அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

புதன், டிசம்பர் 26, 2012

ஆதர் - தேசிய அடையாள அட்டைக்கான - உடலியலளவு தகவல்கள் பதிவு
தனி நபர் தேசிய அடையாள எண் (ஆதர் - தேசிய அடையாள அட்டை) பதிவு மற்றும் உடலியலளவு (biometrics) தகவல்களை இன்று செகரிக்கபடுகின்றது. எதிர்வரும் காலங்களில் அரசு பரிவர்த்தனைகள் அனைத்தும் இந்த எண் கொண்டு வழங்கப்படும்.

சேகரிக்கப்படும் உடலியலளவு தகவல்கள்:
முக அளவுகள்
கண்ணின் கருவிழி அளவுகள்
கைரேகை

இதனோடு தங்களின் நிழற்படமும் (இலக்கமுறை நிழற்படமாக) சேகரிக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு அரசாங்க இணைய தளத்தை அணுகவும்: http://uidai.gov.in/

கிராம மக்கள் தவறாது பங்கு கொண்டு தாங்கள் தேசிய அடையாள அட்டைக்கான தகவல்களை பதிந்து கொள்ளுங்கள்.

திங்கள், டிசம்பர் 24, 2012

பாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லூரி - கிராமத்தை நேரடி பார்வை


பாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லூரி - கிராமத்தை நேரடி பார்வை அவர்களின் பயண சுருக்கம்.

பயண சுருக்கம் பற்றி வரலாற்றில்: http://history.kasangadu.com/nerati-parvaiyalarkal/kalluri/pantiyan-carasvati-poriyiyal-kalluri

சிறந்த கலாச்சாரத்தை பற்றிய தெரிந்து கொள்ள வந்த கல்லூரி மாணவர்களுக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் இணைய குழுவின் மனமார்ந்த நன்றிகள். பல சிரமத்துடன் காண வந்த அனைவருக்கும் எமது நன்றிகள்.

வருகை புரிந்தவர்கள் நிர்வாகத்தை கேட்ட கேள்விகள், அவற்றிற்கு காசாங்காடு வாழ் குடிமகன்களின் பதில்கள் பற்றி விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்.

தாங்களின் வருகையால், மேலும் பெருமையை சேர்த்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

இது போன்ற கல்லூரிகள் மேலும் சிறந்த குடிமகன்களை உருவாக்க எமது பாராட்டுக்கள்.

ஞாயிறு, டிசம்பர் 09, 2012

தமிழ்நாடு அரசு மின்சார வாரிய கட்டணம் - இணையம் வழி செலுத்தும் வசதி


காசாங்காடு கிராம மக்கள் தாங்கள் மின்சார கட்டணத்தை இணைய மூலம் தற்போது கட்டலாம்.

பதிவு செய்ய முகவரி:

https://www.tnebnet.org/awp/userRegister

தேவையான தகவல்கள்:

Region: Trichy
Circle: Thanjavur
Division: Pattukottai O & M
Service Connection Number: மூன்று அல்லது நான்கு இலக்க எண்.

06-447-002-XXX

06 - திருச்சி , 447 - தஞ்சாவூர், 002 - பட்டுக்கோட்டை

ஏப்ரல் 2012 முதல்  அமலில் உள்ள மின்சார வாரியத்தின் கட்டண விபரங்கள்,

Table for ready reference (Approximately) :-
Units – Amount
0      – Rs.20
100 – Rs.120
150 – Rs.245
200 – Rs.320
250 – Rs.580
300 – Rs.730
350 – Rs.880
400 – Rs.1030
450 – Rs.1180
500 – Rs.1330
550 – Rs.2128
600 – Rs.2415
650 – Rs.2703
700 – Rs.2990
750 – Rs.3278
800 – Rs.3565
850 – Rs.3853
900 – Rs.4140
950 – Rs.4428
1000 – Rs.4715


ஞாயிறு, டிசம்பர் 02, 2012

மேலத்தெரு ஓயமாரிவீடு சின்னகண்ணு சாரதம் செல்வமணி இல்ல திருமண அழைப்பிதழ்திருமண தேதி மற்றும் நேரம்: டிசம்பர் 3, 2012 9:00 மணி முதல் 10:30 க்குள்
திருமணம் நடக்கும் இடம்: பூங்கொடி திருமண மண்டபம், மதுக்கூர்

மணமகன் பெயர்: செல்வன். செல்வராசு
மணமகன் வீட்டின் பெயர்: ஓயாமாரிவீடு, மேலத்தெரு
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. சின்னகண்ணு & திருமதி. சாரதம் செல்வமணி

மணமகள் பெயர்: செல்வி. கௌசல்யா
மணமகள் ஊரின் பெயர்: கருப்பூர்
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. ராமசந்திரன் & திருமதி. தனலட்சுமி

கருப்பூர் கிராமத்திலிருந்து காசாங்காடு கிராமத்திற்கு குடியேற இருக்கும் செல்வி. கௌசல்யா அவர்களை காசாங்காடு இணைய குழு வரவேற்கின்றது.

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

நடுத்தெரு பஞ்சாம்வீடு மூர்த்தி தேன்மொழி இல்ல திருமண அழைப்பிதழ்


திருமண தேதி மற்றும் நேரம்: டிசம்பர் 3, 2012 9:00 மணி முதல் 10:30 க்குள்
திருமணம் நடக்கும் இடம்:  VRT  திருமண மண்டபம், படைப்பைகாடு, மதுக்கூர்

மணமகள் பெயர்: செல்வி. பூங்கொடி
மணமகள் வீட்டின் பெயர்: பஞ்சாம்வீடு, நடுத்தெரு
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. மூர்த்தி & திருமதி. தேன்மொழி

மணமகன் பெயர்: செல்வன். ராஜா விஜயேந்திரன்
மணமகன் ஊரின் பெயர்: புலவஞ்சி
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. ராமசந்திரன் & திருமதி. விஜயலட்சுமி

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

ஞாயிறு, நவம்பர் 25, 2012

BSNL தரைவழி தொலைபேசி சேவை - கிடைத்த தகவல்கள்BSNL தரைவழி தொலைபேசி சேவை சில வீடுகளுக்கு சரி செய்யபட்டுள்ளது. இன்னும் முழுவதுமாக சரி செய்யப்படவில்லை.

Kasangadu  Exchange  -  இணைப்பகத்தில் இணைக்கப்பட்டுள்ள 32 இணைய சேவைகளின் நிலை பற்றிய தகவல் பற்றிய தகவல் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இணைய எண்ணிக்கை பற்றிய தகவல்கள்,
http://ccatn.gov.in/usofiles/usoschemes/bbtn.htm

சில இணைப்புகளில் தொலைபேசி  அழைப்புகள் ஏற்க மட்டுமே முடியும்.


பிலாவடிகொல்லை வைத்திவேளான்வீடு வைத்திலிங்கம் நல்லம்மாள் இல்ல திருமண அழைப்பிதழ்


மாப்பிள்ளை வீட்டார் அழைப்பிதழ்


பெண் வீட்டார் அழைப்பிதழ்

திருமண தேதி மற்றும் நேரம்: நவம்பர் 26, 2012 9:00 மணியளவில்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை

மணமகன் பெயர்: செல்வன். ரெங்கராஜ்
மணமகன் வீட்டின் / தெருவின் பெயர்: வைத்திவேளான்வீடு, பிலாவடிக்கொல்லை
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. வைத்திலிங்கம் & திருமதி. நல்லம்மாள் 

மணமகள் பெயர்: செல்வி. சர்மிளா
மணமகள் வீட்டின் பெயர்: பள்ளிகொடுத்தான் வீடு, மேலத்தெரு
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. வேதாச்சலம் & திருமதி. சிவமணி

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.செவ்வாய், நவம்பர் 20, 2012

காசாங்காடு கிராம - BSNL தொலைபேசி இணைப்பகம் பழுதடைந்துள்ளதுகாசாங்காடு கிராமத்திற்கும் மற்றும் அருகைமையில் உள்ள கிராமத்திற்கு BSNL நிறுவனம் வழங்கும் தரை வழி தொலைபேசி சேவை கடந்த மூன்று நாட்களுக்கு மேல் தற்காலிகமாக பழுதடைந்துள்ளது.

BSNL  நிறுவனம் இதை சரி செய்ய முயற்சிகள் எடுத்து வருகின்றது. விரைவில் தரை வழி தொலைபேசி சேவை வழக்காமான நிலைக்கு திரும்பும் என எதிர்பார்கபடுகிறது.

இதன் காரணமாக கிராமத்தில் உள்ள இணைய சேவைகளும் துண்டிக்க பட்டுள்ளது.

அலைபேசி சேவைகள் வழக்கம் போல் இயங்கி வருகின்றது.

சனி, நவம்பர் 17, 2012

பிலாவடிக்கொல்லை சதாசிவம் வளர்மதி இல்ல திருமண விழா


திருமண தேதி மற்றும் நேரம்: நவம்பர் 18, 2012 10:30 முதல் 12:00 க்குள்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை

மணமகன் பெயர்: செல்வன். அருண்குமார்
மணமகன் வீட்டின் / தெருவின் பெயர்: பிலாவடிக்கொல்லை 
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. சதாசிவம் & திருமதி. வளர்மதி

மணமகள் பெயர்: செல்வி. கல்யாணி
மணமகள் ஊரின் பெயர்: செங்கபடுத்தான்காடு
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. மீனாட்சிசுந்தரம் & திருமதி. யசோதா

செங்கபடுத்தான்காடு கிராமத்திலிருந்து காசாங்காடு கிராமத்திற்கு குடியேற இருக்கும் செல்வி. கல்யாணி அவர்களை காசாங்காடு இணைய குழு வரவேற்கின்றது.

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

வெள்ளி, நவம்பர் 16, 2012

மாபெரும் கபாடி போட்டி - 27 நவம்பர் 2012போட்டி நல்ல முறையில் நடக்க இணைய குழுவின் வாழ்த்துக்கள்.

காசாங்காடு கிராமத்தில் தமிழர் நல பேரியக்கத்தின் செயல்பாடுகள் பற்றி தகவல் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஏன் காசாங்காடு கிராமத்தின் பெயர் தவறாகா அச்சிடபட்டுள்ளது என்பது பற்றி பகிர்ந்து கொள்ளவும்?


திங்கள், நவம்பர் 12, 2012

அமர்களமான தீப ஒளி வாழ்த்துக்கள் !கிராம மக்களுக்கு இணைய குழுவின் இனிய தீப ஒளி வாழ்த்துக்கள் !

காசாங்காடு கிராமத்தில் தீபாவளிக்கு அவசியாமான பலகாரங்கள் மற்றும் உணவு:

செய்முறையை பகிர்ந்து கொண்ட காசாங்காடு தாய்மார்களுக்கு இணைய குழுவின் நன்றிகள்.

தேங்காய் சட்னி: http://samayal.kasangadu.com/catni-vakaikal/tenkay-catni

பண்டிகை நிழற்படங்கள், நிகழ்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி.

வெள்ளி, நவம்பர் 09, 2012

காசாங்காடு தெற்குதெரு கோவிந்தராஜ் விஜயா இல்ல திருமண அழைப்பிதழ்திருமண தேதி மற்றும் நேரம்: நவம்பர் 11, 2012 10:30 முதல் 12:00 க்குள்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை

மணமகள் பெயர்: செல்வி. இராஜப்ப்ரியா 
மணமகள் தெரு / வீட்டின் பெயர்:  தெற்குதெரு
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. கோவிந்தராஜ் & திருமதி. விஜயா

மணமகன் பெயர்: செல்வன். ரெங்கராஜன்
மணமகன் ஊரின் பெயர்: வாட்டாகுடி வடக்கு
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. பாஸ்கரன் & திருமதி. உசிதாமபாள்

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

புதன், அக்டோபர் 31, 2012

வானிலை முன்கணிப்பு


கிராமத்தில் கடந்த பத்து நாட்களாக பெய்து வரும் மழை / சிறுதூறல், செயற்கை கோள் ஆய்வின் படி இன்னும் இவை ஓர் / இரு நாட்களுக்கு நீடிக்கும்.

தெளிவான முன்கணிப்பை இந்த சுட்டியில் காணலாம்.

http://www.accuweather.com/en/in/national/satellite

கடந்த கால வெப்ப, ஈரப்பதம், காற்றழுத்தம் பற்றி நம் கிராம இணைய தளத்தில் காணலாம்:

http://weather.kasangadu.com/vanilai-viparankal/2012திங்கள், அக்டோபர் 29, 2012

கொசு உருவாகுவதை தடுப்பது பற்றிய விழிப்புணர்வு


கொசு உருவாகுவதை தடுப்பது பற்றிய ஊராட்சி மன்ற பலகை.


நன்றி.

செவ்வாய், அக்டோபர் 23, 2012

கிராமத்தில் கன மழைகிராமத்தில்  கன மழை.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்
காசாங்காடு கிராம மக்களுக்கு இணைய குழுவின் இனிய ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.

உலகெங்கும் கிராம மக்கள் கொண்டாடும் ஆயுத பூஜை நிகழ்ச்சியின் போது ஒப்பிவிக்கபடும் உலக நீதியின் சுட்டி இங்கே.

http://article.kasangadu.com/ulaka-niti---ayuta-pujai


புதன், அக்டோபர் 17, 2012

பிலாவடிகொல்லை அப்பு வீடு சுப்ரமணியம் ரெத்தினம் இல்ல திருமண விழாதிருமண தேதி மற்றும் நேரம்: அக்டோபர் 18, 2012 10:30 முதல் 12:00 க்குள்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை

மணமகன் பெயர்: செல்வன். கலைச்செல்வன்
மணமகன் வீட்டின் பெயர்: அப்பு வீடு, பிலாவடிகொல்லை
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. சுப்ரமணியம் & திருமதி. ரெத்தினம்

மணமகள் பெயர்: செல்வி. வைத்தீஸ்வரி 
மணமகள் ஊரின் பெயர்: நாட்டுச்சாலை 
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. கருணாநிதி & திருமதி. பிரேமா

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.


மக்கள் பிரதிநிதிகள் - கிராமத்தின் சேவைகள் - கிராம சபை ஒப்புதலுடன்
நமது ஊர் ஊராட்சி மன்ற வளாகத்தில் சுமார் 15 அடி அகலம் 165 அடி நீளத்தில், ஒன்றிய குழு உறுப்பினர் திரு கோ.வீரையன் அவர்கள் நிதியில் சுமார் ருபாய் 4 லட்சத்தில் அரசாங்க நிதியிலிருந்து அமைக்கப்பட்டது.
AUG 15th அன்று கொடி ஏற்றுவதற்கு புதிதாக கொடி கம்பம் கட்டப்பட்டது.., அதன் செலவு Rs 4,000, மற்றும் கல் வெட்டு செலவு Rs. 4,000, இவை இரண்டும் என்னுடைய செலவு.., மேடை ஊராட்சி நிதியில் கட்டப்பட்டது .., அதற்கு எனக்கு அனுமதி உள்ளது.., அதை நான் கிராம சபை கூட்டத்தில் தெரிவித்து ஒப்புதல் வாங்கி உள்ளேன்.

தகவல்களை பகிர்ந்து கொண்ட உள்ளங்களுக்கு நன்றி.

மேலும் பிரதிநிதிகள் கிராமத்திற்கு சேவைகள் செய்திருப்பின் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையற்ற தகவல்கள் நீக்கப்பட்டுள்ளது.

தகவல் உதவி:  (கிராம பிரதிநிதி. திரு சதாசிவம் சார்பில்)  திரு. முருகபதி பன்னீர்செல்வம், ஐக்கிய இராட்சியம் 

சனி, அக்டோபர் 13, 2012

தெற்குத்தெரு தியாகுவேளாண் வீடு கணபதி ஜெயமணி அவர்களுக்கு பேத்தி பிறந்துள்ளார்பிறப்பின் பால்: பெண்
பெயர்: செல்வி. செந்திரை
வீட்டின் பெயர்: தியாகுவேளாண் வீடு, தெற்குத்தெரு
பெற்றோர்களின் பெயர்: திரு. உமாபதி & திருமதி. சித்ரா
பிறந்த நாள்(தோராயமாக): அக்டோபர் 11, 2012
பிறந்த இடம்: சென்னை

தாயும் சேயும் நலம்.

இணையகுழு அக்குடும்பத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

ஞாயிறு, அக்டோபர் 07, 2012

கிராமத்தில் உதயமாகும் நிர்வாக கல்வெட்டுக்கள்


கிராமத்தில் உதயமாகும் நிர்வாக கல்வெட்டுக்கள். கிராம முன்னேற்றத்திற்கு கொடுக்கப்படும் இந்திய மக்களின் வரிப்பணம் முறையாக செலவிடப்படுகின்றதா? அதுவும் நூலகத்தின் சுவற்றில் இவை பதியப்பட்டுள்ளது.

குடிப்பதற்கு முறையாக தண்ணி இல்லை, மின்சாரம் இல்லை மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ங்கப்பா என்று பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தால் என்ன நடகின்றது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இவை கண்டிக்கபடவில்லை எனில் கிராமம் முழுவதும் கல்வெட்டுகளின் உதயங்கள் அதிகமாகிவிடும்.


இந்த கல்வெட்டில் பங்களிப்பவர்கள்: (இந்திய மக்களின் வரி பணத்தை கொண்டு)

மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள், மற்றும் பிரதிநிதி தேர்ந்தெடுத்த துணை தலைவர்கள்.
 1. திரு. மு. சதாசிவம் அவர்கள், ஊராட்சிமன்ற தலைவர்
 2. திரு. கோ. வீரையன், ஒன்றிய துணை பெருந்தலைவர்
 3. திரு. தி. மெயக்கப்பன் B.Sc மாவட்ட ஊராட்சி உறுப்பினர்
 4. திரு. கோ. இராஜராஜாசோழன் M.Sc ஊராட்சி மன்ற துணை தலைவர்
 5. ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்:
  1. திரு. அ. இராமச்சந்திரன்
  2. திரு. அ. நடராஜன்
  3. திருமதி. செந்தாமரை
  4. திரு. இரா. விவேகாநந்தன்
  5. திரு. மா. வீரமுத்து
  6. திருமதி. அ. கோகிலா
  7. திருமதி. வை. நாகஜோதி
  8. திரு. சி. அலெக்சாண்டர்
 6. திரு. அ.ஜெயரதி ஊராட்சி செயலாளர்
  1. இவருக்கு ஏன் திரு. என்ற மரியாதை சொல் பயன்படுத்தவில்லை என்பது தெரியவில்லை.
 7. மற்றும் ஊராட்சி பணியாளர்கள்வெகு விரைவில் காசாங்காடு கிராமத்தை பார்வியிட்ட பொறியியல் கல்லூரி கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.

தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

சனி, அக்டோபர் 06, 2012

கிராமத்தில் முருங்கைகாய் விளைச்சல் அமோகம் - வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் / தொழில்கள் அணுகவும்கிராமத்தில் முருங்கைகாய் உற்பத்தி விளைச்சல் அமோகம். உலகத்தில் எப்பகுதியில் வேண்டுமெனின் இணைய குழுவை தொடர்பு கொள்ளவும். அருகில் உள்ள சந்தைகளிலும் இதன் விலை மலிவு மற்றும் வாங்குவதற்கும் வாடிக்கையாளர்கள் இல்லை.

இதை சேமித்து பிறகு பயன்படுத்த வேறு வழிமுறைகள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உரம் போடாத மற்றும் கலப்பு இனம் இல்லாத இயற்கை முருங்கை இது.

தாவரவியல் பெயர்: Moringa oleifera
விக்கிபீடியா: http://en.wikipedia.org/wiki/Drumstick_(vegetable)


வியாழன், அக்டோபர் 04, 2012

தண்ணீர் உட்கட்டமைப்பிற்காக கிராமத்திற்கு 1973 முதல் 2010 வரை ரூ. 45 இலட்சம் செலவு

காசாங்காடு கிராமத்திற்கு - தண்ணீருக்காக 1973 முதல் 2010 வரை ரூ. 45 இலட்சம் செலவிடப்பட்டுள்ளது. விபரங்கள் பின்வருமாறு. இந்த தொகை தண்ணீர் உட்கட்டமைப்பு அமைப்பதற்கு மட்டுமே. பராமரிப்பிற்கு (மின்சாரம், உதிரி பாகங்கள், ...) மேலும் அரசாங்கத்தில் இருந்து வசூல் செய்யபடுகின்றது. அதன் விபரங்கள் இந்த பட்டியலில் இல்லை.

பின்வரும்,

மத்திய அரசாங்கத்தின் சுட்டியில்  விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

183MADUKKURKASANKADUKASANGADUHARIJAN COLONYTubewell Power Pump-Deep Tubewell (1995)Deep Tubewell1994-199523350002335000Gram Panchayat / PRI / Village Committee , PHED / WATER BOARD / Panchayti Raj & RD Dept
184MADUKKURKASANKADUKASANGADUHARIJAN COLONYMini Power Pump-Deep Tubewell (2002)Deep Tubewell2001-2002620000620000Gram Panchayat / PRI / Village Committee , PHED / WATER BOARD / Panchayti Raj & RD Dept
185MADUKKURKASANKADUKASANGADUKASAKADU NORTHNear Viilage PondDeep Tubewell2007-20085510002755002755000Gram Panchayat / PRI / Village Committee
186MADUKKURKASANKADUKASANGADUKASANKADUTubewell Power Pump-Deep Tubewell (1995)Deep Tubewell1994-199554800005480000Gram Panchayat / PRI / Village Committee , PHED / WATER BOARD / Panchayti Raj & RD Dept
187MADUKKURKASANKADUKASANGADUKASANKADUHand Pump-Deep Tubewell (1978)Deep Tubewell1977-1978200000200000Gram Panchayat / PRI / Village Committee , PHED / WATER BOARD / Panchayti Raj & RD Dept
188MADUKKURKASANKADUKASANGADUKASANKADUMini Power Pump-Deep Tubewell (2003)Deep Tubewell2002-2003600000600000Gram Panchayat / PRI / Village Committee , PHED / WATER BOARD / Panchayti Raj & RD Dept
189MADUKKURKASANKADUKASANGADUKASANKADUWSS to Govt HSS ito Kasankadu in Kasankadu Panchayat of Madukkur UnionDeep Tubewell2009-20105250002625002625000Gram Panchayat / PRI / Village Committee
190MADUKKURKASANKADUKASANGADUKASANKADU EASTWSS to -Kasankadu East-Kasankadu-MadukkurDeep Tubewell2009-20107000003500003500000Gram Panchayat / PRI / Village Committee
191MADUKKURKASANKADUKASANGADUKASANKADU EASTRej of Ele School WSS at Kasankadu EastDeep Tubewell2009-20102000010000100000Gram Panchayat / PRI / Village Committee
192MADUKKURKASANKADUKASANGADUKASANKADU SOUTHTubewell Power Pump-Deep Tubewell (1974)Deep Tubewell1973-1974450000450000Gram Panchayat / PRI / Village Committee , PHED / WATER BOARD / Panchayti Raj & RD Dept
193MADUKKURKASANKADUKASANGADUKASANKADU SOUTHTubewell Power Pump-Deep Tubewell (2003)Deep Tubewell2002-200352700005270000Gram Panchayat / PRI / Village Committee , PHED / WATER BOARD / Panchayti Raj & RD Dept
194MADUKKURKASANKADUKASANGADUTHERKKU AMBALAKARA STREETTubewell Power Pump-Deep Tubewell (1999)Deep Tubewell1998-199937700003770000Gram Panchayat / PRI / Village Committee , PHED / WATER BOARD / Panchayti Raj & RD Dept
195MADUKKURKASANKADUKASANGADUTHERKKU AMBALAKARA STREETHand Pump-Deep Tubewell (1992)Deep Tubewell1991-1992580000580000Gram Panchayat / PRI / Village Committee , PHED / WATER BOARD / Panchayti Raj & RD Dept
196MADUKKURKASANKADUKASANGADUTHETHADIKOLLAITubewell Power Pump-Filter Points (1999)Filter Points1998-199973400007340000Gram Panchayat / PRI / Village Committee , PHED / WATER BOARD / Panchayti Raj & RD Dep

இதை கொண்டு காசாங்காடு கிராம மக்கள் தண்ணீரின் தேவை நிவர்த்தி செய்து கொள்கிறார்களா?

இல்லை. தண்ணீர் 24 மணி நேரமும் கிடைப்பதில்லை. அதன் காரணத்தால் வசதி உள்ளவர்கள் தங்கள் மனையில் ஆழ்குழாய் கிணறு மூலம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.

5000 - 10000 எண்ணிக்கையில் வரை வாழும் கிராம மக்களுக்கு 45 லட்சம் ருபாய் செலவு. இன்னும் முறையாக 24 மணிநேரமும் குடிக்க தண்ணீர் கிடைத்தபாடில்லை.

எவ்வளவு சிறந்த நிர்வாக முறை ! வாழ்க ஜனநாயகம் !

செவ்வாய், அக்டோபர் 02, 2012

நிர்மல் புரஸ்கர் விருது - உண்மையான தகுதியா?


மத்திய அரசாங்கம் வழங்கிய நிர்மல் புரஸ்கர் விருது, நமது அருகைமையில் உள்ள கிராமங்களிலும் வழங்கபட்டுள்ளது. கருப்பூர், மதுக்கூர் வடக்கு, வேப்பங்குளம், வாட்டகுடி உக்கடை போன்ற கிராமங்களுக்கும் வழங்கபட்டுள்ளது.

 817 TAMIL NADU THANJAVUR Madukkur Kasankadu(Awarded in 2008)
 818 TAMIL NADU THANJAVUR Madukkur Karuppur(Awarded in 2008)
 819 TAMIL NADU THANJAVUR Madukkur Madukkur North(Awarded in 2008)
 820 TAMIL NADU THANJAVUR Madukkur Veppankulam(Awarded in 2008)
 821 TAMIL NADU THANJAVUR Madukkur Vattakudi Ukkadai(Awarded in 2008)

முழு பட்டியல் சுட்டி கீழே,

http://164.100.194.23:8080/NGP2010/Rep_AwardedPriYearWise1.jsp?stateinfo=29gp08

உண்மையில் இந்த விருதிற்கு தகுதி தானா என்பதை காசாங்காடு மக்களே முடிவு செய்ய வேண்டும்.

மேலும்,

எந்த தகுதியில் வழங்கபடுகிறது என்பது பற்றிய மத்திய அரசின் கோப்பு.

http://nirmalgrampuraskar.nic.in/Documents/PDF/GuidelinesEnglish2010.pdf

ஜனாதிபதி விருதும் எங்கள் கிராம சுகாதாரமும்.

http://news.kasangadu.com/2008/11/blog-post_23.html

http://news.kasangadu.com/2010/02/blog-post_15.html

இந்த விருதிற்கு நம் கிராமம் தகுதியா என்பதை நீங்களே கூற வேண்டும் !

நன்றி.

வியாழன், செப்டம்பர் 27, 2012

பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் மாணவர்கள் / மாணவிகள் / ஆசிரியர்கள் இன்று வந்தனர்பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் / மாணவிகள் / ஆசிரியர்கள் இன்று காசாங்காடு கிராமத்தை காண வந்தனர். சுமார் 60 நபர்கள் இன்று காசாங்காடு கிராமத்தையும் / கிராம சுகாதாரத்தையும் / கிராம நிர்வாகத்தையும் பற்றி அறிந்து கொள்ள வந்துள்ளனர்.

கல்லூரி பேருந்து மற்றும் Car மூலம் கிராமத்தை வந்தடைந்தனர்.

கிராமத்தில் உள்ள கோவில்கள், பள்ளிகள், மக்களின் வாழ்க்கை தரம், நிர்வாக உட்கட்டமைப்பு போன்றவற்றை பற்றி தெரிந்து கொண்டனர். இது பற்றிய விரிவான தகவல்கள் நேரடியாக பார்வையாளர்களிடம் இருந்து விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்.

இணையத்தின் மூலம் காசாங்காடு கிராமத்தை பற்றி தெரிந்து கொண்டு கிராமத்தை பார்க்க வந்த இந்திய குடிமகன்களுக்கு இணைய குழுவின் நன்றிகள். தாங்களின் வருகையின் மூலம் காசாங்காடு கிராமத்தை மற்றும் இணைய தளத்தை பெருமைபடுத்தியமைக்கு எமது பணிவான நன்றிகள்.

தாங்களின் பயணம் பயனுள்ள வகையில் அமைந்திருக்கும் என நம்புகிறோம்.

புதன், செப்டம்பர் 26, 2012

பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரியில்ரிந்து காசாங்காடு கிராமத்தை காண வருகை
சிவகங்கை மாவட்டத்திலிரிந்து (சுமார் 170 கிலோமீட்டர் தொலைவில்) பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல்  கல்லூரியில் படிக்கும் பொறியியல் மாணவர்கள் காசாங்காடு கிராமத்தை பற்றி தெரிந்து கொள்ள வருகை.

மேலும் இந்த கல்லூரி பற்றி விபரம்:

கல்லூரி இணைய சுட்டி: http://www.psyec.edu.in/
காசாங்காடு - கல்லூரி வழிப்பாதை தூரம்: http://goo.gl/maps/vvjLc

இதை ஏற்பாடு செய்த அனைத்து மாணவர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கும் எமது நன்றிகள்.

காசாங்காடு இணைய குழு மாணவர்களை அன்புடன் வரவேற்கின்றது.

திங்கள், செப்டம்பர் 24, 2012

குட்டச்சிவீடு தம்பிஅய்யன் ஜெயம் அவர்களுக்கு பேரன் பிறந்துள்ளார்


பிறப்பின் பால்: ஆண்
வீட்டின் பெயர்: குட்டச்சிவீடு
பெற்றோர்களின் பெயர்: திரு. அருள்குமார் & திருமதி. பார்கவி
பிறந்த நாள்(தோராயமாக):  செப்டம்பர் 24, 2012
பிறந்த இடம்: டாக்டர் மீனா நியூட்டன் மருத்துவமனை, பட்டுக்கோட்டை

பெற்றோர்களின் திருமண செய்தி: http://news.kasangadu.com/2011/07/blog-post.html

காசாங்காடு இணையக்குழு அக்குடும்பத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

Lions Club of Madras Sterling Avenue நடாத்திய இரெத்த தான முகாம்


Lions Club of Madras Sterling Avenue காசாங்காடு கிராமத்தில் நடாத்திய இரெத்த தான முகாம். (செப்டம்பர் 22, 2012)


இரெத்த தானம் வழங்கிய அனைத்து கிராமத்தினருக்கும், இணைய குழுவின் நன்றிகள்.
தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

சனி, செப்டம்பர் 22, 2012

சிங்கப்பூரில் காசாங்காடு கிராம மக்கள் கூட்டம்


வரும் சனிகிழமை செப்டம்பர் 22, 2012 இரவு 07:00 மணியளவில் சிங்கப்பூர் வாழ் காசாங்காடு கிராம மக்கள் கூட்டம் நடைபெறுகின்றது. இந்த கூட்டத்தில் இணையத்தில் வெளியிடக்கூடிய நோக்கம், செயல்பாடுகள், திட்டங்கள், எடுத்த முடிவுகள், நிகழ்படங்கள், நிழற்படங்கள்  இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
View Larger Map


நடக்கும் இடம்:
35A Norris Road,
Singapore 208277
தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

தலைகீழாக ஊடுகசிவு முறையில் குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் அரசு மேல்நிலை பள்ளியில் நிறுவபடுகின்றது
நோக்கம்:
பள்ளி குழந்தைகளுக்கு சிறந்த குடிநீர் வழங்க வேண்டும்.
( உண்மையில் இந்த சுத்திகரிப்பு முறை பள்ளி மாணவர்களுக்கு சிறந்த தண்ணீரை அளிக்குமா? அல்லது தண்ணீரில் உள்ள உடம்பிற்கு தேவையான கனிமங்களை நீக்கி விடுமா?
http://www.waterbenefitshealth.com/reverse-osmosis-water.html )

ஏன் இப்போது நிறுவபடுகின்றது?
இலவசமாக தொண்டு நிறுவனம் வழங்குகிறது.
காசாங்காடு கிராம மக்களிடையே Lions Club of Madras Sterling Avenue தொண்டு நிறுவன விளம்பரம்.


தேவையின் ஆய்வு:

உண்மையில் காசாங்காடு கிராம பள்ளி குழந்தைகள் அசுத்த தண்ணீர் குடிகின்றர்களா அல்லது இந்த தண்ணீர் சுத்திகரிப்பு சாதனம் தேவையா என்பதற்கான புள்ளி விபரம் இல்லை. இதற்கான ஆய்வையும் Lions Club of Madras Sterling Avenue நிறுவனம் அல்லது கிராம நிர்வாகம் செய்தார்களா என்பது பற்றி தெரிவில்லை. தகவல் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


பள்ளி குழந்தைகள் குடிக்கும் தண்ணீர் சுகாதாரம் இல்லாத நீர் என்றால் ஏன் இதற்க்கு முன் சிறந்த தண்ணீர் வழங்க வேண்டும் என்று கிராம நிர்வாகம் முயற்சி செய்யவில்லை?

நிகழ்ச்சி பற்றி:


கிராமத்தில் தலைகீழாக ஊடுகசிவு (Reverse Osmosis) முறையில் குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் அரசு மேல்நிலை பள்ளியில் நிறுவபடுகின்றது.

இந்த சாதனம் நிறுவும் தொகை ரூ. 1,50,000/- ஆகும். இந்த இயந்திரம் ஒரு மணிநேரத்திற்கு 500 லிட்டர் சுத்திகரிக்கும் திறன் கொண்டது.

இந்த உதவியை Lions Club of Madras Sterling Avenue அறகட்டளை காசாங்காடு கிராம அரசு மேல் நிலை பள்ளிக்காக செய்கின்றது.

நிகழ்ச்சி நிரல்: 22 செப்டம்பர் 2012

10:30 தேநீர்
11:00 தலைகீழாக ஊடுகசிவு சாதனம் திறப்பு விழா
13:00 மதிய உணவு
14:00 Lions Club பற்றி விவாதித்தல்
14:30 Lions Club பட்டுக்கோட்டை பிரிவுடன் சேர்ந்து கூட்டம்.

Lions Club of Madras Sterling Avenue President Subramaniyan invites you to install RO plant at Kasangadu Govt. Higher Secondary School.

LIONS CLUB OF STERLING AVENUE: (2012-2013)

1. Ln V. SUBRAMANIAN, B.E.(Hons), - PRESIDENT,
2. Ln P. ANANDARAJ, - SECRETARY,
3. Ln ASHOK KUMAR SABAT. - TREASURER


Chief Guests:

Lions Club TMJF CAC Rajagopal, Past District Governer. District: 324A2
Guest of Honor: TMJF Lion NS Shankar, Past District Governer, District: 324A1

Inaugration:

TMJF Lion Dr. S VishwaKumar MS Cardiac Surgeon Chennai

பதவி, பெருமை என்று எவ்வித எதிர்பார்ப்புகளையும் பாராமல் கிராமத்திற்கு உதவி செய்ய முன்வந்த அனைத்து உள்ளங்களுக்கும் இணைய குழுவின் நன்றிகள்.

வியாழன், செப்டம்பர் 20, 2012

வேதராசு மாசிலாமணி இல்ல சீமந்த (வலையல் காப்பு) சடங்கு விழா


தேதி மற்றும் நேரம்: 20, செப்டெம்பர் 2012 மதியம் 3 மணியளவில்
நடக்கும் இடம்: அண்ணாமலை  திருமண  மண்டபம், மதுக்கூர் 

கர்பிணியின் பெயர்: திருமதி. சாந்தி 
வீட்டின் பெயர்: செட்டியார் வீடு, நடுத்தெரு
கணவர் பெயர்:  திரு. ரெத்தினம்

மிக பிரமாண்டமான முறையில் நிகழ்ச்சி நல்ல முறையில் நடந்து முடிந்தது.

காசாங்காடு கிராமத்தில் இந்து மத சடங்குகள்:  http://history.kasangadu.com/intu-matam/catankukal
எதற்காக இந்த சடங்கு செய்யபடுகிறது: http://www.sanathanadharma.com/samskaras/prenatal2.htm

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு தாங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

புதன், செப்டம்பர் 19, 2012

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்


கிராம மக்களுக்கு இணைய குழுவின் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

புதன், செப்டம்பர் 12, 2012

Android கைபேசிகளுக்கு மேலும் தகவல்களை எளிதாக பகிர்ந்து கொள்ளும் வசதி


Android  கைபேசிகள் கொண்டு பின்வரும் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.

 1. நிழற்படம்
  1. நடக்கும் பார்க்கும் தகவல்களை எளிதாக நிழற்படம் எடுத்து அனுப்பும் வசதி.
 2. நிகழ்படம்
  1. நடக்கும் / பார்க்கும் தகவல்களை எளிதாக நிகழ்படம் எடுத்து அனுப்பும் வசதி.
   1. தனி மனிதர்களின் உரிமையை கருத்தில் கொள்ளவும்.
 3. ஒலிப்பதிவு
  1. தகவல்களை எளிதாக பேசி அல்லது நடக்கும் இடங்களில் பதிவு செய்து உடனே அனுப்பும் வசதி.
பின்வரும் சுட்டியில் இருந்து  செயலியினை தங்கள் கைபேசிகளில் மேலேற்றி கொள்ளலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.kasangadu.mobileapps

மேலும் கிராமத்திளிரிந்து எவ்வளவு தூரத்தில் இருக்கின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.கருத்துக்களை பகிர்ந்து கொண்ட மேம்படுத்த உதவிய உள்ளங்களுக்கு எமது நன்றிகள்.


திங்கள், செப்டம்பர் 10, 2012

கிராமத்தில் கன மழை


கிராமத்தில் கன மழை.


செவ்வாய், செப்டம்பர் 04, 2012

Kasangadu - கைதொலைபேசி Android App வெளியிடப்பட்டுள்ளது


காசாங்காடு கிராமத்தை பற்றி எளிதாக கைபேசிகளில் தெரிந்து கொள்ள Android மென்பொருள் கொண்ட கைபேசிகளுக்கு Kasangadu என்ற தலைப்பில் செயலி (Application) வெளியிடப்பட்டுள்ளது.

பின்வரும் சுட்டியில்ரிந்து தங்கள் Android கைபேசிகளில் மேம்படுத்தி கொள்ளலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.kasangadu.mobileapps

பின்வரும் திரை பிடிப்பு அதன் ஒரு சில பகுதிகளாகும்.

முதல் கட்டமாக சில எளிய பகுதிகளை கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.


தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.

திங்கள், செப்டம்பர் 03, 2012

659 உலக நகரங்களிளிரிந்து 1,25,605 பேர் காசாங்காடு கிராமத்தை பற்றி காண வருகை


காசாங்காடு கிராமத்தை பற்றி தெரிந்து கொள்ள லட்ச கணக்கான மக்கள் காண வருகை.

கிராம இணைய தள வரலாறு பக்கம்: http://history.kasangadu.com/inaiyatala-varalaru

புள்ளிவிபரங்கள் பின்வருமாறு. இந்த கணக்கு செப்டம்பர் 2 , 2008 முதல் இன்று வரை.

தளத்தை பார்த்த நபர்கள்: 1,25,605
வழங்கிய பக்கங்கள்: 3,60,638
உலக நகரங்கள்: 659
நாடுகள்: 77

அதிக நபர்கள் வந்த நகரங்கள்:


1. சென்னை
2. கோயம்புத்தூர்
3. பெங்களுரு
4. ஈரோடு
5. தஞ்சாவூர்

அதிக நபர்கள் வந்த ஐந்து நாடுகள்:


1. இந்தியா
2. சிங்கப்பூர்
3. ஐக்கிய அமெரிக்கா
4. ஐக்கிய அரபு நாடுகள்
5. ஸ்ரீ லங்கா

காசாங்காடு கிராமத்தை பற்றி தெரிந்து கொள்ள வந்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.


ஞாயிறு, செப்டம்பர் 02, 2012

காசாங்காடு இணைய தளம் - ஐந்தாம் ஆண்டு தொடக்கம்


காசாங்காடு இணைய தளம் இன்று அதன் ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது.

எவ்வித எதிர்பார்ப்புமின்றி தகவல்களை பகிர்ந்து கொண்ட அனைத்து பொது மக்களுக்கும், காசாங்காடு கிராமத்தின் பெருமையை உயர்த்தும் வகையில் உலகின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் அனைத்து காசாங்காடு குடிமகன்களுக்கும், தொழில்நுட்ப திறமையுடன் எவ்வித தகவல் தொழில்நுட்பங்களையும் காசாங்காடு கிராமத்திற்கு கொண்டு வரும் இணைய குழுவிற்கும் எமது பாராட்டுக்கள்.

சட்டரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வுகளுக்கு தெளிவாகவும், முறையாகவும் தகவல்களை பதிய உதவிய அனைத்து சட்ட வல்லுனர்களுக்கும் எனது நன்றிகள்.

கிராமத்தின் வாழ்க்கை தரம் மற்றும் குடிமகன்களின் சுதந்திரம் மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்.

தொடங்கிய நாள் முதல் இன்றும் காசாங்காடு கிராமத்தின் முழுமையான, நேர்மையான, உண்மையான  தகவல்களை பெற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதை உறுதிபடுத்த உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் எமது நன்றிகள்.

இணைய புள்ளிவிபரங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்.

தொடர்ந்து அனைவரின் ஆதரவும், ஊக்கமும், கருத்துகளும் காசாங்காடு இணைய தளத்தை மேம்படுத்த உதவும்.

கண்ணையன்

செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012

கருப்பூர் கிராமம் அதன் இணைய தளத்தை உருவாக்கியுள்ளது


http://www.karuppur.com/

முசுகுந்த சமுதாயத்தில் ஒன்றான கருப்பூர் கிராமம் அதன் இணைய தளத்தை உருவாக்கியுள்ளது.
கருப்பூர் கிராமத்தை பற்றி மேலும் தெளிவாக தெரிந்து கொள்ள இந்த தளம் உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.

இந்த கிராம தளம் மேன் மேலும் தகவல்களை பதிந்திட இணைய குழுவின் வாழ்த்துக்கள்.

காசாங்காடு கிராம இணையதளத்தில் இதன் சுட்டி பதியப்பட்டுள்ளது.

http://www.kasangadu.com/mucukunta-camutayam

இணைய இயக்குனர்:

ANBALAGAN VENKATACHALAM
32a
MEADVALE ROAD
CROYDON, LONDON CR0 6JW
United Kingdom

வரலாறு:

இதற்க்கு முன் 8 Jan 2009 வியாழக்கிழமை, http://www.thekaruppur.com/  என்ற இணையதள முகவரியுடன் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


https://groups.google.com/forum/?fromgroups=#!topic/musugundan/aiJfilv6uRk


சனி, ஆகஸ்ட் 25, 2012

மகஹா மண்டல அபிஷேகம் (48 நாட்கள்)அய்யனார் கோவில் மகஹா மண்டல அபிஷேகம் (48 நாட்கள்) 24 ஆகஸ்ட் 2012 முடிவடைந்துள்ளது.
ஒவ்வொரு நாளும் அபிஷேகம் நடத்த ஒவ்வொரு குடும்பமும் பங்கு கொண்டது சிறப்புமிக்கது.

பங்கு கொண்டு சிறப்பளித்த அனைத்து குடும்பங்களுக்கும் / பக்தகோடிகளுக்கும் இணைய குழுவின் நன்றிகள்.

வியாழன், ஆகஸ்ட் 16, 2012

சுதந்திர தின விழா - அரசு மேல்நிலை பள்ளியில்


காசாங்காடு அரசு மேல் நிலை பள்ளியில், பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள் மற்றும் கிராமத்தினர்கள் பங்கேற்று சிறப்பித்தினர்.


நிழற்படங்களை பகிர்ந்து கொண்ட உள்ளங்களுக்கு எமது நன்றி.


புதன், ஆகஸ்ட் 15, 2012

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

கிராம மக்களுக்கு இணைய குழுவின் சுதந்திர தின வாழ்த்துக்கள்


வியாழன், ஆகஸ்ட் 09, 2012

மாரியம்மன் கோவிலில் லட்ச அர்ச்சனை


நாளை காலை பத்து மணியளவில் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் லட்ச அர்ச்சனை. பக்த கோடிகள் அனைவரும் பங்கு கொண்டு பயன்பெற வேண்டுகிறோம்.

கிராமத்தில் கன மழை


கிராமத்தில் நேற்று இரவு இரண்டு மணி நேரம் கன மழை.


வெள்ளி, ஆகஸ்ட் 03, 2012

அருள்மிகு முனீஸ்வரர் சுவாமி திருக்கோவில் - ஆடி பூசை அழைப்பிதழ்

அருள்மிகு முனீஸ்வரர் சுவாமி திருக்கோவில்
ஆடி பூசை அழைப்பிதழ்

நாள் மற்றும் நேரம்: ஆகஸ்ட் 8, 2012 9:15 முதல் 10:30 வரை
12:00 மணியளவில் சிறப்பு அன்னதானம் நடைபெறும்

இங்ஙனம்,
நிர்வாகிகள் மற்றும் கிராமவாசிகள்திங்கள், ஜூலை 30, 2012

முனியன் கோவில் விழா - வரி வசூல் ஆரம்பமாகிறது


முனியன் கோவில் ஆடி மாத விழாவிற்கு கிராமத்தில் வரி வசூல் ஆரம்பமாகிறது.

எந்த ஒரு அறக்கட்டளையின் பெயரில் இந்த வசூல் செய்யப்படவில்லை.
அளிக்கும் நன்கொடைக்கு ரசீது / வரி விலக்கு எதுவும் இல்லை.

தோராயமாக வீட்டிற்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை வசூல் செய்யபடுகிறது.

இந்த நன்கொடை எந்த ஒரு குடும்பமும் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தங்கள் வறுமையுடன் அல்லது வசதியுடன் இருப்பினும் தங்களை வற்புறுத்தி கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தனைக்கு ஏற்படுத்தினால் தகவல்களை பகிர்ந்து கொள்ளவும்.

இது பற்றி மேலும் விபரங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

செவ்வாய், ஜூலை 17, 2012

வெண்டாகோட்டை கிராமம் - இணையதளம் துவக்கம்


நமது தென்மேற்கு திசையில் இருக்கும் வெண்டாகோட்டை கிராமம் அதன் இணைய தளத்தை உருவாக்கியுள்ளது.

http://www.vendakottai.com/

ஐக்கிய இராட்சியத்தில் வாழும் திரு. சின்னதுரை அய்யாதுரை என்பவர் இந்த தளத்தினை பதிவு செய்துள்ளார்.  03 சூலை 2012 அன்று பதிவு செய்யபட்டுள்ளது.

காசாங்காடு கிராம இணையத்தில் முசுகுந்த சமுதாய பக்கத்தில் இந்த சுட்டி பதிவுசெய்யபட்டுளது.

http://www.kasangadu.com/mucukunta-camutayam

மேலும் சிறந்த தகவலுடன் இந்த தளத்தை மேம்படுத்த வாழ்த்துக்கள்.

வெள்ளி, ஜூலை 13, 2012

மேலவீடு நடுத்தெரு திருஞானம் வேலம்பாள் இல்ல திருமணம்திருமண தேதி மற்றும் நேரம்: சூலை 15, 2012 ஞாயிற்றுக்கிழமை 11:00 மணியளவில்
திருமணம் நடக்கும் இடம்: பட்டுக்கோட்டை கோமளவிலாஸ் ராஜூ திருமண மஹால், பட்டுக்கோட்டை

மணமகன் பெயர்: செல்வன். மெய்யநாதன்
மணமகன் வீட்டின் பெயர்: மேலவீடு, நடுத்தெரு, காசாங்காடு
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. திருஞானம் & திருமதி. வேலம்பாள்
மணமகன் தொழில் விபரம்: B.Sc 

மணமகள் பெயர்: செல்வி. திலீபா
மணமகள் ஊரின் பெயர்: ஆத்திக்கோட்டை 
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. சாம்பசிவம் & திருமதி. வளர்மதி
மணமகள் தொழில் விபரம்: M.Sc., M.Phil, Phd., 

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

ஞாயிறு, ஜூலை 08, 2012

அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நேரடி ஒளிபரப்புFree live streaming by Ustream

இந்த நேரடி  ஒளிபரப்பை வழங்குவது நாட்டுச்சாலை Cable நிறுவனம்.

இந்திய நேரப்படி காலை 10:00 மணி முதல் வழங்கப்படும் என்று பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

(iOS) iPhone மற்றும்  Android கொண்டு இயங்கும் கருவிகளில் Ustream என்ற மென்பொருள் மூலம் இந்த நேரடி ஒளிபரப்பை வேறு எவ்விதத கருவிகள் இல்லாமல் வழங்க முடியும்.

கம்பியில்லா இணைய தகவல் மேலேற்றும் வசதி குறைவாக இருப்பாதால் இந்த ஒளிபரப்பு தெளிவாக அமையாமல் இருபதற்கு வாய்ப்புகள் உண்டு.

தனிநபர் இது போன்ற ஒளிபரப்பை வெளியிட்டால் அதன் சுட்டிகளை இணையகுழுவிடம் பகிர்ந்து கொள்ளவும்.

தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

வெள்ளி, ஜூலை 06, 2012

நடுத்தெரு தாண்டாம்வீடு ரெங்கசாமி முத்துலெட்சுமி இல்ல திருமணம்திருமண தேதி மற்றும் நேரம்: சூலை 8, 2012 ஞாயிற்றுக்கிழமை 10:00 முதல் 11:30 க்குள்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை 

மணமகன் பெயர்: செல்வன். தினேஷ் என்கிற செந்தில்முருகன்
மணமகன் வீட்டின் பெயர்: தாண்டாம்வீடு, நடுத்தெரு, காசாங்காடு
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. ரெங்கசாமி & திருமதி. முத்துலெட்சுமி
மணமகன் தொழில் விபரம்: A.M.E

மணமகள் பெயர்: செல்வி. சரிதா
மணமகள் ஊரின் பெயர்: மூத்தாக்குறிச்சி 
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. திருச்சிற்றம்பலம் & திருமதி. ஜெயலெட்சுமி
மணமகள் தொழில் விபரம்: M.Sc., B.Ed.,

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.


செவ்வாய், ஜூலை 03, 2012

பிலாவடிகொல்லை அம்மிவீடு சொக்கலிங்கம் சந்திரா இல்ல திருமணம்


திருமண தேதி மற்றும் நேரம்: சூலை 7, 2012 வியாழகிழமை 10:30 முதல் 12:00 மணி வரை
திருமணம் நடக்கும் இடம்: மணமகன் இல்லம், பிலாவடிகொல்லை, காசாங்காடு

மணமகன் பெயர்: செல்வன். பிரவீன் ராஜ்
மணமகன் வீட்டின் பெயர்: அம்மிவீடுபிலாவடிகொல்லை, காசாங்காடு
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. சொக்கலிங்கம் & திருமதி. சந்திரா
மணமகன் தொழில் விபரம்: B.E IBM (International Business Management)

மணமகள் பெயர்: செல்வி. கற்பகம்
மணமகள் ஊரின் பெயர்: ஆத்திக்கோட்டை 
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. வீராசாமி & திருமதி. முல்லைகன்னு
மணமகள் தொழில் விபரம்: B.E MBA

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

அருள்மிகு ஸ்ரீ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ பிரமநாத அய்யனார் மற்றும் பரிவார மூர்த்திகள் ஆலய மஹா கும்பாபிஷேக விழா


அருள்மிகு ஸ்ரீ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ பிரமநாத அய்யனார் மற்றும் பரிவார மூர்த்திகள் ஆலய மஹா கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

காசாங்காடு மேலத்தெரு மற்றும் கிராமவாசிகள்