அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

சனி, அக்டோபர் 29, 2011

கிராமத்தில் தேவைப்படும் நிர்வாக மாற்றங்கள்


சமீபத்தில் கிராமத்தில் வாழ்க்கை தரம் மேம்பட என்ன செய்தால் சிறப்பாக இருக்கும் என்று யோசித்தோம். பின்வருபவைகள் அதில் சில,

  1. பண வசூல் செய்வதை முறைபடுத்த வேண்டும்.
    1.  பொது மக்கள் கொடுக்கும் நன்கொடைகளுக்கு ரசீது வழங்க வேண்டும்.
    2. அதை செய்ய போகிறோம், இதை செய்ய போகிறோம் என்று பணம் வசூல் செய்யமால். என்ன செய்ய போகின்றீர்கள், எவ்வளவு பணம் தேவைபடுகின்றது மற்றும் அதன் திட்ட ஆவணங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் அதற்க்கு போருபேற்பவர்கள் யார் என்ற விபரமும் அளிக்கவும்.
    3. காசாங்காடு கிராமத்தில் மேலோட்டமாக என்ன செய்ய போகிறோம் என்று மட்டுமே பகிர்ந்து கொள்ளபடுகின்றது. முறையான விபரங்கள், திட்டங்கள் பற்றிய பகிர்ந்து கொள்ளபடுவதில்லை.
    4. வெளிநாட்டில் இருந்து வசூலிக்கப்படும் நிதிகளை முறைப்படி வங்களில் அனுப்பும் முறையினை பயன்படுத்த வேண்டும். அதற்கான ரசீது மற்றும் நன்கொடை கொடுத்த நபர்களின் பெயர்களை பாதுகாத்தல் அவசியம்.
    5. இதற்கான முறையை காசாங்காடு நிர்வாகம்  முறைபடுத்த வேண்டும்.
  2. பொது மக்கள் கேட்கும் தகவலினை (தகவல் உரிமை படியோ அல்லது வாய் வழியாகவோ) முறைப்படி மக்களுக்கு அளிக்கவும்.
  3. நிர்வாகத்தின் வரவு செலவினை அனைத்து மக்களுக்கும் நிர்வாகம் பகிர்ந்து கொள்ளவும். இதற்காக ஆகும் செலவினை மக்களிடம் இருந்து பெரும் வரிபனத்தில் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
    1. நேர்மையான நிர்வாகத்தின் மற்றும் அதன் திட்டங்களை பொது மக்களுக்கு தெளிவாக பயன்படுத்தி கொள்ள உதவும்.
  4.  பொது இடங்களில் வரிசை
    1. அரசாங்க, தனியார், பேருந்து மேலரும்போது, கடைகளில், வங்கிகளில் முதலில் வருபவருக்கே அதற்கான சேவைகளை வழங்கிட வேண்டும். அனைவரும் சமம் என்ற கருத்து அனைவரின் மனதில் உருவாகும் வண்ணம் அமைய  வேண்டும்.
    2. தற்போது வரிசை எங்குமே பயன்படுத்துவதில்லை, இதன் மூலம் அனைவரின் சமஉரிமை பாதிக்கபடுகின்றது.
    3. அனைத்து இடங்களிலும் பாரபட்சமின்றி வரிசை மூலம் சேவைகள் வழங்குவது கிராம மக்களின் வாழ்க்கை தரம் உயரும். நிர்வாகம் பற்றிய தன்னம்பிக்கையும் உயரும்.
  5. பொது இடத்தில் சிறுநீர் அல்லது மலம் கழித்தல் முற்றிலும் தவிர்க்கவேண்டும்.
    1. இதன் மூலம் எண்ணற்ற வியாதிகள் தவிர்க்க வழிவகை உண்டு. நிலம் மற்றும் காற்று வழியாக பரவும் வியாதிகள் தவிர்க்கப்படும்.
  6. குடிமகன்கள் அருந்தும் மது மற்றும் புகைபிடிக்கும் வியாதிகள் மற்றும் அதன் பின் விளைவுகள் பற்றி விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும்.
    1. கிராமத்தில் மது / புகைபிடிக்கும் பொருட்களை/பானங்களை தயாரிக்க மற்றும் விற்க அனுமதி இல்லை என்று தான் நாம் வரையரைத்துள்ளோம். கிராம குடிமகன்கள் இதை பயன்படுத்துவதற்கான தடையும் கொண்டு வந்தால், கிராம மக்களின் வாழ்க்கை தரம் உயரும்.
  7. வீட்டின் / தொழில்களின் குப்பைகளை சாலைகளில் கொட்டுதல்.
    1. குப்பைகளை சாலைகளில் கொட்டி சாலைகளின் அழகினை கெடுக்கும். மேலும் கொசு, மற்றும் எண்ணற்ற வியாதிகளை இவை உருவாகுவதை இவை அதிகமாக்கும்.
    2. மீறி நடப்பவர்களுக்கு உரிய அபராதம் விதிக்கும் நடைமுறை வேண்டும்.
  8. கிராம நிர்வாகம் சாலைகளின் குப்பைகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும் அல்லது தெரு மக்களாக சேர்ந்து (அவரவர் வீடுகளின் முன்பு) சாலைகளை சுத்தம் செய்யும் பழக்கத்தை முறைபடுத்த வேண்டும்.
  9. வாகனம் வேக அளவு (25 கிலோமீட்டர்) தடை வேண்டும். நிர்வாகமும் அதை முறைபடுத்த வேண்டும்.
    1. அளவிற்கு மேலான வேகத்தில் வாகனங்கள் செல்வதால் காசாங்காடு குடிமகன்களின் அமைதி பதிக்கப்படும். சில நேரங்களில் குடிமகன்களின் வாழ்க்கையும் இழந்துள்ளோம். எனவே சிறந்த வாழ்க்கை தரத்திற்கு வேக அளவு தடை வேண்டும்.
    2. அதிகமான வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
  10. தொழில்களின் / நபர்களை காசாங்காடு குடிமகன்களை / குடும்பங்களை தொடர்பு கொள்ளும் விதம் முறைபடுத்த வேண்டும்.
    1. காப்புரிமை திட்டங்கள் கொண்டு உறவினர்கள் என்ற உரிமை கொண்டும் தனது சுயநலத்திற்காகவும் வருமானத்திற்காகவும் காப்புரிமை திட்டங்களை கொண்டு காசாங்காடு குடிமகன்களின் அமைதியை சீர்குலைத்தல்.
    2. காப்புரிமை திட்டத்தின் மூலம் நீங்கள் கட்டும் பாலிசி தொகையில் 50% தொகை (தோராயமாக) அந்த ஏஜெண்டுகளுக்கு போய் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.
    3. இது போன்று வேறு பல திட்டங்கள் கொண்டு வீடு தேடி வரும் தொழில்களை முறைபடுத்த வேண்டும்.

தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

புதன், அக்டோபர் 26, 2011

தீபாவளி வாழ்த்துக்கள்


கிராம மக்களுக்கு இணைய குழுவின் தீப ஒளி வாழ்த்துக்கள்.

ஞாயிறு, அக்டோபர் 23, 2011

தேர்தல் முடிவுகள் - வாக்குகள் விபரம்

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள்:
  1. மாவட்ட பஞ்சாயத்து பிரிவு உறுப்பினர்: திரு. மெயக்கப்பன், வேப்படிகொல்லை, தெற்குதெரு
  2. ஒன்றிய பஞ்சாயத்து பிரிவு உறுப்பினர்: திரு. வீரையன், வள்ளியா வீடு, தெற்குதெரு
  3. காசாங்காடு கிராம தலைவர்: திரு. சதாசிவம், ஏவலாம் வீடு, நடுத்தெரு
தேர்ந்தெடுக்கபட்ட அனைவருக்கும் இணைய குழுவின் வாழ்த்துக்கள்.


ஊராட்சி தலைவர் :

மொத்தம் பதிவான வாக்குகள்: 1739 தகுதியான வாக்குகள்: 1668 செல்லாத வாக்குகள்: 71


Sl.No Name Father/Husband Name Votes Secured Status
1 சதாசிவம்.மு முருகையா 825 Elected
2 சிவசங்கர்.கோ கோவிந்தசாமி 258 Deposit Lost
3 நெடுஞ்செழியன்.வை வைத்திலிங்கம் 465 NotElected
4 முருகானந்தம்.கா காரிமுத்து 120 Deposit Lost


பஞ்சாயத்து ஒன்றிய பிரிவு உறுப்பினர்:

Ward No:  5      மொத்தம் பதிவான வாக்குகள்:  3162      தகுதியான வாக்குகள்:  3018      செல்லாத வாக்குகள்:  144
Sl.No Name Father/Husband Name Party Name Votes Secured Status
1 அண்ணாதுரை.கா காசிநாதன் தி.மு.க 1304 NotElected
2 முருகானந்தம்.பெ பெத்தையன் தே.மு.தி.க 243 Deposit Lost
3 வீரையன்.கோ கோவிந்தவேளாளர் அ.இ.அ.தி.மு.க 1471 Elected



மாவட்ட பஞ்சாயத்து பிரிவு உறுப்பினர்:

Ward No:  23      மொத்தம் பதிவான வாக்குகள்:  30414      தகுதியான வாக்குகள்:  28460      செல்லாத வாக்குகள்:  1954
Sl.No Name Father/Husband Name Party Name Votes Secured Status
1 குபேந்திரன்.இராம இராமசாமி பி.ஜே.பி 253 Deposit Lost
2 பிரபு சந்தோஷ்குமார்.க கணேசன் இ.தே.கா 2651 Deposit Lost
3 பூபேஷ்குமார்.ரெ ரெத்தினசபாபதி தே.மு.தி.க 3123 Deposit Lost
4 முத்துராமன்.து துரைசாமி சி.பி.ஐ 650 Deposit Lost
5 மெய்க்கப்பன்.தி திருஞானவேளாளர் அ.இ.அ.தி.மு.க 11394 Elected
6 ரூசுவெல்ட்.அ.மு முத்துச்சாமி தி.மு.க 10389 NotElected


வெள்ளி, அக்டோபர் 21, 2011

காசாங்காடு உள்ளாட்சி தேர்தல் - திரு. மு. சதாசிவம் - காசாங்காடு கிராம தலைவர்


காசாங்காடு உள்ளாட்சி தேர்தலில் கிராம தலைவராக திரு. மு.சதாசிவம் (பூட்டு-சாவி சின்னம், சுயேட்சை) தேர்ந்தெடுக்கபட்டார். விரிவான வாக்கு தகவல்கள் அரசு வெளியீட்டின் தகவல் கிடைத்த பிறகு வெளியிடப்படும்.

திரு. மு. சதாசிவம் அவர்களின் வாழ்த்துக்கள் தெரிவிக்க தொடர்பு கொள்ளவேண்டிய எண்: +91-97873-94911


புதன், அக்டோபர் 19, 2011

உள்ளாட்சி தேர்தல்

இன்று கிராம உள்ளாட்சி தேர்தல். அனைவரும் வாக்களித்து சிறந்த உள்ளாட்சி தலைவர்களை தேர்ந்தெடுக்கும் படி கேட்டுகொள்கிறோம்.

தேர்தல் முடிவு தேதி: 21-10-2011

மேலும் தகவல்களுக்கு: http://rti.kasangadu.com/tertal/2011-uratci-tertal


புதன், அக்டோபர் 12, 2011

2011 உள்ளாட்சி தேர்தல்


பிழை / திருத்தங்கள்/ சேர்க்கைகள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள். இது பொது மக்களிடமிருந்து பெற்ற தகவல். 

மேலும் தகவல்களுக்கு: http://rti.kasangadu.com/tertal/2011-uratci-tertal
 
உள்ளாட்சி தேர்தல் நாள்: 19  அக்டோபர் 2011

கிராம மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்கள்  மற்றும் வாக்குசீட்டு அடையாளம் கொள்ளும் விதம்:
  1. ஊராட்சி தலைவர் - இளம் சிவப்பு
  2. ஊராட்சி பிரிவு உறுப்பினர் - வெள்ளை/நீளம்
  3. ஊராட்சி ஒன்றிய பிரிவு உறுப்பினர் - பச்சை
  4. மாவட்ட ஊராட்சி பிரிவு உறுப்பினர் - மஞ்சள்
ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளார்கள்:


 வரிசை எண் பெயர்  சின்னம் வீட்டின்பெயர் தெரு பெற்றோர்கள் வயது
 1 திரு.சிவசங்கர்  ஏணி முத்தாம்வீடு நடுத்தெரு திரு.கோவிந்தசாமி & திருமதி.காந்திமதி 41 +
 2 திரு.சதாசிவம்  பூட்டு சாவி ஏவலாம்வீடு நடுத்தெரு திரு.முருகையன் &  திருமதி.சின்னபிள்ளை 51+
 3 திரு.நெடுஞ்செழியன் கை ரோலர்  அறியமுத்துவீடு தெற்குதெருதிரு.வைத்திலிங்கம் & திருமதி.கௌரதம்  45+
 4 திரு.முருகானந்தம் கத்திரிகோல் காரியாம்வீடு கீழத்தெரு திரு.மாரிமுத்து & திருமதி.முத்துகன்னு    43+

மாவட்ட பஞ்சாயத்து பிரிவு உறுப்பினர்:
  1. திரு. மெயக்கப்பன்,  வேப்படிகொல்லை, காசாங்காடு
  2. திரு. ரூசெவேல்ட்,  ஆலத்தூர்

ஒன்றிய பஞ்சாயத்து பிரிவு உறுப்பினர்:
  1. திரு. அண்ணாதுரை,  அப்புவேலாம்வீடு, மேலத்தெரு, மன்னங்காடு
  2. திரு. ரவி என்கிற முருகானந்தம், நொண்டியாம்வீடு, கீழத்தெரு
  3. திரு. வீரையன்,  அறியமுத்துவீடு,  தெற்குதெரு, காசாங்காடு

கிராம பஞ்சாயத்து பிரிவு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள்:
  1. திரு. அ. முனியப்பன்,  வடக்குதெரு
  2. திரு. அ. ராமசந்திரன், வடக்குதெரு
  3. திரு. முனியப்பன், வடக்குதெரு
  4. திரு. சிங்காரம், தேத்தடிக்கொள்ளை
  5. திரு. கோவிந்தராசு, தேத்தடிக்கொள்ளை
  6. திரு.  நடராஜன், மேலத்தெரு
  7. திருமதி. செந்தாமரை, வேலிவீடு, நடுத்தெரு
  8. திருமதி. இல. கலைச்செல்வி, வேம்பாம்வீடு, கீழத்தெரு
  9. திரு. ரா. மொழிசெல்வன், காத்தாயீவீடு, பிலாவடிகொல்லை
  10. திரு. ரா. வைத்தியநாதன், நாயத்துவீடு, பிலாவடிகொல்லை
  11. திரு. விஸ்வலிங்கம், தவிடம்வீடு, தெற்குதெரு
  12. திரு. விவேகாநந்தன், அறியமுத்துவீடு, தெற்குதெரு
  13. திரு. நியூட்டன், வேப்படிகொல்லை, தெற்குதெரு
  14. திரு. அலெக்சாண்டர், தெற்குதெரு
  15. திரு. அ. கோகிலா (Unopposed),
  16. திரு. கோ. ராஜராஜசோழன்  (Unopposed), சாமியார்வீடு

புதன், அக்டோபர் 05, 2011

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்



காசாங்காடு கிராம மக்களுக்கு இணைய குழுவின் இனிய ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.

உலகெங்கும் கிராம மக்கள் கொண்டாடும் ஆயுத பூஜை நிகழ்ச்சியின் போது ஒப்பிவிக்கபடும் உலக நீதியின் சுட்டி இங்கே.

http://article.kasangadu.com/ulaka-niti---ayuta-pujai


செவ்வாய், அக்டோபர் 04, 2011

ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளார்கள்


ஊராட்சி தேர்தல் நாள்: 19  அக்டோபர் 2011

ஊராட்சி தலைவர் பதவிக்கு மாநில தேர்தல் ஆணையம் செலவிட அனுமதிக்கும் தொகை:  ரூபாய். 15,000

ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளார்கள்:

 வரிசை எண் பெயர்  வீட்டின்பெயர் தெரு பெற்றோர்கள் வயது
 1 திரு.சிவசங்கர்  முத்தாம்வீடு நடுத்தெரு திரு.கோவிந்தசாமி & திருமதி.காந்திமதி 41 +
 2 திரு.சதாசிவம்  ஏவலாம்வீடு நடுத்தெரு திரு.முருகையன் &  திருமதி.சின்னபிள்ளை 51+
 3 திரு.நெடுஞ்செழியன் அறியமுத்துவீடு தெற்குதெருதிரு.வைத்திலிங்கம் & திருமதி.கௌரதம்  45+
 4 திரு.முருகானந்தம் காரியாம்வீடு கீழத்தெரு திரு.மாரிமுத்து & திருமதி.முத்துகன்னு43+

 
மேலும் தகவல்களுக்கு: http://rti.kasangadu.com/tertal/2011-uratci-tertal