அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

வியாழன், பிப்ரவரி 26, 2015

முதியவர்களின் அமைதி வாழ்வினை சீரழிக்கும் காசாங்காடு கிராமம் !

"பஞ்சாயத்து" என்ற பின்வரும் வார்த்தை: நிர்வாகமோ அல்லது ஊராட்சியோ அல்ல. பேச்சு வழக்கில் அழைக்கப்படும் நியாயகாரர்கள்.


http://news.kasangadu.com/2015/02/blog-post.html - சுட்டியின் தொடர்

எங்கு ஆரம்பித்தது இந்த காசாங்காடு கிராம அராஜகம்?

முப்பது வருடங்களுக்கு முன் வாங்கிய பணம் கொடுக்க வேண்டும் என்று பங்காளிகளிடம் மூலம் தூது அனுப்பினார்.

ஒரு பைசா கூட கொடுக்க வேண்டியத்தில்லை என்று பதில் சொல்லி முடிந்துவிட்டது.

பிறகு மேலும் நான்கு நபர்கள் பஞ்சாயத்து செய்ய வேண்டும் என்று முடியாத முதியவர்களிடம் பணம் பறிக்க வேண்டுகோள் விடுத்துனர். பஞ்சயத்திர்க்கு  முதியவர்கள் செல்ல வில்லை.



அடுத்த திட்டமாக அம்முதியர்வர்களின் தோப்பு கதுவுகளில் பூட்டு போட்டுள்ளனர். இதை செய்தது காசாங்காடு கிராமமா, பங்காளிகளா அல்லது பண வெறி பிடித்து அலையும் பிச்சை காரனா என்பது தெரியவில்லை. 

மேலும் எந்த பிரச்சனையிலும் ஈடுபடக்கூடாது என்று பூட்டை உடைத்து எரிந்து தனது தினசரி வாழ்க்கையினை தொடர்ந்தனர். 

இது போன்று மூன்று முறை பூட்டு போடுவதும் உடைத்து தனது தினசரி  வேலை பார்பதுமாக இருந்தது. சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டாம். எதற்கு காவல்துறை, நீதிமன்றம் என்று வயதான முடியாத காலத்தில் செய்வோமே என்று அமைதியாய் இருந்து விட்டனர் அந்த முதியவர்கள். மேலும் இந்த நிகழ்வுகள் சம்பந்தமான பணம் கேட்க்க வந்தவர்களிடமும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் என்ன என்ன அராஜகம் நடந்தது என்பதை விபரமாக எழுதுகிறோம் !


கருத்துகள் இல்லை: