அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

ஞாயிறு, ஏப்ரல் 14, 2013

அய்யனார் திருக்கோவில் ஜெய வருடபிறப்பு திருவிழா அழைப்பிதழ்


அருள்மிகு ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பால் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனார் திருக்கோவில் சித்திரை வருடபிறப்பு திருவிழா அழைப்பிதழ்
காசாங்காடு மன்னங்காடு ரெகுநாதபுரம்



ஆன்மீக அன்பர்களே வணக்கம்,

நிகழும் மங்களகரமான ஜெய வருடம் சித்திரை மாதம் 1 தேதி, 14/04/2013 ஞாயிற்றுகிழமை சதுர்த்தி ரோகினி நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பாள் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனாருக்கு சிறப்பு அபிஷேக ஆரதனை உள்ளது.

அது சமயம் பக்த கோடிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பாள் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனார் சுவாமி அருள்பெற வேண்டுகிறோம்.

நிகழ்ச்சி நிரல்:
ஜெய சித்திரை மாதம் 1, 14/04/2013 ஞாயிற்றுகிழமை:

காலை 9 மணி:
சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.

மாலை 5 மணி அளவில்:
காவடி, பால்குடம், மாவிளக்கு அர்ச்சனைகள் நடைபெறும்.
இரவு 9 மணி:
சிறப்பு ஆராதனை பிரசாதம் வழங்குதல்.

இங்ஙனம்,
கிராமவாசிகள்
காசாங்காடு, மன்னங்காடு, ரெகுநாதபுரம்


கிராமத்தில் ஆன்மீக உணர்வை வளர்க்கும் நாட்டண்மைகளுக்கு இணைய குழுவின் நன்றிகள்.

சனி, ஏப்ரல் 13, 2013

இனிய விஜய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !


இனிய விஜய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

நந்தன முடிந்து விஜய ஆரம்பமாகின்றது. தமிழ் கால அளவுகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள,

தமிழ் கால அளவுகள்: http://article.kasangadu.com/tamil-kalankal

வரலாற்று பகுதியில்: http://history.kasangadu.com/pantikaikal/tamil-varuta-pirappu-tirunal

மேலும் தகவல்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

PAN/TAN அட்டை - வருமான வரி - படிவம் 15G/H


தாங்களுக்கு PAN  (Permanent  Account Number) அட்டை இல்லையெனின் பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் பகுதிகளில் இந்த அட்டையை பெற்று தர தனியார் நிறுவனங்கள் உதவி புரிகின்றன. தகவல்களை பதிவு செய்து அட்டையை பெற்று கொள்ளவும்.

வருமான வரி தகவல்களை அரசாங்கத்திடம் பகிர்ந்து கொள்ள தாங்கள் எவ்விதத வருமானத்தையும்  கொண்டிருக்கலாம். தாங்களுக்கு வருமானம் இல்லாவிடினும் வருமான வரி தகவல்களை அரசாங்கத்திடம் பகிர்ந்து கொள்ளுங்கள். தெளிவான சேவைகளை வழங்க மற்றும் கிராம மக்களின் நலன் பற்றி அறிய அரசாங்கத்திற்கு இந்த தகவல் உதவும்.

மேலும் தகவல்களுக்கு: http://incometaxindia.gov.in/

2012-2013 ஆண்டின் வருமான வரியை அரசாங்கத்திடம் பகிர்ந்து கொள்வோம்.

வரி விபரங்கள்: http://finotax.com/itax/itaxrates1.htm

TAN (Tax Deduction and Collection Account Number):
தொழில்களுக்கு வழங்கப்படும் வரி வசூல் எண். காசாங்காடு கிராமத்தில் நடத்தப்படும் தொழில்கள் தாங்கள் வருமான வரியை அரசாங்கத்திடம் பதிந்து கொள்ளுங்கள்.

கிராமத்தில் உள்ள தொழில்களுக்கு TAN  நம்பர் உள்ளதா / இல்லையா என்பது பற்றி இந்த தளத்தில் தெரிந்து கொள்ளவும்.

https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/KnowYourTanLink.html

வங்கியில் வரும் பணத்திற்கு / நிலையான வைப்பு தொகை இருப்பினும் வங்கிகள் தானாகவே தங்களின் அனுமதியின்றி  TDS  (Tax  Deduction  at  Source) எடுக்கும் வரிகளை எடுக்க வேண்டாம் என்று கூற 15G/H  படிவத்தினை சமர்பிக்கவும். இதற்க்கு PAN  அட்டை அவசியம். இவை தாங்களின் வருமானம் வரி விலக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே பதிய வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு முறையான வருமான வரி ஆலோசானை நிறுவனங்களை அணுகவும். குறுக்கு / தவறான / அரசாங்கத்தை ஏமாற்றும் வழிகளை தவிர்க்கவும்.

கோடிகணக்கில் இந்திய மக்களின் வரி பணம் நம் கிராம முன்னேற்றத்திற்காக அரசாங்கம் திட்டமிட்டு செலவிடுகின்றது. மேலும் அரசாங்கம் திறனுடன் செயல்பட உறுதுணையாக இருப்போம்.