அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

செவ்வாய், ஏப்ரல் 27, 2010

குடிநீர் இணைப்பு பிரச்சனை - கிராம நிர்வாகம் அநாகரிக நடவடிக்கை

சமீபத்தில் மதுக்கூர் ஊராட்சிய ஒன்றியத்தின் காசாங்காடு ஊராட்சி அறிவிப்பை பார்த்தோம்.


>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தங்களுடைய தனி நபர் குடிநீர் இணைப்பில் சட்டத்திற்கு புறம்பாக நீரினை மோட்டார் வைத்து உறுஞ்சுவது, ஹோஸ் பைப் வைத்து மரங்களுக்கு நீர் பாய்ச்சுவது, தோட்டம் வளர்ப்பது போன்ற அநாகரிக செயல்களில் ஈடுபட்டால் உங்களது இணைப்பு முன்னறிவிப்பின்றி துண்டிக்கப்படும் என் இதன் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.

ஏனெனில் வருகின்ற கோடை காலத்தில் குடிநீர் பற்றாகுறை, அதிகரிக்கின்ற சூழ்நிலை இருப்பதால், இந்த அறிவிப்பு கிடைத்த மூன்று நாட்களில் மேற்குறிய செயல்களை நிறுத்த வேண்டும் என் கேட்டு கொள்கிறோம்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


அறிவிப்பை கண்டதும் பெருமைபட்டேன். எனது கிராமத்தில் இவ்வாறு முறைப்படி நடவடிக்கை எடுக்கபடுகிறதே என்று.


அறிவித்தது ஒன்று, செய்வது ஒன்று.
அநாகரிக செயல்களில் ஈடுபட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று நாகரிகமாக கூறிவிட்டு அநாகரிக செயல்களில் ஈடுபடுகிறது காசாங்காடு கிராம ஊராட்சி நிர்வாகம்.


இன்று கிராமத்தில் மோட்டார் வைத்து உறுஞ்சும் இணைப்புகளில் உள்ள மொடோர்களை கிராம மக்கள் பிரதிநிதி திரு. சிதம்பரம் மற்றும் கிராமத்திலிருந்து அவரது தோழர்கள் அல்லது வேலை செய்யும் வேலை ஆட்கள் நேரில் சென்று மொட்டோர்களை உரிமையாளர்களின் அனுமதி இல்லமால் அவர்கள் வசிக்கும் பகுதி புகுந்து மொட்டோர்களை   பறிமுதல் செய்துள்ளார். குழாய்களை அறுத்து விட்டுள்ளனர்.


யார் இவருக்கோ அல்லது இவ்வாறு செய்பவர்களுக்கு இந்த உரிமைகளை கொடுத்தது? குடிநீர் இணைப்பை தவறாக பயன்படுத்தினால் குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டியது தானே நியாயம்? மேலும் இவ்வாறு செய்வதால் கிராமத்திற்கு ஏற்பட்ட இழப்பினை அல்லது சேதத்தை முறைப்படி அபராதம் பெற வேண்டியது தானே.


கோவிலில் ஆடுகளை பலியிட்ட ஒருவருக்கு அபராதம் வாங்க தெரிந்த கிராமத்திற்கு, கிராம குடிநீர் இணைப்பு தவறாக பயன்படுத்தியவர்களுக்கு வாங்க முடியவில்லையா? இதற்காக ஊர் கூட்டம்  போடவில்லையா? அல்லது பஞ்சாயத்திற்கு யாரும் வரவில்லையா?


தண்ணீர் குழாய் இணைப்பு கொடுத்துவிட்டதால் மக்களின் சொத்துக்களில் எப்படி வேண்டுமானாலும் சேதம் விளைவிக்கலாமா?


மக்கள் வசிக்கும் பகுதி புகுந்து, சட்டத்தை பாதுகாக்க வேண்டிய ஒருவர் இப்படி அநாகரீக செயல்களில் ஈடுபட்டால் மக்கள் என்ன செய்வது?


ஒரு மக்கள் பிரதிநிதியின் அநாகரிக செயல்களால் பல இந்திய குடிமகனின் அமைதியான வாழ்வு காசாங்காடு கிராமத்தில் சீற்குலைகப்படுகின்றது.


அடுத்த முறை ஓட்டு கேட்டு இந்த மக்கள் வசிக்கும் பகுதிக்கு வருவாரா? அல்லது இதோடு தம்மால் முடிந்தவரை சட்டத்தை தன் கையில் எடுத்து கொண்டு மேலும் மக்களை துன்பத்தில் ஈடுபடுத்துவாரா?


திரு. சிதம்பரம் அவர்கள் அரசாங்கத்தால் முன்பே பதவி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குருபிடத்தக்கது. அதை பற்றிய தகவல் இங்கே.


http://news.kasangadu.com/2008/09/blog-post_7664.html


மக்கள் தான் இதற்கான பதிலை கிராம நிர்வாகத்திற்கும், ஒன்றியத்திற்கும் கூற வேண்டும்.


தகவல் உதவி: வருத்தத்துடன் காசாங்காடு கிராம குடிமகன்

திங்கள், ஏப்ரல் 26, 2010

சித்திரை பௌர்ணமி சுப்பிரமணியர் கோவில் திருவிழா

சித்திரை பௌர்ணமி சுப்பிரமணியர் கோவில் திருவிழாநிகழும் விக்ருதி, திருவள்ளுவர் ஆண்டு 2041, சித்திரை மாதம் 5 ஆம் நாள் பௌர்ணமி அன்று சுப்பிரமணியர் கோவில் திருவிழா நடைபெற உள்ளது.

பக்தகோடிகளும் கிராம மக்களும் திருவிழாவில் கலந்து கொண்டு  சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

குறிப்பு: இத்தகவல் கிராமத்தின் தண்டோரா முறையில் நாட்டண்மைகள்  கிராம மக்களுக்கு தெரிவித்ததை கேட்டு இணைய தளத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

தகவல்: திரு. பழனிவேலு, காசாங்காடு

சனி, ஏப்ரல் 17, 2010

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (கிழக்கு) ஆண்டு விழா


கிராமத்தில் கடந்த 03 ஏப்ரல் 2010 அன்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (கிழக்கு) ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அது சமயம் பள்ளி வகுப்புகளில் சிறப்பு இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

அந்நிகழ்ச்சியில் "சமூகநீதிகாத்த" தலைவர் மானமிகு.கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று மாணவர்களுக்கு பரிசு வழங்கியதோடு மாணவர்கள் எப்படியெல்லாம் எதிர்காலத்தில் இருக்கவேண்டும் கல்வி கற்று இச்சமுதாயத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

விழா ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர்,பள்ளி ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி பெற்றோர்- ஆசிரியர் கழகத்தின் பொறுப்பாளர்கள் முன்னின்று சிறப்பாக நடத்தி வைத்தார்கள். விழாவில் மாணவர்களின் பெற்றோர்,கிராமப்பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் திறழாக கலந்து கொண்டார்கள்.

தகவல் உதவி: திரு. சுகுமாரன், துபாய்

செவ்வாய், ஏப்ரல் 13, 2010

அய்யனார் திருக்கோவில் விக்ருதி வருடபிறப்பு திருவிழா அழைப்பிதழ்

கிராம மக்களுக்கு இணைய குழுவின் பாரம்பரிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அருள்மிகு ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பால் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனார் திருக்கோவில் சித்திரை வருடபிறப்பு திருவிழா அழைப்பிதழ்
காசாங்காடு மன்னங்காடு ரெகுநாதபுரம்

அன்புடையீர்,

நிகழும் மங்களகரமான விக்ருதி வருடம் சித்திரை மாதம் 1 தேதி, 14/04/2010  புதன்கிழமை ரேவதி நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பாள் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனாருக்கு சிறப்பு அபிஷேக ஆரதனை உள்ளது.


அது சமயம் பக்த கோடிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பாள் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனார் சுவாமி அருள்பெற வேண்டுகிறோம்.


நிகழ்ச்சி நிரல்:


விக்ரதி சித்திரை மாதம்  1,  14/04/2010 புதன்கிழமை:


காலை 9 மணி:
        சிறப்பு அபிஷேக ஆராதனை  நடைபெறும்.
மாலை 5 மணி அளவில்:
       காவடி, பால்குடம், மாவிளக்கு அர்ச்சனைகள் நடைபெறும்.
இரவு 9 மணி:
       சிறப்பு ஆராதனை பிரசாதம் வழங்குதல்.


இரவில் பொழுதுபோக்கிற்காக புதிய திரைப்படம் காண்பிக்கப்படும்.


விக்ரதி சித்திரை மாதம்  2,  14/04/2010 வியாழக்கிழமை:


15/04/2010 வியாழக்கிழமை அர்ச்சனை அபிஷேகம் நடைபெறும்.


இரவில் பொழுதுபோக்கிற்காக புதிய திரைப்படம் காண்பிக்கப்படும்.


இங்ஙனம்,
கிராமவாசிகள்
காசாங்காடு, மன்னங்காடு, ரெகுநாதபுரம்


கிராமத்தில் ஆன்மீக உணர்வை வளர்க்கும் நாட்டண்மைகளுக்கு இணைய குழுவின் நன்றிகள்.