அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

வெள்ளி, ஜூலை 30, 2010

அப்பாதுரை செவநாது அம்மாள் இல்ல பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ்

இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், காசாங்காடு
தேதி மற்றும் நேரம்: விக்ருதி, ஆடி மாதம் 16 (1/8/2010) ஞாயிற்றுகிழமை, 10:30 முதல் 12:00  க்குள்
வீட்டின் பெயர்: அவையாம்வீடு, மேலத்தெரு

நீராட்டு விழா செல்வி: பவித்ரா இராமச்சந்திரன்
பெற்றோரர்கள்: திரு. இராமச்சந்திரன் & திருமதி. ரெங்கநாயகி
பாட்டன் பாட்டி: ஐயா. அப்பாதுரை & அம்மையார். செவநாது அம்மாள்

அன்புடன் அழைக்கும் நீராட்டு விழா செல்வியின் சகோதரர் மணிகண்டன் இராமச்சந்திரன்.


கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/160abfecb01ff438

செவ்வாய், ஜூலை 27, 2010

முசுகுந்தன் குடும்பநலக் குழுவின் குடும்பதின விழா - 2010

முசுகுந்தன் குடும்பநலக் குழு 2010
சிங்கப்பூரில் வாழும் முசுகுந்த நாட்டைச்சேர்ந்தவர்களால் தொடங்கி "முசுகுந்தன் குடும்பநலக் குழு" நடத்தப்பட்டு வருகிறது. இதன் குடும்பதின விழா- 2010, கடந்த 25/07/2010 அன்று மாலை 4.00 மணியளவில் சிங்கப்பூர் டெசன்சன் சாலையில் உள்ள சிலோன் விளையாட்டு மையத்தில் நடைபெற்றது.

அதனை முன்னிட்டு குழந்தைகள் பெரியவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகளும், குழந்தைகள் பங்கேற்ற பாட்டு மற்றும் பேச்சு நிகழ்சிகளும் பரிசளிப்பும் அரங்கேறின. தொடர்ந்து முசுகுந்த நாட்டைச்சேர்ந்த சிங்கப்பூர் பெரியவர்களின் கலந்துரையாடல்கள் நடைபெற்றது. பின்பு அனைவருக்கும் சுவையான விருந்து கொடுக்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை முசுகுந்தன் குடும்பநலக்குழு சிறப்பாகச் செய்திருந்தது.

நிகழ்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.

தகவல் & நிழற்பட உதவி: திரு. சுகுமாரன், துபாய்
கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/7cfa8ae708cec2b7

கிராமத்தில் தற்போது நடைபெறும் பணிகள்

பசுக்குளத்தில் மழைநீர் சேமிப்புத்திட்டத்தின் கீழ் குளம் ஆழப்படுத்தப்பட்டு அதன் நடுவில் கான்க்ரீட் கலவையினாலான சுவற்றுடன் கூடிய நீர்சேமிக்கும் வகையில் ஒரு அமைப்பினை ஏற்படுத்தியுள்ளனர். அதன் கிழக்குக்கரையில் ஒரு படித்துறை புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது.

மஞ்சுகுப்பன் ஏரியில் ஊரகவேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ஆழப்படுத்தும் பணி நம் ஊரைச் சார்ந்தவர்களால் செய்யப்பட்டுவருகிறது.

மேலும் மஞ்ச்க்குப்பன் ஏரியின் மழைவெள்ளத்தால் உடைந்த மதகு கடந்த ஆண்டு புதிதாகக்கட்டப்பட்டது. அதன் உயரம் முன்பு இருந்ததைவிட குறைவாக கட்டப்பட்டிருந்தது. இதனை அரசுகவனத்திற்கு கொண்டுவரப்பட்டு மீண்டும் பழைய உயரத்திற்கு உயர்த்தவும் இதன் மூலம் ஏரியின் கொள்ளளவை அதிகப்படுத்தி நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தப்ப்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.இது சம்பந்தமாக நிகழ்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.


தகவல் & நிழற்பட உதவி: திரு. சுகுமாரன், துபாய்
கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/58b689921cacdce5

சனி, ஜூலை 17, 2010

வருமுன் காப்பீட்டு திட்டம்இன்று கிராமத்தில் அரசாங்கத்தால் வருமுன் காப்பீட்டு திட்ட மருத்துவ முகாம் காலை 09:00 முதல் நடைபெறுகின்றது.  கிராம மக்கள் அனைவரும் பங்கு கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல் உதவி: திரு. குலோத்துங்கன், பட்டுக்கோட்டை

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/6236168b4a845e67

வெள்ளி, ஜூலை 16, 2010

வைத்திலிங்கம் நல்லம்மாள் இல்ல திருமணம்


திருமண தேதி மற்றும் நேரம்: 32 ஆனி விக்ருதி (16 சூலை 2010) வெள்ளிகிழமை 09:30 மேல் 10 :30 மணிக்குள்
திருமணம் நடக்கும் இடம்: பூங்கொடி திருமண மண்டபம், அதிரை ரோடு, மதுக்கூர்


மணமகள் பெயர்: செல்வி. சுமதி
மணமகள்  வீட்டின் பெயர்: லெட்சுமான்வீடு

மணமகள்  பெற்றோர் பெயர்: திரு. வைத்திலிங்கம் & திருமதி. நல்லம்மாள்

மணமகன் பெயர்: செல்வன். ராஜபாண்டியன்
மணமகன் ஊரின் பெயர்: மூத்தாகுருச்சி
மணமகன்  பெற்றோர் பெயர்: திரு. திருநாவுக்கரசு & நினைவில் வாழும். சிந்தாமணி

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/1b56c634da067735

திங்கள், ஜூலை 12, 2010

குழந்தைசாமி ரெத்தினத்தம்பாள் இல்ல திருமணம்


திருமண தேதி மற்றும் நேரம்: விக்ருதி ஆணி 31 [15 சூலை 2010], வியாழக்கிழமை
திருமணம் நடக்கும் இடம்:  கோமள விலாஸ் ராஜூ திருமண மஹால், பட்டுக்கோட்டை

மணமகள் பெயர்: செல்வி. பிரியங்கா
மணமகள்  வீட்டின் பெயர்: கருப்பூராம்வீடு, மேலத்தெரு
மணமகள்  பெற்றோர் பெயர்: திரு. கென்னெடி & திருமதி. வெற்றிச்செல்வி


மணமகன் பெயர்: செல்வன். முத்துமகேஷ்
மணமகன் ஊரின் பெயர்: நடுத்தெரு, ஆலத்தூர்
மணமகன்  பெற்றோர் பெயர்: திரு. அருணாசலம் & திருமதி. பொன்மொழி
மணமகன் தொழில் விபரம் (இருந்தால்): மருத்துவர் (காது, மூக்கு தொண்டை நிபுணர்)

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.


கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/3138ba2298370dff

சனி, ஜூலை 10, 2010

அருள்மிகு முனீஸ்வரர் கண்திறப்பு - நிழற்படங்கள் - செய்திகள்


(மேலும் தெளிவாக தெரிய ஒவ்வொரு நிழற்படத்தின் மீது சொடுக்கவும்)

முனீஸ்வரர் - மேலோட்ட பார்வை 

பொது மக்களின் பார்வைக்கு கண் திறக்கும் முன், தன் முகத்தை தானே பார்த்து கொள்ளும் முனீஸ்வரர் சுவாமி.

தினசரி நாழிதள்களில் வந்த செய்திகள்:
நன்றி.

தகவல் & நிழற்பட உதவி: திரு. சுகுமாரன் அருணாசலம், துபாய்
கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/1777d29caf7b37ab

சனி, ஜூலை 03, 2010

கிராமத்தில் உலாவரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவங்கள்

உலகம் முழுவதும் 2010 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து கொண்டிருகின்றது. கிராமத்தில் தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து கொண்டிருகின்றது. அந்த படிவங்களின் சுட்டிகள்.

மக்கள் தொகை பதிவேடு படிவம்: 

http://www.censusindia.gov.in/2011-Schedule/Shedules/NPR%20Tamil.pdf

வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு படிவம்:

http://www.censusindia.gov.in/2011-Schedule/Shedules/Houselist%20Tamil.pdf

தமிழில் படிவங்கள் வெளியுட்டுள்ளதை கண்டதும் மிக்க மகிழ்ச்சி.

அதில் தமிழில் விளங்காத வார்த்தைகள் பின் வருமாறு:

மக்கள் தொகை பதிவேடு படிவத்தில்:


தாலுகா:
வீட்டுப்பட்டியல் பிளாக் எண்:
வார்டு எண்:

வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு படிவத்தில்:

தாலுகா:
வீட்டுப்பட்டியல் பிளாக் எண்
வார்டு எண்:
சென்சஸ் வீட்டு எண்:
ஷே. வகுப்பு
ஷே. பழங்குடி
ரேடியோ / டிரான்சிஸ்டர்:
இன்டர்நெட்-இணைப்புடன்:
சைக்கிள்:
ஸ்கூட்டர் / மோட்டார் சைக்கிள்  / மொபெட்:
கார் / ஜீப் / வேன் :
சிமெண்ட்:
மொசைக் / தரை ஓடுகள்:
பிளாஸ்டிக் / பாலிதீன்:
கைபம்பு:

ஆங்கிலேயன் நம் நாட்டை தெளிவாக ஆண்டுள்ளான் என்பதற்கு இதுவே சாட்சிகள்.

கம்பன் கட்டுத்தறியும் கவிபாடும், உலக அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் போன்ற எண்ணற்ற தமிழ் புலவர்கள் பெருமை அடைய மொழியை நமது அரசாங்கம் தமிழ் மொழியின் தரத்தை இது போன்ற படிவங்கள் மூலம் குறைகின்றது.

முறையான மொழிபெயர்ப்பாளர்கள் அரசாங்கத்தில் இல்லையெனில், எங்கள் கிராமத்தில் இருந்து வேலையற்றோரை வேலைக்கு கொடுத்து  நியமியுங்கள். அரசாங்கத்தில் இது போன்ற மொழி கலவை தவறுகள் ஏற்படாமல் இருக்க உதவி புரிகின்றோம்.

அமெரிக்க அரசாங்கத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு படிவத்தில் எதாவது தமிழ் எழுதப்பட்ட ஆங்கில வார்த்தைகள் இருகின்றதா என்று தேடி பார்த்தோம்.


மற்ற நாடுகளில் தமிழ் மொழி நல்ல முறையில் தான் பயன்படுத்தபடுகின்றது. இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் தான், அதுவும் சங்கத்தமிழை மக்களுக்கு புகட்டும் அரசாங்கத்தில் பயன்படுத்தப்படும் படிவங்களில் தான் தமிழ் மொழியின் தரம் கீழே தள்ளபடுகின்றது.

இறைவன் தான் இது போன்று மொழி கொண்டு மக்களை ஏமாற்றும் திட்டங்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். மக்கள் கேட்பதாக தெரியவில்லை. ஏனெனில் இங்கு அரசியல் செய்வதற்கே பயன்படுத்தபடுகின்றது மக்கள் நலனுக்காகவோ அல்லது மொழி வளர்சிக்க்காகவோ பயன்படுத்துவதாக தெரியவில்லை.

வாழ்க ஜனநாயகம் !

தகவல் உதவி:  திரு. கோ. வீரமணி, சென்னை
கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/60aa4cbbcf2ed09c?hl=ta_US

வெள்ளி, ஜூலை 02, 2010

அருள்மிகு முனீஸ்வரர் கண்திறப்பு மற்றும் பொதுச்சிறப்பு அழைப்பிதழ்


அருள்மிகு முனீஸ்வரர் கண்திறப்பு மற்றும் பொதுச்சிறப்பு அழைப்பிதழ்    
அன்பார்ந்த பக்தகோடிகளே! மெய்யன்பர்களே!!
நிகழும் விக்ருதி ஆண்டு ஆனி மாதம் 21 ஆம் நாள் (07 சூலை 2010) திங்கட்கிழமை காலை மணி 9.00க்கு மேல் 10.30குள் சோழமண்டலத்திலேயே உயரமான அருள்மிகு. முனீஸ்வரர் சாமி கண்திறப்பும் கிராமபொதுச்சிறப்பும் நடைபெற உள்ளது. அதுசமயம் பக்தகோடிகளும் மெய்யன்பர்களும் தவறாது கலந்து கொண்டு முனீஸ்வரர் அருளைப் பெற்றுய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு: அன்று மதியம் ஆலயப்பகுதியில் அன்னதானம் நடைபெறும்.

இங்ஙனம்,
நிர்வாகக் குழு மற்றும் கிராமவாசிகள்
காசாங்காடு.  

தகவல் உதவி: திரு. சுகுமாரன் அருணாசலம், துபாய்