அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

புதன், மார்ச் 25, 2009

தமிழ்நாடு அரசு பாட புத்தகங்கள் - 1 முதல் 12 வரை

ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை இணையத்தில் அனைத்து பாட புத்தகங்களும் தமிழ்நாடு நாடு அரசு கல்வி துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி ஆசிரியர் தொழிலில் டிப்ளோமா படிப்பிற்குரிய அனைத்து அரசு பதிப்புகளும் இதே இணையத்தில் உள்ளது.


திங்கள், மார்ச் 23, 2009

நெஞ்சை கவர்ந்த ஆத்மாக்கள் - செந்தில்குமார், சிலம்பை

1999 ஆம் ஆண்டு, மே மாதம், 23 தேதி, கிராம முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் திரு. விஸ்வநாதன் அவர்களை பற்றி "ஜூனியர் விகடனில்", சிலம்பவேளாங்காட்டை சேர்ந்த திரு. நடேசன். செந்தில்குமார் அவர்கள் எழுதிய "நெஞ்சை கவர்ந்த ஆத்மாக்கள்" கட்டுரை இங்கே.

இக்கட்டுரை ரூ. 250/- பரிசையும் பெற்றது குறுப்பிடத்தக்கது.

செய்தி உதவி: இளம்பரிதி தங்கராசு, சிலம்பவேளாங்காடு

நல்ல உள்ளங்களுக்கு காசாங்காடு இணையக்குழு நன்றியை தெரிவித்து கொள்கிறது.


ஞாயிறு, மார்ச் 22, 2009

கிராம வாக்காளர் பட்டியல் - 2009

2009 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல்.

மொத்த வாக்காளர்கள்: 2296 (ஆண் 1080, பெண் 1216)

தெற்குதெரு, கீழத்தெரு வாக்காளர் கோப்பு - 1211 (ஆண் 558, பெண் 653)
நடுத்தெரு, வடக்குதெரு, மேலதெரு வாக்காளர் கோப்பு - 1085 (ஆண் 522, பெண் 563)

வெள்ளி, மார்ச் 20, 2009

அனைத்து பக்கங்களும் 2007-2008 வரவு செலவு கணக்குகள்

அரசாங்கத்தில் அனுப்பிய அனைத்து பக்கங்களும் உங்கள் பார்வைக்கு. இணையத்தில் அதன் கோப்புக்கான தொடர்பு சுட்டி இங்கே.

கடவுச்சொல்: kasangadu.com


புதன், மார்ச் 18, 2009

2007-2008 13 கூட்டமும் 64 தீர்மானங்களும்

2007- 2008 ஆம் நிதியாண்டில் 13 கூட்டங்களும், 64 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு கூட்டத்திலும் ஒன்பது நபர்கள் மற்ற மக்களுக்கு பிரதிநிதிகளாய் இருப்பவர்கள் என்று எண்ணுகிறோம் !. அந்த ஒன்பது நபர்களின் பெயர்கள் கூடிய கோப்பு விரைவில் வெளியிடப்படும். அவர்களை ஊராட்சி எவ்வாறு தேர்வு செய்தது என்பதும் வெளியிடப்படும்.கண்ணெதிரே மாறிய கணக்குகள்


கண்ணுக்கு தெரியாத கணக்குகள் ஏதும் இங்கு உண்டோ?
கண்ணெதிரே மாறிய கணக்குகள்.
நன்றி.

செவ்வாய், மார்ச் 17, 2009

குடிநீர் கட்டண மோசடியா? ரூ. 72850 எங்கே?

தனி இணைப்பு குடிநீர் கட்டணம் ரூ. 360 (ஒரு வருடத்துக்கு)

மொத்தம் உள்ள இணைப்புகள் - 423
மொத்த கட்டணம்: 360 * 423 = 152280

கணக்கில் காண்பித்துள்ள தொகை ரூ. 79430.

மீதமுள்ள ரூ.72850 எங்கே?

கிராம தலைவர் இதற்கான பதிலை நேரடியாக அளிக்கலாம். kasangaducom@googlegroups.com என்ற மினஞ்சல் முகவரிக்கு விளக்கத்தை அனுப்பவும்.

நன்றி.

கிராமத்தின் 2007-2008 விரிவான கணக்குகள்

தெரு விளக்குகள் - 282 (குழல் விளக்குகள் - 267, சோடியம் விளக்குகள் - 15)
மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் - 6

குடிநீர் வசதி:

மேல் நிலை நீர் தேக்க தொட்டிகள் - 6
மினி டேங்குகள் - 1

பொது விநியோக குழாய்கள் - 92
தனிநபர் குடிநீர் இணைப்புகள் - 423

சம்பள விபரம்:

அ. ஜெயரதி (ஊராட்சி உதவியாளர்) - ரூ. 1323
கோ. சின்னையன் (மே.நி.நீ இயக்குபவர்) - ரூ. 600
மு. பாலகிருஷ்ணன் (மே.நி.நீ இயக்குபவர்) - ரூ. 600
சி. ராசாத்தி (துப்புரவாளர்) - ரூ. 600
இரா. சிலம்பரசன் - (மக்கள் நல பணியாளர்) - ரூ. 1000


திங்கள், மார்ச் 16, 2009

கிராமத்தின் 2007-2008 இன் மக்கள் தொகை 4458

காசாங்காடு கிராம 2007-2008 ஊராட்சி நிர்வாகத்தின் கணக்குப்படி ஆண்கள் 2212 ம், பெண்கள் 2246 ம் சேர்த்து மொத்த மக்கள் தொகை 4458. ஏழு ஆண்டுகளில் 1586 மக்கள் பெருக்கம்.

அதற்கான அரசாங்கத்தின் கோப்பு இங்கே.

ஞாயிறு, மார்ச் 15, 2009

தோப்பு கரணம் - சூப்பர் யோகா

தோப்பு கரணம் போடுவது மூளைக்கு நல்லதாம். ஆசிரியர்கள் சின்ன வயதில் பள்ளியில் சரியாக படிக்கவில்லை என்றால் மாணவ / மாணவிகளை தோப்பு கரணம் போட சொல்வது சரி தானோ?


சனி, மார்ச் 14, 2009

2007-2008 ஆம் ஆண்டிற்கான கிராமத்தின் வரவு செலவுகள்

அரசிடம் காசாங்காடு கிராமத்தின் வரவு செலவுகள் பற்றி கேட்டு இருந்தோம். அரசு கொடுத்த தகவல்கள் அப்படியே வெளியிட்டு உள்ளோம். முயற்சி செய்த காசாங்காடு இனைய குழுவிற்கு இதயம் கனிந்த நன்றி. கணக்குகள் சரியாக உள்ளனாவா என்பதை  பொது மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். 

மேலும் கிராமத்தில் அரசாங்க சொத்துக்கள் பற்றி விரைவில் வெளியிடப்படும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பற்றிய விவரங்கள் அதில் அடங்கும்.

கணக்குகள் சரியில்லை எனில், உங்களிடம் உள்ள சாட்சிகளை வைத்து தஞ்சை மாவட்ட ஆட்சியாளர் அல்லது இணையம் மூலம் அரசுக்கு தெரியப்படுத்தவும்.

உதவி புரிந்த அரசு அதிகாரிகளுக்கும், தஞ்சை மாவட்ட ஆட்சியாளருக்கும் எமது சிறப்பு நன்றி. 
நன்றி.

வெள்ளி, மார்ச் 13, 2009

2007-2008 ஆம் ஆண்டிற்கான கிராமத்தின் வரவு செலவுகள் - விரைவில்

காசாங்காடு கிராமத்தின் 2007-2008 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு கணக்குகள் அரசு அதிகாரிகள் மூலம் பெறப்பட்டுள்ளது. விரைவில் அவைகள் செய்தி பகுதியில் வெளியிடப்படும்.

வியாழன், மார்ச் 12, 2009

இணையம் மூலம் பேருந்து பயண சீட்டு

இணையம் மூலம் பட்டுகொட்டையில் இருந்து சென்னை வரை செல்லவும் அல்லது சென்னையிலிருந்து பட்டுகோட்டை வரை செல்ல இணையத்தில் பேருந்து பயண சீட்டு வாங்கலாம்.

அதற்கான வசதியை ரெட்பஸ் நிறுவனம் இணையத்தில் செய்துள்ளது.


கிராமத்தில் கடும் மூடு பனி

கிராமத்தில் இன்று காலை கடும் மூடுபனி.

செவ்வாய், மார்ச் 10, 2009

ஊரில் நேற்று இரவு கனத்த மழை

ஊரில் நேற்று இரவு கனத்த மழை. தொடர்ந்து மழை நீடித்து கொண்டிருக்கின்றது.