அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

வியாழன், செப்டம்பர் 27, 2012

பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் மாணவர்கள் / மாணவிகள் / ஆசிரியர்கள் இன்று வந்தனர்



பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் / மாணவிகள் / ஆசிரியர்கள் இன்று காசாங்காடு கிராமத்தை காண வந்தனர். சுமார் 60 நபர்கள் இன்று காசாங்காடு கிராமத்தையும் / கிராம சுகாதாரத்தையும் / கிராம நிர்வாகத்தையும் பற்றி அறிந்து கொள்ள வந்துள்ளனர்.

கல்லூரி பேருந்து மற்றும் Car மூலம் கிராமத்தை வந்தடைந்தனர்.

கிராமத்தில் உள்ள கோவில்கள், பள்ளிகள், மக்களின் வாழ்க்கை தரம், நிர்வாக உட்கட்டமைப்பு போன்றவற்றை பற்றி தெரிந்து கொண்டனர். இது பற்றிய விரிவான தகவல்கள் நேரடியாக பார்வையாளர்களிடம் இருந்து விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்.

இணையத்தின் மூலம் காசாங்காடு கிராமத்தை பற்றி தெரிந்து கொண்டு கிராமத்தை பார்க்க வந்த இந்திய குடிமகன்களுக்கு இணைய குழுவின் நன்றிகள். தாங்களின் வருகையின் மூலம் காசாங்காடு கிராமத்தை மற்றும் இணைய தளத்தை பெருமைபடுத்தியமைக்கு எமது பணிவான நன்றிகள்.

தாங்களின் பயணம் பயனுள்ள வகையில் அமைந்திருக்கும் என நம்புகிறோம்.

புதன், செப்டம்பர் 26, 2012

பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரியில்ரிந்து காசாங்காடு கிராமத்தை காண வருகை




சிவகங்கை மாவட்டத்திலிரிந்து (சுமார் 170 கிலோமீட்டர் தொலைவில்) பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல்  கல்லூரியில் படிக்கும் பொறியியல் மாணவர்கள் காசாங்காடு கிராமத்தை பற்றி தெரிந்து கொள்ள வருகை.

மேலும் இந்த கல்லூரி பற்றி விபரம்:

கல்லூரி இணைய சுட்டி: http://www.psyec.edu.in/
காசாங்காடு - கல்லூரி வழிப்பாதை தூரம்: http://goo.gl/maps/vvjLc

இதை ஏற்பாடு செய்த அனைத்து மாணவர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கும் எமது நன்றிகள்.

காசாங்காடு இணைய குழு மாணவர்களை அன்புடன் வரவேற்கின்றது.

திங்கள், செப்டம்பர் 24, 2012

குட்டச்சிவீடு தம்பிஅய்யன் ஜெயம் அவர்களுக்கு பேரன் பிறந்துள்ளார்


பிறப்பின் பால்: ஆண்
வீட்டின் பெயர்: குட்டச்சிவீடு
பெற்றோர்களின் பெயர்: திரு. அருள்குமார் & திருமதி. பார்கவி
பிறந்த நாள்(தோராயமாக):  செப்டம்பர் 24, 2012
பிறந்த இடம்: டாக்டர் மீனா நியூட்டன் மருத்துவமனை, பட்டுக்கோட்டை

பெற்றோர்களின் திருமண செய்தி: http://news.kasangadu.com/2011/07/blog-post.html

காசாங்காடு இணையக்குழு அக்குடும்பத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

Lions Club of Madras Sterling Avenue நடாத்திய இரெத்த தான முகாம்


Lions Club of Madras Sterling Avenue காசாங்காடு கிராமத்தில் நடாத்திய இரெத்த தான முகாம். (செப்டம்பர் 22, 2012)


இரெத்த தானம் வழங்கிய அனைத்து கிராமத்தினருக்கும், இணைய குழுவின் நன்றிகள்.
தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

சனி, செப்டம்பர் 22, 2012

சிங்கப்பூரில் காசாங்காடு கிராம மக்கள் கூட்டம்


வரும் சனிகிழமை செப்டம்பர் 22, 2012 இரவு 07:00 மணியளவில் சிங்கப்பூர் வாழ் காசாங்காடு கிராம மக்கள் கூட்டம் நடைபெறுகின்றது. இந்த கூட்டத்தில் இணையத்தில் வெளியிடக்கூடிய நோக்கம், செயல்பாடுகள், திட்டங்கள், எடுத்த முடிவுகள், நிகழ்படங்கள், நிழற்படங்கள்  இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.




View Larger Map


நடக்கும் இடம்:
35A Norris Road,
Singapore 208277
தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

தலைகீழாக ஊடுகசிவு முறையில் குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் அரசு மேல்நிலை பள்ளியில் நிறுவபடுகின்றது




நோக்கம்:
பள்ளி குழந்தைகளுக்கு சிறந்த குடிநீர் வழங்க வேண்டும்.
( உண்மையில் இந்த சுத்திகரிப்பு முறை பள்ளி மாணவர்களுக்கு சிறந்த தண்ணீரை அளிக்குமா? அல்லது தண்ணீரில் உள்ள உடம்பிற்கு தேவையான கனிமங்களை நீக்கி விடுமா?
http://www.waterbenefitshealth.com/reverse-osmosis-water.html )

ஏன் இப்போது நிறுவபடுகின்றது?
இலவசமாக தொண்டு நிறுவனம் வழங்குகிறது.
காசாங்காடு கிராம மக்களிடையே Lions Club of Madras Sterling Avenue தொண்டு நிறுவன விளம்பரம்.


தேவையின் ஆய்வு:

உண்மையில் காசாங்காடு கிராம பள்ளி குழந்தைகள் அசுத்த தண்ணீர் குடிகின்றர்களா அல்லது இந்த தண்ணீர் சுத்திகரிப்பு சாதனம் தேவையா என்பதற்கான புள்ளி விபரம் இல்லை. இதற்கான ஆய்வையும் Lions Club of Madras Sterling Avenue நிறுவனம் அல்லது கிராம நிர்வாகம் செய்தார்களா என்பது பற்றி தெரிவில்லை. தகவல் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


பள்ளி குழந்தைகள் குடிக்கும் தண்ணீர் சுகாதாரம் இல்லாத நீர் என்றால் ஏன் இதற்க்கு முன் சிறந்த தண்ணீர் வழங்க வேண்டும் என்று கிராம நிர்வாகம் முயற்சி செய்யவில்லை?

நிகழ்ச்சி பற்றி:


கிராமத்தில் தலைகீழாக ஊடுகசிவு (Reverse Osmosis) முறையில் குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் அரசு மேல்நிலை பள்ளியில் நிறுவபடுகின்றது.

இந்த சாதனம் நிறுவும் தொகை ரூ. 1,50,000/- ஆகும். இந்த இயந்திரம் ஒரு மணிநேரத்திற்கு 500 லிட்டர் சுத்திகரிக்கும் திறன் கொண்டது.

இந்த உதவியை Lions Club of Madras Sterling Avenue அறகட்டளை காசாங்காடு கிராம அரசு மேல் நிலை பள்ளிக்காக செய்கின்றது.

நிகழ்ச்சி நிரல்: 22 செப்டம்பர் 2012

10:30 தேநீர்
11:00 தலைகீழாக ஊடுகசிவு சாதனம் திறப்பு விழா
13:00 மதிய உணவு
14:00 Lions Club பற்றி விவாதித்தல்
14:30 Lions Club பட்டுக்கோட்டை பிரிவுடன் சேர்ந்து கூட்டம்.

Lions Club of Madras Sterling Avenue President Subramaniyan invites you to install RO plant at Kasangadu Govt. Higher Secondary School.

LIONS CLUB OF STERLING AVENUE: (2012-2013)

1. Ln V. SUBRAMANIAN, B.E.(Hons), - PRESIDENT,
2. Ln P. ANANDARAJ, - SECRETARY,
3. Ln ASHOK KUMAR SABAT. - TREASURER


Chief Guests:

Lions Club TMJF CAC Rajagopal, Past District Governer. District: 324A2
Guest of Honor: TMJF Lion NS Shankar, Past District Governer, District: 324A1

Inaugration:

TMJF Lion Dr. S VishwaKumar MS Cardiac Surgeon Chennai

பதவி, பெருமை என்று எவ்வித எதிர்பார்ப்புகளையும் பாராமல் கிராமத்திற்கு உதவி செய்ய முன்வந்த அனைத்து உள்ளங்களுக்கும் இணைய குழுவின் நன்றிகள்.

வியாழன், செப்டம்பர் 20, 2012

வேதராசு மாசிலாமணி இல்ல சீமந்த (வலையல் காப்பு) சடங்கு விழா


தேதி மற்றும் நேரம்: 20, செப்டெம்பர் 2012 மதியம் 3 மணியளவில்
நடக்கும் இடம்: அண்ணாமலை  திருமண  மண்டபம், மதுக்கூர் 

கர்பிணியின் பெயர்: திருமதி. சாந்தி 
வீட்டின் பெயர்: செட்டியார் வீடு, நடுத்தெரு
கணவர் பெயர்:  திரு. ரெத்தினம்

மிக பிரமாண்டமான முறையில் நிகழ்ச்சி நல்ல முறையில் நடந்து முடிந்தது.

காசாங்காடு கிராமத்தில் இந்து மத சடங்குகள்:  http://history.kasangadu.com/intu-matam/catankukal
எதற்காக இந்த சடங்கு செய்யபடுகிறது: http://www.sanathanadharma.com/samskaras/prenatal2.htm

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு தாங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

புதன், செப்டம்பர் 19, 2012

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்


கிராம மக்களுக்கு இணைய குழுவின் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

புதன், செப்டம்பர் 12, 2012

Android கைபேசிகளுக்கு மேலும் தகவல்களை எளிதாக பகிர்ந்து கொள்ளும் வசதி


Android  கைபேசிகள் கொண்டு பின்வரும் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.

  1. நிழற்படம்
    1. நடக்கும் பார்க்கும் தகவல்களை எளிதாக நிழற்படம் எடுத்து அனுப்பும் வசதி.
  2. நிகழ்படம்
    1. நடக்கும் / பார்க்கும் தகவல்களை எளிதாக நிகழ்படம் எடுத்து அனுப்பும் வசதி.
      1. தனி மனிதர்களின் உரிமையை கருத்தில் கொள்ளவும்.
  3. ஒலிப்பதிவு
    1. தகவல்களை எளிதாக பேசி அல்லது நடக்கும் இடங்களில் பதிவு செய்து உடனே அனுப்பும் வசதி.
பின்வரும் சுட்டியில் இருந்து  செயலியினை தங்கள் கைபேசிகளில் மேலேற்றி கொள்ளலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.kasangadu.mobileapps

மேலும் கிராமத்திளிரிந்து எவ்வளவு தூரத்தில் இருக்கின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.



கருத்துக்களை பகிர்ந்து கொண்ட மேம்படுத்த உதவிய உள்ளங்களுக்கு எமது நன்றிகள்.


திங்கள், செப்டம்பர் 10, 2012

கிராமத்தில் கன மழை


கிராமத்தில் கன மழை.


செவ்வாய், செப்டம்பர் 04, 2012

Kasangadu - கைதொலைபேசி Android App வெளியிடப்பட்டுள்ளது


காசாங்காடு கிராமத்தை பற்றி எளிதாக கைபேசிகளில் தெரிந்து கொள்ள Android மென்பொருள் கொண்ட கைபேசிகளுக்கு Kasangadu என்ற தலைப்பில் செயலி (Application) வெளியிடப்பட்டுள்ளது.

பின்வரும் சுட்டியில்ரிந்து தங்கள் Android கைபேசிகளில் மேம்படுத்தி கொள்ளலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.kasangadu.mobileapps

பின்வரும் திரை பிடிப்பு அதன் ஒரு சில பகுதிகளாகும்.





முதல் கட்டமாக சில எளிய பகுதிகளை கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.


தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.

திங்கள், செப்டம்பர் 03, 2012

659 உலக நகரங்களிளிரிந்து 1,25,605 பேர் காசாங்காடு கிராமத்தை பற்றி காண வருகை


காசாங்காடு கிராமத்தை பற்றி தெரிந்து கொள்ள லட்ச கணக்கான மக்கள் காண வருகை.

கிராம இணைய தள வரலாறு பக்கம்: http://history.kasangadu.com/inaiyatala-varalaru

புள்ளிவிபரங்கள் பின்வருமாறு. இந்த கணக்கு செப்டம்பர் 2 , 2008 முதல் இன்று வரை.

தளத்தை பார்த்த நபர்கள்: 1,25,605
வழங்கிய பக்கங்கள்: 3,60,638
உலக நகரங்கள்: 659
நாடுகள்: 77

அதிக நபர்கள் வந்த நகரங்கள்:


1. சென்னை
2. கோயம்புத்தூர்
3. பெங்களுரு
4. ஈரோடு
5. தஞ்சாவூர்

அதிக நபர்கள் வந்த ஐந்து நாடுகள்:


1. இந்தியா
2. சிங்கப்பூர்
3. ஐக்கிய அமெரிக்கா
4. ஐக்கிய அரபு நாடுகள்
5. ஸ்ரீ லங்கா

காசாங்காடு கிராமத்தை பற்றி தெரிந்து கொள்ள வந்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.


ஞாயிறு, செப்டம்பர் 02, 2012

காசாங்காடு இணைய தளம் - ஐந்தாம் ஆண்டு தொடக்கம்


காசாங்காடு இணைய தளம் இன்று அதன் ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது.

எவ்வித எதிர்பார்ப்புமின்றி தகவல்களை பகிர்ந்து கொண்ட அனைத்து பொது மக்களுக்கும், காசாங்காடு கிராமத்தின் பெருமையை உயர்த்தும் வகையில் உலகின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் அனைத்து காசாங்காடு குடிமகன்களுக்கும், தொழில்நுட்ப திறமையுடன் எவ்வித தகவல் தொழில்நுட்பங்களையும் காசாங்காடு கிராமத்திற்கு கொண்டு வரும் இணைய குழுவிற்கும் எமது பாராட்டுக்கள்.

சட்டரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வுகளுக்கு தெளிவாகவும், முறையாகவும் தகவல்களை பதிய உதவிய அனைத்து சட்ட வல்லுனர்களுக்கும் எனது நன்றிகள்.

கிராமத்தின் வாழ்க்கை தரம் மற்றும் குடிமகன்களின் சுதந்திரம் மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்.

தொடங்கிய நாள் முதல் இன்றும் காசாங்காடு கிராமத்தின் முழுமையான, நேர்மையான, உண்மையான  தகவல்களை பெற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதை உறுதிபடுத்த உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் எமது நன்றிகள்.

இணைய புள்ளிவிபரங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்.

தொடர்ந்து அனைவரின் ஆதரவும், ஊக்கமும், கருத்துகளும் காசாங்காடு இணைய தளத்தை மேம்படுத்த உதவும்.

கண்ணையன்