அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

செவ்வாய், டிசம்பர் 31, 2013

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2014 !


கிராம மக்களுக்கு இணைய குழுவின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !

திங்கள், டிசம்பர் 23, 2013

காசாங்காடு கைபந்து தொடர் போட்டி



காசாங்காடு கைபந்து தொடர் போட்டி.

வியாழன், டிசம்பர் 12, 2013

கீழத்தெரு செம்மண்வீடு சந்திரசேகரன் அரிலா அவர்களது இல்ல திருமணம்


திருமண தேதி மற்றும் நேரம்: டிசம்பர் 13, 2013 9:00 - 10:30 மணியளவில்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை

மணமகன் பெயர்: செல்வன். விஜயன்
மணமகன் வீட்டின் பெயர்: செம்மண் வீடு, கீழத்தெரு
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. சந்திரசேகரன் & திருமதி. அரிலா

மணமகள் பெயர்: செல்வி. மாதவி
மணமகள் வீட்டின் பெயர்: முத்தாம்வீடு, நடுத்தெரு
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. முத்துசாமி & திருமதி. கோவிந்தம்மாள்

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/intu-matam/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

வியாழன், நவம்பர் 21, 2013

காசாங்காடு கிளை நூலகம் - நூல் பெறப்பட்ட விபரங்கள்

காசாங்காடு கிளை நூலகத்திற்கு எழுத்தாளர். பழனித்துரை வழங்கிய நூல்களின் மின்னணு வருடிய ரசீது. 




இணையகுழுவிடம் இதற்காக பெறப்பட்ட தொகை: ரூபாய். 960/-
விபரங்கள்:

பயண செலவு:
Kasangadu to Pattukkottai: 7.00 x 2 (தோராயமாக)
Pattukkottai to Thanjavur  : 28.00 RS x 2

Thanjavur to Trichy            : 36.00 Rs x 2
Trichy to Dindigul             : 46.00RS x 2
Dindigul to Chinnalappatti(Gandhigram) : 8.00 x 2
Chinnalappatti to University Auto Fare : 40.00 x 2
University to Chinnalapatti Bus stop Auto fare : 40.00 x 2
தாங்கும் செலவு:
Room Rent : : 350.00 RS
உணவு செலவு:
Food cost :200.00
( tiffen :60.00,Meals : 110, Dinner : 30.00)


மேலும் நூலகத்தில் புத்தகங்களை வைப்பதற்கு அலமாரிகள் தேவைப்படுவதாக கேட்டுகொள்ளபட்டுள்ளது. இந்த தேவைகளின் விபரங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மேலும் கிராமத்திற்கு தேவைகள் இருப்பினும் அதன் தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இணைய குழுவின் பொருள்/பண உதவி வேண்டுமெனின் முன் அனுமதி பெற்று கொள்ளுங்கள்.

உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது நன்றிகள்.

செவ்வாய், நவம்பர் 19, 2013

குஞ்சாயீவீடு மேலத்தெரு அண்ணாமலை பஞ்சாட்சரம் அவர்களது இல்ல திருமணம்


திருமண தேதி மற்றும் நேரம்: நவம்பர் 20, 2013 10:00 - 11:30 மணியளவில்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை

மணமகன் பெயர்: செல்வன். அழகிரி
மணமகன் வீட்டின் பெயர்: குஞ்சாயீவீடு மேலத்தெரு
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. அண்ணாமலை & திருமதி. பஞ்சாட்சரம்
மணமகன் தொழில்: B.E (Singapore)

மணமகள் பெயர்: செல்வி. குறுந்தொகை
மணமகள் ஊரின் பெயர்: மேலத்தெரு, ஆலத்தூர்
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. திருநாவுக்கரசு & திருமதி. கனியமுது
மணமகள் தொழில்: M.Sc , B.Ed, M.Phil

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/intu-matam/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

சனி, நவம்பர் 16, 2013

கிராமத்தில் இன்று காலை முதல் தூரல் - இனிய கார்த்திகை தின வாழ்த்துக்கள் !


கிராமத்தில் இன்று காலை முதல் மாலை தூரல்.


கிராம மக்களுக்கு இனிய கார்த்திகை தின வாழ்த்துக்கள் !

செவ்வாய், நவம்பர் 12, 2013

கருப்பூராம்வீடு மேலத்தெரு இராமலிங்கம் காந்திமதி அவர்களது இல்ல திருமணம்


பெண் அழைப்பு: நவம்பர் 13, 2013, காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை

திருமண தேதி மற்றும் நேரம்: நவம்பர் 14, 2013 10:30 - 12:00 மணியளவில்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை

மணமகன் பெயர்: செல்வன். குணசேகரன்
மணமகன் வீட்டின் பெயர்: கருப்பூராம்வீடு மேலத்தெரு
மணமகன் பெற்றோர் பெயர்:  தெய்வத்திரு. இராமலிங்கம் & திருமதி. காந்திமதி
மணமகன் தொழில்: B.E (Singapore)

மணமகள் பெயர்: செல்வி.அமுதா
மணமகள் ஊரின் பெயர்: வாட்டாகுடி வடக்கு 
மணமகள் பெற்றோர் பெயர்: தெய்வத்திரு. சச்சிதானந்தம் & திருமதி. வானஜோதி
மணமகள் தொழில்: M.C.A

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/intu-matam/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

வியாழன், நவம்பர் 07, 2013

சுந்தாம்வீடு வீடு மேலத்தெரு சுந்தரேசன் தமிழ்செல்வி அவர்களது இல்ல திருமணம்


திருமண தேதி மற்றும் நேரம்: நவம்பர் 7, 2013 09:00 - 10:30 மணியளவில்
திருமணம் நடக்கும் இடம்: VPS திருமண மண்டபம், பட்டுக்கோட்டை

மணமகள் பெயர்: செல்வி. மாயா
மணமகள் வீட்டின் பெயர்: சுந்தாம்வீடு வீடு, மேலத்தெரு
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. சுந்தரேசன் & திருமதி. தமிழ்செல்வி
மணமகள் தொழில்: B.E

மணமகன் பெயர்: செல்வன். இராஜவேல்
மணமகன் ஊரின் பெயர்: மேலத்தெரு, சூரப்பள்ளம்
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. பாலசுப்ரமணியம் & திருமதி. ஜெயம்
மணமகன் தொழில்: B.E (Cisco  Systems, USA)

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/intu-matam/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

சனி, அக்டோபர் 19, 2013

வெல்லாம் வீடு கீழத்தெரு ரெங்கசாமி உல்லாசம் அவர்களது இல்ல திருமணம்


திருமண தேதி மற்றும் நேரம்: அக்டோபர் 20, 2013 10:00 - 11:30 மணியளவில்
திருமணம் நடக்கும் இடம்: அய்யா திருமண மஹால், பட்டுக்கோட்டை

மணமகள் பெயர்: செல்வி. மாலைமதி
மணமகள் வீட்டின் பெயர்: வெல்லாம் வீடு, கீழத்தெரு
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. ரெங்கசாமி & திருமதி. உல்லாசம்
மணமகள் தொழில்: M.Sc, B.Ed

மணமகன் பெயர்: செல்வன். அருண்
மணமகன் ஊரின் பெயர்: செல்லாம் வீடு, சூரப்பள்ளம்
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. வைத்திலிங்கம் & திருமதி. இந்திரா
மணமகன் தொழில்: M.B.A

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/intu-matam/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

ஞாயிறு, அக்டோபர் 13, 2013

ஆயுத பூஜை வாழ்த்துக்கள்



ஆயுதங்களை வணங்கும் போது உலக நீதி படிப்பது வழக்கம் !

http://article.kasangadu.com/ulaka-niti---ayuta-pujai

கிராம மக்களுக்கு ஆயுத பூஜை வாழ்த்துக்கள்


வியாழன், செப்டம்பர் 12, 2013

பிலாவடிகொல்லை அப்பாயீவீடு வழக்கறிஞர் இராமசந்திரன் தமிழ்செல்வி இவர்களது இல்ல திருமணம்



திருமண தேதி மற்றும் நேரம்: செப்டம்பர் 15, 2013 9:00 - 10:30 மணியளவில்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை

மணமகன் பெயர்: செல்வன். சாந்தபிரபு
மணமகன் வீட்டின் பெயர்: அப்பாயீவீடு, பிலாவடிகொல்லை
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. இராமச்சந்திரன் & திருமதி. தமிழ்செல்வி
மணமகன் தொழில்: M.B.B.S

மணமகள் பெயர்: செல்வி. அனுசுயா
மணமகள் ஊரின் பெயர்: செங்கபடுத்தான்காடு
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. இராமச்சந்திரன் & திருமதி. ஜெயரத்தினம்
மணமகள் தொழில்: M.B.B.S

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/intu-matam/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.


ஞாயிறு, செப்டம்பர் 08, 2013

கிராமத்தில் கன மழை




காசாங்காடு கிராமத்தில் தற்போது கனத்த மழை பெய்து கொண்டிருக்கின்றது.


சனி, செப்டம்பர் 07, 2013

நடுத்தெரு மேலவீடு வேலாயுதம் நவநீதம் இல்ல திருமணம்



திருமண தேதி மற்றும் நேரம்: செப்டம்பர் 9, 2013 9:00 - 10:30 மணியளவில்
திருமணம் நடக்கும் இடம்: அருள்மிகு சுவாமிநாத சுவாமி சன்னதி, சுவாமிமலை
வரவேற்ப்பு நிகழ்ச்சி: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை

மணமகன் பெயர்: செல்வன். சரவணன்
மணமகன் வீட்டின் பெயர்: பூச்சிவீடு (மேலவீடு), நடுத்தெரு
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. வேலாயுதம் & திருமதி. நவநீதம் 
மணமகன் தொழில்:  M.E

மணமகள் பெயர்: செல்வி. வித்யா
மணமகள் வீட்டின் பெயர்: வெள்ளேரியம் வீடு, வடக்குத்தெரு
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. தேன்மொழி & திரு. சண்முகம்
மணமகள் தொழில்: M.sc, HDCA  - SPI Technologies, Chennai

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/intu-matam/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.


தெற்குத்தெரு குஞ்சாயீவீடு வைத்தியநாதன் பார்வதி அவர்களது இல்ல திருமணம்




திருமண தேதி மற்றும் நேரம்: செப்டம்பர் 9, 2013 9:00 - 11:30 மணியளவில்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை

மணமகன் பெயர்: செல்வன். இராம்கோபால்
மணமகன் வீட்டின் பெயர்: குஞ்சாயீவீடு, தெற்குத்தெரு
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. வைத்தியநாதன் & திருமதி. பார்வதி 

மணமகள் பெயர்: செல்வி. சுபா
மணமகள் வீட்டின் பெயர்: மூத்தாக்குறிச்சி
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. கோவிந்தராசு & திரு. உண்ணாமலை

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/intu-matam/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.


வெள்ளி, செப்டம்பர் 06, 2013

தெற்குத்தெரு ஊமைவேளாண்வீடு வெங்காடசலம் முத்துக்கண்ணு இல்ல திருமண விழா



திருமண தேதி மற்றும் நேரம்: செப்டம்பர் 8, 2013, ஆவணி 8, வெள்ளிகிழமை 10:00 - 11:30 மணியளவில் 
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை

மணமகன் பெயர்: செல்வன். இராஜகுமார்
மணமகன் வீட்டின் பெயர்: ஊமை வேளாண் வீடு, தெற்குத்தெரு
மணமகன் பெற்றோர் பெயர்: நினைவில் வாழ். திரு. வெங்காடசலம் & திருமதி. முத்துக்கண்ணு 

மணமகள் பெயர்: செல்வி. தனலெட்சுமி
மணமகள் வீட்டின் பெயர்: சிலம்பவேலான்வீடு, வடக்குத்தெரு
மணமகள் பெற்றோர் பெயர்: நினைவில் வாழ். திரு. இராமச்சந்திரன் & திரு. சின்னப்பிள்ளை

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/intu-matam/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.


புதன், ஆகஸ்ட் 21, 2013

மறைந்த ஐயா. கோ. அருணாசலம் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது


நடுத்தெரு ஆட்டுக்காரன் வீடு ஐயா. கோ. அருணாசலம் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

கிராம முன்னேற்றத்திற்கு உறுதுணையாகவும், நிர்வாக பதவிகளில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிராம குடிமகன்கள் இதுபோன்று கிராமத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டுகிறோம்.


ஐயா. அருணாசலம் அவர்கள் கிராமத்தின் மேம்பாடு பற்றிய விபரங்கள் / பட்டியல் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


இவரின் பெருமை என்றும் நிலைத்திருக்க இணைய குழுவின் வாழ்த்துக்கள்.


இதற்க்கு முன்பு வெளியிட்ட தகவல்:
http://obituary.kasangadu.com/2012/08/blog-post.html


நன்றி.

புதன், ஆகஸ்ட் 14, 2013

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்


கிராம மக்களுக்கு இணைய குழுவின் சுதந்திர தின வாழ்த்துக்கள்.



சுதந்திர தின நிகழ்சிகள் பற்றிய விபரங்கள் / நிழற்படங்கள் / நிகழ்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

திங்கள், ஆகஸ்ட் 05, 2013

அருள்மிகு முனீஸ்வரர் சுவாமி திருக்கோவில் ஆடி பூஜை அழைப்பிதழ்

அருள்மிகு முனீஸ்வரர் சுவாமி திருக்கோவில் ஆடி பூஜை அழைப்பிதழ்



நிகழ்ச்சி விபரங்கள்:

தேதி: ஆடி 20, 5 ஆகஸ்ட் 2013
நேரம்: 9:15-10:30
அன்னதான நேரம்: மதியம் 12:00 அளவில்

அனைவரும் பங்குகொண்டு அருள்பெற வேண்டுகிறோம்.

நிர்வாகிகள் மற்றும் கிராம வாசிகள்.


திங்கள், ஜூலை 08, 2013

எழுத்தாளர் முனைவர். G. பழனிதுரை காசாங்காடு கிராம நூலகத்திற்கு நூல்கள் வழங்க முன்வந்துள்ளார்




கிராமங்களின் நிர்வாகங்கள் மற்றும் எழுதபடாத சட்ட திட்டங்கள், கிராம பெண்களின் கிராம முன்னேற்றத்தின் பங்கு போன்று பஞ்சாயத்து சம்பந்தமான,  புத்தகங்களை எழுதிய முனைவர். G. பழனிதுரை நமது கிராம நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்க முன்வந்துள்ளார்.

Amazon  இணையதளத்தில் அவரின் புத்தகங்கள் பற்றிய விபரங்கள்:

http://www.amazon.com/s/ref=nb_sb_noss?url=search-alias%3Daps&field-keywords=Palanithurai

Google  தளத்தில் அவரை குறிப்பிட்ட மற்றும் எழுதிய புத்தகங்கள்:

https://www.google.com/search?q=Palanithurai&btnG=Search+Books&tbm=bks&tbo=1

புத்தகங்கள் அளித்த விபரங்கள் பற்றி தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.

அவரது எண்ணங்களுக்கு இணைய குழுவின் பாராட்டுக்கள்.


ஞாயிறு, ஜூலை 07, 2013

2011 அக்டோபர் - இன்று வரை கிராம நிர்வாகத்தின் முன்னேற்றங்கள்


கிராமத்தில் நேரடியாக கேட்டு பார்த்த முன்னேற்றங்கள்:

தண்ணீர்:

  1. தினசரி அதிகபட்சமாக 2 மணி நேரம் தண்ணீர் வழங்குதல்
  2. தெரு விழாக்கள், கிராம விழாக்கள், வீடு விழாக்கள் போது அதிகபட்சமாக 4 மணி நேரம் தண்ணீர் வழங்குதல்.
    1. இவை கிராமத்தில் தொண்டு தொற்று பழக்கமாக இருகின்றது.
24 மணி நேரம் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதே கிராமத்தானின் கனவுகள்.



தெரு விளக்குகள்:


  1. கிராமத்தில் உள்ள அனைத்து விளக்குகளும் பயன்படுத்தும் முறையில் உள்ளன.
  2. 100% சதவிகிதம் தெரு விளக்குகள் முறையாக இயங்குகின்றன.
LED  விளக்குகள் தேவை, மின்சாரம் குறைவாக பயன்படுத்தவும், நீண்ட நாட்கள் விளக்குகள் பயன்படுத்தவும் இவை உதவும். தானியங்கி மாற்றிகள் (Automatic  switch) மின்சார தேவைகளை சரி செய்ய உதவும்.

சுகாதாரம்:

  1. குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது
  2. கிராமத்தில் உள்ள அனைத்து வீட்டிற்கும் கழிப்பறை அவசியம் என்பதை வலியுறுத்துதல்.
    1. இன்றும் சாலையோர மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் பழக்கம் பழக்கத்தில் உள்ளது.
  3. சுகாதார விழிப்புணர்வு பற்றிய நிகழ்ச்சிகள், அறிவிப்பு தாள்கள்
சுற்று சூழல்:


  1. சாலையோரம் வேம்பு மரக்கன்றுகளை நடுதல்
  2. Plastic  பை உபயோகங்களை குறைக்க விழுப்புணர்வு ஏற்படுத்துதல்


கட்டுமான பணி:
  1. சிமிட்டி / தார் சாலை அமைத்தல்
    1. வண்ணான் / அம்பட்டன் / தச்சன் சாலை அமைத்தல்
  2. கட்டிடங்களை பராமரித்தல்
    1. அங்கன்வாடி
    2. நீர்த்தொட்டி
    3. நிர்வாக கட்டிடங்கள்
  3. புதிய கட்டிகம் 
    1. தொடக்க பள்ளி மேற்கு சுற்று சுவர்
    2. பஞ்சாயத்து நிழற்கூடம்
  4. நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம்
    1. ஏரிகளை தூர் வாருதல்
தேவையற்ற நிகழ்சிகள் / செயல்கள்:
  1. அரசியல்வாதிகளுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்
  2. பதாகைகளின் எண்ணிக்கை அதிகம்
மேலும் விபரங்கள் விடுபட்டிருப்பின் பகிர்ந்து கொள்ளுங்கள்.


திங்கள், ஜூலை 01, 2013

நடுத்தெரு மேலவீடு திரு. கலைச்செல்வன் ராமலிங்கம் - இந்தியாவின் தென்னை வளர்ச்சி வாரிய துணை தலைவர்

நடுத்தெரு மேலவீடு திரு. கலைச்செல்வன் ராமலிங்கம் - இந்தியாவின் தென்னை வளர்ச்சி வாரிய துணை தலைவராக ஜூன் 29 தேதியன்று நடந்த வாரிய கூட்டத்தில் தேர்ந்தெடுக்கபட்டார்.


காசாங்காடு கிரமத்திலிரிந்து அகில இந்திய தென்னை வளர்ச்சி வாரியத்தின் துணை தலைவர் என்ற பதவிக்கு தேர்ந்தெடுக்க பட்ட பெருமை காசாங்காடு கிராம மக்களை சென்றடையும்.

இவரது கடின உழைப்பிற்கும், திறமைக்கும், பனி மேலும் சிறப்புற வாழ்த்துக்கள். மேலும் சட்டமன்ற உறுப்பினர் / பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட இணைய குழுவின் வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு காசாங்காடு கிராமத்தானும் இது போன்று செயல்பட இணைய குழுவின் வாழ்த்துக்கள்.


புதன், ஜூன் 26, 2013

கீழத்தெரு காத்தாம்வீடு வீரப்பன் கண்ணகி இல்ல திருமணம்




திருமண தேதி மற்றும் நேரம்: ஜூன் 28, 2013, ஆனி 14, வெள்ளிகிழமை 9:30 - 10:30 மணியளவில் 
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை

மணமகன் பெயர்: செல்வன். ஜெயவேல்
மணமகன் வீட்டின் பெயர்: காத்தாம்வீடு, கீழத்தெரு
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. வீரப்பன் & திருமதி, கண்ணகி 
மணமகன் தொழில் விபரம்: B.Sc.,M.A

மணமகள் பெயர்: செல்வி. திராவிடச்செல்வி
மணமகள் ஊரின் பெயர்: சிலம்பவேளாங்காடு
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. செல்லப்பன் & திருமதி சரோஜா
மணமகள் தொழில் விபரம்: B.Sc

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.



வெள்ளி, ஜூன் 21, 2013

நடுத்தெரு முத்தாம்வீடு தங்கவேல் உதயகலா இல்ல திருமணம்




தெளிவாக தெரிய படத்தின் மேல் சொடுக்கவும்

திருமண தேதி மற்றும் நேரம்: ஜூன் 23, 2013, ஆனி 9, ஞாயிற்றுகிழமை 9:30 - 10:30 மணியளவில் 
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை

மணமகன் பெயர்: செல்வன். கண்ணன் என்கிற ஜெயக்குமார் 
மணமகன் வீட்டின் பெயர்: முத்தாம்வீடு
மணமகன் பெற்றோர் பெயர்: நினைவில் வாழ். தங்கவேல் & திருமதி. உதயகலா
மணமகன் தொழில் விபரம்: Post Doctoral Research Fellow University of Kansas Medical Center, USA

மணமகள் பெயர்: செல்வி. உமா
மணமகள் வீட்டின் பெயர்: அவையாம்வீடு
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. பன்னீர்செல்வம் & திருமதி. மல்லிகா
மணமகள் தொழில் விபரம்: B.E


திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.


திங்கள், ஜூன் 17, 2013

நடுத்தெரு பூச்சிவீடு சக்திவேல் தனரோஜா இல்ல திருமணம்


திருமண தேதி மற்றும் நேரம்: ஜூன் 21, 2013, ஆணி 7, வெள்ளி 9:30 - 10:30 மணியளவில்
திருமணம் நடக்கும் இடம்: ஆலத்தூர் VRT  மண்டபம், ஆலத்தூர்

மணமகள் பெயர்: செல்வி. பிரேமா
மணமகள் வீட்டின் பெயர்: மேலவீடு
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. சக்திவேல் & திருமதி. தனரோஜா

மணமகன் பெயர்: செல்வன். கோவிந்தராஜு
மணமகன் ஊரின் பெயர்: ஆலத்தூர்
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. பாலசுப்ரமணியம் & திருமதி. மணிமேகலை

ஆலத்தூர் கிராமத்திற்கு குடியேற இருக்கும் செல்வி. பிரேமா அவர்களுக்கு இணைய குழுவின் வாழ்த்துக்கள்.

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.


நடுத்தெரு குப்பாயீவீடு முத்துசாமி சசிகலா இல்ல திருமணம்


திருமண தேதி மற்றும் நேரம்: ஜூன் 19, 2013, ஆணி 5, புதன்10:30 - 12:00 மணியளவில் 
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை

மணமகள் பெயர்: செல்வி. திவ்யா
மணமகள் வீட்டின் பெயர்: குப்பாயீவீடு
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. முத்துசாமி & திருமதி. சசிகலா

மணமகன் பெயர்: செல்வன். ரவிசங்கர்
மணமகன் ஊரின் பெயர்: மூத்தக்குறிச்சி
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. இராமநாதன் & திருமதி. பழனியம்மாள்

மூத்தக்குறிச்சி கிராமத்திற்கு குடியேற இருக்கும் செல்வி. திவ்யா அவர்களுக்கு இணைய குழுவின் வாழ்த்துக்கள்.

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.


செவ்வாய், ஜூன் 11, 2013

கீழத்தெரு மொட்டாம்வீடு பாலசுப்ரமணியம் சிவயோகம் இல்ல திருமணம்


திருமண தேதி மற்றும் நேரம்: ஜூன் 13, 2013, வைகாசி 30 வியாழக்கிழமை  10:30 - 12:00 மணியளவில்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை

மணமகன் பெயர்: செல்வன். அருண்குமார்
மணமகன் வீட்டின் பெயர்: மொட்டாம்வீடு, கீழத்தெரு
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. பாலசுப்ரமணியம் & திருமதி. சிவயோகம்
மணமகன் தொழில் விபரம்: Diploma HMCT (Resort  World, Sentosa, Singapore)

மணமகள் பெயர்: செல்வி. சந்தா
மணமகள் வீட்டின் பெயர்: பிலாவடிகொல்லை
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. அன்பழகன் & திருமதி. பவானி
மணமகள் தொழில் விபரம்: B.E 

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

திங்கள், ஜூன் 10, 2013

நடுத்தெரு பஞ்சாம்வீடு நடராஜன் தனரோஜா இல்ல திருமணம்


திருமண தேதி மற்றும் நேரம்: ஜூன் 12, 2013, வைகாசி 29 புதன்கிழமை 9:00 - 10:00 மணியளவில்
திருமணம் நடக்கும் இடம்:  காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை

மணமகள் பெயர்: செல்வி. வினோதினி
மணமகள் வீட்டின் பெயர்: பஞ்சாம்வீடு
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. நடராஜன் & திருமதி. தனரோஜா
மணமகள் தொழில் விபரம்: M.Com, B.Ed

மணமகன் பெயர்: செல்வன். தமிழ்தாசன்
மணமகன் ஊரின் பெயர்: மன்னங்காடு, தெற்கு (http://www.mannankadu.org/)
மணமகன் பெற்றோர் பெயர்: மறைந்த திரு. வேலாயுதம் & திரு. ஜமுனா
மணமகன் தொழில் விபரம்: பொறியாளார், கோல்டன் அம்பர் நிர்வாகி

மன்னங்காடு கிராமத்திற்கு குடியேற இருக்கும் செல்வி. வினோதினி அவர்களுக்கு இணைய குழுவின் வாழ்த்துக்கள்.

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

தெற்குதெரு வேப்படிகொல்லை சற்குணம் வனரோஜா இல்ல திருமணம்


திருமண தேதி மற்றும் நேரம்: ஜூன் 12, 2013, வைகாசி 29 புதன்கிழமை 9:00 - 10:00 மணியளவில்
திருமணம் நடக்கும் இடம்:  MNR  திருமண மண்டபம், நாட்டுச்சாலை

மணமகன் பெயர்: செல்வன். பாரதி
மணமகன் வீட்டின் பெயர்: வேப்படிகொல்லை
மணமகன் பெற்றோர் பெயர்: மறைந்த திரு. சற்குணம் & திருமதி. வனரோஜா
மணமகன் தொழில் விபரம்: பொறியாளார்

மணமகள் பெயர்: செல்வி. கோமளா
மணமகள் ஊரின் பெயர்: ஆலத்தூர் வடக்கு
மணமகள் பெற்றோர் பெயர்: திரு.  KR. கோவிந்தராஜு & திருமதி. மலர்கொடி

காசாங்காடு கிராமத்திற்கு குடியேற இருக்கும் செல்வி. கோமளா அவர்களுக்கு இணைய குழுவின் வாழ்த்துக்கள்.

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

ஞாயிறு, ஜூன் 09, 2013

தென்னைமர நண்பர்கள் - காசாங்காடு கிராமத்திளிரிந்து


மத்திய தென்னை வாரியம் மூலம் தென்னைமர நண்பர்கள் திட்டம் உருவாக்கப்பட்டது.

இவர்களின் செயல்கள் / உறுப்பினர்கள் விபரங்கள் : http://coconutboard.nic.in/friends-district.htm

காசாங்காடு கிராம உறுப்பினர்கள்:

பெயர்                        முகவரி     வயது      கைபேசிஎண்
1. மொழிசெல்வன் கணபதி, 202/2  தெற்குதெரு -  44 - 99435-13531
2. சுகுமாரன் அருணாசலம், கீழத்தெரு - 35 - 96550-80068
3. ஜெயவேல் வீரப்பன், 163 தெற்குதெரு - 32 - 99437-68437
4. மணிவண்ணன் அமிர்தலிங்கம், தெற்குதெரு, 37 - 94434-07896
5. கோபிநாத் M, தெற்குதெரு, - 29 - 91594-52040
6. பாலசுந்தரம் S, தெற்குதெரு  - 35 - 89407-53683

உறுபினர்களாக பங்குகொள்ளும் அனைத்து உள்ளங்களுக்கும் இணைய குழுவின் வாழ்த்துக்கள்.

காசாங்காடு கிராமத்தில் மேலும் தென்னை சிறப்புற தங்களின் பணி உதவும்.

வெள்ளி, ஜூன் 07, 2013

காசாங்காடு நிர்வாகத்தின் நடத்தைகள் - துணை தலைவரின் கருத்துரைகள்



காசாங்காடு கிராமத்தில் ஒரு போதும் இல்லாத தேவையற்ற செயல்கள் மிகுதுதியாய் வளர்ந்து வருகின்றது.

ஒரு கிராமத்தானின் கேள்வி: ஊர்ர்ல இல்லாத அதிசயம் நடக்குது. ஒரு துணிய வாங்கி கொடுக்கலாம், சாப்பாடு போடலாம், அதை விட்டுட்டு பதாகைகள் வைக்கின்றீர்களே?

கிராம துணை தலைவரின் பதில்:  அண்ணன் கருத்து சொல்றார் எல்லாருக்கும் கேட்டுச்சா கீ கீ கீ ...

மற்றொரு குடிமகனின் கேள்வியும் கூட, என்னப்பா நடக்குது காசாங்காடு கிராமத்துல? பதாகைகள் வைப்பதற்கு போட்டி போடுகிறீர்கள்.  ஊருக்கு நல்லது பண்ண பாருங்கப்பா.

காசாங்காடு கிராமத்தை வாழ்வதற்கு தகுதியற்ற கிராமமாக செய்து வரும் இந்த கிராம நிர்வாகிகள் இந்த கிராமத்திற்கு தேவையா? காசாங்காடு குடிமகன்களை இழிவு படுத்துவதர்ர்காவா இவர்களை தேர்ந்தெடுத்தோம்?

மாவட்ட அதிகாரிகளிடம் இது பற்றி கேள்விகள் கேட்போம். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்வோம்.

கேவலம் !


திங்கள், ஜூன் 03, 2013

10 வகுப்பு அரசு மேல்நிலை பள்ளி முதல் மூன்று இடம் பெற்றவர்கள்




10 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடம் பெற்றவர்கள்:
இ. கல்பனா -  469
ந.நந்தினி - 447
ம. சந்தியா - 436


கிராம பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இணைய குழுவின் பாராட்டுக்கள்.
திறம்பட மானர்வர்களை உருவாக்கும் ஆசிரிய / ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியர் திரு. பாண்டியன் அவர்களுக்கும் எமது பாராட்டுக்கள்.





ஞாயிறு, ஜூன் 02, 2013

பத்தாம் வகுப்பு பொது தேர்வில முதலிடம் பெற்றவர்கள்


காசாங்காடு கிராமத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில முதலிடம் பெற்றவர்கள்

இவர்கள் வெளியூர்களில் சென்று படித்தவர்களின் விபரங்கள்:

தேவி இந்திரஜித் - 495
ஜெயந்தி மணிமாறன் - 490
ஆகாஷ் மில்டன் மாரிமுத்து - 485
சிவகுமார் குணசேகரன் - 485

காசாங்காடு அரசு பள்ளியில் மதிப்பெண்கள் பெற்றவர்களின் விபரங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருடாந்திர முதலிட பதிவு விபரங்கள்: http://education.kasangadu.com/10-2-vil-mutalitam-perravarkal

தகவல்களை பகிர்ந்து கொண்ட உள்ளங்களுக்கு நன்றி .

திங்கள், மே 20, 2013

மேலத்தெரு கருப்பூராம்வீடு கணேசன் சிந்தாமணி இல்ல திருமணம்


திருமண தேதி மற்றும் நேரம்: மே 22, 2013 புதன்கிழமை 11:00 மணியளவில்
திருமணம் நடக்கும் இடம்: VRT திருமண மஹால், ஆலத்தூர்

மணமகள் பெயர்: செல்வி. இளவரசி
மணமகள் வீட்டின் பெயர்: கருப்பூராம்வீடு, மேலத்தெரு
மணமகள் பெற்றோர் பெயர்: மறைந்த ஐயா. கணேசன் & திருமதி. சிந்தாமணி

மணமகன் பெயர்: செல்வன். செந்தில்குமார்
மணமகன் ஊரின் பெயர்: ஆலத்தூர்
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. காரிமுத்து & திருமதி. கருத்தகன்னு அம்மாள்
மணமகன் தொழில் விபரம்: லண்டன்
திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.


புதன், மே 15, 2013

அரசு மேல்நிலை பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில முதலிடம் பெற்றவர்கள்




காசாங்காடு கிராம அரசு மேல்நிலை பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில முதலிடம் பெற்றவர்கள்.

சோமசுந்தரம் மாதவன்: 1100
தமிழழகன் இராஜமாணிக்கம்: 1049
நாகராஜன் மச்சடியான்: 952


பதாகையில் எழுதப்பட்ட குறிப்பு:
நம்பிக்கையுடன் பள்ளியில் சேர்த்த பெற்றோர்கள், விடா முயற்சியுடன் பயின்று தேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அதிக மதிப்பெண்கள் பெற்ற அனைவருக்கும் இணைய குழுவின் வாழ்த்துக்கள். மேலும் நம் வளர்சிகளில் முக்கிய பங்கு வகிக்கும் நம் அரசாங்காம் சிறப்புற இருக்க உதவி புரியுங்கள்.

இந்த வருடம் பத்தாம் வகுப்பு முதலிடம் பெற்ற மாணவர்கள் பற்றிய விபரங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தகவல்களை பகிர்ந்து கொண்ட உள்ளங்களுக்கு எமது நன்றிகள்.


ஞாயிறு, ஏப்ரல் 14, 2013

அய்யனார் திருக்கோவில் ஜெய வருடபிறப்பு திருவிழா அழைப்பிதழ்


அருள்மிகு ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பால் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனார் திருக்கோவில் சித்திரை வருடபிறப்பு திருவிழா அழைப்பிதழ்
காசாங்காடு மன்னங்காடு ரெகுநாதபுரம்



ஆன்மீக அன்பர்களே வணக்கம்,

நிகழும் மங்களகரமான ஜெய வருடம் சித்திரை மாதம் 1 தேதி, 14/04/2013 ஞாயிற்றுகிழமை சதுர்த்தி ரோகினி நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பாள் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனாருக்கு சிறப்பு அபிஷேக ஆரதனை உள்ளது.

அது சமயம் பக்த கோடிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பாள் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனார் சுவாமி அருள்பெற வேண்டுகிறோம்.

நிகழ்ச்சி நிரல்:
ஜெய சித்திரை மாதம் 1, 14/04/2013 ஞாயிற்றுகிழமை:

காலை 9 மணி:
சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.

மாலை 5 மணி அளவில்:
காவடி, பால்குடம், மாவிளக்கு அர்ச்சனைகள் நடைபெறும்.
இரவு 9 மணி:
சிறப்பு ஆராதனை பிரசாதம் வழங்குதல்.

இங்ஙனம்,
கிராமவாசிகள்
காசாங்காடு, மன்னங்காடு, ரெகுநாதபுரம்


கிராமத்தில் ஆன்மீக உணர்வை வளர்க்கும் நாட்டண்மைகளுக்கு இணைய குழுவின் நன்றிகள்.

சனி, ஏப்ரல் 13, 2013

இனிய விஜய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !


இனிய விஜய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

நந்தன முடிந்து விஜய ஆரம்பமாகின்றது. தமிழ் கால அளவுகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள,

தமிழ் கால அளவுகள்: http://article.kasangadu.com/tamil-kalankal

வரலாற்று பகுதியில்: http://history.kasangadu.com/pantikaikal/tamil-varuta-pirappu-tirunal

மேலும் தகவல்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

PAN/TAN அட்டை - வருமான வரி - படிவம் 15G/H


தாங்களுக்கு PAN  (Permanent  Account Number) அட்டை இல்லையெனின் பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் பகுதிகளில் இந்த அட்டையை பெற்று தர தனியார் நிறுவனங்கள் உதவி புரிகின்றன. தகவல்களை பதிவு செய்து அட்டையை பெற்று கொள்ளவும்.

வருமான வரி தகவல்களை அரசாங்கத்திடம் பகிர்ந்து கொள்ள தாங்கள் எவ்விதத வருமானத்தையும்  கொண்டிருக்கலாம். தாங்களுக்கு வருமானம் இல்லாவிடினும் வருமான வரி தகவல்களை அரசாங்கத்திடம் பகிர்ந்து கொள்ளுங்கள். தெளிவான சேவைகளை வழங்க மற்றும் கிராம மக்களின் நலன் பற்றி அறிய அரசாங்கத்திற்கு இந்த தகவல் உதவும்.

மேலும் தகவல்களுக்கு: http://incometaxindia.gov.in/

2012-2013 ஆண்டின் வருமான வரியை அரசாங்கத்திடம் பகிர்ந்து கொள்வோம்.

வரி விபரங்கள்: http://finotax.com/itax/itaxrates1.htm

TAN (Tax Deduction and Collection Account Number):
தொழில்களுக்கு வழங்கப்படும் வரி வசூல் எண். காசாங்காடு கிராமத்தில் நடத்தப்படும் தொழில்கள் தாங்கள் வருமான வரியை அரசாங்கத்திடம் பதிந்து கொள்ளுங்கள்.

கிராமத்தில் உள்ள தொழில்களுக்கு TAN  நம்பர் உள்ளதா / இல்லையா என்பது பற்றி இந்த தளத்தில் தெரிந்து கொள்ளவும்.

https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/KnowYourTanLink.html

வங்கியில் வரும் பணத்திற்கு / நிலையான வைப்பு தொகை இருப்பினும் வங்கிகள் தானாகவே தங்களின் அனுமதியின்றி  TDS  (Tax  Deduction  at  Source) எடுக்கும் வரிகளை எடுக்க வேண்டாம் என்று கூற 15G/H  படிவத்தினை சமர்பிக்கவும். இதற்க்கு PAN  அட்டை அவசியம். இவை தாங்களின் வருமானம் வரி விலக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே பதிய வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு முறையான வருமான வரி ஆலோசானை நிறுவனங்களை அணுகவும். குறுக்கு / தவறான / அரசாங்கத்தை ஏமாற்றும் வழிகளை தவிர்க்கவும்.

கோடிகணக்கில் இந்திய மக்களின் வரி பணம் நம் கிராம முன்னேற்றத்திற்காக அரசாங்கம் திட்டமிட்டு செலவிடுகின்றது. மேலும் அரசாங்கம் திறனுடன் செயல்பட உறுதுணையாக இருப்போம்.


சனி, மார்ச் 30, 2013

வ.உ.சி பேரவை - காசாங்காடு கிராம முன்னேற்றம் ???



சமீபத்தில் காசாங்காடு கிராமம் சந்தித்த முன்னேற்றங்கள்???:

  1. இந்து மத சடங்குகளை அவமதிப்பது
    1. பெரியோர்களால் நிச்சயிக்க பட்ட திருமணங்கள் நிறுத்துதல் / தடைபடுதல்
  2. அரசியல்வாதிகளுக்கு பிறந்த நாள் கொண்டாடும் விழாக்கள்
  3. கிராம மக்கள் பிரதிநிதிகள் கல்வெட்டு
  4. சினிமா விளம்பர பலகை
  5. தேவையற்ற தண்ணீர் குடிநீர் சுத்திகரிப்பு சாதனம்
    1. கிராம நிர்வாகம் / சபை தேவையா / தேவையில்லையா என்ற ஆராய்ச்சி செய்வதில்லை.
    2. இலவசமாக கொடுக்கின்றார்கள் என்று பள்ளி நிர்வாகம் தேவையற்ற சாதனங்களை பொருத்துவது.
  6. தற்போது சாதிக்கு பேரவை
    1. அதோடு கொடிமரங்கள் நிறுத்தங்கள்
மற்ற கிராமங்களுக்கு எடுத்துகாட்டாய் விளங்கி வந்த காசாங்காடு கிராமத்தில் இந்த களைகள்  உருவாகுவதற்கு யார்  காரணம்?


ஊர் பெரியர்வர்கள் மற்றும் கிராம நிர்வாகமும் / நாட்டாண்மைகள் இந்த நிகழ்வுகளுக்கு உடந்தையாய் இருப்பதே இதற்க்கு மிகவும் மோசமான நிலைக்கு காரணம்.

இவை முன்னேற்றத்தின் அடி பாதையில் கிராமத்தை இழுத்து செல்லும் திட்டங்களாகும் ???

வியாழன், மார்ச் 28, 2013

67.98 இலட்சம் ருபாய் (2007-2013) - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம்




காசாங்காடு கிராமத்திற்கு மட்டும் இதுவரை 68 இலட்சம் ருபாய் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் மூலம் செலவிடப்பட்டுள்ளது.

4000 செலவிட்ட கிராம பிரதிநிதிகளுக்கு கல்வெட்டு வேண்டுமெனின், 67.98 இலட்சம் கொடுத்த இந்திய குடிமகன்களுக்கு (வரி பணம் மூலம்) எங்கே கல்வெட்டு?

தேவையான முறையில் கிராம நிர்வாகம் இவை திட்டமிட்டு செலவு செய்யப்பட்டதா என்பதை குடிமகன்கள் தான் பதில் கூற வேண்டும்.

விபரங்கள் பின்வருமாறு:

2007-2008
2913012010/RC/23036   காசாங்காடு சாலைகள் முன்னேற்றம் - 3 இலட்சம்

2008-2009
2913012010/IC/16240     காசாங்காடு மஞ்சு குப்பம் ஏரி தூர்வை தோண்டுதல் -  3 இலட்சம்

2009-2010
2913012010/WH/67178     காசாங்காடு பிள்ளையார் குளம் தூர் தோண்டுதல் - 4 இலட்சம்

2010-2011
2913012010/IC/59892     காசாங்காடு அனைத்து ஏரி பாசன வாய்கால் & கலை வாய்க்கால் - 3.4 இலட்சம்
2913012010/RC/33710    காசாங்காடு மஞ்சுகுப்பம் ஏரி கரை  -  3 இலட்சம்
2913012010/WH/83398   காசாங்காடு குண்டுக்கட்டை ஏரி மஞ்சுகுப்பம் ஏரி -  3.7 இலட்சம்

2011-2012
2913012010/IC/2904036820     காசாங்காடு பாசான வாய்கால், இலை வாய்கால், வடிகால் வாய்கால்   - 3.65  இலட்சம்
2913012010/WH/2904046807    மஞ்சள் - கிணறு - ஏரி - 4.6 இலட்சம்
2913012010/WH/2904046813    இடம்கொண்டான் ஏரி - தூர்வை தோண்டுதல் - 3.68 இலட்சம்
2913012010/RC/2904039338     காசாங்காடு பஞ்சாயத்து சாலை - யூனியன் சாலை -  4.7 இலட்சம்
2913012010/RC/2904041853     காசாங்காடு மாவட்ட நெடுஞ்சாலைகள் - இரு பக்கம் - வடிகால் சரிசெய்தால், மற்றும் குண்டுக்கட்டை ஏரி வடிகால்  - 3.6 இலட்சம்

2012-2013
2913012010/RC/2904055120     காசாங்காடு - தம்பிகோட்டை  வடகாடு வாய்கால் - வடகரை மற்றும் தென்கரை புதிய சாலை அமைத்ததை - 4 இலட்சம்
2913012010/WH/2904065516    காசாங்காடு - மஞ்சுகுப்பம் ஏரி வடக்கு  தூர் தோண்டுதல் - 4.5 இலட்சம்
2913012010/WH/2904066675   காசாங்காடு - தூர் தூண்டுதல் - ஏரி நீர் வரத்து வாய்கால் - பாசான வாய்க்கால் - PWD  வாய்கால்  - 5 இலட்சம்
2913012010/WH/2904066961    காசாங்காடு - குண்டுக்கட்டை ஏரி - மேற்கு பகுதி - தூர் தோண்டுதல் - 4.5 இலட்சம்
2913012010/WH/2904076245    காசாங்காடு - வடகாடு வாய்கால் தூர் தோண்டுதல் -  4.67 இலட்சம்
2913012010/WH/2904094491     காசாங்காடு - குண்டுக்கட்டை ஏரி ஆழம் செய்தல் மற்றும் தெற்கு  கரைகளை உறுதி படுத்துதல்  -  4.98 இலட்சம்

தகவல்களை பகிர்ந்து கொண்ட  மத்திய ஊரக துறைக்கு எமது நன்றி.
பிழைகள் / திருத்தங்கள் மேலும் தகவல்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


ஞாயிறு, மார்ச் 24, 2013

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் - நிதி திரட்டும் பணி ஆரம்பம்


மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் - நிதி திரட்டும் பணி ஆரம்பம்.

கிராம பெரியவர்கள் வீடு வீடாக சென்று நிதி திரட்டி வருகின்றனர்.

கிராமத்தில் நிதி திரட்டும் முறைகள்: http://history.kasangadu.com/kovil-nikalccikal/niti-vacul-ceyyum-murai


செவ்வாய், மார்ச் 12, 2013

கிராமத்திற்கு தேவையான - மத்திய அரசின் வரவு செலவு திட்டம் - (2013 - 2014) -


மத்திய அரசின் வரவு செலவு 2013-2014 திட்டத்தின் கீழ் காசாங்காடு கிராமம் மற்றும் குடிமகன்கள் எவ்வாறு பயன் பெறலாம் என்பது பற்றி தெரிந்து கொள்வோம். விடுப்பட்ட திட்டங்கள் / பிழைகள் இருப்பினும் திருத்தி பகிர்ந்து கொள்ளுங்கள்.

Arsenic  மற்றும் Flouride  கலந்துள்ள நீர்களில் சுத்திகரிப்பு சாதனம் நிறுவப்படும். காசாங்காடு கிராம நிர்வாகம் வழங்கும் தண்ணீரில் இந்த கனிமங்கள் உள்ளனவா என்பது பற்றி தெரியவில்லை. இதற்காக மத்திய அரசு 1,400 கோடி ரூபாய் செலவிட உள்ளது.

மகாத்மா காந்தி (MNREGA) கிராமிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (100 நாள் வேலைவாய்ப்பு) கீழ் செயல்படும் திட்டங்களுக்கு 33,000 கோடி செலவிட உள்ளது. காசாங்காடு கிராமம் இந்த திட்டத்தின் கீழ்   வெகுவாக பயன் பெறுகின்றது. சாலைகள் அமைத்தல், சுகாதாரம் போன்ற வகைகளில் தற்போது பயன்படுத்தபடுகிறது. இது பற்றி கிராமத்தில் நடக்கும் தகவல் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இவைகள் மட்டுமன்றி கிராமங்கள் முன்னேற்றத்திற்காக  80,194 கோடி செலவிட உள்ளது. Pradhan Mantri Grameen Sadak Yojana திட்டத்தின் மூலம் சாலைகள் முன்னேற்றம் இதில் அடங்கும். NABARD  திட்டத்தின் மூலம் பத்தாயம், விவசாய அறுவடை சேகரிப்பு கிடங்குகள் ஏற்படுத்த உதவிகளும் இதில் அடங்கும்.

கிராமப்புற தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு ரூபாய். 200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் ஏதேனும் கண்டுபிடிப்புகள் இருப்பினும் தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஐந்து லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு செலுத்தும் வருமான வரிகளில் ரூபாய். 2,000 திருப்பி வழங்கபடுகிறது. ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் இருப்பினும் 40% வருமான வரி கட்ட வேண்டும்.

காசாங்காடு கிராம நிர்வாகத்தின் வரவு செலவு திட்டங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வியாழன், மார்ச் 07, 2013

அரிதான நோய் நாள் - காசாங்காடு கிராம தொடக்கப்பள்ளியில் கொண்டாடப்பட்டது


அரிதான நோய் நாள் காசாங்காடு கிராம தொடக்க பள்ளியில் கொண்டாடப்பட்டது.

http://www.rarediseaseday.org/2013/events/show/id/1115/country_id/in

டாக்டர். நவநீதம் துரைசாமி, மன்னங்காடு அவர்களால் நடத்தப்பட்டு வரும் இந்த அரிதான நோய் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

http://www.rarediseasesindia.org/

மன்னங்காடு பற்றிய தளத்தை இவர் இயக்கி வருகின்றார் என்பது குறிப்பிடதக்கது.

http://www.mannankadu.org/


செவ்வாய், மார்ச் 05, 2013

கிராமத்தில் கன மழை !!!


கிராமத்தில் இன்று விடியற்காலை முதல் கன மழை !


செவ்வாய், ஜனவரி 29, 2013

காசாங்காடு அரசினர் மேல் நிலை பள்ளி - ஆண்டு விழா அழைப்பிதழ்




தகவல்களை பகிர்ந்து கொண்ட உள்ளங்களுக்கு நன்றி.

ஞாயிறு, ஜனவரி 27, 2013

முத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா வரவு செலவு கணக்குகள்


முத்தமிழ் மன்றம் பகிர்ந்து கொண்ட காணும் பொங்கல் விளையாட்டு விழா வரவு செலவு கணக்கு விபரங்கள். கிராமத்தினரின் பங்கும் கிடைத்த பணத்தையும் பொறுப்புடன் செலவு செய்த விதமும் உலகிற்கு பகிர்ந்து கொள்ளும் நோக்கில், மற்றும் மன்றத்தின் நேர்மையும் விளக்கும் விதத்தில் இந்த தவகல் அமையும்.

தகவல் தவறாக இருப்பினும் இணைய குழுவிடம் / மன்றத்திடம் பகிர்ந்து கொள்ளவும்.

பகிர்ந்து கொண்ட உள்ளங்களுக்கு எமது நன்றிகள்.

குறிப்பு:  காசாங்காடு கிராம நிர்வாகம் போல் கணக்கு கேட்க்கும் யோக்கிதையை பற்றி (இந்திய அரசாங்கம் நிர்ணயித்த யோக்கிதையுடன், அரசாங்கம் வழங்கிய சலுகைகள், வரவு செலவுகள்  கேட்கப்பட்ட தகவல்களுக்கு) இந்த மன்றம் வெளியிடவில்லை.


தகவல் உதவி: முத்தமிழ் மன்றம், காசாங்காடு


காசாங்காடு கிராம நிர்வாகம் - காணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள்


கிராமத்தில் கிராம பஞ்சாயத்து நடாத்தும் காணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நேற்றிளிரிந்து நடைபெறுகின்றது.
இது சம்பந்தமான நிழற்படங்கள் / நிகழ்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வெள்ளி, ஜனவரி 25, 2013

குடியரசு தின வாழ்த்துக்கள்


 கிராம மக்களுக்கு இணைய குழுவின் குடியரசு தின வாழ்த்துக்கள்.


புதன், ஜனவரி 16, 2013

மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல்


மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் விளையாட்டு போட்டிகளுடன் சிறப்புற முடிந்தது.
தெளிவான நிழற்படங்கள், நிகழ்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

செவ்வாய், ஜனவரி 15, 2013

விவேகானந்தர் ஜயந்தி விழா - காசாங்காடு மேல் நிலை பள்ளி


மதுக்கூர் ஒன்றியம் காசாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பசுமைப் படை திட்டத்தின் சார்பில் விவேகானந்தர் ஜயந்தி விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் கு. பாண்டியன் தலைமை வகித்தார். மாணவ, மாணவிகளுக்கு விவேகானந்தர் குறித்த பல்வேறு தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பள்ளியின் பசுமைப்படை திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி. மணி செய்திருந்தார்.

Arise ! Awake ! Stop not till the goal is reached ! - Swami Vivekananda


தகவல் உதவி: http://dinamani.com/edition_trichy/tanjore/article1419789.ece?service=print

நிழற்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

திங்கள், ஜனவரி 14, 2013

பொங்கல் நல் வாழ்த்துக்கள் !




கிராம மக்களுக்கு இணைய குழுவின் இணைய நல் வாழ்த்துக்கள் !


சர்க்கரை பொங்கல் வைக்கும் முறை: http://samayal.kasangadu.com/tai-ponkal/carkkarai-ponkal
வெண் பொங்கல் வைக்கும் முறை: http://samayal.kasangadu.com/tai-ponkal/ven-ponkal
கோட்டுகறி கொழம்பு: http://samayal.kasangadu.com/tai-ponkal/kottu-kari-kulampu

நிழற்படங்கள் நிகழ்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி.

ஞாயிறு, ஜனவரி 13, 2013

போகி பண்டிகை வாழ்த்துக்கள்


கிராம மக்களுக்கு இணைய குழுவின் போகி பண்டிகை வாழ்த்துக்கள் !

காசாங்காடு போகி பண்டிகை பற்றி: http://history.kasangadu.com/pantikaikal/poki
வரிசை பொருட்கள்: http://history.kasangadu.com/pantikaikal/poki/varicai-porutkal

விடுபட்ட தகவல்கள், பிழைகள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

போகி பண்டிகை அன்று அசைவம் சமைப்பது கிராமத்தில் வழக்கமாகி வருகின்றது.

பூவின் இன்றைய விலை: 50 பூ / 25 ருபாய்
கிராமத்தில் ஆட்டுகறியின் இன்றைய விலை:  ஒரு கிலோ 400 ரூபாய்.
முழு நாட்டு கோழியின் விலை: 200 ரூபாய்

நிகழ்படங்கள், நிழற்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சனி, ஜனவரி 12, 2013

காணும் பொங்கல் விளையாட்டு நிகழ்சிகள் - முத்தமிழ் மன்றம்


காணும் பொங்கல் விளையாட்டு நிகழ்சிகள் - முத்தமிழ் மன்றம்



நிகழ்ச்சியின் நிழற்படங்கள், நிகழ்படங்களை பகிர்ந்து கொள்ளவும்.

புதன், ஜனவரி 09, 2013

கிராமத்தில் கன மழை !



கிராமத்தில் இரவு முழுவதும் கன மழை, இன்னும் தொடர்ந்து பெய்து கொண்டிருகின்றது !

செவ்வாய், ஜனவரி 01, 2013

மார்கழி மாத வாசல் கோலம்

Android செயலியின் மூலம் பகிர்ந்து கொள்ளப்பட்டது. 

செயலியின் தொடர்பு சுட்டி: https://play.google.com/store/apps/details?id=com.kasangadu.mobileapps



மார்கழி மாத வாசல் கோலம்.

நிழற்படத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


கிராம மக்களுக்கு இணைய குழுவின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.