அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

சனி, மார்ச் 30, 2013

வ.உ.சி பேரவை - காசாங்காடு கிராம முன்னேற்றம் ???



சமீபத்தில் காசாங்காடு கிராமம் சந்தித்த முன்னேற்றங்கள்???:

  1. இந்து மத சடங்குகளை அவமதிப்பது
    1. பெரியோர்களால் நிச்சயிக்க பட்ட திருமணங்கள் நிறுத்துதல் / தடைபடுதல்
  2. அரசியல்வாதிகளுக்கு பிறந்த நாள் கொண்டாடும் விழாக்கள்
  3. கிராம மக்கள் பிரதிநிதிகள் கல்வெட்டு
  4. சினிமா விளம்பர பலகை
  5. தேவையற்ற தண்ணீர் குடிநீர் சுத்திகரிப்பு சாதனம்
    1. கிராம நிர்வாகம் / சபை தேவையா / தேவையில்லையா என்ற ஆராய்ச்சி செய்வதில்லை.
    2. இலவசமாக கொடுக்கின்றார்கள் என்று பள்ளி நிர்வாகம் தேவையற்ற சாதனங்களை பொருத்துவது.
  6. தற்போது சாதிக்கு பேரவை
    1. அதோடு கொடிமரங்கள் நிறுத்தங்கள்
மற்ற கிராமங்களுக்கு எடுத்துகாட்டாய் விளங்கி வந்த காசாங்காடு கிராமத்தில் இந்த களைகள்  உருவாகுவதற்கு யார்  காரணம்?


ஊர் பெரியர்வர்கள் மற்றும் கிராம நிர்வாகமும் / நாட்டாண்மைகள் இந்த நிகழ்வுகளுக்கு உடந்தையாய் இருப்பதே இதற்க்கு மிகவும் மோசமான நிலைக்கு காரணம்.

இவை முன்னேற்றத்தின் அடி பாதையில் கிராமத்தை இழுத்து செல்லும் திட்டங்களாகும் ???

வியாழன், மார்ச் 28, 2013

67.98 இலட்சம் ருபாய் (2007-2013) - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம்




காசாங்காடு கிராமத்திற்கு மட்டும் இதுவரை 68 இலட்சம் ருபாய் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் மூலம் செலவிடப்பட்டுள்ளது.

4000 செலவிட்ட கிராம பிரதிநிதிகளுக்கு கல்வெட்டு வேண்டுமெனின், 67.98 இலட்சம் கொடுத்த இந்திய குடிமகன்களுக்கு (வரி பணம் மூலம்) எங்கே கல்வெட்டு?

தேவையான முறையில் கிராம நிர்வாகம் இவை திட்டமிட்டு செலவு செய்யப்பட்டதா என்பதை குடிமகன்கள் தான் பதில் கூற வேண்டும்.

விபரங்கள் பின்வருமாறு:

2007-2008
2913012010/RC/23036   காசாங்காடு சாலைகள் முன்னேற்றம் - 3 இலட்சம்

2008-2009
2913012010/IC/16240     காசாங்காடு மஞ்சு குப்பம் ஏரி தூர்வை தோண்டுதல் -  3 இலட்சம்

2009-2010
2913012010/WH/67178     காசாங்காடு பிள்ளையார் குளம் தூர் தோண்டுதல் - 4 இலட்சம்

2010-2011
2913012010/IC/59892     காசாங்காடு அனைத்து ஏரி பாசன வாய்கால் & கலை வாய்க்கால் - 3.4 இலட்சம்
2913012010/RC/33710    காசாங்காடு மஞ்சுகுப்பம் ஏரி கரை  -  3 இலட்சம்
2913012010/WH/83398   காசாங்காடு குண்டுக்கட்டை ஏரி மஞ்சுகுப்பம் ஏரி -  3.7 இலட்சம்

2011-2012
2913012010/IC/2904036820     காசாங்காடு பாசான வாய்கால், இலை வாய்கால், வடிகால் வாய்கால்   - 3.65  இலட்சம்
2913012010/WH/2904046807    மஞ்சள் - கிணறு - ஏரி - 4.6 இலட்சம்
2913012010/WH/2904046813    இடம்கொண்டான் ஏரி - தூர்வை தோண்டுதல் - 3.68 இலட்சம்
2913012010/RC/2904039338     காசாங்காடு பஞ்சாயத்து சாலை - யூனியன் சாலை -  4.7 இலட்சம்
2913012010/RC/2904041853     காசாங்காடு மாவட்ட நெடுஞ்சாலைகள் - இரு பக்கம் - வடிகால் சரிசெய்தால், மற்றும் குண்டுக்கட்டை ஏரி வடிகால்  - 3.6 இலட்சம்

2012-2013
2913012010/RC/2904055120     காசாங்காடு - தம்பிகோட்டை  வடகாடு வாய்கால் - வடகரை மற்றும் தென்கரை புதிய சாலை அமைத்ததை - 4 இலட்சம்
2913012010/WH/2904065516    காசாங்காடு - மஞ்சுகுப்பம் ஏரி வடக்கு  தூர் தோண்டுதல் - 4.5 இலட்சம்
2913012010/WH/2904066675   காசாங்காடு - தூர் தூண்டுதல் - ஏரி நீர் வரத்து வாய்கால் - பாசான வாய்க்கால் - PWD  வாய்கால்  - 5 இலட்சம்
2913012010/WH/2904066961    காசாங்காடு - குண்டுக்கட்டை ஏரி - மேற்கு பகுதி - தூர் தோண்டுதல் - 4.5 இலட்சம்
2913012010/WH/2904076245    காசாங்காடு - வடகாடு வாய்கால் தூர் தோண்டுதல் -  4.67 இலட்சம்
2913012010/WH/2904094491     காசாங்காடு - குண்டுக்கட்டை ஏரி ஆழம் செய்தல் மற்றும் தெற்கு  கரைகளை உறுதி படுத்துதல்  -  4.98 இலட்சம்

தகவல்களை பகிர்ந்து கொண்ட  மத்திய ஊரக துறைக்கு எமது நன்றி.
பிழைகள் / திருத்தங்கள் மேலும் தகவல்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


ஞாயிறு, மார்ச் 24, 2013

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் - நிதி திரட்டும் பணி ஆரம்பம்


மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் - நிதி திரட்டும் பணி ஆரம்பம்.

கிராம பெரியவர்கள் வீடு வீடாக சென்று நிதி திரட்டி வருகின்றனர்.

கிராமத்தில் நிதி திரட்டும் முறைகள்: http://history.kasangadu.com/kovil-nikalccikal/niti-vacul-ceyyum-murai


செவ்வாய், மார்ச் 12, 2013

கிராமத்திற்கு தேவையான - மத்திய அரசின் வரவு செலவு திட்டம் - (2013 - 2014) -


மத்திய அரசின் வரவு செலவு 2013-2014 திட்டத்தின் கீழ் காசாங்காடு கிராமம் மற்றும் குடிமகன்கள் எவ்வாறு பயன் பெறலாம் என்பது பற்றி தெரிந்து கொள்வோம். விடுப்பட்ட திட்டங்கள் / பிழைகள் இருப்பினும் திருத்தி பகிர்ந்து கொள்ளுங்கள்.

Arsenic  மற்றும் Flouride  கலந்துள்ள நீர்களில் சுத்திகரிப்பு சாதனம் நிறுவப்படும். காசாங்காடு கிராம நிர்வாகம் வழங்கும் தண்ணீரில் இந்த கனிமங்கள் உள்ளனவா என்பது பற்றி தெரியவில்லை. இதற்காக மத்திய அரசு 1,400 கோடி ரூபாய் செலவிட உள்ளது.

மகாத்மா காந்தி (MNREGA) கிராமிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (100 நாள் வேலைவாய்ப்பு) கீழ் செயல்படும் திட்டங்களுக்கு 33,000 கோடி செலவிட உள்ளது. காசாங்காடு கிராமம் இந்த திட்டத்தின் கீழ்   வெகுவாக பயன் பெறுகின்றது. சாலைகள் அமைத்தல், சுகாதாரம் போன்ற வகைகளில் தற்போது பயன்படுத்தபடுகிறது. இது பற்றி கிராமத்தில் நடக்கும் தகவல் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இவைகள் மட்டுமன்றி கிராமங்கள் முன்னேற்றத்திற்காக  80,194 கோடி செலவிட உள்ளது. Pradhan Mantri Grameen Sadak Yojana திட்டத்தின் மூலம் சாலைகள் முன்னேற்றம் இதில் அடங்கும். NABARD  திட்டத்தின் மூலம் பத்தாயம், விவசாய அறுவடை சேகரிப்பு கிடங்குகள் ஏற்படுத்த உதவிகளும் இதில் அடங்கும்.

கிராமப்புற தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு ரூபாய். 200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் ஏதேனும் கண்டுபிடிப்புகள் இருப்பினும் தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஐந்து லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு செலுத்தும் வருமான வரிகளில் ரூபாய். 2,000 திருப்பி வழங்கபடுகிறது. ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் இருப்பினும் 40% வருமான வரி கட்ட வேண்டும்.

காசாங்காடு கிராம நிர்வாகத்தின் வரவு செலவு திட்டங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வியாழன், மார்ச் 07, 2013

அரிதான நோய் நாள் - காசாங்காடு கிராம தொடக்கப்பள்ளியில் கொண்டாடப்பட்டது


அரிதான நோய் நாள் காசாங்காடு கிராம தொடக்க பள்ளியில் கொண்டாடப்பட்டது.

http://www.rarediseaseday.org/2013/events/show/id/1115/country_id/in

டாக்டர். நவநீதம் துரைசாமி, மன்னங்காடு அவர்களால் நடத்தப்பட்டு வரும் இந்த அரிதான நோய் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

http://www.rarediseasesindia.org/

மன்னங்காடு பற்றிய தளத்தை இவர் இயக்கி வருகின்றார் என்பது குறிப்பிடதக்கது.

http://www.mannankadu.org/


செவ்வாய், மார்ச் 05, 2013

கிராமத்தில் கன மழை !!!


கிராமத்தில் இன்று விடியற்காலை முதல் கன மழை !