அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

ஞாயிறு, செப்டம்பர் 13, 2015

என்னம்மா இப்படி பன்றீங்கலேம்மா !

ஏனுங்கோ ஏன் இந்த கிராமத்துல அரசாங்க பணத்த சொந்த விளம்பரத்திற்கு செலவு பன்றீங்கோ ?

ஏனப்பா ஊராட்சி இதுக்கெல்லாம் செலவு  செய்யுது?

இல்ல காசாங்காடு நிர்வாகத்தை சொந்த செலவில் அரசியலில் விளம்பரமா ?

ரொம்ப பேசாதீங்க தம்பி, வேலை இல்லாத வெட்டி பசங்க எவன் வீட்டுக்கு வேண்டுமானாலும் மிரட்ட வருவாங்க, துணை நிர்வாகிகள் / அடி ஆட்கள் அறுவாள்  எல்லாம் எடுத்து வெட்ட வருவாங்க.




ஏனப்பா தம்பி ஊட்டு போடறதுக்கு எல்லாம் இந்த காசு கொடுப்பங்கள்ள, இந்த கட்சியில கொஞ்சம் நெறையா கொடுப்பாங்களா? லண்டன் ல்லாம் எழுதி இருக்கு.

ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் பெருகி கொண்டே இருப்பார்கள்.

சாராயம், கொலை முயற்சி, விவாகரத்து, வெட்டி அரசியல் முடியாதவர்களை முடிந்த வரை தொந்தரவு செய்வது. இவையெல்லாம் மேலோங்கி வளர்கிறது இந்த கிராமத்தில். 

சீக்கிரம்  உருப்புட்டிடும்  (உரு  பெரும்) !



ஞாயிறு, மே 10, 2015

ஞாயக்கார சினை பன்றிகள் -- குடிமகன்கள் பணம் கொடுக்க முடியாதென்றால், கொலை செய்யும் முயற்சி

குடிமகன்களுக்கு: இந்த ஞாயக்கார சினை பன்றிகள் இது போன்று உங்கள் குடும்பங்களில் அமைதியான சூழ்நிலை கலைத்திருந்தால் அதன் விபரங்களை பகிர்ந்து கொள்ளவும்.

கட்டை பஞ்சாயத்து என்ற பெயரில் வயிற்றை  கழுவி வரும் ஞாயக்கார சினை பன்றிகள் கிராமத்தில் செய்ததை விபரமாக பார்போம்.

உயிரோடு வாழவேண்டுமென்றால் பணம் கொடுக்க வேண்டும் என்று உயிரோடு இரத்தத்தை உறுஞ்சும் பிராணிகள் செய்த அநியாயத்தை பாருங்கள்.

வயலுக்கு செல்லும் வழியில் பாதையை மறித்து, பணம் கொடுக்கவில்லையென்றால் கொலை செய்வேன், இதற்க்கு கட்டை பஞ்சாயத்து செய்கிறேன் என்று பணம் பறித்து வயிற்ரை கழுவது தான் இவர்களின் பிழைக்க எடுத்து கொண்ட தொழில். எத்தனை குடிமகன்களை / குடும்பங்களை இதுபோன்று சீரலித்துள்ளீர்கள்?

கொலை, தாலியறுக்கும் கட்டை பஞ்சாயத்து, விவாகரத்து, பெண் கொடுமை, மாத்திரை கொடுத்து தாயை கொலை செய்வது இதெல்லாம் காசாங்காடு கிராமத்திற்கு தற்போது புதிதல்ல. இதே நிலை நீடித்தால் அடுத்த பூலான்தேவி  காசாங்காடு கிராமத்தில் உருவாகுவாள்  என்பதில் சந்தேகம் இல்லை.

மிரட்டி கேட்பவனுக்கு கொடுக்க பணம் இல்லையா வட்டிக்கு பணம் தருகிறேன்  என்று வயிற்றை கழுவும் இந்த இரத்தத்தை உறுஞ்சும் ஞாயக்கார  பிராணிகள் எத்தனை குடும்பங்களை சீரலித்துள்ளார்கள் / இன்னும் எத்தனை குடும்பங்களை சீரழிக்க போகின்றார்கள்.

முடியாத முதியவர்கள் எவ்வாறு பணம் சேகரித்து இந்த சினை பன்றிகளுக்கு வழங்கியுள்ளார்கள் என்பதை பார்போம்.



இந்தியன் வங்கியில் நகையை வைத்து பெற்ற கடனின் ரசீது.
செட்டியார் முனியப்பன்  ரூபாய். 50,000/-
தேங்காய் விற்பவரிடம் ரூபாய். 50,000/-
( மேலே கடன் கொடுத்தவரிடம் பணம் பெற்றதற்கு எழுத்து மூலமான ஆதாரங்கள் எதுவும் பெறவில்லை )

இந்த கிராமத்தில் நடப்பது நிர்வாகமா அல்லது தீவிரவாதமா?

இவர்கள் நிர்வாகிகளா அல்லது தீவிரவாதிகளா?

இந்த கிராமம் மனிதர்கள் வாழபோகும் இடமா அல்லது எதிர்காலத்தின் சுடுகாடா ?

செவ்வாய், ஏப்ரல் 14, 2015

முதியவர்கள் கிராமத்தில் அநியாயமா ? - விளக்கம் தேவை


http://news.kasangadu.com/2015/04/150000.html

தொடரில் -  முகநூலில் இம்முதியவர்கள் கிராம மக்களுக்கு அநியாயம்  செய்வதாய் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான முழு விபரங்கள் தேவை. உண்மையில் இம்முதியவர்கள் கிராம மக்களுக்கு அநியாயம் செய்திருந்தால் இவர்கள் இருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை, காசங்காடு கிராமம் அல்ல.

இத்தகவல் கொடுத்த அவையாம்வீடு திரு. முருகபதி பன்னீர்செல்வம் அவர்களுக்கும், இது உண்மை என்று சொன்ன திரு. பிரேம்குமார் வீரப்பன் அவர்களுக்கும் நன்றி.

இதற்கான விளக்கமான தகவலை news@kasangadu.com  என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.


தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

கிராம மக்களுக்கு இணையகுழுவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

தமிழாண்டு தருகின்ற சித்திரைப் பெண்ணே!
அமிழ்துண்டு உனை அனைத்த காரணத்தால்
உமிழ்நீராம் உந்தனது வைகாசி பெருக்கெடுக்க!
ஆனித்தரமாக நீ ஆடிவருகையிலே
உன் தாவணியில் ஆவணியை மறைத்திட்டாய்!
இப் புரட்டாச்சியை அழிப்பதற்கு புரட்டாசியை படைத்திட்டாய்!
பிற ஐயத்தை தீர்பதற்கு ஐப்பேசியாய் மாறுகின்றாய்!
கார்குடலை கொண்டு கார்த்திகையாய் பின்னிநின்றாய்!
நின் மார் மீது கை வைத்து துணி கழித்தேன் மார்கழியாய் மார்கின்றாய்!
புடம்போட்ட தையவலே,மாசியிலே மாக்கவிஞன் படம் பிடித்தேன் நின் அழகை.
பங்குனியில் நீ எனக்கு பதுமையில் நீயேயாகும்.

கவிதை:  தீபக்குமார், குட்டச்சிவீடு, காசாங்காடு

வெள்ளி, ஏப்ரல் 10, 2015

காசாங்காடு ஞாயகாரர்கள் வயதான முதியர்வர்களிடம் பணம் 1,50,000 கொள்ளை !


காசாங்காடு ஞாயகார கமிநாட்டிகளே !

காசாங்காடு கிராமத்தில் உயிரோடு வயதான முதியவர்கள் வாழவென்றுமென்றால் 1,50,000 ரூபாய் வேண்டும் என்று ஞாயகாரர்கள் பணம் பறித்துள்ளனர்.

எதற்காக முதியர்வர்களிடம் பயமுறுத்தி பணம் பறித்தீர்கள்?

இந்த ஊரில் இனி மனிதர்கள் வாழ்வதா அல்லது சாவதா?

வாழ்வதற்காக தானே நிர்வாகத்திற்கு மக்கள் பிரநிதிகளுக்கு வாக்களித்தோம். இதற்க்கு காசாங்காடு நிர்வாகமும்  உடந்தையோ ?

உப்பு தின்று தானே வளர்ந்தீர்கள். இரண்டு நபரின் பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம் என்றால் ஞாயகார கமிநாட்டிகள் எதற்காக மறுபடியும் ஈடுபடுகிறீர்கள்?



பணம் கொடுத்ததில் உங்களின் சேவைக்காக எவ்வளவு பணம் பறித்து கொண்டீர்கள்? அல்லது வேலை இல்லாமல் அடுத்தவனின் குடும்பத்தை சீரழிக்க கிளம்பி உள்ளீர்களா?

ஒரு குடிமகனின் உரிமையில் தலையிட எவன் உங்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது ?

முறையாக அந்த பணம் திருப்பி அந்த முதியர்வர்களிடம் போய்  சேர வேண்டும். இல்லையென்றால் கிராமத்தில் நடக்கும் அநியாயம் அனைத்தும் இங்கு விவரிக்கப்படும்.

காசாங்காட்டு ஞாயகார கமிநாட்டிகளே, நீங்கள் சோற்றை திங்கீர்களா அல்லது மனிதனின் கழிவையா ?

இது கிராமமா அல்ல பணத்திற்காக பிசாசுகள் அலையும் நரகமா ?


செவ்வாய், மார்ச் 31, 2015

புதன், மார்ச் 04, 2015

காசாங்காடு குடிமகனின் - அமைதி வாழ்க்கை குலைக்க - காவல்துறையின் பங்களிப்பு !


கிராமத்தில் நடக்கும் பிரச்சனைகள் அப்படியே எழுதப்பட்டுள்ளது.
இது தனி நபர் பிரச்சனை அல்ல. இது போன்று பல சம்பவங்கள் நடைபெறுவதால் இது பொது பிரச்சனையாக எடுத்து பேசப்பட்டுள்ளது. இந்த செய்திகள் நியாயம் கேட்டோ அல்லது முடிவு தெரிவதற்கோ அல்ல.

இரண்டு பேருக்கு பிரச்சனை என்றால் எதற்கு நீதியரசர்கள் என்ற பெயரில் (அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல, பிரச்னை தீர்த்து வைக்கிறோம் என்று தனி நபரின் உரிமையில் ஈடுபடுவது) அதில் ஈடுபட வேண்டும்?

இது போன்று சம்பவங்கள் இனிமேல் காசாங்காடு கிராமத்தின் அகராதியிலே இடம் பெற கூடாது என்பதே விருப்பம்.


இந்த செய்தியின் மேலும் என்ன பிரச்சனைகள் நடந்துள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.



இதில் வந்த காவல் துறை அதிகாரி உண்மையில் காவல் துறை மூலம் வந்தாரா அல்லது பணம் கேட்பவரின் ஏற்பாடா ???

சில நாட்கள் கழித்து அடையாளம்  இல்லாத நபர் தான் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து வருவதாகவும் முதியர்வர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முதியர்வர்கள் தாங்கள் யாருக்கும் எந்த பணமும் கொடுக்க வேண்டியத்தில்லை என்று கூறினர்.

அதற்க்கு அந்த நபர் இரண்டு நாட்களுக்குள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் வந்து இப்போது கூறிய பதிலை சொல்லும்படி கூறிவிட்டு சென்றுவிட்டார்.

இந்த நிகழ்வால் எவ்வித தவறும் செய்யமால் காவல் துறை வீட்டிற்கு வந்தது, வயதான முதியர்களின் அமைதியை சீர்குலைத்தது.

என்ன செய்வதென்று புரியாத இந்த முதியவர்கள் பணம் கேட்க வந்தவர்களிடம் சென்று ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கூறினர்.

அவர்களோ நம் கிராமத்தில் பேசி முடித்து கொள்வோம், இந்த பிரச்சனை பற்றி காவல் துறையிடம்  நாங்கள் தகவல் தெரிவித்து விடுவோம் என்று நம்பிக்கை அளித்து திருப்பி அனுப்பினர்.

நமக்கு ஏற்படும் சந்தேகங்கள்:

யார் வேண்டுமென்றாலும் எவர் மீதும் காவல் துறையில் எந்த வித சாட்சியும் இல்லாமல் பணம் கேட்டு புகார் செய்யலாமா?
நமக்கு தெரிந்த தகவல் வரை, இந்த மாதிரியான புகார் காவல் துறையில் பதிவு செய்ய இயலாது. 
அப்படியே பதிவு செய்தாலும், காவல் துறைக்கு விசாரிக்க உரிமை உண்டா?
நீதி மன்றத்தில் மட்டுமே இச்சம்பந்தமாக விசாரிக்க முடியுமே தவிர காவல் துறைக்கு அல்ல.

எப்படி நியாயம் வழங்கப்பட்டது என்பதை விரிவாக எழுதுகிறோம்.

வியாழன், பிப்ரவரி 26, 2015

முதியவர்களின் அமைதி வாழ்வினை சீரழிக்கும் காசாங்காடு கிராமம் !

"பஞ்சாயத்து" என்ற பின்வரும் வார்த்தை: நிர்வாகமோ அல்லது ஊராட்சியோ அல்ல. பேச்சு வழக்கில் அழைக்கப்படும் நியாயகாரர்கள்.


http://news.kasangadu.com/2015/02/blog-post.html - சுட்டியின் தொடர்

எங்கு ஆரம்பித்தது இந்த காசாங்காடு கிராம அராஜகம்?

முப்பது வருடங்களுக்கு முன் வாங்கிய பணம் கொடுக்க வேண்டும் என்று பங்காளிகளிடம் மூலம் தூது அனுப்பினார்.

ஒரு பைசா கூட கொடுக்க வேண்டியத்தில்லை என்று பதில் சொல்லி முடிந்துவிட்டது.

பிறகு மேலும் நான்கு நபர்கள் பஞ்சாயத்து செய்ய வேண்டும் என்று முடியாத முதியவர்களிடம் பணம் பறிக்க வேண்டுகோள் விடுத்துனர். பஞ்சயத்திர்க்கு  முதியவர்கள் செல்ல வில்லை.



அடுத்த திட்டமாக அம்முதியர்வர்களின் தோப்பு கதுவுகளில் பூட்டு போட்டுள்ளனர். இதை செய்தது காசாங்காடு கிராமமா, பங்காளிகளா அல்லது பண வெறி பிடித்து அலையும் பிச்சை காரனா என்பது தெரியவில்லை. 

மேலும் எந்த பிரச்சனையிலும் ஈடுபடக்கூடாது என்று பூட்டை உடைத்து எரிந்து தனது தினசரி வாழ்க்கையினை தொடர்ந்தனர். 

இது போன்று மூன்று முறை பூட்டு போடுவதும் உடைத்து தனது தினசரி  வேலை பார்பதுமாக இருந்தது. சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டாம். எதற்கு காவல்துறை, நீதிமன்றம் என்று வயதான முடியாத காலத்தில் செய்வோமே என்று அமைதியாய் இருந்து விட்டனர் அந்த முதியவர்கள். மேலும் இந்த நிகழ்வுகள் சம்பந்தமான பணம் கேட்க்க வந்தவர்களிடமும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் என்ன என்ன அராஜகம் நடந்தது என்பதை விபரமாக எழுதுகிறோம் !


புதன், பிப்ரவரி 25, 2015

இலட்ச கணக்கில் பிச்சை / பரிதாபத்தின் அடிப்படையில் / பணம் தேவையா ? உறவுகளை அறுத்து அதற்க்கு விலை பேச வேண்டுமா ?


இலட்ச கணக்கில் பிச்சை / பரிதாபத்தின் அடிப்படையில் பணம் தேவையா,
அல்லது உறவுகளை அறுத்து அதற்க்கு விலை பேச வேண்டுமா ?  அதற்க்கு பத்திரம் வேண்டுமென்றாலும் எழுதி கொள்ளலாம்.  காசாங்காடு பஞ்சாயத்தை நாடுங்கள், எவரிடம் மிரட்டி,  பிச்சை எடுத்தோ அல்லது  வீடு சென்று வாங்க வேண்டுமோ அவரிடம் சென்று பிச்சை எடுத்து வாங்க முயற்சி செய்வார்கள்.

இந்த உறவு எப்போது வேண்டுமென்றாலும் இருக்கலாம். 25 வருடங்கள் முன்பு நடந்து இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. அணைத்து பிச்சை சேவைகளும் காசாங்காடு கிராமத்தில் வழங்க முயற்சி செய்வார்கள்.

பணம் கேட்பதற்கு ஆதாரங்கள் எதுவும் தேவை இல்லை.

எவ்வாறு கிராம மக்கள் (பஞ்சாயத்து என்று பெயர் கொண்டு) முயற்சி செய்துள்ளார்கள் என்பது பற்றி தெளிவாக பகிர்ந்து கொள்ளப்படும்.

வாழ்விற்கும் சாவிற்கும் இடையில் வாழும் இந்திய குடிமகனை எந்த விதத்தில் தொந்தரவு செய்ய முடியுமோ அப்படி எல்லாம் எங்கள் கிராமத்தில் நடக்கும்.

நாளை இந்த பண வியாதி கிராமத்தின் எந்த முதியவர்களையும் தாக்கலாம்.




மேலும் இது சம்பந்தமான காசாங்காடு கிராமத்தில் நடந்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.


ஞாயிறு, ஜனவரி 18, 2015

விசுவநாதன் நினைவுநாள் ஒன்றுகூடல் !

விசுவநாதன் நினைவுநாள் ஒன்றுகூடல் !





தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

வியாழன், ஜனவரி 15, 2015

பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

காசாங்காடு கிராம மக்களுக்கு இணைய குழுவின் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !




சர்க்கரை பொங்கல் வைக்கும் முறை: http://samayal.kasangadu.com/tai-ponkal/carkkarai-ponkal
வெண் பொங்கல் வைக்கும் முறை: http://samayal.kasangadu.com/tai-ponkal/ven-ponkal
கோட்டுகறி கொழம்பு: http://samayal.kasangadu.com/tai-ponkal/kottu-kari-kulampu

நிழற்படங்கள் நிகழ்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி.

புதன், ஜனவரி 14, 2015

இனிய போகிபண்டிகை வாழ்த்துக்கள் !

கிராம மக்களுக்கு இணைய குழுவின் இனிய போகிபண்டிகை வாழ்த்துக்கள் !






திங்கள், ஜனவரி 12, 2015

காசாங்காடு கிராம மக்கள் ஒன்றுகூடல் சிங்கப்பூர் 2015


ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் ஏதேனும் கிராம / கிராம மக்கள் முன்னேற்ற அடையும் வகையில் முடிவுகள் எடுக்கபட்டிருப்பின் தகவல்களை பகிர்ந்து கொள்ளவும்.

காசாங்காடு கிராம மக்கள் ஒன்றுகூடல்
சிங்கப்பூர் 2015


அன்புடையீர் வணக்கம்,

            சிங்கப்பூரில் வசிக்கும் நமது கிராமவாசிகளின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி  18/01/2015 ஞாயிறு அன்று  முற்பகல் 11.00 மணிக்கு East Coast Park- ல்  Car Park G  (Pit No 73 to 76) ல் நிகழ உள்ளது.  நம் கிராம மக்கள் அனைவரும் வந்து கலந்து கொண்டு  சிறப்பிக்க வேண்டுகிறோம்.

 விளையாட்டு மற்றும் மனமகிழ் போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பிக்கவும்.

 நிகழ்ச்சி குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்படும் என்பதை நினைவில்கொண்டு, அதற்கான ஒத்துழைப்பை நல்குமாறு வேண்டுகிறோம். மதிய உணவும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்படிக்கு,

நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு.

தகவல் உதவி: திரு. இளங்கோ (Diamond News Agency, Singapore)

எச்சரிக்கை: ஐந்து நபர்களுக்கு மேல் அனுமதியின்றி கூட்டம் கூடினால் சிங்கப்பூர் சட்டத்தின் படி குற்றமாகும். செல்லும் முன் இந்த கூடலுக்கான அனுமதி உள்ளதா என்பதை விபரித்து செல்லவும். தெளிவான சட்ட விபரம் கீழே தெரிந்து கொள்ளலாம்.