அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

திங்கள், பிப்ரவரி 15, 2010

கோவில் தோப்பு தொடக்க பள்ளியின் கழிவறை - கிராமத்தின் சுகாதாரம்


தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு இணையத்தின் மூலம் மனு அனுப்ப இங்கே சொடுக்கவும்.

இங்கே சில புகை படங்களை இணைத்து உள்ளேன், அவை கோயில் தோப்பு பள்ளி பின் புறம் உள்ள கழிப்பறை குழாய் உடைந்து தண்ணீர் வெளியாகி கிடக்கும் படங்கள், இந்த குழாய் உடைந்து சுமார் ஐந்து ஆறு மாதங்கள் ஆகிறது, இதை உரிய அதிகாரிகளிடம் கூறியும் எந்த பயனும் இல்லை இதை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவும் இல்லை.



இந்த பள்ளிக்கு பொறுப்பேற்கும் ஊராட்சி ஒன்றியம். எங்கள் கிராமத்தில் இருந்தும் மக்கள் பிரதிநிதிகள் உறுப்பினராக உள்ளனர். 


இந்த கழிவறை நுழை வாயிலில் தான் எங்கள் கிராமத்தில் 5 வயது முதல் 10 வயது வரை  கோவில் தோப்பு தொடக்க பள்ளியில் கல்வி கற்க வரும் சிறு குழந்தைகள் கழிவறையை அடைய செல்லும் வழி.


இதுவே கழிவறையின் உள்புற தோற்றம். சுகாதாரத்தின் உச்சம் இது தானோ ?



மிகவும் சுகாதாரம் மிக்க கிராமம் என்று நிர்மல் கிராம் புரஸ்கார் விருது வாங்கிய காசாங்காடு கிராமம் என்பது குறுப்பிடதக்கது. இந்த அமைதியான இயற்கை சூழழில் தான் எங்கள் கிராம சின்னஞ்சிறு குழந்தைகள் கல்வி கற்கின்றார்கள். கடவுள் தான் இதற்குரிய தண்டனையை இதற்கான அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும்.

ஞாயிறு, பிப்ரவரி 14, 2010

கிராம தொலைபேசி இணைப்பகத்தில் அகன்ற அலைவரிசை இணைய இணைப்பு

காசாங்காடு கிராமத்தில் BSNL நிறுவனத்தால் இயக்கப்படும் தொலைபேசி இணைப்பகத்தில் அகன்ற அலைவரிசை இணைய (Broadband Internet) இணைப்பு மக்களுக்கு கொடுக்க வசதி செய்யபட்டுள்ளது.

ஒரே நாளில் இச்சேவை கொடுக்கப்படுகிறது.

பொது மக்கள் இணைய இணைப்பை பெற்று பயன் பெறுமாறு கேட்டுகொள்கிறோம்.

தகவல்: பற்குணன், மன்னங்காடு

வியாழன், பிப்ரவரி 04, 2010

மு.க. அழகிரி பேரவை விளையாட்டு மற்றும் பரிசளிப்பு விழா

கடந்த சனவரி மாதம் 31 ஆம் தேதி கிராமத்தில் விளையாட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. குழந்தைகள், பெண்கள், ஆண்கள் மற்றும் முதியவர்கள் என்று வயது பாரபட்சமின்றி விழாவில் பங்கு கொண்டு சிறப்பித்தனர்.

விழாவில் திரு. மெய்யநாதன் பங்கு கொண்டு விழாவினை சிறப்பித்து நன்றியுரையுடன் முடித்து வைத்தார்.

பங்கு கொண்ட அனைத்து கிராமத்து மக்களுக்கும், விழாவை சிறப்பாக நடத்திய மு.க.அழகிரி பேரவைக்கும் காசாங்காடு இணைய குழு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறது.

தகவல் உதவி: சுகுமாரன், துபாய்