அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

சனி, மார்ச் 27, 2010

கிராமத்தின் சேமிப்பும், பள்ளியின் அவலமும்


கிராமத்தின் சேமிப்பும், ஊராட்சி பள்ளியின் அவலமும். ஊர் மக்களுக்கு சுகாதாரத்தை அறிவுறுத்தும் ஊராட்சியின் சுகாதாரத்தை சற்று திரும்பி பார்போம். மேலும் பொது சுகாதாரத்திற்கு ரூ. 26150/- (2008-2009) ஆம் ஆண்டு செலவிடப்பட்டுள்ளது. கிராமத்தில் அப்படி என்ன சுகாதார வசதிகள் செய்திருகின்றார்கள் என்பதையும் கேட்போம் ? "தேனை நக்கியவன் புறங்கையை பார்பான்" என்ற பழமொழியை காசாங்காடு நண்பர் ஒருவர் கூறியிருந்தார்.  அரசாங்கத்தின் நிதியில் (தேன்) ஊராட்சி நிர்வாகம் மக்களுக்கு என்ன செய்தது? அல்லது வெறும் புறங்கையை ருசித்தார்களா என்பதையும் கேட்டு தெரிந்து கொள்வேமே.

கிராம ஊராட்சி வெளியிட்ட மூன்று அறிவிப்புகள்

சமீபத்தில் கிராமத்தில் ஊராட்சி வெளியிட்ட மூன்று அறிவிப்புகளின் விபரங்கள்.

மதுக்கூர் ஒன்றியம் காசாங்காடு ஊராட்சி மன்ற அறிவிப்பு

அன்புடையீர் வணக்கம்,

2009-2010 க்கான

1. வீடு வரி
2. குடிநீர் வரி
3. கடை உரிமம்
4. தொழிற்சாலை உரிமம்

ஆகியவற்றை மார்ச் 31 க்குல் (நிலுவை இருந்தால் அதையும் சேர்த்து) செலுத்திடுமாறு கேட்டு கொள்கிறோம். தவறும் பட்சத்தில் செலுத்தாதவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இங்ஙனம்,
தலைவர், துணை தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள்
காசாங்காடு ஊராட்சி


மதுக்கூர் ஒன்றியம் காசாங்காடு ஊராட்சி மன்ற அறிவிப்பு

அன்புடையீர் வணக்கம்,

காசாங்காடு ஊராட்சியில் உள்ள ஊராட்சி சாலைகள், ஊராட்சி ஒன்றிய சாலைகள், மாவட்ட நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் ஆக்கிரமிப்புகளை (குப்பைகள், மரங்கள், மட்டைகள், செங்கல் மற்றும் தேங்காய் மட்டை சோறு). இவ்வரிவுப்பு கிடைத்த ஒரு வார காலத்திற்குள் அகற்றிருமாறு கேட்டுகொள்கிறோம். அவ்வாறு இல்லையெனில் ஊராட்சி மன்றம் அவற்றை கையப்படுத்தி பொது ஏலத்தில் கொண்டு செல்லும் என தெரிவித்து கொள்கிறோம்.

இங்ஙனம்,
தலைவர், துணை தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள்
காசாங்காடு ஊராட்சி


மதுக்கூர் ஒன்றியம் காசாங்காடு ஊராட்சி மன்ற அறிவிப்பு

அன்புடையீர் வணக்கம்,

தங்களுடைய தனி நபர் குடிநீர் இணைப்பில் சட்டத்திற்கு புறம்பாக நீரினை மோட்டார் வைத்து உறுஞ்சுவது, ஹோஸ் பைப் வைத்து மரங்களுக்கு நீர் பாய்ச்சுவது, தோட்டம் வளர்ப்பது போன்ற அநாகரிக செயல்களில் ஈடுபட்டால் உங்களது இணைப்பு முன்னறிவிப்பின்றி துண்டிக்கப்படும் என் இதன் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.

ஏனெனில் வருகின்ற கோடை காலத்தில் குடிநீர் பற்றாகுறை, அதிகரிக்கின்ற சூழ்நிலை இருப்பதால், இந்த அறிவிப்பு கிடைத்த மூன்று நாட்களில் மேற்குறிய செயல்களை நிறுத்த வேண்டும் என் கேட்டு கொள்கிறோம்.

இங்ஙனம்,
தலைவர், துணை தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள்
காசாங்காடு ஊராட்சி

வெள்ளி, மார்ச் 26, 2010

2008-2009 ஆண்டில் கிராம வருமானம் 37% சதவிகிதமாக உயர்வு

2008-2009 ஆண்டு கிராம வருமானம் 37% சதவிகிதம் உயர்ந்துள்ளது. உலகெங்கிலும் பொருளியல் சரிவு நிலை காணப்பட்டலும் காசாங்காடு கிராமம் தனது வருமானத்தில் 37% சதவிகிதம் லாபத்தை ஈட்டியுள்ளது. இந்தியாவில் உள்ள கிராமங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்பதை இது தெளிவாக எடுத்துகாட்டியுள்ளது.

இதன் விபரங்கள் காசாங்காடு கிராம தகவல் உரிமை தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. படிவம் அனுப்பிய விபரங்களும் அரசு அதிகாரிகளின் பதில்களும் அதில் விரைவில் வெளியிடபடும்.

மேலும் இத்தகவல்கள் கேட்டு அனுப்பிய முப்பது நாட்களுக்குள் பதில் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் இணைய சுட்டி இங்கே:

http://rti.kasangadu.com/kirama-kanakkukal/2008---2009-am-antu

2008 - 2009 ஆம் ஆண்டின் வரவு செலவு சுருக்கம்:

ஆரம்ப இருப்பு: ரூ. 9,35,128.50
வரவு: ரூ. 7,92,830.00
கூடுதல்: ரூ. 17,27,958.50
செலவு: ரூ. 4,45,391.00
முடிவு இருப்பு: ரூ. 12,82,567.50

2008 - 2009 ஆம் ஆண்டில் காசாங்காடு கிராமத்திற்கு 2007-2008 ஆண்டை விட கிடைத்த அதிக வருவாய்: ரூ. 3,47,439.௦௦ (2007-2008 விட, 37% சதவிகிதம் அதிகம்)



சனி, மார்ச் 13, 2010

கல்வி கடன் தர மறுத்து விட்டதா கிராம இந்தியன் வங்கி?

கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கி கல்வி கடன் தர மறுத்துவிட்டதா?  உயர் நீதி மன்றத்திற்கு எடுத்து செல்லுங்கள், நியாயம் கிடைக்கும்.

சமீபத்தில் கல்வி கடன் தர மறுத்த வங்கியின் மீது உயர் நீதி மன்றம் "குட்டு".

மேலும் விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

http://thatstamil.oneindia.in/news/2010/03/12/hc-impose-fine-on-bank-refusing-edu.html

தகவல் உதவி: லக்ஷ்மி, சென்னை

திங்கள், மார்ச் 08, 2010

இந்தியாவின் எடுத்துக்காட்டாக காசாங்காடு கிராமம் !

சக்திதரன் என்பவர் காசாங்காடு கிராமத்தை பற்றி எழுதிய "

பாருக்குள்ளே நல்ல நாடு, நம் பாரத நாடு!" பற்றிய சுட்டிகள் இங்கே.


ஒருவரின் கனவிற்கு காசாங்காடு கிராமம் எடுத்துக்காட்டாக அமைவதில் பெருமை கொள்கிறோம்.

ஞாயிறு, மார்ச் 07, 2010

கிராமத்தில் தென்னை மரங்கள் ஏலம்

கிராமத்தில் இன்று மாலை காசாங்காடு கிராம ஊராட்சிக்கு சொந்தமான தென்னை மரங்கள் ஏலம் விடப்படுகின்றது. கிராம மக்கள்  ஏலத்தில் பங்கு கொண்டு அதிக ஏல தொகைக்கு போகும்படி கேட்டு கொள்கிறோம்.

தகவல்: பழனிவேல், காசாங்காடு