அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

சனி, நவம்பர் 29, 2008

மின் உற்பத்தி இயந்திரம் மூலம் மோட்டார்களை இயக்கி குடிதண்ணீர்.

பட்டுகோட்டையில் இருந்து வாடகைக்கு மின் உற்பத்தி இயந்திரம் எடுத்து வந்து, அதன் மூலம் மேல் தொட்டி மோட்டார்களை இயக்கி ஊர் முழுவதும் குடிதண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

பட்டுகோட்டையில் இருந்து நேரடியாக வரமுடியாததால், (ரோடுகளில் எங்கு பார்த்தாலும் மரங்கள் விழுந்து கிடக்கின்றது) பல ஊர்கள் கடந்து ஊர் மக்கள் இந்த முயற்சிகளை செய்துள்ளனர்.

முயற்சி செய்த அனைத்து கிராமத்து மக்களுக்கும் காசாங்காடு இணைய குழு சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

வெள்ளி, நவம்பர் 28, 2008

மாவட்ட ஆட்சியாளர் வெள்ள நிவாரணம் பற்றி அறிவிப்பு

தகவல் உதவி: தேசிய தகவல் மையம், தஞ்சாவூர்.
இதன் இணைய இணைப்பு இங்கே.


கிராம முன்னேற்றதுக்கு உதவி புரியும் சக்திதரனுக்கு எமது நன்றி


காசாங்காடு கிராமத்து மக்களின் முன்னேற்றதுக்கு வழி காட்டி கொடுக்கும் சக்திதரனுக்கு எமது நன்றி.

அவர் எழுதிய நம் கிராமத்திற்கு உதவும் வகையில் தொழில்கள் என்ற கட்டுரை இங்கே . குறுகிய முதலீட்டில் வருமானம் தேடும் தொழில் என்று அந்நிறுவனம் குறிபிட்டுள்ளது. ஆர்வம் உடையோர் அந்நிறுவனத்தை இங்கே அணுகவும்.

நான்கு நாட்களாக மின்சாரம் இல்லை, குடிதண்ணீர் இல்லாமல் கிராமம் பரிதவிப்பு


பருவ மழை நின்று விட்டாலும், தற்போது மின்சாரம் இல்லாததால் மக்களுக்கு குடிதண்ணீர் இல்லை. காசாங்காடு கிராமத்தில் குடிதண்ணீர் விநியோகிக்கும் மேல் தொட்டிகள் அனைத்தும் ஆழ் குழாய் கிணறு மூலம் இயங்குகின்றன. மின்சாராம் இல்லாததால் தற்போது கிராமம் முழுவதும் குடிதண்ணீர் இல்லை.

இதற்கான தீர்வு, மின் உற்பத்தி இயந்திரம் (Generator) மூலம் மேல் தொட்டி மோட்டார்களை இயக்க முயற்சி.


செய்தி உதவி: தமிழழகி, காசாங்காடு

வியாழன், நவம்பர் 27, 2008

தொடர் வெளியீடு: மஞ்சுகுப்பம் ஏரி உடைப்பு


முந்தைய செய்தியின் தொடர் வெளியீட்டு பகுதி இது.

முனியன் கோவில் தென்புரத்தில் உள்ள ஆலமரத்தில் ஆரம்பித்து ஏரியின் தெற்கு சருக்கை வரையில் மஞ்சுகுப்பம் ஏரி உடைந்து தண்ணீர் புரண்டு ஓடியது.

இதனால் சிலம்பவேலாங்கட்டிர்க்கும் காசாங்காட்டிர்க்கும் இடையிலான போக்குவரத்து தற்போது துண்டித்து உள்ளது.

தற்போது கிடைத்த தகவல் படி கிராமத்தில் மழை நின்று விட்டது.


செய்தி உதவி: தாமரை

மஞ்சுகுப்பம் ஏரி முனியன் கோவில் அருகே உடைந்து விட்டது

கிராமத்தில் மஞ்சுகுப்பம் ஏரி முனியன் கோவில் அருகே உடைந்து விட்டது.
சேதம் என்னவென்ற விவரம் தெரியவில்லை. ஊரில் அனைத்து தெருக்களிலும்
வெள்ளம்.

இரண்டு நாட்களாக மழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மரங்கள் ரோடுகளில் விழுந்து கிடப்பதாலும் மற்றும் ரோடுகளில் தண்ணீர்
தேக்கம் அதிகம் இருப்பதாலும் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.

தொலைபேசி இணைப்பகம் இயல்பாக இயங்கி வருகிறது. பெரும்பாலோர் வீட்டின் தொலைபேசி இணைப்புகள் புயல் மற்றும் மரகிளைகள் முறிவால் வேலை செய்யவில்லை.

காசாங்காட்டில் உள்ளோர் யாரேனும் வெள்ளம் சம்பந்தமாக புகைப்படங்கள்
மற்றும் செய்திகள் இருந்தால் இணைய குழுவிற்கு உடன் தெரியப்படுத்தவும்.

புதன், நவம்பர் 26, 2008

கனத்த மழை நீடிக்கின்றது. புயல், வெள்ளம் அபாய எச்சரிக்கை.

கிராமத்தில் கனத்த மழை நீடிக்கின்றது. புயல், வெள்ளம் அபாய எச்சரிக்கை.
ஏரிகள், குளங்கள் அனைத்திலும் தண்ணீர் பொங்கி வழிகின்றன
.
மாலை 5 மணிக் கோடியக்கரை அருகே கரையை கடக்கும் என்று தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

ஞாயிறு, நவம்பர் 23, 2008

கிராமத்தில் இன்று கனத்த மழை


இன்று கிராமத்தில் கனத்த மழை பெய்துள்ளது. மிகவும் வரட்சியான இந்த தருணத்தில் இந்த மழை மிகவும் உதவியாக இருக்கும்.

செய்தி உதவி: முகில், காசாங்காடு

சிறந்த சுகாதார கிராமம், ஜனாதிபதி விருது


காசாங்காட்டிற்கு சிறந்த சுகாதார கிராமம், ஜனாதிபதி திருமதி. பிரதிபா தேவிசிங் பாட்டில் விருது.

காசாங்காடு கிராமம் சார்பாக ஊராட்சி மன்ற தலைவர் திரு.சிதம்பரம் அவர்களுக்கு வழங்கப்படும்

செய்தி உதவி: தீபக் குமார், சென்னை

சனி, நவம்பர் 15, 2008

தேசிய தகவல் மைய தொழில் நுட்ப இயக்குனர் பாராட்டு

தேசிய தகவல் மையம், தஞ்சாவூர் . இயக்குனர் திரு. இராயப்பன் காசாங்காடு இணையம் பற்றி பாராட்டு.

இதுவே அவர் மின்னஞ்சலின் தமிழாக்கம்,

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

அன்பின் அய்யா,

தங்கள் காசாங்காடு கிராம இணையதளம் உருவாக்குவதற்க்கான முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள். முதலில் அவை வடிவைமக்கப்பட்ட விதமும் மற்றும் கிராம சம்பந்தமான தகவல்களை தெரிந்து கொள்வதற்கும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இரண்டாவது அவை முற்றிலும் தமிழில் இருப்பதை பார்த்தவுடன் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

அய்யா, மேலும் தாங்கள் அரசு சம்பந்தமான தஞ்சாவூர் மாவட்ட இணைய தளங்களை உருவாக்குவதற்கு எங்களால் ஆன உதவியை தங்களுக்கு தருவதில் பெருமிதம் கொள்கிறோம். தங்களின் உதவி தஞ்சாவூர் மாவட்ட இணைய தளத்தை சிறந்த முறையில் உருவாக்குவதற்கு பெரிதும் துணை புரியும் என நம்புகிறோம்.

அய்யா, தங்களை தேசிய தகவல் மையம், மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம், தஞ்சாவூர் வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அவசியம் பார்வையிடவும். தங்களை இங்கு பார்ப்பதில் எங்களுக்கு பெரு மகிழ்ச்சி.

நன்றியுடன்,
அ. இராயப்பன்,
தொழில் நுட்ப இயக்குனர் மற்றும் மாவட்ட தகவல் அதிகாரி,
தேசிய தகவல் மையம், தஞ்சாவூர்


<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

காசாங்காடு கிராம மற்றும் இணையதள முன்னேற்றத்திற்கு உதவி புரியும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் எமது நன்றி.

வெள்ளி, நவம்பர் 14, 2008

காசாங்காடு பள்ளியில் புகையிலை எதிர்ப்பு பேரணி


அதை பற்றிய செய்தி இங்கே.


பட்டுக்கோட்டை அடுத்த காசாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் என்.எஸ்.எஸ். மாணவ மாணவிகள் புகையிலை எதிர்ப்பு பேரணி நடத்தினர்.
என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் வினோத்குமார் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் பெரியசாமி பேரணியை தொடங்கி வைத்தார். ஆசிரியர்கள் சீனிவாசன், செல்வகுமார், சரவணகுமார், தனலெட்சுமி, மைதிலி, பூங்கொடி, துரைராஜ், முருகேசன், ஞானபிரகாசி, லலிதா, வானதி, மாதவி உள்பட 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


செய்தி உதவி: மதுக்கூர் இணையம்