அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

வியாழன், ஜனவரி 26, 2012

குடியரசு தின வாழ்த்துக்கள்


கிராம மக்களுக்கு இணைய குழுவின் குடியரசு தின வாழ்த்துக்கள்.

சனி, ஜனவரி 21, 2012

(PAN) - நிரந்தர கணக்கு எண் பதிவு செய்து கொள்ளுங்கள்


வருமான வரி துறையிடம், நிரந்தர கணக்கு எண்ணுக்காக (PAN Card) பதிவு  செய்து கொள்ளுங்கள். 

இவை தாங்களின் வருமானத்தை அரசாங்கத்திடம் தெரிவிப்பது மட்டுமல்லாமல், வங்கி கணக்குகள், நிரந்தர வைப்பு தொகையில் கிடைக்கும் வட்டிகளில் வங்கிகள் அரசாங்கத்திடம் செலுத்தும் வரியையும் எளிதாக திரும்ப பெற உதவும்.

வருமான வரியை இணையத்தில் பதிவு செய்ய,

https://incometaxindiaefiling.gov.in/portal/index.jsp

நிரந்தர கணக்கு எண் இணையத்தின் மூலம் பதிவு செய்ய:

https://tin.tin.nsdl.com/pan/index.html
http://www.utitsl.co.in/utitsl/uti/newapp/newpanapplication.jsp

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எவ்வாறு பதிவு செய்வது பற்றி, (NRI PAN)

http://www.utitsl.co.in/pan/pan_nri.html

பகிர்ந்தளிர்ப்பிக்கு நன்றி.

புதன், ஜனவரி 18, 2012

காசாங்காடு கிராமத்தில் நடந்த காணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள்


காசாங்காடு கிராமத்தில் நடந்த காணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள்
  1. காசாங்காடு ஊராட்சி
  2. முத்தமிழ் மன்றம்
  3. கோயிலடி நண்பர்கள்

விடுபட்ட தகவல்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள். நடந்த விளையாட்டு போட்டிகளின் நிழற்படங்கள் / நிகழ்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சிறார் முதல் முதியர்வர்கள் வரை பகிர்ந்து கொண்டு சிறபித்தமைக்கு நன்றி.

காசாங்காடு கிராமத்தில் முத்தமிழ் மன்றம் பற்றிய பொங்கல் நிகழ்ச்சிகள் பற்றிய தினமணி நாழிதளில் வந்த செய்தி இங்கே.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கல்வி நிறுவனங்கள், சேவை அமைப்புகள் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா

First Published : 19 Jan 2011 12:54:56 PM IST

தஞ்சாவூர், ஜன. 18: தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் உள்ள பள்ளிகள், அமைப்புகள் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
 ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி: தஞ்சாவூர் மேலவீதி ஓரியண்டல் பள்ளியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு விழாவுக்கு பள்ளிச் செயலர் எஸ். குஞ்சிதபாதம் தலைமை வகித்தார்.
 தலைமையாசிரியர் த.சா. கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவியர் சர்க்கரைப் பொங்கலிட்டுக் கொண்டாடினர்.
 ஏன்சியன் சிட்டி லயன்ஸ் சங்கம்: தஞ்சை ஏன்சியன் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் மகர்நோம்புச் சாவடி விநாயகா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு, லயன்ஸ் சங்க துணைத் தலைவர் வி.எம். செல்வராஜ் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டத் தலைவர் கும்பா. ஜெ. குப்புராமன், நிர்வாகிகள் பி. அருள்செல்வம், பி. கெüரிராஜன், ஆர். பரந்தாமன், ஜி. பாஸகிருஷ்ணன் பங்கேற்றனர்.
 நலன் வளர்ச்சிக் கழகம்: தஞ்சை மோத்திரப்பச்சாவடி நலன் வளர்ச்சிக் கழகம் சார்பில் 42-ஆம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, விளையாட்டு, இசைப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கழகத்தின் தலைவர் என். அறிவழகன், செயலர் ஏ. வடிவேல், பொருளர் என். கருணாநிதி உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
 மாவட்ட மைய நூலகம்: தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகம் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட நூலகர் கி. நாகராஜன், கண்காணிப்பாளர் சே. சுப்புலட்சுமி, நூலகர் சு. சங்கர், கணக்கர் க. கதிரேசன், நூலக அலுவலர்கள் ஏ. கிருஷ்ணமூர்த்தி, இரா. சுந்தரராஜன், பா. ஸ்டாலின், த. காமராஜ், மு. சுந்தரி, வே. காஞ்சனா,ந. ஸ்ரீவள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


பட்டுக்கோட்டை காசாங்காட்டில்:


 மதுக்கூர் ஒன்றியம், காசாங்காடு கிராமத்தில் முத்தமிழ் மன்றம் சார்பில் 10-ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.


 இதையொட்டி, விளையாட்டுப் போட்டி, பொது அறிவுப் போட்டி, கவிதைப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. காசாங்காடு முத்தமிழ் மன்ற நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

திங்கள், ஜனவரி 16, 2012

முத்தமிழ் மன்றம் நடத்தும் 11 ஆம் ஆண்டு தைதிருநாள் விளையாட்டு விழா


முத்தமிழ் மன்றம் நடத்தும் 11 ஆம் ஆண்டு தைதிருநாள் விளையாட்டு விழா இனிதே தொடங்கியது. பொது மக்கள் அனைவரும் பங்குகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

விரிவான நிகழ்ச்சி தொகுப்பு விபரம்: http://news.kasangadu.com/2012/01/11.html

ஞாயிறு, ஜனவரி 15, 2012

காசாங்காடு கிராமத்தில் பொங்கல் திருநாள் - நிழற்படம்


காசாங்காடு கிராமத்தில் பொங்கல் திருநாள் - நிழற்படம்





மன்னங்காடு இணைய தளத்தில் பொங்கல் பற்றிய தகவல்கள்: http://www.mannankadu.org/pongal
(ஆசிரியர்: முனைவர். நவநீதம் துரைசாமி)

பகிர்ந்து கொண்ட உள்ளங்களுக்கு எமது நன்றிகள்.


இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் !




சமையல் சுட்டிகள்:

சர்க்கரை பொங்கல்: http://samayal.kasangadu.com/tai-ponkal/carkkarai-ponkal
வெண் பொங்கல்: http://samayal.kasangadu.com/tai-ponkal/ven-ponkal
கோட்டுக்கறி குழம்பு: http://samayal.kasangadu.com/tai-ponkal/kottu-kari-kulampu

கிராம மக்களுக்கு இணைய குழுவின் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் !

சனி, ஜனவரி 14, 2012

கோயிலடி நண்பர்கள் - விளையாட்டு போட்டி - காணும் பொங்கல்




போகி பண்டிகை வாழ்த்துக்கள்



கிராம மக்களுக்கு இணைய குழுவின் போகி பண்டிகை வாழ்த்துக்கள்.


செவ்வாய், ஜனவரி 10, 2012

சிங்கப்பூர் - சிறந்த முதல் நான்கு இந்திய மாணவர்களில் - வருண் மூர்த்தி நெடுஞ்செழியன் அவர்கள் தேர்வு


சிங்கப்பூர் - சிறந்த முதல் நான்கு இந்திய மாணவர்களில் - காசாங்காடு கிராமத்தை சேர்ந்த செல்வன். வருண் மூர்த்தி நெடுஞ்செழியன் அவர்கள் தேர்வு. (நடுத்தெரு, ஆட்டுகாரன்வீடு)

ஒன்பது பாடங்களில் இவர் A1 தரவரிசையில் தேர்வு பெற்றுள்ளார்.

http://news.asiaone.com/News/Latest%2BNews/Singapore/Story/A1Story20120109-320786/2.html 


இவர் மேலும் கல்வியில் சிறப்புற இணைய குழுவின் வாழ்த்துக்கள்.

விடுபட்ட தகவல்கள் / பிழைகள் இருப்பினும் திருத்தி பகிர்ந்து கொள்ளவும்.

திங்கள், ஜனவரி 09, 2012

சொந்தங்களுக்கு காணொளி மூலம் பொங்கல் வாழ்த்து சொல்ல அறிய வாய்ப்பு.


சொந்தங்களுக்கு காணொளி மூலம் பொங்கல் வாழ்த்து சொல்ல அறிய வாய்ப்பு.

தாங்கள் காணொளியை (30-60 வினாடிக்குள்) பதிவு செய்து  kasangaduooratchi@yahoo.in  என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

அனுப்பப்படும் காணொளி காணும் பொங்கல் அன்று திரையிடப்படும்.

அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 14 சனவரி 2012 (இந்திய நேரப்படி)


HIV நோயின் பற்றிய கிராம விழிப்புணர்வு நிகழ்ச்சி


HIV நோயின் பற்றிய கிராம விழிப்புணர்வு நிகழ்ச்சி


நிகழ்ச்சி பற்றிய மேலும் விபரங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தகவல் உதவி: காசாங்காடு ஊராட்சி

காசாங்காடு கிராம தலைவருடன் துப்புரவு பணியில் ஈடுபட்டிருக்கும் கிராம மக்கள்


காசாங்காடு கிராம தலைவருடன் துப்புரவு பணியில் ஈடுபட்டிருக்கும் கிராம மக்கள்


தகவல் உதவி: காசாங்காடு ஊராட்சி


சனி, ஜனவரி 07, 2012

முத்தமிழ் மன்றம் நடத்தும் 11 ஆம் ஆண்டு தைதிருநாள் விளையாட்டு விழா


முத்தமிழ் மன்றம் நடத்தும் 11 ஆம் ஆண்டு தைதிருநாள் விளையாட்டு விழா வரும் 16 , 17 நாட்களில் நடைபெற உள்ளது அனைவரும் விழாவில் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

எப்பொழுதும் உங்களுடன் இணைந்து இருக்கும்
முத்தமிழ் மன்றம் ....,

(தெளிவாக தெரிய படத்தின் மீது சொடுக்கவும்)




ஞாயிறு, ஜனவரி 01, 2012

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்


கிராம மக்களுக்கு இணைய குழுவின் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.