அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

சனி, ஜனவரி 30, 2010

கிராமத்தில் விளையாட்டு போட்டிகள்

இன்றும், நாளையும் மு.க.அழகிரி பிறந்த நாளை ஒட்டி அழகிரி பாசறை குழு விளையாட்டு போட்டிகளை தனபால் கடை முச்சந்தியில் நடத்த உள்ளது. கிராம மக்கள், குழந்தைகள் பங்கு கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.


தகவல் உதவி: சுகுமாரன், துபாய்

ஞாயிறு, ஜனவரி 17, 2010

வினைதீர்த்தான் பூமது வசந்தா இல்ல திருமணம்

திருமண தேதி மற்றும் நேரம்: 27 சனவரி 2010
திருமணம் நடக்கும் இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: ஊராட்சி திருமண மண்டபம், காசாங்காடு

மணமகன் பெயர்: பழனிவேல் என்கிற கார்த்திகேயன்
மணமகன் வீட்டின்/ஊரின் பெயர்: தெற்குதெரு, காசாங்காடு
மணமகன்  பெற்றோர் பெயர்: வினைதீர்த்தான் பூமது வசந்தா
மணமகள் பெயர்: ஆனந்தி
மணமகள்  வீட்டின்/ஊரின் பெயர்: புலவஞ்சி



மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.


தகவல் உதவி: சுகுமாரன், காசாங்காடு (துபாய்)

இராமசாமி தனசம்மாள் இல்ல திருமணம்

திருமண தேதி மற்றும் நேரம்: 22 சனவரி 2010
திருமணம் நடக்கும் இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: ஊராட்சி திருமண மண்டபம், காசாங்காடு

மணமகன் பெயர்: பார்த்திபன்
மணமகன் வீட்டின்/ஊரின் பெயர்: வடக்குதெரு, காசாங்காடு
மணமகன்  பெற்றோர் பெயர்: இராமசாமி தனசம்மாள்
மணமகள் பெயர்: வைதேகி
மணமகள்  வீட்டின்/ஊரின் பெயர்: தாமரன்கோட்டை



மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.


தகவல் உதவி: சுகுமாரன், காசாங்காடு (துபாய்)

கிராமத்தில் காணும் பொங்கல் விளையாட்டுகளின் விபரங்கள்

கயிர் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், சாக்கு கட்டி ஓடும் போட்டி, கனியும் கரண்டியும்,  ஊசி நூல் கோர்த்தல்,  கயிறு தாண்டுதல், உருளைகிழங்கு சேகரித்தல், நெடுதொலைவு ஓட்டம்,  பேச்சு போட்டி, திருக்குறள் ஒப்பிவித்தல், பானை உடைத்தல், கயிறு இழுக்கும் போட்டி(திருமணமானவர்களுக்கும், திருமணமாகதவர்களுக்கும் இடையே)
, கோலப்போட்டி

பரிசு பெற்றவர்களின் விபரங்கள் இருந்தால் தெரிவிக்கவும்.

இன்று இரவு ஆடல் பாடல்களுடன் பரிசளிப்பு விழா நடைபெற்றது. முயற்சி செய்த அனைவருக்கும் இணைய குழுவின் நன்றிகள்.

தகவல்: இராமச்சந்திரன், காசாங்காடு

கிராமத்தில் டாக்டர்களின் தட்டுபாடுகளுக்கு மத்திய அரசின் நடவடிக்கை

காசாங்காடு கிராமத்தில் மருத்துவர் கிராம மருத்துவமனைக்கு வந்து வெகு நாட்கள் ஆகி விட்டது.  இது சம்பந்தமாக அதன் அதிகாரிகளிடம் கேட்கையில் டாக்டர்கள் தட்டுப்பாட்டினால் தான் அனுப்ப இயலவில்லை என்ற பதில். இதை சரி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

http://beta.thehindu.com/news/national/article81244.ece

மூன்றரை வருடங்களில் டாக்டர் பட்டம் பெற்று கிராம மருத்துவமனைகளில் பணிபுரிய ஏற்பாடுகள் செய்துள்ளது. இதன் மூலம் கிராமத்தில் டாக்டர்கள் தட்டுபாடு ஒரு முடிவுக்கு வரும் கருத்து கணிப்பு கூறுகிறது.

மத்திய அரசின் இந்த முயற்சிக்கு காசாங்காடு கிராம இணைய குழு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறது.

சனி, ஜனவரி 16, 2010

காணும் பொங்கலுக்கு கிராமத்தில் விளையாட்டு போட்டிகள்

கிராமத்தில் காணும் பொங்கலுக்கு சிறு குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள், பெரியர்வர்களுக்கான போட்டிகள் மிக சிறப்பாக நடைபெற்றது.

முயற்சி செய்த அனைவருக்கும் இணைய குழுவின் நன்றிகள்.

வியாழன், ஜனவரி 14, 2010

இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் !!!!




காசாங்காடு கிராம இணைய குழுவின் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் !!!!

இவை காசாங்காடு, பட்டுக்கோட்டை, நாட்டுச்சாலை, மன்னங்காடு, துவரங்குறிச்சி இடங்களில் உள்ள சுவர்களில் காணப்படும். முயற்சி செய்த அனைவருக்கும் நன்றிகள்.

ஞாயிறு, ஜனவரி 10, 2010

கிராமத்தின் முன்னேற்றதிற்கு பாடுபட விரும்புகிறேன்

சமீபத்தில் காசாங்காடு இணையதளத்தை பார்த்தேன், மிக அழகாக கிராமத்தை பற்றி விவரிக்கபட்டிரிந்தது.

கிராம இணையதளத்தில் தினமும் கிராமத்தில் நடக்கும் முக்கிய செய்திகளை படிப்பதுண்டு. அங்கு கேபிள் ஒளிபரப்பின் தடைகளை பற்றி படித்தேன். கிராமம் சென்று அங்கு தற்போதைய கேபிள் தொடர்பை கண்டு விசாரித்தேன். இரண்டு அலைவரிசைகளுடன் (சேனல்) தான் தற்போது கேபிள் கிராமத்தில் கொடுக்கப்படுகிறது, அதுவும் கூடிய விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கையின்மையும் மக்களிடையே பார்த்தேன்.

இந்த பிரச்சனையை சரி செய்ய "வாசன் எலக்ட்ரானிக்ஸ்" என்ற  எங்கள் நிறுவனம் காசாங்காடு கிராம மக்களுக்கு உதவும் என்ற நம்பிக்கை உள்ளது. நாங்கள் "Sun Direct, Tata Sky" போன்ற செயற்கைக்கோள் தட்டுடன் கூடிய ஒளிபரப்பை உங்கள் வீட்டின் தொலைகாட்சிக்கு கொண்டு வர உதவி புரிகின்றோம். இதன் மூலம் கிராம மக்களுக்கு தொலைகாட்சி பொழுதுபோக்கிற்கு தற்போது உள்ள பிரச்சனையை ஒரு தீர்வுக்கு கொண்டு வர முடியும்.

மேலும் தகவல்களுக்கு கீழ்க்கண்ட முகவரியில் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

ஸ்ரீனிவாசன்,
வாசன் எலக்ட்ரானிக்ஸ்,
அய்யா A/C திரைஅரங்கு எதிரில், 
தெற்கு காளியம்மன் தெரு,
பட்டுக்கோட்டை.

தொலைபேசி எண்கள்:  +91-98655-93669,  +91-93608-41404

இணையதள நிர்வாகம் இதை ஒரு விளம்பரமாக எடுத்து கொள்ளாமல், கிராம மக்களுக்கு உதவி புரியும் தகவல் என்று கருதும் படி பணிவன்புடன் கேட்டுகொள்கிறோம்.

தகவல்: வாசன் எலக்ட்ரானிக்ஸ், ஸ்ரீனிவாசன், பட்டுக்கோட்டை