அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

செவ்வாய், மார்ச் 12, 2013

கிராமத்திற்கு தேவையான - மத்திய அரசின் வரவு செலவு திட்டம் - (2013 - 2014) -


மத்திய அரசின் வரவு செலவு 2013-2014 திட்டத்தின் கீழ் காசாங்காடு கிராமம் மற்றும் குடிமகன்கள் எவ்வாறு பயன் பெறலாம் என்பது பற்றி தெரிந்து கொள்வோம். விடுப்பட்ட திட்டங்கள் / பிழைகள் இருப்பினும் திருத்தி பகிர்ந்து கொள்ளுங்கள்.

Arsenic  மற்றும் Flouride  கலந்துள்ள நீர்களில் சுத்திகரிப்பு சாதனம் நிறுவப்படும். காசாங்காடு கிராம நிர்வாகம் வழங்கும் தண்ணீரில் இந்த கனிமங்கள் உள்ளனவா என்பது பற்றி தெரியவில்லை. இதற்காக மத்திய அரசு 1,400 கோடி ரூபாய் செலவிட உள்ளது.

மகாத்மா காந்தி (MNREGA) கிராமிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (100 நாள் வேலைவாய்ப்பு) கீழ் செயல்படும் திட்டங்களுக்கு 33,000 கோடி செலவிட உள்ளது. காசாங்காடு கிராமம் இந்த திட்டத்தின் கீழ்   வெகுவாக பயன் பெறுகின்றது. சாலைகள் அமைத்தல், சுகாதாரம் போன்ற வகைகளில் தற்போது பயன்படுத்தபடுகிறது. இது பற்றி கிராமத்தில் நடக்கும் தகவல் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இவைகள் மட்டுமன்றி கிராமங்கள் முன்னேற்றத்திற்காக  80,194 கோடி செலவிட உள்ளது. Pradhan Mantri Grameen Sadak Yojana திட்டத்தின் மூலம் சாலைகள் முன்னேற்றம் இதில் அடங்கும். NABARD  திட்டத்தின் மூலம் பத்தாயம், விவசாய அறுவடை சேகரிப்பு கிடங்குகள் ஏற்படுத்த உதவிகளும் இதில் அடங்கும்.

கிராமப்புற தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு ரூபாய். 200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் ஏதேனும் கண்டுபிடிப்புகள் இருப்பினும் தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஐந்து லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு செலுத்தும் வருமான வரிகளில் ரூபாய். 2,000 திருப்பி வழங்கபடுகிறது. ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் இருப்பினும் 40% வருமான வரி கட்ட வேண்டும்.

காசாங்காடு கிராம நிர்வாகத்தின் வரவு செலவு திட்டங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை: