அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

ஞாயிறு, செப்டம்பர் 27, 2009

ஆயுத பூஜை, நவராத்திரி வாழ்த்துக்கள்

கிராம மக்களுக்கு இணைய குழுவின் ஆயுத பூஜை வாழ்த்துக்கள்.





நவராத்திரி திருவிழா ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 9 நாட்களில்  நடைபெறும்.   நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு. ஒன்பது இரவுகள் தொடர்ந்து நடைபெறுவதால், இதற்கு நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.  துர்க்கா, லெஷ்மி, சரஸ்வதி  ஆகிய    மூன்று தெய்வங்களும் ஒன்று சேர்ந்து உருவான பராசக்தியால்  மகிஷாசுரனை     வதம்     செய்வதைத்தான்       நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.
இதில் முதல் மூன்று நாட்கள் துர்க்கா பூஜையாகவும் அடுத்த மூன்று நாட்கள் லெஷ்மி பூசையாகவும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி பூசையாகவும் ஆக மொத்தம் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.     இந்நாளில் வீடுகளிலும், கோவில்களிலும் கொலு வைத்து வழிபடுவார்கள்.


சிலர் வீடுகளில்  கொலு வைப்பதற்கென்றே தனியாக படிகள் வைத்திருப்பார்கள்.  நவராத்திரி நாட்களில்.அப்படிகளில் அவரவர்கள் தகுதிக்கேற்றவாறு விதவிதமான பொம்மைகள் வைத்து வழிபடுவார்கள்.இந்த நாட்களில் துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி மூலமும் ஒன்று சேர்ந்து பராசக்தியாக கொலு வீற்றிருப்பதாக ஒரு ஐதீகம்.  ஒன்பது நாட்களும் மவுன விரதம் கடைப்பிடித்தால் உடல் உள்ளத்திற்கு நன்மை உண்டு


வீடுகளில் கொலு வைத்திருப்பவர்கள் மாலை நேரத்தில் தினமும் ஒவ்வொரு வகையான சுண்டல்கள் அல்லது ஏதாவது ஒரு பதார்த்தங்கள் செய்து கொலுவிற்கு வைத்து வழிபட்டு பின்பு அவரவர்களுக்கு தெரிந்தவர்கள்,  அக்கம் பக்கம் குடிஇருப்பவர்கள் எல்லோரையும் அழைத்து அவர்களுக்கும் வெற்றிலை, பாக்கு, பழம், மற்றும் அவர்கள் செய்த பிரசாதங்களையும் கொடுத்து மகிழ்வார்கள்.


சரஸ்வதி பூஜை அன்று அனைத்து அலுவலகங்கள், கடைகள் மற்ற எல்லோரும் சரஸ்வதிக்கு பூஜை செய்து வழிபடுவார்கள்.


கடைசி நாளான விஜய தசமி அன்று பராசக்தியானவள்   மகிஷாசுரனை  வதம் செய்வதாக ஐதீகம். இதையே நாம் நவராத்திரியாக கொண்டாடி மகிழ்கிறோம்.


மேலே கூறியவைகளை அனைவரும் கொண்டாடுவார்கள்  என்று சொல்லமுடியாது. ஆனால் விஜய தசமிக்கு  அடுத்த நாள்  ஆயுத பூஜை வெகு சிறப்பாக பட்டி தொட்டிஅனைத்து இடங்களிலும் கொண்டாடப்படும். உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை .ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.


விஜய தசமியன்று புதிதாகத் தொழில் தொடங்குவோர், கல்வி பயில ஆரம்பிப்போர் தங்கள் பணிகளை ஆரம்பித்தல் நன்று.


வாழ்த்துக்கள் கருத்து உதவி: வெங்கட், கோயம்புத்தூர்

செவ்வாய், செப்டம்பர் 22, 2009

இணையத்தில் காசாங்காடு கிராம சந்தை

இணையத்தில் கிராம சந்தை வேண்டுமென கிராமத்திலிருந்து மக்களின் வேண்டுகோளின் படி இந்த இணையம் வெளியிடப்பட்டுள்ளது.

http://market.kasangadu.com

இதில் கிராமத்தில் உற்பத்தியாகும் விவசயாம் சம்பந்தமான பொருட்கள், அவற்றை எவ்வாறு கொள்முதல் செய்வது பற்றி விளக்கம் அளித்துள்ளோம்.

உற்பத்தியாகும் பொருட்கள் விடுபட்டு இருந்தால் இணைய குழுவிற்கு தெரியபடுத்தவும். இது விவசாயிகள் முன்னேற வழி வகுக்கும் என நம்புகிறோம்.

தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.

நன்றி.

இவன்,
காசாங்காடு இணைய குழு

திங்கள், செப்டம்பர் 21, 2009

தொலைபேசி வழி காசாங்காடு இணையதளத்திற்கு செய்திகள் தெரிவிக்க வசதி.

தொலைபேசி வழி காசாங்காடு இணையதளத்திற்கு செய்திகள் தெரிவிக்க வசதி. உலகெங்கிலும் இருந்து தெரிவிக்க தொலைபேசி எண்கள் விரைவில் அறிவிக்க படும். இந்தியாவிலிருந்து இணைய தளத்திற்கு செய்திகள் தர அழைக்க வேண்டிய,

தொலைபேசி எண்: 9962545926
வெளிநாட்டிலிரிந்து அழைக்க வேண்டிய எண்: +91-9962545926

இணைய வசதி இல்லாமல் செய்திகளை தெரிவிக்க இவை பயனுள்ள வகையில் அமையும் என நம்புகிறோம்.

நன்றி.

பயன்படுத்தும் முறை:
  1. தாங்கள் பெயர் பதிவு செய்ய விரும்பவில்லை எனில் நீங்கள் அளித்த ஒலி அஞ்சலில் தெரிவிக்கவும்.
  2. தங்கள் இந்த எண்ணை அழைத்த பின் ஒரு சிறு ஒலிக்கு பிறகு நீங்கள் தெரிவிக்க வேண்டிய செய்திகளை தெளிவாக பேசவும்.
  3. செய்திகளை பேசி முடித்த பிறகு தாங்கள் யார் என்பதை குறிப்பிடவும். இணையத்தளத்தில் தகவல் தந்தவரின் பெயர் வெளியிட வசதியாக இருக்கும்.

வியாழன், செப்டம்பர் 17, 2009

இரண்டு நாட்காளாக இரவில் கடும் மழை

கிராமத்தில் இரண்டு நாட்காளாக இரவில் கன மழை.

செய்தி உதவி: தவமணி, பட்டுக்கோட்டை

சனி, செப்டம்பர் 05, 2009

253 உலக நகரங்களிலிரிந்து இணையதளத்திற்கு 25871 பக்கங்களை காண வருகை




ஒரு வருடத்திற்குள் 253 உலக நகரங்களிலிரிந்து இணையதளத்திற்கு 25871 பக்கங்களை காண வருகை புரிந்துள்ளனர்.
கிராமத்தின் நடவடிக்கைகளை காண வந்த அனைவருக்கும் இணையக்குழு நன்றியை தெரிவித்து கொள்கிறது.

இத்தகவலின் விரிவான கோப்பு இங்கே.


வெள்ளி, செப்டம்பர் 04, 2009

கிராமத்தில் ஏரி கட்டுமான பணி துரிதமாக நடைபெறுகின்றது



கடந்த பெரும் வெள்ளத்தில் நம் கிராம ஏரி உடைந்து விட்டதை அனைவரும் அறிவோம்.
கிராம இணையத்தளம் அத்தகவலை உடனுக்குடன் தெரியப்படுத்தியது.

ஆற்றில் தண்ணீர் வரப்பு தொடங்கிவிட்டதால், கிராமத்தில் ஏரி கட்டுமான பணி துரிதமாக நடைபெற்று வருகின்றது.
மிக வரைவில் இப்பணி முடிவடையும் என எதிர்பார்க்க படுகின்றது.

தகவல் உதவி: ராம்பிரகாஷ், காசாங்காடு

வியாழன், செப்டம்பர் 03, 2009

காசாங்காடு இணையதளம் முதலாம் ஆண்டு நிறைவு


அனைவருக்கும்:

காசாங்காடு இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டு இன்றோடு முதல் ஆண்டு நிறைவு பெறுகின்றது.

கிராமத்தில் உள்ள அனைவரின் ஒத்துழைப்பால் இந்த நிறைவு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.

எதிர்பார்த்ததை விட பன்மடங்கு தகவல்கள் மக்களுக்கு சென்றடைந்துள்ளது.

வரும் ஆண்டுகளில் மேலும் பல பயனுள்ள செய்திகள், மற்றும் உலகெங்கிலும் பறந்து கிடக்கும் காசாங்காடு கிராம மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் அமையும் என்று நம்புகிறோம்.

கிராம மக்கள் மட்டுமன்றி வெளி ஊர்களிரிந்து கிராமம் சம்பந்தமான தகல்வல்கள் மற்றும் கிராமம் முன்னேறுவதற்கான குறிப்புகளை அளித்த உள்ளங்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

அனைவரின் நல்ல உள்ளங்களுக்கும், ஒத்துழைப்புக்கும் மிகவும் நன்றி.

இவன்,
காசாங்காடு இணையக்குழு