அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

சனி, மே 29, 2010

இந்திய நீதிமன்றங்கள், அரசின் மீது கிராம குடிமகனின் நம்பிக்கை

தினமணி நாழிதளில் சமீபத்தில் வெளிவந்த செய்திகளில் கிராம குடிமகன் தனது கருத்துக்களை தெரிவிக்கையில் இந்திய அரசாங்கத்தின் மீதும், நீதிமன்றங்கள் மீதும் உள்ள நம்பிக்கை பற்றி தெளிவாக விளக்கியுள்ளார். மேலும் இந்திய மக்களின் வரிப்பணம் எவ்வாறு அரசாங்கத்தால் செலவிடப்படுகிறது என்பதையும், நீதி மன்றத்தில் நீதி கிடைக்கும் கால தாமதத்தையும் விளக்கியுள்ளார்.

தினமணியின் அந்த செய்தி சுட்டி இங்கே,

http://dhinamalar.info/topnewsdetail.asp?News_id=1932

கிராம குடிமகனின் அதே பக்கத்தில் உள்ள கருத்துக்கள் இங்கே. (சில வரிகள் விலக்கப்பட்டுள்ளது)

 இந்திய அரசாங்கமே வருக...இவளை கைது செய்து முதல் வகுப்பு சிறையில் வைத்து,இவ விருப்பப்படி படிக்க புத்தகம் கொடுங்க,இவ விரும்புற சாப்பாட்ட போடுங்க..பேன் போட்டு விடுங்க...இந்த வழக்கு இன்னும் பத்து வருஷம் ஆனா கூட ஒரு ஸ்டெப் கூட முன்னேறாது...அது வரைக்கும் இவளுக்கு போலீஸ் பாதுகாப்பு,கோர்ட்டுக்கு போக வர என்று லட்சகணக்குல செலவு பண்ணுங்க....நம்ம சட்டம் சூப்பர் சட்டமடா சாமி... மாத்துங்கடா சட்டத்த...சுட்டு தள்ளுங்க தேச துரோகிகள....கடுமையான தண்டன இருந்தா இப்படி யாரும் செய்யமாட்டாங்க. இந்த கையாலாகாத அரசு பெருசா என்ன பண்ண போறாங்க??? விசாரணை என்கிற பெயரில் வருஷக்கணக்கா இழுத்தடிப்பாங்க,,, அதுக்குள்ளே இவ சம்பாதிச்ச பணத்தை இவளும் இவ சொந்தபந்தமும் நல்லா ஆண்டு அனுபவிசிடுவாங்க,, சீக்கிரமா ஒரு முடிவெடுத்து இவளை எல்லாம் போட்டு தள்ளுங்கய்யா,,, அப்போ தான் இந்த மாதிரி நாட்டை காட்டிகொடுகிற ...,  ஒரு பாடமா இருக்கும்,,,, ஜைஹிந்த்  
by p gnanasekaran,kasangadu,India    29-04-2010 19:52:39 IST 


வியாழன், மே 27, 2010

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா

அருள்மிகு.முத்துமாரியம்மன் திருக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா விக்ருதி வருடம் வைகாசித் திங்கள் 13 ஆம் நாள் (27/05/2010) சிறப்பாக
நடைபெற உள்ளது.

நிகழ்ச்சிநிரல்:

வைகாசி 11 (25/05/2010) முத்துமாரிஅம்மனுக்கு பூச்சொரிதல் மற்றும் உற்சவர் சாமி வெளியில் எடுத்துவைத்தல்

வைகாசி 12 (26/05/2010) முத்துமாரிஅம்மன் அன்னவாகனத்தில் மன்னங்காடு செல்லுதல் (இரவு திரைப்படம் காண்பிக்கப்படும்)

வைகாசி 13 (27/05/2010) மதியம் முத்துமாரிஅம்மன் மன்னங்காட்டிலிருந்து திரும்புதல், மாலை அம்மனுக்கு பால் காவடி, பால்குடம் எடுத்தல் மற்றும் பாலாபிஷேகம் இரவு அம்மன் வீதியுலா-முதற்சுற்று (கிராமியக்கலை நிகழ்ச்சி-தப்பாட்டம்)

வைகாசி 14 (28/05/2010) இரவு முத்துமாரிஅம்மன் வீதியுலா-இரண்டாம் சுற்று (கிராமியக்கலை நிகழ்ச்சி- தப்பாட்டம்)

வைகாசி 15 (29/05/2010) இரவு முத்துமாரிஅம்மன் முத்துப்பல்லக்கில் எழுந்தருளல் (இரவு இன்னிசைக்கச்சேரி நிகழ்ச்சி)

வைகாசி 16 (30/05/2010) இரவு முத்துமாரிஅம்மன் தெப்பதில் எழுந்தருளல் மற்றும் வானவேடிக்கை (இரவு நடன-நாட்டிய நிகழ்ச்சி)

வைகாசி 18 (01/06/2010) விடையலாற்றி உற்சவர் சாமி உள்ளே எடுத்துவைத்தல்

முத்துமாரிஅம்மன் வெளியில் எடுத்தது முதல் விடையலாற்றி உள் எடுத்து வைக்கும் வரை ஒவ்வொரு நாள் இரவும் 9 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் தீபாராதனை நடைபெறும்.

பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு அருள்மிகு.முத்துமாரிஅம்மனின் ஆசி பெற்றுச்செல்ல அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

இங்ஙனம்,
அறங்காவலர்கள் மற்றும் கிராமவாசிகள்,
காசாங்காடு.

தகவல் உதவி: திரு. சுகுமாரன், துபாய்

ஞாயிறு, மே 23, 2010

இராஜரெத்தினம் தெய்வானை இல்ல திருமணம்

திருமண தேதி மற்றும் நேரம்: விக்ருதி வருடம் , வைகாசி மாதம் 19 நாள் (02/06/2010)புதன்கிழமை.
திருமணம் நடக்கும் இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோயில், பட்டுகோட்டை

மணமகன் பெயர்: செல்வன். இரா.அசோக்குமார்
மணமகன் வீட்டின்/ஊரின் பெயர்: நாச்சிவீடு, வடக்குத்தெரு, காசாங்காடு
மணமகன்  பெற்றோர் பெயர்: திரு. இராஜரெத்தினம் & திருமதி. தெய்வானை
மணமகள் பெயர்: செல்வி. த.சித்திரா
மணமகள்  வீட்டின்/ஊரின் பெயர்: வடக்குதெரு, ஆலத்தூர்
மணமகள்  பெற்றோர் பெயர்: திரு. தனிக்கொடி

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.தகவல் உதவி: திரு. சுகுமாரன், துபாய்


புதன், மே 19, 2010

கிராமத்தில் கோடை மழை

நேற்று இரவு முதல் கடும் மழை பெய்துகொண்டிருகின்றது. வெகு நாட்களாக இருந்த வெப்பத்தை தணிக்க இது பேரு வகையில் உதவும்.

சண்முகம் தேன்மொழி இல்ல திருமணம்

திருமண தேதி மற்றும் நேரம்: விக்ருதி, வைகாசி 05 (19 மே 2010)
திருமணம் நடக்கும் இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், காசாங்காடு

மணமகன் பெயர்: செல்வன். கார்த்திக் கணபதி
மணமகன் வீட்டின்/ஊரின் பெயர்: மன்னங்காடு வடக்கு
மணமகன்  பெற்றோர் பெயர்: திரு. கணபதி & திருமதி. பெரியநாயகி
மணமகள் பெயர்: செல்வி. கோமளா
மணமகள்  வீட்டின்/ஊரின் பெயர்: வெள்ளேரியம்வீடு, வடக்குதெரு
மணமகள்  பெற்றோர் பெயர்: திரு. சண்முகம் & திருமதி. தேன்மொழி

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

செவ்வாய், மே 18, 2010

முனீஸ்வரர் ஆலயத்திருப்பணிநம் ஊரின் முனீஸ்வரர் ஆலயத்தின் திருப்பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக உரில் ஒரு குழு அமைக்கப்பட்டு முதற்கட்ட சீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

முனீஸ்வரருக்கு சிலையெடுப்பவர்கள், சிலையெடுத்து அதனை ஊர்வலமாகக் கொண்டுவந்து கோவில் உள்ள இடத்தில் நிறுவுவது என்பது காலம் காலமாக நடந்து வரும் நிகழ்ச்சியாகும்.

இதனால் போதிய இடமின்மை மற்றும் பராமரிப்பு செய்ய இயலாமை போன்ற நடைமுறைச் சிக்கல்கள் தோன்றுகின்றன. எனவே முனீஸ்வரர் உத்தரவு பெற்று புதிய சிமெண்ட் கலவையால் ஆன மூலவர் சிலை அமைக்க கிராமத்தினரால் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பழைய முனீஸ்வரர் சிலைகள் கோவில் வளாகத்தின் இருபுறங்களிலும் (தெற்கு மற்றும் வடக்கு) மாற்றி வைக்கும் பணிகள் கடந்த மூன்று தினங்களாக நடந்துவருகிறது.

மூலவர் சிறப்பு:

புதிதாக நிறுவ இருக்கும் முனீஸ்வரரின் மூலவர் சிலை நம் சோழமண்டலத்திலேயே மிக உயரமானதாகவும் (சுமார் 21 அடி) கம்பீரம் மிக்கதாகவும் அமைக்கவுள்ளதாக இதனை நிறுவும் ஸ்தபதி கூறியுள்ளார்.

திருப்பணி நிறைவு:

கிராமத்தினரின் மிகுந்த ஒத்துழைப்போடு இத்திருப்பணி இவ்வருடம்(2010) ஆடிமாததிற்குள் நிறைவு செய்யப்பட்டு ஆடிமாதத்தில் கண்திறப்பு மற்றும் சிறப்பு பூஜை செய்யப்படும் என திருப்பணியை மேற்கொண்டுள்ள ஐயா.விஸ்வலிங்கம் உள்ளிட்ட குழுவினர் தெரிவித்து வருகிறார்கள்.தகவல் உதவி: திரு. சுகுமாரன், துபாய்

வெள்ளி, மே 07, 2010

தண்டோரா - மீன் பாசி குத்தகை இன்று கிராமத்தில் ஏலம்

இன்று தண்டோரா மூலம், காசாங்காடு கிராமத்தில் உள்ள மீன் பாசி குத்தகை ஏலம் விடப்படுகின்றது.  அனைவரும் பங்கு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல் உதவி:  திரு. பழனிவேல், காசாங்காடு