டு  சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.


திருவிழா நிகழ்ச்சி பற்றிய விபரங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.



சனி, ஏப்ரல் 16, 2011

பட்டுகோட்டை சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள்


பட்டுக்கோட்டை தொகுதியில் 77.67  சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஆண்கள்: 65611 (72.36 %)
பெண்கள்: 80097 (82.64 %) 
மொத்தம்: 1,45,708 (77.67) 
வாக்களிக்க விருப்பமில்லை (49-O): 65

வாக்கு எண்ணிக்கை இடம்: வட்டார கிராமப்புற மேம்பட்டு நிலையம் (Regional Institute of Rural Development), பட்டுக்கோட்டை
வாக்கு எண்ணிக்கை நாள்: 13 மே 2011

மேலும் தேர்தல் பற்றிய தகவல்களுக்கு: http://rti.kasangadu.com/tertal/2011-manila-cattaperavai

தகவல்களை தெளிவாக அளிக்கும் தேர்தல் ஆணையத்திற்கு எமது நன்றிகள்.


வியாழன், ஏப்ரல் 14, 2011

அய்யனார் திருக்கோவில் கர வருடபிறப்பு திருவிழா அழைப்பிதழ்



கிராம மக்களுக்கு இணைய குழுவின் பாரம்பரிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அருள்மிகு ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பால் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனார் திருக்கோவில் சித்திரை வருடபிறப்பு திருவிழா அழைப்பிதழ்
காசாங்காடு மன்னங்காடு ரெகுநாதபுரம்

அன்புடையீர்,

நிகழும் மங்களகரமான கர வருடம் சித்திரை மாதம் 1 தேதி, 14/04/2011  வியாழக்கிழமை மகம் நட்சத்திரம் அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பாள் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனாருக்கு சிறப்பு அபிஷேக ஆரதனை உள்ளது.

அது சமயம் பக்த கோடிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பாள் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனார் சுவாமி அருள்பெற வேண்டுகிறோம்.


நிகழ்ச்சி நிரல்:

கர சித்திரை மாதம்  1,  14/04/2011 வியாழக்கிழமை:

காலை 9 மணி:
        சிறப்பு அபிஷேக ஆராதனை  நடைபெறும்.
மாலை 5 மணி அளவில்:
       காவடி, பால்குடம், மாவிளக்கு அர்ச்சனைகள் நடைபெறும்.
இரவு 9 மணி:
       சிறப்பு ஆராதனை பிரசாதம் வழங்குதல்.

இரவில் பொழுதுபோக்கிற்காக புதிய திரைப்படம் காண்பிக்கப்படும்.


இங்ஙனம்,
கிராமவாசிகள்
காசாங்காடு, மன்னங்காடு, ரெகுநாதபுரம்


கிராமத்தில் ஆன்மீக உணர்வை வளர்க்கும் நாட்டண்மைகளுக்கு இணைய குழுவின் நன்றிகள்.

புதன், ஏப்ரல் 13, 2011

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - 2011


இன்று தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.

அரசாங்க தகவல்கள்:


சட்டமன்ற தேர்தல் பற்றி தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். வாக்குரிமையை முழுவதுமாக பயன்படுத்துங்கள். கிராமத்திற்கும், குடிமகன்களின் முன்னேற்றத்திற்கும் பாடுபடும் தலைவர்களை தேர்ந்தெடுக்க உதவுங்கள்.

http://rti.kasangadu.com/tertal/2011-manila-cattaperavai

தாங்களுக்கு வாக்களிக்க விருப்பமில்லையெனில் விருப்பமில்லையென்று தேர்தல் ஆணையத்திடம் தெரிவியுங்கள். குடிமகன்களின் விருப்பத்தை அரசாங்கம் தெரிந்து கொள்ள உதவும்.

இது சம்பந்தமாக தகவல்களை நிகழ்படம் மூலம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

http://government.kasangadu.com/parivartainaikal/vakkalikka-viruppamillai




ஜனநாயாக கடமைகளை முறைப்படி செய்வோம். சிறந்த தேசம் உருவாக உறுதுணையாக இருப்போம்.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.

வாழ்க இந்திய ஜனநாயகம் !!!

ஞாயிறு, ஏப்ரல் 03, 2011

கடந்த ஐந்து ஆண்டுகளில் ....


ஜனநாயகம் பிறப்பது நாடாளுமன்றத்தில் அல்ல, பஞ்சாயத்தில் தான். காசாங்காடு கிராமத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்தவற்றை பற்றி தெரிந்து கொள்வோம். தகவல்களை பகிர்ந்து கொண்டவர்களுக்கு எமது நன்றி.

முன்னேற்றங்கள்:

  1. புதிய பள்ளி கட்டிடம்
  2. இரு புதிய மேல் நிலை நீர்தேக்க தொட்டி
  3. ஆரம்ப சுகாதார நிலையம்
    1. வரபோகும் தேர்தலை ஒட்டி கிடைக்க பெற்றது. ஓட்டு வாங்குவதற்கான நாடகமா என்று மக்கள் தான் சொல்ல வேண்டும்.
  4. மாரியம்மன் கோவில் முன் நாடக மேடை (கிராமத்தினரின் நன்கொடையும் இதில் அடங்கும்)
பராமரிப்புகள்:
  1. சில தார் சாலைகள் புதுபிக்கபட்டது
  2. நூறு நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் குளங்கள் மற்றும் ஏரிகள் தூர் வாரப்பட்டது.
சங்கடங்கள்:
  1. கிராமத்தின் நூறு நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மோசடி செய்து கிராம தலைவர் பதவி நீக்கம் பெற்றது. இந்த நடவடிக்கை பற்றி தெளிவான தகவல்கள் பற்றி கேட்டறியப்படும்.
  2. தண்ணீர் பட்டுவாடா செய்வதில் கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களின் வீட்டிற்குள் அத்து மீறி புகுந்து நாச வேலைகளில் கிராம தலைவர் ஈடுபட்டது.
    1. தண்ணீர் மேல் எக்கிகளை அனுமதியின்றி பறிமுதல் செய்ததது.
    2. தண்ணீர் குழாய்களை அறுத்தது.
  3. போகி பண்டிகை (2011) மற்றும் அதனை தொடரும் பொங்கல் பண்டிகை அன்று சாலைகள் மிகவும் தேவைப்படும் நேரத்தில் சாலைகளை பெயர்த்து காசாங்காடு கிராம மக்களுக்கு மிகுந்த பயண சிரமங்களை உள்ளாக்கியது.
  4. தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல்களை அதற்குரிய நேரத்தில் தர மறுப்பது. கேட்ட தகவல்கள் இதுவரை ஆறுமாதமாகியும் இன்னும் கிடைத்த பாடில்லை? அரசாங்கம் கிராமத்திற்கு ஒதுக்கிய  பணத்தில்/பொருட்களில் ஏதேனும் மோசடியா?
மேற்குறிப்பிட்டுள்ள தகவலில் பிழைகள்/திருத்தங்கள்/சேர்க்கைகள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.