அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

புதன், ஜனவரி 18, 2012

காசாங்காடு கிராமத்தில் நடந்த காணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள்


காசாங்காடு கிராமத்தில் நடந்த காணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள்
  1. காசாங்காடு ஊராட்சி
  2. முத்தமிழ் மன்றம்
  3. கோயிலடி நண்பர்கள்

விடுபட்ட தகவல்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள். நடந்த விளையாட்டு போட்டிகளின் நிழற்படங்கள் / நிகழ்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சிறார் முதல் முதியர்வர்கள் வரை பகிர்ந்து கொண்டு சிறபித்தமைக்கு நன்றி.

காசாங்காடு கிராமத்தில் முத்தமிழ் மன்றம் பற்றிய பொங்கல் நிகழ்ச்சிகள் பற்றிய தினமணி நாழிதளில் வந்த செய்தி இங்கே.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கல்வி நிறுவனங்கள், சேவை அமைப்புகள் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா

First Published : 19 Jan 2011 12:54:56 PM IST

தஞ்சாவூர், ஜன. 18: தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் உள்ள பள்ளிகள், அமைப்புகள் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
 ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி: தஞ்சாவூர் மேலவீதி ஓரியண்டல் பள்ளியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு விழாவுக்கு பள்ளிச் செயலர் எஸ். குஞ்சிதபாதம் தலைமை வகித்தார்.
 தலைமையாசிரியர் த.சா. கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவியர் சர்க்கரைப் பொங்கலிட்டுக் கொண்டாடினர்.
 ஏன்சியன் சிட்டி லயன்ஸ் சங்கம்: தஞ்சை ஏன்சியன் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் மகர்நோம்புச் சாவடி விநாயகா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு, லயன்ஸ் சங்க துணைத் தலைவர் வி.எம். செல்வராஜ் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டத் தலைவர் கும்பா. ஜெ. குப்புராமன், நிர்வாகிகள் பி. அருள்செல்வம், பி. கெüரிராஜன், ஆர். பரந்தாமன், ஜி. பாஸகிருஷ்ணன் பங்கேற்றனர்.
 நலன் வளர்ச்சிக் கழகம்: தஞ்சை மோத்திரப்பச்சாவடி நலன் வளர்ச்சிக் கழகம் சார்பில் 42-ஆம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, விளையாட்டு, இசைப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கழகத்தின் தலைவர் என். அறிவழகன், செயலர் ஏ. வடிவேல், பொருளர் என். கருணாநிதி உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
 மாவட்ட மைய நூலகம்: தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகம் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட நூலகர் கி. நாகராஜன், கண்காணிப்பாளர் சே. சுப்புலட்சுமி, நூலகர் சு. சங்கர், கணக்கர் க. கதிரேசன், நூலக அலுவலர்கள் ஏ. கிருஷ்ணமூர்த்தி, இரா. சுந்தரராஜன், பா. ஸ்டாலின், த. காமராஜ், மு. சுந்தரி, வே. காஞ்சனா,ந. ஸ்ரீவள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


பட்டுக்கோட்டை காசாங்காட்டில்:


 மதுக்கூர் ஒன்றியம், காசாங்காடு கிராமத்தில் முத்தமிழ் மன்றம் சார்பில் 10-ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.


 இதையொட்டி, விளையாட்டுப் போட்டி, பொது அறிவுப் போட்டி, கவிதைப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. காசாங்காடு முத்தமிழ் மன்ற நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

கருத்துகள் இல்லை: