அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

வெள்ளி, டிசம்பர் 30, 2011

ஆங்கில புத்தாண்டு (1/1/2012) முதல் - சிகரெட், பீடி, பான்பராக் விற்க தடை
ஆங்கில புத்தாண்டு முதல் (1/1/2012) காசாங்காடு கிராம கடைகளில் சிகரெட், பீடி, பான்பராக் விற்க தடை.

தகவல் மூலம்: காசாங்காடு ஊராட்சி

புகை பழக்கத்தை விடுவிக்க வழிகள்: (இணைய சுட்டிகள்)ஞாயிறு, டிசம்பர் 25, 2011

மாரியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை நிழற்படங்கள்நிழற்படங்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.
தாங்களின் தனியுரிமை மீறபட்டிருப்பின் இணைய குழுவில் பகிர்ந்து கொள்ளவும்.


வெள்ளி, டிசம்பர் 23, 2011

மாரியம்மன் கோவிலில் இன்று விளக்கு பூஜை


காசாங்காடு அருள்மிகு மாரியம்மன் கோவிலில் இன்று விளக்கு பூஜை.

அனைவரும் பங்குகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

குறிப்பு: தகவல் தாமதமாக பெறப்பட்டது.

சனி, டிசம்பர் 17, 2011

காசாங்காடு மேலத்தெரு & வடக்குதெரு அய்யனார் கோவில் கட்டும் பணிநிழற்படத்தை பகிர்ந்து கொண்ட உள்ளங்களுக்கு எமது நன்றிகள்.


சனி, டிசம்பர் 03, 2011

ஆறுமுகம் மாமணி இல்ல திருமண விழா
திருமண தேதி மற்றும் நேரம்: Dec 5, 2011 , 10:30 மேல் 11:30 க்குள்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், காசாங்காடு

மணமகன் பெயர்: செல்வன். அய்யநாதன்
மணமகன் வீட்டின் பெயர்: பொன்னிவீடு, கீழத்தெரு
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. ஆறுமுகம் & திருமதி. மாமணி
மணமகன் தொழில் விபரம்: M.Sc (Comp)

மணமகள் பெயர்: செல்வி. மங்கை
மணமகள் ஊரின் பெயர்: வேலியாவீடு, தெற்குதெரு
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. திருவேங்கடம் & திருமதி. சரோஜா
மணமகள் தொழில் விபரம்: G.N.M

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்:

http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய:

http://matrimony.musugundan.கம


மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.


வெள்ளி, டிசம்பர் 02, 2011

ஆத்திக்கோட்டை கிராம இணைய தளம்

ஆத்திக்கோட்டை இணையதளத்திற்கு தங்களை வரவேற்கிறோம் !!

http://athikkottai.yolasite.com/

குறிகிய வரவேற்புரை:

"அடி ஆத்தி!" யென்று மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்கு நஞ்சையும்,புஞ்சையும் கொஞ்சி கூடி விளையாடும் குதூகல ஊரிது கண்ணில் ஏற்றிக் கொள்ள வைக்கும் பச்சைப் பசேலென்ற பாங்கான ஊரிது கிராமம் என்ற பேர் இருந்தபோதும் நகரத்திற்குரிய நாகரிகம் தழைத்த நறுக்கென்ற நல்லூரிது பலரின் மனக்கோட்டைகளுக்கு பாதை வகுத்துக் கொடுத்த ஊரிது கோட்டை போட்டுக் கொண்டு கோட்டைக்கு செல்லவும் வழிகாட்டும் ஊரிது வயிற்றுப் பசியையும்,அறிவுப் பசியையும் ஒரு சேர தீர்க்கும் ஒய்யார ஊரிது இந்த அழகிய ஆத்திக்கோட்டையை என்றென்றும் ஆராதிப்போம்!!!

வியாழன், டிசம்பர் 01, 2011

காசாங்காடு இளைஞர் கலந்துரையாடல் கூட்டம் - 27.11.11 அவைக் குறிப்பு


புதிய ஊராட்சி மன்றம் செயல் படுத்த ஏதுவான திட்டங்களை அடையாளம் காண 27.11.11 அன்று  நடைபெற்ற இளைஞர் கலந்துரையாடல் கூட்டம்

அவைக் குறிப்பு 
1.  கூட்டம்  3.00 மணிக்கு துவங்கி 5.30 மணி வரை நமது மேனிலைப் பள்ளியில் நடை பெற்றது.
2. ஊராட்சி மன்றத் தலைவர் திரு சதாசிவம்,   ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர் திரு வீரய்யன்,  மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு மெய்க்கப்பன் மற்றும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் திரு இராசராச சோழன் உட்பட 25 பேர் கலந்து கொண்டனர். 
3.  அனைவரையும்  திரு முத்துசாமி வரவேற்றார். திரு நடராசன் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கினார்.  மேலும் இணையம் மூலம் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை வாசித்தார்.
4.  கூட்டத்தில் கீழ்க் காணும் பொருட்கள் பற்றி விவாதிக்கப்பட்டது:
    அ.  திட்டக்குழு அமைத்தல் -  நல்ல ஆலோசனையாக ஏற்கப்பட்டது; 
        குழு அமைப்பு, உறுப்பினர் பெயர் பற்றி அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யலாம்
    ஆ. நீண்டகாலத் திட்ட வரைவு தயாரித்தல்
        திட்ட அறிக்கை தயார்ச செய்து சுற்றுக்குவிடலாம்;  அடுத்த கூட்டத்தில் விவாதித்து                 முடிவு செய்யலாம்
    இ. அறக்கட்டளை  ஏற்படுத்துதல்
        அறக்கட்டளை அமைப்பு, விதிகள் , உறுப்பினர் நிதி  பற்றி அடுத்த கூட்டத்தில் முடிவு                 செய்யலாம்
    ஈ. உழவர் சங்கம் ஏற்படுத்துதல்
        ஊராட்சித் தலைவர் உடனடியாக சங்கத்தைபதிவுசெய்ய்ய நடவடிக்கை எடுப்பது; 
        திரு மாரிமுத்து நாபார்டு வங்கி உதவிக்கு ஏற்பாடு செய்வார்
    உ.  பாசன விவசா யிகள் சங்கம் ஏற்படுத்துதல்
        சங்க அமைப்பு, பதிவு செய்தல்  பற்றி அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யலாம்
    ஊ. சில முக்கியத் திட்டங்கள்: (அரசு சார்ந்தவை)
        ஊராட்சி மன்ற வளாகத்தில் கொட்டகை அமைத்தல்
        - ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர் திரு வீரய்யன் நிதிக்கு ஏற்பாடு செய்வார்
        ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தல்
        -  அரசு அனுமதி கிடைத்து பணிகள் துவங்கி விட்டன
        நெல் கொள்முதல் நிலையம் அமைத்தல்
        -  அரசு அனுமதிக்கு  முயற்சி  மேற்கொள்ளுதல்
        துணை மின் நிலையம் அமைத்தல்
        -  அரசு அனுமதிக்கு  முயற்சி  மேற்கொள்ளுதல்
         மண் பரிசோதனை நிலையம் அமைத்தல்
         - நடமாடும்  நிலையத்தை முதலில் பயன் படுத்தலாம்;  பின்னர் நிலையத் தேவை பற்றி                     ஆலோசிக்கப்படும் 
        வடகாடு வாய்க்கால் (பெரிய ஆறு) கரையை தார் சாலையாக்குதல்
        -  அரசு அனுமதிக்கு  முயற்சி  மேற்கொள்ளுதல்
    எ.  மற்ற திட்டங்கள்:
        வேலை வாய்ப்பு உருவாக்கம்
        பெண்களுக்கு உள்ளூரில் வேலை
        இளைஞர் தொழிற் பயிற்சி
    ஏ.  காசாங்காடு ஊராட்சிப் பணிகளை கணனி மயமாக்குதல்
        - ஊராட்சித் துணைத்தலைவர் திரு இராசராச சோழன் ஏற்பாடு செய்வார்
    ஐ. ஊராட்சி அலுவலகத்திற்கு இணைய இணைப்பு பெறுதல்
        - ஊராட்சித் துணைத்தலைவர் திரு இராசராச சோழன் ஏற்பாடு செய்வார்

5.  அடுத்த கலந்தாய்வுக் கூட்டத்தை ஒரு மாத இடைவெளியில்  நடத்துவது என்றும் அடுத்த கூட்டத்திற்கு இன்னும் அதிக எண்ணிக்கையில்  இளஞர்களைத் திரட்டுவது என்றும் ஊரின் நீண்ட காலத்திட்டத்தின் முதல் வரைவை  தயார் செய்து  ஆலொசனை செய்வது என்றும் முடிவு செய்ய்யப்பட்டது.

தகவல் உதவி: Prof. Dr.V.Natarajan BTech (PSG Tech) MTech (IIT-D)PhD(TUL,Czech Rep.), Chennai

ஞாயிறு, நவம்பர் 27, 2011

ராஜகோபால் செந்தாமரை அவர்களின் இல்ல திருமண விழா அழைப்பிதழ்திருமண தேதி மற்றும் நேரம்: Nov 27 2011 , 10:00 மேல் 12:30 க்குள்
திருமணம் நடக்கும் இடம்: கோமள விலாஸ் ராசு திருமண மஹால், பட்டுக்கோட்டை

மணமகன் பெயர்: செல்வன். செந்தில்குமார்
மணமகன் வீட்டின் பெயர்: அமுநியாம்வீடு, கீழத்தெரு
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. ராஜகோபால் (Auditor) & திருமதி. செந்தாமரை
மணமகன் தொழில் விபரம்: B.Com

மணமகள் பெயர்: செல்வி. சாந்தி
மணமகள் ஊரின் பெயர்: ஆத்திக்கோட்டை
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. தனசேகரன் & திருமதி. திருச்செல்வி
மணமகள் தொழில் விபரம்: B.Pharm

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்:

http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய:

http://matrimony.musugundan.com

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.


வெள்ளி, நவம்பர் 18, 2011

புதிய ஊராட்சி மன்றம் செயல்படுத்த ஏதுவான திட்டங்கள்


காசாங்காடு உறவுகளே !
முதலில் இணய தளம் மூலமாக நல்ல பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!  வாழ்த்துக்கள் !!!

வரும் 27.11.11   அன்று, நம் ஊரில் புதிய ஊராட்சி மன்றம் செயல் படுத்த ஏதுவான திட்டங்களை  அடையாளம் காண,  இளைஞர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.

வெளி நாட்டில் உள்ளோர் மின்னஞ்சல் மூலமாகவும் தமிழகத்தில் உள்ளோர் மின்னஞ்சல் மூலமாகவோ நேரடியாகவோ உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும்.

மூன்று வகை திட்டங்களகப் பிரித்துக் கொள்ளலாம்:
1. உடனடி
2. குறுங்கால
3. நீண்ட கால

அடுத்ததாக:
1. ஊருக்கு வருவாய் தரக் கூடியவை
2. மக்கள் நலம் காக்க
3. மக்களுக்கு வருவாய் தரக்கூடியவை

அன்புடன்,
க.மா.வெ நடராசன் (சென்னை)
கருப்பாயி வீடு


தகவல் உதவி: Prof. Dr.V.Natarajan BTech (PSG Tech) MTech (IIT-D)PhD(TUL,Czech Rep.)


பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல்கள் பிறகு வெளியிடப்படும். தங்களின் கருத்துக்களை குழுமத்தில் http://groups.google.com/group/kasangaducom  அல்லது காசாங்காடு கிராம நிர்வாகத்திடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மன்னங்காடு இணைய தளத்தில் அய்யனார் கோவில் மகாகும்பாபிஷேகம் பற்றிய தகவல் ...மன்னங்காடு இணைய தளத்தில் அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேகம் பற்றி ...
தகவல் உதவி: http://www.mannankadu.org/temples/ayyanar

ஸ்ரீ மெய்க்கமுடைய அய்யனார் கோயில் 
குடமுழுக்கு விழா
கர ஆண்டு ஐப்பசி மாதம் ௨௮ (28ம் நாள்), நவம்பர் 14, 2011
Sri Meikkamudaiya Iyyanar Koil Consecration on November 14, 2011 after an extensive renovation by the villagers of
Kasangadu, Mannankadu and Regunathapuram


காசாங்காடு, மன்னங்காடு, இரெகுநாதபுரம்
திருப்பணிக் குழுவினரும், கிராமத்தினரும் இணைந்து நடத்திய
ஸ்ரீ மெய்க்கமுடைய அய்யனார் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

இக்கோயிலின் முதன்மைக் கடவுள் மெய்க்கமுடைய ஐய்யனார், துணைவியர் பூர்ணாம்பிகா மற்றும் புஷ்களாம்பிகா ஆகியோர்
The prime deity Meikkamudaiya Ayyanaar with consorts, Sri Poornambika and Sri Pushkalambika,
in the sanctum sanctorum of the temple

நெடுஞ்சாலையிலிருந்து கோயிலுக்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ள நுழைவாயில்
Temple's main entrance arch at the highway junction

கோயில் பசுமையான சோலையால் சூழப்பட்டுள்ளது
The temple is located in the meadows in the midst of rich vegetation

குடமுழுக்குக்குச் சற்றுமுன், கோயிலின் பின்புறத் தோற்றம்
A view from west (behind the temple) as the priests perform pre-consecration rituals 

கோயிலின் வடபுறத் தோற்றம்
A view from the north

வடகிழக்கு மூலையிலிருந்து கோயிலின் கோபுரத் தோற்றம்
A closeup view of the Vimanam from the northeast


மேகமூட்டமான வானின் கீழ் வேதியர் குடமுழுக்காற்றுகின்றனர்
The moment of Consecration, the Kumbabishekam


குடமுழுக்குக்குப் பிந்திய சடங்குகள்
Post-consecration rituals


குடமுழுக்குக்குச் சற்று பின், திருப்பணிக் குழுவினரும் வேதியரும் கீழிறங்குகின்றனர், 
மற்றும் பக்தர், ஆர்வலர் கூட்டத்தில் ஒரு பகுதி
Priests and the organizers descend by make-shift ladder after the Consecration and part of the crowd is in the foreground

குடமுழுக்குக்குப் பின் மூல அறையில் மூலஸ்தான கும்பாபிஷேகச் சடங்குகள் நிகழும் சமயத்தில் கோயிலின் பின்புறம் 
A view from west while the post-consecration rituals proceed in the sanctorum

அர்த்த மண்டபத்திலிருந்து பார்க்கும்போது மூல அறையின் தோற்றம்
A view of sanctorum from hall in the front


பெருமண்டபத்திலிருந்து பார்க்கும்போது மூல அறையின் தூரத்தோற்றம்
A view of sanctorum from Artha Mandapam

முன்புறத்திலிருந்து கோயிலின் தோற்றம். குதிரைகள் முதன்மைக் கடவுளின் வாகனம்
A view from the front yard. Representing the belief - the saddled horses with quivers are for the prime deity


கோவிலை ஒட்டி அமைத்துள்ள கரும்பு வயல்கள்
Lush sugarcane fields in the south of the temple

அழகு நிறைந்த கரும்பின் இலைகள்
Closeup - sugarcanes


  கோயிலுக்குக் கிழக்கில் அமைந்துள்ள தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள அன்னதானப் பந்தல்
Located in the east is a makeshift Pandal for Annadhanam, to provide free food for the devotees. Kitchen is on the right

'


வியாழன், நவம்பர் 17, 2011

கிராம பஞ்சாயத்து அமைப்பு - நிழற்படம்பெயர்கள் (இடமிருந்து வலம்):
திரு.கோ.ராஜராஜசோழன்(ஊ.ம.து.தலைவர்),
திரு.சி.அலக்ஸாண்டர்,
திரு.அ.ராமச்சந்திரன்,
திரு. MC என்கிற வீரமுத்து,
திரு.அ.நடராஜன்,
திரு.மு.சதாசிவம் (ஊ.ம.தலைவர்)
திரு.ரா.விவேகானந்தன்,
திருமதி.வைத்திநாதன்,
திருமதி.செந்தாமரை லெனின்,
திருமதி.கோகிலா அசோக்குமார் ஆகியோர் பதவிஏற்பு விழாவில் கலந்துகொண்டபோது எடுத்தபடம்.


ஞாயிறு, நவம்பர் 13, 2011

கிராம நிர்வாக செயல்கள்


கிராமத்தில் தற்போது நடக்கும் நிர்வாக செயல்கள் பற்றி பொது மக்களிடம் கேட்டறிந்தோம்:

 1. பிள்ளையார் கோவில் தெரு மக்களுக்கு குடிநீர் வசதி சரி செய்யப்பட்டது. நீண்ட நாட்களாக இந்த பகுதிக்கு குடி தண்ணீர் வசதி கிடைக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
 2. குடி தண்ணீர் வீணாகும் குழாய்கள் சரி செய்யபடுகின்றன.
 3. மின்சார கம்பிகளை தடுக்கும் மர கிளைகள் கிராம முழுவது சரி செய்யபடுகின்றது. இதன் மூலம் மின்சார கசிவு தவிர்க்கப்படும். இதன் மூலம் குறுகிய சுற்று மின் கசிவுகளினால் ஏற்படும் மின் தடை தவிர்க்கபடுகின்றது. அநாவசியமாக மரங்கள் வெட்டபடுவது பற்றிய புகார்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.
 4. கிராமம் முழுவதும் மழை தண்ணீர் விரைவாக வடிய, வடிகால்கள் சரி செய்யபடுகின்றது.

எதிர்வரும் செயல்கள்:

 1. அரசு பள்ளிகளுக்கு நிழலில் வாகனங்கள் நிறுத்தும் வசதி. தற்போது வாகனங்கள் திறந்த வெளியிளியே நிறுத்தபடுகின்றது.
 2. குழந்தைகளுக்கு பூங்கா
 3. நூலகத்தில் இணைய வசதி.
 4. நூலகத்தில் கிராமத்தினருக்கு கம்பியில்லா இணைய வசதி. (Free Wi-Fi)
முயற்சி செய்யும் அனைத்து கிராம மக்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
கிராம மேம்பாட்டிற்கு இணைய குழுவின் வாழ்த்துக்கள்.

 தகவல்கள் தவறாக / பிழைகள்  இருப்பினும் திருத்தி பகிர்ந்து கொள்ளவும்.

அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்


காசாங்காடு மெயக்கமுடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் வரும் திங்கள்கிழமை 09:00 முதல் 10:30 க்குள் நடைபெற உள்ளது.

பன்னிரெண்டு வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் மற்றும் பக்தகோடிகள் அனைவரும் பங்குகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.  

  

செவ்வாய், நவம்பர் 01, 2011

ஒரு வார காலமாக கடும் மழை


கடந்த ஒரு வார காலமாக கிராமத்தில் கடும் மழை தொடர்கின்றது.
வெப்பம் மற்றும் ஈரப்பதம் பற்றிய விபரம் வானிலை இணைய தளத்தில் காணலாம்.

வானிலை இணைய தளம்: http://weather.kasangadu.com/vanilai-viparankal/2011

சனி, அக்டோபர் 29, 2011

கிராமத்தில் தேவைப்படும் நிர்வாக மாற்றங்கள்


சமீபத்தில் கிராமத்தில் வாழ்க்கை தரம் மேம்பட என்ன செய்தால் சிறப்பாக இருக்கும் என்று யோசித்தோம். பின்வருபவைகள் அதில் சில,

 1. பண வசூல் செய்வதை முறைபடுத்த வேண்டும்.
  1.  பொது மக்கள் கொடுக்கும் நன்கொடைகளுக்கு ரசீது வழங்க வேண்டும்.
  2. அதை செய்ய போகிறோம், இதை செய்ய போகிறோம் என்று பணம் வசூல் செய்யமால். என்ன செய்ய போகின்றீர்கள், எவ்வளவு பணம் தேவைபடுகின்றது மற்றும் அதன் திட்ட ஆவணங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் அதற்க்கு போருபேற்பவர்கள் யார் என்ற விபரமும் அளிக்கவும்.
  3. காசாங்காடு கிராமத்தில் மேலோட்டமாக என்ன செய்ய போகிறோம் என்று மட்டுமே பகிர்ந்து கொள்ளபடுகின்றது. முறையான விபரங்கள், திட்டங்கள் பற்றிய பகிர்ந்து கொள்ளபடுவதில்லை.
  4. வெளிநாட்டில் இருந்து வசூலிக்கப்படும் நிதிகளை முறைப்படி வங்களில் அனுப்பும் முறையினை பயன்படுத்த வேண்டும். அதற்கான ரசீது மற்றும் நன்கொடை கொடுத்த நபர்களின் பெயர்களை பாதுகாத்தல் அவசியம்.
  5. இதற்கான முறையை காசாங்காடு நிர்வாகம்  முறைபடுத்த வேண்டும்.
 2. பொது மக்கள் கேட்கும் தகவலினை (தகவல் உரிமை படியோ அல்லது வாய் வழியாகவோ) முறைப்படி மக்களுக்கு அளிக்கவும்.
 3. நிர்வாகத்தின் வரவு செலவினை அனைத்து மக்களுக்கும் நிர்வாகம் பகிர்ந்து கொள்ளவும். இதற்காக ஆகும் செலவினை மக்களிடம் இருந்து பெரும் வரிபனத்தில் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
  1. நேர்மையான நிர்வாகத்தின் மற்றும் அதன் திட்டங்களை பொது மக்களுக்கு தெளிவாக பயன்படுத்தி கொள்ள உதவும்.
 4.  பொது இடங்களில் வரிசை
  1. அரசாங்க, தனியார், பேருந்து மேலரும்போது, கடைகளில், வங்கிகளில் முதலில் வருபவருக்கே அதற்கான சேவைகளை வழங்கிட வேண்டும். அனைவரும் சமம் என்ற கருத்து அனைவரின் மனதில் உருவாகும் வண்ணம் அமைய  வேண்டும்.
  2. தற்போது வரிசை எங்குமே பயன்படுத்துவதில்லை, இதன் மூலம் அனைவரின் சமஉரிமை பாதிக்கபடுகின்றது.
  3. அனைத்து இடங்களிலும் பாரபட்சமின்றி வரிசை மூலம் சேவைகள் வழங்குவது கிராம மக்களின் வாழ்க்கை தரம் உயரும். நிர்வாகம் பற்றிய தன்னம்பிக்கையும் உயரும்.
 5. பொது இடத்தில் சிறுநீர் அல்லது மலம் கழித்தல் முற்றிலும் தவிர்க்கவேண்டும்.
  1. இதன் மூலம் எண்ணற்ற வியாதிகள் தவிர்க்க வழிவகை உண்டு. நிலம் மற்றும் காற்று வழியாக பரவும் வியாதிகள் தவிர்க்கப்படும்.
 6. குடிமகன்கள் அருந்தும் மது மற்றும் புகைபிடிக்கும் வியாதிகள் மற்றும் அதன் பின் விளைவுகள் பற்றி விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும்.
  1. கிராமத்தில் மது / புகைபிடிக்கும் பொருட்களை/பானங்களை தயாரிக்க மற்றும் விற்க அனுமதி இல்லை என்று தான் நாம் வரையரைத்துள்ளோம். கிராம குடிமகன்கள் இதை பயன்படுத்துவதற்கான தடையும் கொண்டு வந்தால், கிராம மக்களின் வாழ்க்கை தரம் உயரும்.
 7. வீட்டின் / தொழில்களின் குப்பைகளை சாலைகளில் கொட்டுதல்.
  1. குப்பைகளை சாலைகளில் கொட்டி சாலைகளின் அழகினை கெடுக்கும். மேலும் கொசு, மற்றும் எண்ணற்ற வியாதிகளை இவை உருவாகுவதை இவை அதிகமாக்கும்.
  2. மீறி நடப்பவர்களுக்கு உரிய அபராதம் விதிக்கும் நடைமுறை வேண்டும்.
 8. கிராம நிர்வாகம் சாலைகளின் குப்பைகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும் அல்லது தெரு மக்களாக சேர்ந்து (அவரவர் வீடுகளின் முன்பு) சாலைகளை சுத்தம் செய்யும் பழக்கத்தை முறைபடுத்த வேண்டும்.
 9. வாகனம் வேக அளவு (25 கிலோமீட்டர்) தடை வேண்டும். நிர்வாகமும் அதை முறைபடுத்த வேண்டும்.
  1. அளவிற்கு மேலான வேகத்தில் வாகனங்கள் செல்வதால் காசாங்காடு குடிமகன்களின் அமைதி பதிக்கப்படும். சில நேரங்களில் குடிமகன்களின் வாழ்க்கையும் இழந்துள்ளோம். எனவே சிறந்த வாழ்க்கை தரத்திற்கு வேக அளவு தடை வேண்டும்.
  2. அதிகமான வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
 10. தொழில்களின் / நபர்களை காசாங்காடு குடிமகன்களை / குடும்பங்களை தொடர்பு கொள்ளும் விதம் முறைபடுத்த வேண்டும்.
  1. காப்புரிமை திட்டங்கள் கொண்டு உறவினர்கள் என்ற உரிமை கொண்டும் தனது சுயநலத்திற்காகவும் வருமானத்திற்காகவும் காப்புரிமை திட்டங்களை கொண்டு காசாங்காடு குடிமகன்களின் அமைதியை சீர்குலைத்தல்.
  2. காப்புரிமை திட்டத்தின் மூலம் நீங்கள் கட்டும் பாலிசி தொகையில் 50% தொகை (தோராயமாக) அந்த ஏஜெண்டுகளுக்கு போய் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.
  3. இது போன்று வேறு பல திட்டங்கள் கொண்டு வீடு தேடி வரும் தொழில்களை முறைபடுத்த வேண்டும்.

தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

புதன், அக்டோபர் 26, 2011

தீபாவளி வாழ்த்துக்கள்


கிராம மக்களுக்கு இணைய குழுவின் தீப ஒளி வாழ்த்துக்கள்.

ஞாயிறு, அக்டோபர் 23, 2011

தேர்தல் முடிவுகள் - வாக்குகள் விபரம்

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள்:
 1. மாவட்ட பஞ்சாயத்து பிரிவு உறுப்பினர்: திரு. மெயக்கப்பன், வேப்படிகொல்லை, தெற்குதெரு
 2. ஒன்றிய பஞ்சாயத்து பிரிவு உறுப்பினர்: திரு. வீரையன், வள்ளியா வீடு, தெற்குதெரு
 3. காசாங்காடு கிராம தலைவர்: திரு. சதாசிவம், ஏவலாம் வீடு, நடுத்தெரு
தேர்ந்தெடுக்கபட்ட அனைவருக்கும் இணைய குழுவின் வாழ்த்துக்கள்.


ஊராட்சி தலைவர் :

மொத்தம் பதிவான வாக்குகள்: 1739 தகுதியான வாக்குகள்: 1668 செல்லாத வாக்குகள்: 71


Sl.No Name Father/Husband Name Votes Secured Status
1 சதாசிவம்.மு முருகையா 825 Elected
2 சிவசங்கர்.கோ கோவிந்தசாமி 258 Deposit Lost
3 நெடுஞ்செழியன்.வை வைத்திலிங்கம் 465 NotElected
4 முருகானந்தம்.கா காரிமுத்து 120 Deposit Lost


பஞ்சாயத்து ஒன்றிய பிரிவு உறுப்பினர்:

Ward No:  5      மொத்தம் பதிவான வாக்குகள்:  3162      தகுதியான வாக்குகள்:  3018      செல்லாத வாக்குகள்:  144
Sl.No Name Father/Husband Name Party Name Votes Secured Status
1 அண்ணாதுரை.கா காசிநாதன் தி.மு.க 1304 NotElected
2 முருகானந்தம்.பெ பெத்தையன் தே.மு.தி.க 243 Deposit Lost
3 வீரையன்.கோ கோவிந்தவேளாளர் அ.இ.அ.தி.மு.க 1471 Electedமாவட்ட பஞ்சாயத்து பிரிவு உறுப்பினர்:

Ward No:  23      மொத்தம் பதிவான வாக்குகள்:  30414      தகுதியான வாக்குகள்:  28460      செல்லாத வாக்குகள்:  1954
Sl.No Name Father/Husband Name Party Name Votes Secured Status
1 குபேந்திரன்.இராம இராமசாமி பி.ஜே.பி 253 Deposit Lost
2 பிரபு சந்தோஷ்குமார்.க கணேசன் இ.தே.கா 2651 Deposit Lost
3 பூபேஷ்குமார்.ரெ ரெத்தினசபாபதி தே.மு.தி.க 3123 Deposit Lost
4 முத்துராமன்.து துரைசாமி சி.பி.ஐ 650 Deposit Lost
5 மெய்க்கப்பன்.தி திருஞானவேளாளர் அ.இ.அ.தி.மு.க 11394 Elected
6 ரூசுவெல்ட்.அ.மு முத்துச்சாமி தி.மு.க 10389 NotElected


வெள்ளி, அக்டோபர் 21, 2011

காசாங்காடு உள்ளாட்சி தேர்தல் - திரு. மு. சதாசிவம் - காசாங்காடு கிராம தலைவர்


காசாங்காடு உள்ளாட்சி தேர்தலில் கிராம தலைவராக திரு. மு.சதாசிவம் (பூட்டு-சாவி சின்னம், சுயேட்சை) தேர்ந்தெடுக்கபட்டார். விரிவான வாக்கு தகவல்கள் அரசு வெளியீட்டின் தகவல் கிடைத்த பிறகு வெளியிடப்படும்.

திரு. மு. சதாசிவம் அவர்களின் வாழ்த்துக்கள் தெரிவிக்க தொடர்பு கொள்ளவேண்டிய எண்: +91-97873-94911


புதன், அக்டோபர் 19, 2011

உள்ளாட்சி தேர்தல்

இன்று கிராம உள்ளாட்சி தேர்தல். அனைவரும் வாக்களித்து சிறந்த உள்ளாட்சி தலைவர்களை தேர்ந்தெடுக்கும் படி கேட்டுகொள்கிறோம்.

தேர்தல் முடிவு தேதி: 21-10-2011

மேலும் தகவல்களுக்கு: http://rti.kasangadu.com/tertal/2011-uratci-tertal


புதன், அக்டோபர் 12, 2011

2011 உள்ளாட்சி தேர்தல்


பிழை / திருத்தங்கள்/ சேர்க்கைகள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள். இது பொது மக்களிடமிருந்து பெற்ற தகவல். 

மேலும் தகவல்களுக்கு: http://rti.kasangadu.com/tertal/2011-uratci-tertal
 
உள்ளாட்சி தேர்தல் நாள்: 19  அக்டோபர் 2011

கிராம மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்கள்  மற்றும் வாக்குசீட்டு அடையாளம் கொள்ளும் விதம்:
 1. ஊராட்சி தலைவர் - இளம் சிவப்பு
 2. ஊராட்சி பிரிவு உறுப்பினர் - வெள்ளை/நீளம்
 3. ஊராட்சி ஒன்றிய பிரிவு உறுப்பினர் - பச்சை
 4. மாவட்ட ஊராட்சி பிரிவு உறுப்பினர் - மஞ்சள்
ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளார்கள்:


 வரிசை எண் பெயர்  சின்னம் வீட்டின்பெயர் தெரு பெற்றோர்கள் வயது
 1 திரு.சிவசங்கர்  ஏணி முத்தாம்வீடு நடுத்தெரு திரு.கோவிந்தசாமி & திருமதி.காந்திமதி 41 +
 2 திரு.சதாசிவம்  பூட்டு சாவி ஏவலாம்வீடு நடுத்தெரு திரு.முருகையன் &  திருமதி.சின்னபிள்ளை 51+
 3 திரு.நெடுஞ்செழியன் கை ரோலர்  அறியமுத்துவீடு தெற்குதெருதிரு.வைத்திலிங்கம் & திருமதி.கௌரதம்  45+
 4 திரு.முருகானந்தம் கத்திரிகோல் காரியாம்வீடு கீழத்தெரு திரு.மாரிமுத்து & திருமதி.முத்துகன்னு    43+

மாவட்ட பஞ்சாயத்து பிரிவு உறுப்பினர்:
 1. திரு. மெயக்கப்பன்,  வேப்படிகொல்லை, காசாங்காடு
 2. திரு. ரூசெவேல்ட்,  ஆலத்தூர்

ஒன்றிய பஞ்சாயத்து பிரிவு உறுப்பினர்:
 1. திரு. அண்ணாதுரை,  அப்புவேலாம்வீடு, மேலத்தெரு, மன்னங்காடு
 2. திரு. ரவி என்கிற முருகானந்தம், நொண்டியாம்வீடு, கீழத்தெரு
 3. திரு. வீரையன்,  அறியமுத்துவீடு,  தெற்குதெரு, காசாங்காடு

கிராம பஞ்சாயத்து பிரிவு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள்:
 1. திரு. அ. முனியப்பன்,  வடக்குதெரு
 2. திரு. அ. ராமசந்திரன், வடக்குதெரு
 3. திரு. முனியப்பன், வடக்குதெரு
 4. திரு. சிங்காரம், தேத்தடிக்கொள்ளை
 5. திரு. கோவிந்தராசு, தேத்தடிக்கொள்ளை
 6. திரு.  நடராஜன், மேலத்தெரு
 7. திருமதி. செந்தாமரை, வேலிவீடு, நடுத்தெரு
 8. திருமதி. இல. கலைச்செல்வி, வேம்பாம்வீடு, கீழத்தெரு
 9. திரு. ரா. மொழிசெல்வன், காத்தாயீவீடு, பிலாவடிகொல்லை
 10. திரு. ரா. வைத்தியநாதன், நாயத்துவீடு, பிலாவடிகொல்லை
 11. திரு. விஸ்வலிங்கம், தவிடம்வீடு, தெற்குதெரு
 12. திரு. விவேகாநந்தன், அறியமுத்துவீடு, தெற்குதெரு
 13. திரு. நியூட்டன், வேப்படிகொல்லை, தெற்குதெரு
 14. திரு. அலெக்சாண்டர், தெற்குதெரு
 15. திரு. அ. கோகிலா (Unopposed),
 16. திரு. கோ. ராஜராஜசோழன்  (Unopposed), சாமியார்வீடு

புதன், அக்டோபர் 05, 2011

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்காசாங்காடு கிராம மக்களுக்கு இணைய குழுவின் இனிய ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.

உலகெங்கும் கிராம மக்கள் கொண்டாடும் ஆயுத பூஜை நிகழ்ச்சியின் போது ஒப்பிவிக்கபடும் உலக நீதியின் சுட்டி இங்கே.

http://article.kasangadu.com/ulaka-niti---ayuta-pujai


செவ்வாய், அக்டோபர் 04, 2011

ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளார்கள்


ஊராட்சி தேர்தல் நாள்: 19  அக்டோபர் 2011

ஊராட்சி தலைவர் பதவிக்கு மாநில தேர்தல் ஆணையம் செலவிட அனுமதிக்கும் தொகை:  ரூபாய். 15,000

ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளார்கள்:

 வரிசை எண் பெயர்  வீட்டின்பெயர் தெரு பெற்றோர்கள் வயது
 1 திரு.சிவசங்கர்  முத்தாம்வீடு நடுத்தெரு திரு.கோவிந்தசாமி & திருமதி.காந்திமதி 41 +
 2 திரு.சதாசிவம்  ஏவலாம்வீடு நடுத்தெரு திரு.முருகையன் &  திருமதி.சின்னபிள்ளை 51+
 3 திரு.நெடுஞ்செழியன் அறியமுத்துவீடு தெற்குதெருதிரு.வைத்திலிங்கம் & திருமதி.கௌரதம்  45+
 4 திரு.முருகானந்தம் காரியாம்வீடு கீழத்தெரு திரு.மாரிமுத்து & திருமதி.முத்துகன்னு43+

 
மேலும் தகவல்களுக்கு: http://rti.kasangadu.com/tertal/2011-uratci-tertal 

செவ்வாய், செப்டம்பர் 27, 2011

தகவல் உரிமை சட்டம் - கிராமத்தானின் நிலைமை - மாவட்ட நிர்வாகம் ஆணை - 349 நாட்கள்


எங்கள் நாட்டிலும் தகவல் உரிமை சட்டம் உள்ளது என்று தோள் தட்டி கொள்ளும் இந்தியாவின் தகவல் உரிமை சட்டத்தின் உண்மையான நிலவரம் என்ன என்பதை ஒரு கிராமத்தானின் பார்வையில். அதன் தொடரே இது. இன்னும் தகவல் கிடைத்த பாடில்லை என்பதே அதன் உண்மையான நிலவரம்.

http://news.kasangadu.com/search/label/rti 

மேல் முறையீட்டு விண்ணப்பத்திற்கு மாவட்ட அதிகாரி அனுப்பியுள்ள பதில் கீழே காண்பிக்கப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்போம் எப்போது பதில் வருகிறது என்று. முழுமையாக கேட்ட தகவல்களை கிராம நிர்வாகம் அளிக்க வேண்டும்.

மேலும் அனைத்து தகவல்களையும் எந்தவித கட்டணமின்றி இலவசமாக அளிக்க உத்தரவிட்டதையும் காணலாம்.ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

போட்டியின்றி கிராம தலைவர் தேர்ந்தெடுக்க முயற்சி


கிராம தலைவரை போட்டியின்றி (Unopposed President) தேர்ந்தெடுக்க கிராமத்தில் நேற்று மாலை ஊர் கூட்டம் நடைபெற்றது. மிகவும் பெரிய முயற்சி என்பதில் சந்தேகம் இல்லை. மாலை நான்கு மணி அளவில் தொடங்கிய கூட்டம் இரவு ஒன்பது மணி வரை நீடித்தது. முடிவில் போட்டியின்றி தலைவரை தேர்ந்தெடுக்க ஒருமித்த கருத்து நிலவவில்லை.

அரசியல் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து மக்களின் நலத்தை பற்றி சிந்திக்க இது போன்ற முயற்சிகள் உதவும்.

கிராமத்தினரின் இந்த முயற்சிக்கு இணைய குழுவின் வாழ்த்துக்கள்.

வியாழன், செப்டம்பர் 22, 2011

2011 ஊராட்சி தேர்தல் விபரங்கள்


காசாங்காடு ஊராட்சி தேர்தல் 2011 சம்பந்தமாக தகவல்கள் அறிந்து கொள்ள தகவல் உரிமை தளத்தில் அதற்கான பக்கத்தை வடிவமைத்து வருகிறோம். தகவல் கிடைக்கும் போது அந்த தகவல்கள் உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளப்படும். இந்த தகவல்களை தமிழ்நாடு தேர்தல் ஆணைய இணைய தளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

அரசாங்க தகவல்கள், வேட்பாளர் பற்றிய தகவல்கள், தேர்தல் முடிவுகள் இங்கு பகிர்ந்து கொள்ளப்படும்.

காசாங்காடு தகவல் உரிமை தளம்: http://rti.kasangadu.com/tertal/2011-uratci-tertal

வியாழன், செப்டம்பர் 15, 2011

கீழத்தெரு காத்தவேளாம் வீடு மாரிமுத்து கோமளா அவர்களுக்கு பேத்தி பிறந்துள்ளது


பிறந்தவர் பெயர்: அபிநயா
பிறப்பின் பால்: பெண்
வீட்டின் பெயர்: காத்தவேளாம் வீடு
பெற்றோர்களின் பெயர்: திருமதி. சுபத்ரா & திரு. குமரன்
பிறந்த நாள்(தோராயமாக): ஆகஸ்ட் 17 2011
பிறந்த நாடு: வட கரோலினாஐக்கிய அமெரிக்கா

தாயும் சேயும் நலம்.

குடும்பத்தினருக்கு இணைய குழுவின் வாழ்த்துக்கள்.

செவ்வாய், செப்டம்பர் 13, 2011

நடுத்தெரு, வேளாம்வேடு, திரு. கபிலன் அப்பாகண்ணு - பொது சேவை பதக்கம்


நடுத்தெரு, வேளாம்வேடு, திரு. கபிலன் அப்பாகண்ணு அவர்களுக்கு சிங்கப்பூரில் பொது சேவை பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இவர் டங்களின் (Tanglin) குமுகாய உறவு மையத்தின் இந்திய நடவடிக்கை நிர்வாக குழிவின் (CC IAEC) தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


காசாங்காடு இணைய குழு, திரு. கபிலன் அவர்கள்,  இந்த பதக்கம் பெற்றமைக்கு  மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறது.

தகவல் உரிமை சட்டம் - கிராமத்தானின் நிலைமை - கிராம நிர்வாக கேவலம்


எங்கள் நாட்டிலும் தகவல் உரிமை சட்டம் உள்ளது என்று தோள் தட்டி கொள்ளும் இந்தியாவின் தகவல் உரிமை சட்டத்தின் உண்மையான நிலவரம் என்ன என்பதை ஒரு கிராமத்தானின் பார்வையில் தொடரும் தொடரே இது.

இது சம்பந்தமான முந்தைய தகவல்.


தற்போது இந்த நிகழ்ச்சி மிகவும் கேலி கூத்தாக அமைந்துள்ளது.

விண்ணப்பதாரர் தகவல் கேட்டு அனுப்பியுள்ள விண்ணப்பத்திற்கு காசாங்காடு கிராம நிர்வாககிகள் அதே பெயர் கொண்ட நபரின் வீட்டிற்கு நேரடியாக சென்று   கேள்விகளை கேட்டுள்ளனர்.

இதில் சம்பந்த பட்டவர்,

காசாங்காடு கிராமம், கீழத்தெரு, காத்தான்வீடு கணக்கபிள்ளை என்று அழைக்கப்படும் திரு.வீரப்பன் அவர்களின் மகன் திரு. ஜெயவேல்.
திரு.ஜெயவேல் காசாங்காடு கிராம மக்கள் நல பணியாளாராக பணிபுரிபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரோடு மற்றொவரும் துணை சென்றுள்ளார். அவரை பற்றிய தகவல் கிடைத்ததும் விபரங்கள் வெளியிடப்படும்.

இந்த செயல் மக்கள் நல பணியாளரின் செயல் போன்று தோன்றவில்லை. அமைதியாக இருக்கும் கிராம சூழ்நிலைகளில் மக்களை மிரட்டும் பணியாக  தான் தெரிகின்றது.

 1. யார் இவர்களுக்கு விண்ணப்பதாரரின் வீடு புகுந்து கேள்வி கேட்கும்  அதிகாரம் / உரிமையை வழங்கியது?
 2. இவ்வாறு தான் காசாங்காடு நிர்வாகம் கிராமத்தை நிர்வகிகின்றதா? அல்லது மக்களுக்கு நல பணியாளாராக சேவை செய்கின்றாரா?
 3. ஒரு வருடம் ஆகியும் கிராம கணக்குகளை தர முடியாத நிலையில், இவர்கள் பொது சொத்துகளிலும் அரசாங்க பணத்திலும் ஊழல் செய்துள்ளார்களா? அல்லது கணக்குகளை சரி செய்கின்றார்களா?
 4. தனது பதவி காலம் முடியும் வரை இவ்வாறு தள்ளி போட்டு அடுத்து வரும் கிராம தலைவர் மீது இந்த சுமையை தள்ளி விடும் முயற்சி என்பதும் இதில் புலானாகின்றது.

நேர்மையான நிர்வாகமாக இருந்தால் விண்ணப்பத்தாரர் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டுமே தவிர எந்த விண்ணப்பாதரரின் வீட்டிற்க்கும் சென்று பேரம்/குறுக்குவழி கேட்கவேண்டியதில்லை. விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பற்றிய தெளிவான விளக்கம் வேண்டுமெனின் நிர்வாகத்தின் அதிகாரிகளை அல்லது விண்ணப்பத்தாரரை விண்ணபத்தின் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இது காசாங்காடு கிராம நிர்வாகத்திற்கு மட்டும் ஏற்பட்ட அவலம் அல்ல, ஒவ்வொரு காசாங்காடு கிராம குடிமகன்களுக்கும் ஏற்பட்டுள்ள அவலம். எங்கள் கிராமம் இப்படி தான் என்று எங்கள் கிராம நிர்வாகிகள் வெளி உலகிற்கு எடுத்துரைக்கும் விதம்.

கிராமத்தை பற்றிய தகவல் கேட்கும் ஒவ்வொரு இந்திய குடிமகன்களிடமும் கிராம நிர்வாகம் பற்றி நேர்மையை விளக்கும் விதமும் ஆகும்.

காசாங்காடு கிராம நிர்வாகம் மூலம் உங்களின் அமைதியான வாழ்வில் இடர்பாடுகளின் நடந்திருப்பின் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


செவ்வாய், செப்டம்பர் 06, 2011

நடுத்தெரு குட்டச்சிவீடு துரைசாமி சவுந்திரம் இல்ல திருமணம்திருமண தேதி மற்றும் நேரம்: 11 செப்டம்பர் 2011  09:00 மணிக்கு மேல் 10:30 க்குள்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், காசாங்காடு

பெண் அழைப்பு இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், காசாங்காடு

மணமகன் பெயர்: செல்வன். திருநாவுக்கரசு
மணமகன் வீட்டின் பெயர்: குட்டச்சி வீடு, நடுத்தெரு
மணமகன்  பெற்றோர் பெயர்: திரு. துரைசாமி & திருமதி. சவுந்திரம் 

மணமகள் பெயர்: செல்வி. விஜி
மணமகள்  வீட்டின் பெயர்: தவுடம்வீடு, தெற்குதெரு
மணமகள்  பெற்றோர் பெயர்: திரு. விஸ்வலிங்கம் & திருமதி. கலைச்செல்வி


திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்:  http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam
முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.comமணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

சனி, செப்டம்பர் 03, 2011

காசாங்காடு இணைய தளம் - நான்காம் ஆண்டு தொடக்கம்


காசாங்காடு இணைய தளம் இன்று அதன் நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது.

தகவல் பகிர்ந்து கொண்ட அனைத்து பொது மக்களுக்கும், காசாங்காடு கிராமத்தின் பெருமையை உயர்த்தும் வகையில் உலகின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் அனைத்து காசாங்காடு குடிமகன்களுக்கும், தொழில்நுட்ப திறமையுடன் எவ்வித தகவல் தொழில்நுட்பங்களையும் காசாங்காடு கிராமத்திற்கு கொண்டு வரும் இணைய குழுவிற்கும் எமது பாராட்டுக்கள்.

வருடாந்திர இணைய புள்ளிவிபரங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்.

கிராமத்தின் வாழ்க்கை தரம் மற்றும் குடிமகன்களின் சுதந்திரம் மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்.

தொடர்ந்து  அனைவரின் ஆதரவும் ஊக்கமும் காசாங்காடு இணைய தளத்தை  மேம்படுத்த உதவும் என நம்புகிறோம்.

அன்புடன்,
காசாங்காடு இணைய குழு

வியாழன், செப்டம்பர் 01, 2011

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்


கிராம மக்களுக்கு, இணைய குழுவின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.


செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

நடுத்தெரு ஏவலாம்வீடு யமுனா கணபதி அவர்களுக்கு பேத்தி பிறந்துள்ளது


பிறப்பின் பால்: பெண்
குழந்தையின் பெயர்: யாழிசை
வீட்டின் பெயர்: ஏவலாம்வீடு
பெற்றோர்களின் பெயர்: குணசேகரன் நிர்லமா
பிறந்த நாள்(தோராயமாக): 
23-07-2011
பிறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்:  மில்டன் கெய்ன்ஸ், ஐக்கிய இராட்சியம்

தாயும் சேயும் நலம்.

குடும்பத்தினருக்கு இணைய குழுவின் வாழ்த்துக்கள்.

திங்கள், ஆகஸ்ட் 22, 2011

நடுத்தெரு குப்பாயிவீடு ராமசந்திரன் பொன்னமாள் அவர்களுக்கு பேத்தி பிறந்துள்ளது


பிறப்பின் பால்: பெண்
வீட்டின் பெயர்: குப்பாயிவீடு
பெற்றோர்களின் பெயர்: நக்கீரன் அனிதா
பிறந்த நாள்(தோராயமாக): 21-8-2011
பிறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: பட்டுக்கோட்டை
தாயும் சேயும் நலம்.

குடும்பத்தினருக்கு இணைய குழுவின் வாழ்த்துக்கள்.

திங்கள், ஆகஸ்ட் 15, 2011

சுதந்திர தின வாழ்த்துக்கள் !


கிராம மக்களுக்கு இணைய குழுவின் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் !

வியாழன், ஆகஸ்ட் 11, 2011

மாரியம்மன் கோவிலில் லட்ச அர்ச்சனை

காசாங்காடு அருள்மிகு முத்து மாரியம்மன் கோவிலில் இன்று மாலை 05:00 மணியளவில் லட்ச அர்ச்சனை நடைபெற இருக்கின்றது. பொது மக்கள் அனைவரும் பங்கு கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
நன்றி.

புதன், ஆகஸ்ட் 10, 2011

அய்யனார் கோவில் விரிவுபடுத்தும் பணி ஆரம்பமாகிறதுகாசாங்காடு, ரெகுநாதபுரம் மற்றும் மன்னன்காட்டிர்க்கு பொதுவான அய்யனார் கோவில் விரிவுபடுத்தும் பணி விரைவில் ஆரம்பமாகிறது. இது சமபந்தமாக கிராமத்தில் நிதி வசூல் ஆரம்பமாகியுள்ளது.


இது சம்பந்தமாக மேலும் தகவல்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.


ஞாயிறு, ஜூலை 31, 2011

தகவல் உரிமை சட்டம் - கிராமத்தானின் நிலைமை - கடைசியாக கிடைத்த தகவல்


எங்கள் நாட்டிலும் தகவல் உரிமை சட்டம் உள்ளது என்று தோள் தட்டி கொள்ளும் இந்தியாவின் தகவல் உரிமை சட்டத்தின் உண்மையான நிலவரம் என்ன என்பதை ஒரு கிராமத்தானின் பார்வையில் முன்பு பார்த்தோம். அதன் தொடரே இது. இன்னும் பதில் கிடைத்த பாடில்லை என்பதே அதன் உண்மையான நிலவரம்.

இதுவே அதன் சுட்டி.


மனு அனுப்பிய நாள்: 13 அக்டோபர் 2010 
அனுப்பிய மனு: https://docs.google.com/Doc?docid=0Ad79pv5cgYSiZGd6d3BxeHhfMTQzZ3p3OHN0cmo&hl=en
மேல் முறையீட்டு விண்ணப்பம்: https://docs.google.com/document/d/1kffFmQ8EM3E0yDUeLcjRvJ7ffzYHEg8uEn0Mm2P9jGw/edit?hl=en
அனுப்பிய மனுவின் பதிலாக அனைத்து தரப்பிலும் மாவட்ட அலுவலகம், ஊராட்சி இயக்குனர் அலுவலகம், தற்போது ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து பதில் ரூபாய். 1100/- (550 பக்கங்களுக்கு, ஒரு பக்கத்திற்கு இரண்டு ரூபாய் வீதம்).

மனு அனுப்ப எவ்வளவு தொகை என்று அனுப்புவதற்கு இதுவரை சரியாக 250 நாட்கள் ஆகியுள்ளது. 13 நவம்பர் 2010  க்குள் பதில் அனுப்பினால் மட்டுமே அதற்கான தொகையை விண்ணப்பதாரர் செலுத்த வேண்டும். இல்லையெனில் தகவல் உரிமை சட்டம் 2005  கீழ் எந்த வித தொகையையும் விண்ணபதாரர் செலுத்த தேவையில்லை


பொது தகவல் அலுவலர், குறிப்பிட்ட கால கெடுவிற்குள் தகவல்களை அளிக்க தவறுமிடத்து தகவல் பெறும் உரிமை சட்டம் 2005,   பிரிவு 7, உட்பிரிவு 5 இன் படி நிர்ணநியிக்கபட்ட கட்டணமின்றி, விண்ணப்பதாரருக்கு கேட்கப்பட்டுள்ள தகவலை அளிக்க வேண்டும்.

இந்த மனுவின் மூலம் தனது கடமையை செய்ய தவறிய காசாங்காடு கிராம ஊராட்சி தலைவர் காசாங்காடு கிராமத்திற்கு ரூபாய். 1100 /- இழப்பீடு செய்துள்ளார். இது போன்று எத்தனை இழப்பீடுகள் என்று தெரியவில்லை. கிராமத்தின் விபரங்கள் தெரிந்தால் தான் அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும்.

மேலும் கேட்கப்பட்டுள்ள தொகைக்கு எந்த வித விபரமும் இல்லை. எப்படி மதுக்கூர் ஒன்றியம் இந்த தொகையை முடிவு செய்துள்ளது என்பதை விண்ணபதாரருக்கு தெளிவாக அளிக்க வேண்டும். 

இந்த சட்டத்தை பற்றிய தெரியாத அரசு அதிகாரிகளுக்கு / மக்கள் பிரதிநிகளுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகலம் அவர்களுக்கு தேவையான கல்வியை அளிக்குமாறு பரிந்துரைகின்றேன். மேலும் கேட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் இலவசமாக அளிக்குமாறு  கேட்டுகொள்கிறேன்.

மதுக்கூர் ஒன்றிய அனுப்பியுள்ள தகவலின் மின்னணு பிரதி உங்கள் பார்வைக்கு.


தகவல் மூலம்: கண்ணையன்


புதன், ஜூலை 27, 2011

ஆடி பூஜை அழைப்பிதழ் - அருள்மிகு முனீஸ்வரர் சுவாமி திருக்கோவில்


தேதி மற்றும் நேரம்: கர வருடம் ஆடி 23  [ 8/8/2011 ] திங்கள்கிழமை 9:15 க்கு மேல் 10:30 க்குள்

இது சமயம் அனைத்து கிராமத்தினரும் பங்கு கொண்டு முனீஸ்வரர் அருள் பெருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

குறிப்பு: அன்றைய தினம் 12:00  மணியளவில் அன்னதானம் நடைபெறும்.

இப்படிக்கு,
நிர்வாகிகள் மற்றும் கிராமவாசிகள்


திங்கள், ஜூலை 25, 2011

தண்டோரா: மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு

இன்று மாலை மாரியம்மன் கோவில் உண்டியல் திறக்கபடுகின்றது. கிராம மக்கள் பங்கு கொண்டு காணிக்கைகளின் விபரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இந்த தகவல் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

திங்கள், ஜூலை 11, 2011

மன்னங்காடு / மூத்தாக்குறிச்சி / ஆலடிக்குமுளை கிராமங்கள் அதன் இணைய தளங்களை தொடங்கியது

நமது கிராமத்திற்கு தென் திசையில் அமைந்திருக்கும் கிராமமான மன்னங்காடு அதன் இணைய தளத்தை தொடங்கியது.

மன்னங்காடு இணைய சுட்டி: http://www.mannankadu.org/

நமது கிராமத்திற்கு வடக்கு திசையில் அமைந்திருக்கும் கிராமமான மூத்தாகுருச்சி அதன் இணைய தளத்தை இன்று தொடங்கியது.

மூத்தாக்குறிச்சி இணைய சுட்டி: http://www.moothakurichi.com/

பட்டுக்கோட்டை நகரத்திற்கு வடமேற்கு திசையில் அமைந்திருக்கும் கிராமமான ஆலடிக்குமுளை அதன் இணைய தளத்தை தொடங்கியது.

ஆலடிக்குமுளை இணைய சுட்டி: http://aladikkumulai.blogspot.com/

இந்த தளங்களை பின்வருவருபவர்கள் நிர்வகிக்கின்றார்கள்.

மன்னங்காடு: டாக்டர். துரைசாமி நவநீதம்
மூத்தாகுருச்சி: பொறியாளர். முருகேசன்
ஆலடிக்குமுளை:  திரு. சத்தியமூர்த்தி

மேம்படுத்திய காசாங்காடு பக்கம்: http://www.kasangadu.com/mucukunta-camutayam
மேம்படுத்திய முசுகுந்த சமுதாய பக்கம்: http://www.musugundan.com/villages

குறிப்பு: அலுவலத்தில் இருப்பின் ஒலிபெருக்கியின் அளவை சரிபார்த்து கொள்ளவும், அனுமதியில்லா ஒலியினை மேலே குறிபிட்டுள்ள சுட்டிகள் ஏற்படுத்தலாம்.

வெள்ளி, ஜூலை 08, 2011

மேலத்தெரு பள்ளிகொடுத்தான் வீடு சின்னையன் வளர்மதி அவர்களுக்கு பேத்தி பிறந்துள்ளது
பிறந்தவர் பெயர் (வைக்கபட்டிருந்தால்): திக்ஷித்தா
வீட்டின் பெயர்: பள்ளிகொடுத்தான் வீடு
பெற்றோர்களின் பெயர்: திரு. முருகபிரகாஷ் & திருமதி. கவிதா
பிறந்த நாள்(தோராயமாக): மே 28 2011
பிறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: ஐக்கிய இராட்சியம்


தாயும் குழந்தையும் நலம்.
குடும்பத்தினருக்கு இணையகுழுவின் பாராட்டுக்கள்.வியாழன், ஜூலை 07, 2011

மேலத்தெருவில் அய்யனார் கோவில் கட்ட திட்டம்

காசாங்காடு பெரமநாத அய்யனார் திருக்கோயில் திருப்பணி தொடங்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலத்தெரு, வடக்குத்தெருவைச்சேர்ந்த சில குடும்பத்தினரும் குலதெய்வமாக வழிபடுவதால் அவர்களும் இணைந்து இந்த திருப்பணியை செவ்வனே செய்ய இருக்கிறார்கள். குலதெய்வ வழிபாட்டை காசாங்காட்டிற்குள்ளேயே கொண்டு வரும் மேலத்தெரு மற்றும் வடக்குத்தெரு வாசிகளின் முயற்சி வெற்றிபெற கிராமத்தினர் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்ற உறுதியை அளித்து வரவேற்போம்.

மேலத்தெரு, வடக்குத்தெரு மக்களால் ஒன்றுகூடி கிராமத்தில் கோவில் எழுப்ப வேண்டுமென முடிவு செய்யபட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள இடத்தில் அந்த கோவில் கட்ட உள்ளதாக திட்டமிடபட்டுள்ளது. இந்த நிலப்பகுதி மேலத்தெரு சுந்தாம்வீட்டை சேர்ந்ததாகும். கிராமத்தில் சாலை வசதிக்காக இந்த நிலபகுதி துண்டுபட்டது. அதன் பின்னர் பொது மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்த இந்த பகுதி தற்போது அந்த இடத்தில் கோவில் எழுப்ப பயன்படுகிறது.

இந்த கோவில் கருப்பூராம் வீட்டை சேர்ந்த திரு. திருநாவுக்கரசு தலைமையில் கட்ட திட்டமிடபட்டுள்ளது.

கிராமத்தில் ஒரு நல்ல தேவைக்காக அந்த இடத்தை வழங்கிய குடும்பத்தினர்களுக்கு இணைய குழுவின் சார்பில் நன்றிகள்.


நடுத்தெரு குட்டச்சிவீடு தம்பிஅய்யன் ஜெயம் திருமண அழைப்பு

திருமண தேதி மற்றும் நேரம்: 10 சூலை 2011 10:30 க்கு மேல் 12:00 க்குள்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், காசாங்காடு

மணமகன் பெயர்: செல்வன். அருள்குமார் தம்பிஅய்யன்
மணமகன் வீட்டின் பெயர்: குட்டச்சிவீடு, நடுத்தெரு
மணமகன்  பெற்றோர் பெயர்: 
திரு. தம்பிஅய்யன் & திருமதி. ஜெயம்
மணமகன்  தொழில் விபரம்: சிங்கப்பூர் நிரந்தர வாசி 

மணமகள் பெயர்: செல்வி. பார்கவி
மணமகள்  ஊரின் பெயர்: வடக்கு வாட்டகுடி
மணமகள்  பெற்றோர் பெயர்: திரு. மகேந்திரன் & திருமதி. வைடூரியம்
மணமகள்  தொழில் விபரம்: கணினி திட்ட அமைப்பாளர் B,Sc 

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்:  http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam
முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.செவ்வாய், ஜூன் 28, 2011

மேலதெரு குஞ்சாயீ வீடு சின்னையன் மணிமேகலை இல்ல திருமணம்திருமண தேதி மற்றும் நேரம்: 03 சூலை 2011 10:00 க்கு மேல் 12:00 க்குள்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், காசாங்காடு

மணமகன் பெயர்: செல்வன். ஸ்டாலின்
மணமகன் வீட்டின் பெயர்: குஞ்சாயீ வீடு, மேலத்தெரு
மணமகன்  பெற்றோர் பெயர்: திரு. சின்னையன் & திருமதி. மணிமேகலை
மணமகன்  தொழில் விபரம்: பொறியாளர் (B.E, MBA.,), துபாய், UAE.

மணமகள் பெயர்: செல்வி. கயல்விழி
மணமகள்  வீட்டின் பெயர்: கள்ளிகாட்டான்வீடு, கீழத்தெரு
மணமகள்  பெற்றோர் பெயர்: திரு. சந்திரசேகரன் & திருமதி. செந்தமிழ்செல்வி
மணமகள்  தொழில் விபரம்: செவிலி (B,Sc Nursing) 


மணமக்கள் திருமண தளம்: http://www.mywedding.com/stalinwedskayalvizhi/
திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்:  http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam
முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com


மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.