அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

வியாழன், மார்ச் 08, 2012

பிறந்தா நாள் கொண்டாட்டம்


பிறந்தா நாள் கொண்டாட்டம். யாருக்கு? காசாங்காட்டில் பிறந்தவருக்கா? காசாங்காடு கிராம முன்னேவதற்கு முயற்சி செய்தவர்களுக்கா?


இவர்கள் காசாங்காடு கிராமத்திற்கு என்ன செய்தார்கள் என்ற பட்டியல் எவரிடம் உண்டா?








காசாங்காடு கிராமம் முன்னேற முக்கிய காரணமாக இருந்த ஐயா. விஸ்வநாதன் அவர்களுக்கு இது போன்ற ஏதேனும் விழாக்கள் நடைபெற்றதுண்டா?


இந்திய மக்களின் வரி பணத்தை பெற எந்த விதத்தில் எல்லாம் மக்கள் நாடகமாட வேண்டியுள்ளது.

1 கருத்து:

SURESH சொன்னது…

உறவுகளுக்கு வணக்கம்,

நம் ஊரில் நடைபெற்ற இந்த இழிவான பிறந்தநாள் கொண்டாட்டத்தை சாடியுள்ள காசாங்காடு இணைய குழு நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும்,வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன்.தாத்தா விஸ்வநாதன் அவர்களுக்கு கொடுக்கப்படாத இந்த மரியாதை,ஊரின் இன்ன பிற நல்லா உள்ளங்களுக்கு நிகழ்த்தப்படாத இந்த கொண்டாட்டம்,கேவலம் நாட்டை குட்டிசுவரக்கியதோடல்லாமல்,இன்னும் ஆக்க நினைக்கும் ஒரு கட்சியின் பொருளாளருக்கு கொடுக்க இத்தனை கூட்டம் நம் ஊரில் கூடுகிறதே என்று நினைக்கையுள் மிகவும் வருத்தமாக இருக்கிறது.

புகையில்லை,மதுபானம் இல்லை,வெள்ளாடு வளர்க்க அனுமதியில்லை,எங்கள் ஊரின் பெருமை பாரீர் என்று மார்தட்டிக்கொள்ளும் சில நண்பர்களுக்கு கட்சிகளின் கம்பம் வைக்க அனுமதி இல்லை,பதாகைகள் வைப்பதற்கு அனுமதியில்லை என்ற செய்தியை நான் நினைவு கூற விழைகிறேன்.மட்டுமல்லாது மேற்கூறிய அத்துனை தடைகளும் மீறப்படுவதர்க்கான ஒரு எடுத்துக்காட்டாகவே இந்த நிகழ்வை கருதலாம்.


என் கருத்தில் பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும்.

அன்பன்

சுரேஷ்