அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

வியாழன், டிசம்பர் 31, 2009

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2010

கிராம மக்களுக்கு இணைய குழுவின்  ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். (2010)

இணையதளம் ஆங்கிலத்திலும், 52 உலக மொழிகளிலும்.


காசாங்காடு கிராம இணையத்தளம் ஆங்கிலத்திலும், மேலும் கூகிள் மொழிபெயர்ப்பு உதவியில் 52  மொழிகளில் உலகிற்கு அறிமுகபடுத்துகிறோம்.

http://wwwen.kasangadu.com

கிராமத்தை பற்றி மேலும், உலகம் முழுவதும் தெரிந்து கொள்ள மிகவும் உதவியாய் இருக்கும்.

மேலும் கிராமத்தை மேம்படுத்தவும், குறைகளை நிவர்த்தி செய்யவும், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் உதவும் என நம்புகிறோம்.

தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.

இவன்,
காசாங்காடு இணைய குழு

ஞாயிறு, டிசம்பர் 27, 2009

தேசிய தொலைபேசி அழைக்காதீர் கோப்பகம்

தொலைபேசி மூலம் வர்த்தக நிறுவனங்கள் பொருள், சேவை அல்லது முதலீடு பற்றி தெரிந்து கொள்ள, வழக்குரைக்க, விற்க அழைத்தால் அதை தடுப்பதற்கு மத்திய அரசாங்கம்  நடவடிக்கை எடுத்துள்ளது.

உங்கள் தொலைபேசி எண்ணை "தேசிய தொலைபேசி அழைக்காதீர் கோப்பகம்" த்தில் சேர்க்க வேண்டுமெனின்,  1909 என்ற அழைத்து பதிவு செய்து கொள்ளவும்.

கை தொலைபேசி வைத்திருப்போர் "START DND" என்று 1901 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பதிவு செய்து கொள்ளவும்.

பதிவு செய்து கொண்ட பிறகும் உங்களுக்கு வர்த்தக தொலைபேசி அழைப்புகள் வந்தால் உங்களுடைய தொலைபேசி நிறுவனத்திடம் புகார் செய்யவும்.

தேசிய தொலைபேசி அழைக்காதீர் கோப்பகத்தின் இணைய முகவரி.    http://ndncregistry.gov.in/

நன்றி.

வெள்ளி, டிசம்பர் 25, 2009

தமிழ் இணையத்தை பயன்படுத்த ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் ???

சமீபத்தில் அரசாங்கத்தின் தமிழ் மின்னணு நிலபதிவேடு சேவைகளை காசாங்காடு கிராம மக்களுக்கு மக்களுக்கு தெரியபடுத்தலாம் என்று ஆய்வு செய்தோம்.

தமிழக அரசின் தமிழ் நிலபதிவேடு மின்னணு சேவையை பயன்படுத்துவதற்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் போல் தெரிகிறது.

தமிழ் !!! தமிழ் !!! என்று கூவி குரலெழுப்பும் மக்கள் பிரதிநிகள் மற்றும் அரசாங்கம் மற்ற மொழிகளை தமிழில் கலக்க துணை புரிய அரசாங்கம் துணை போகலாமா அல்லது ஏன் இது போன்ற மொழி கலவைகளை தடுக்க முயற்சிக்கவில்லை?

அதன் இணைய தள முகவரி இதோ,

http://taluk.tn.nic.in/eservicesnew/land/checkGovtPrivate_ta.html?lan=ta

அதன் விளக்கம் கீழே.


நன்றி.

தகவல் உதவி: முனைவர். வீராசாமி, சென்னை

வியாழன், டிசம்பர் 24, 2009

கிராமத்தில் இன்று திருவிளக்கு பூஜை

மாரியம்மன் கோவிலில் இன்று திருவிளக்கு பூஜை. மக்கள் அனைவரும் பங்கு கொண்டு சிறப்பு அளிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.


தகவல் உதவி: செந்தமிழ்செல்வி, காசாங்காடு

கலக்குறாங்கப்பா காசாங்காடு மக்கள் !!!

"கலக்குறாங்கப்பா காசாங்காடு மக்கள் !!!"  அப்படின்னு நாங்க சொல்லல, உலகம் சொல்லுது.

காசாங்காடு கிராம இணையதளத்தை பற்றி உலகிற்கு தெரிய செய்த சீமாச்சுக்கு  இணைய குழுவின் நன்றிகள்.

காசாங்காடு கிராமம் கலக்கும் படியானா வெளியான செய்தி இங்கே.

http://seemachu.blogspot.com/2009/12/88.html

நன்றி.

வெள்ளி, டிசம்பர் 18, 2009

கிராமத்தில் சிறுபேருந்து வீரா விபத்து

கடந்த திங்கள்கிழமை 14  டிசம்பர் 2009 திங்கள்கிழமை, சிறுபேருந்து வீரா விபத்துகுள்ளனாது. உயிர் சேதம், பொருள் சேதம் பற்றி விபரங்கள் தெரியவில்லை. அதை பற்றிய புகைப்படம் இங்கே.தகவல் உதவி: கலைவாணன், காசாங்காடு

கிராமத்தின் நிகழ்வுகளை வைத்து ஒரு கதை

ஆசிரியர் இளா விற்கு எமது நன்றி.

வளர்ந்து வரும் நாகரிக உலகில், காசாங்காடு கிராமத்தை வைத்து, சொந்தங்களின் முக்கித்துவத்தை எடுத்துரைத்தர்க்கு இணைய குழுவின் வாழ்த்துக்கள்.

அக்கதையை படிக்க இங்கே சொடுக்கவும்.

நன்றி.

சனி, டிசம்பர் 12, 2009

கிராமத்தில் தொலைபேசி இணைப்பகம் வேலை செய்யவில்லை

கிராமத்தில் "பாரதி நிகர் சஞ்சார் லிமிடெட்"  த்தால் வழங்கப்படும் தொலைபேசி இணைப்புகள் வேலை செய்யவில்லை. நேற்று இரவு முதல் காசாங்காடு இணைப்பகதிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள அனைத்து இணைப்புகளும் வெளி தொடர்பு இல்லாமல் உள்ளது.

தகவல் உதவி:  இராமசந்திரன், காசாங்காடு

செவ்வாய், டிசம்பர் 01, 2009

கார்த்திகை தீப வாழ்த்துக்கள்

கிராம மக்களுக்கு இணைய குழுவின் கார்த்திகை தீப வாழ்த்துக்கள்.

கிராமத்தில் கோவில்தோப்பு குடிநீர் விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்பியது

கிராமத்தில் கோவில்தோப்பு குடிநீர் விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்பியது. முயற்சி செய்து விரைவாக இயல்பு நிலைக்கு கொண்டு வந்த கிராம நிர்வாகத்திற்கும், இதற்க்கு உதவி புரிந்த அனைவருக்கும் இணைய குழுவின் நன்றியும்  பாராட்டுக்களும்.

கேபிள் தொலைகாட்சி இணைப்பு இது வரை சரிசெய்யப்படவில்லை.

செய்தி உதவி: பழனிவேலு, காசாங்காடு

திங்கள், நவம்பர் 30, 2009

கிராமத்தில் இரு நாட்களாக ஒரு பகுதிக்கு குடிநீர் இல்லை

கிராமத்தில் கடந்த இரு நாட்காளாக கோவில் தோப்பு பகுதியிலிரிந்து குடிநீர்  விநியோகிக்க படவில்லை.

அத்தியாவசிய சேவைகளை, என்று தான் இந்த கிராம நிர்வாகம் மக்களுக்கு வழங்க போகின்றது?

குடிநீர் வரி கட்டவில்லை என்றால் குடிநீர் குழாயை நிறுத்தும் இந்த கிராம நிர்வாகம், குடிநீர் வரவில்லை என்றால் அவர்களின் பதவிகளை பறிப்பது தானே நியாயம்?

செய்தி உதவி: பழனிவேலு, காசாங்காடு

கிராமம் முழுவதும் கேபிள் தொலைகாட்சி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது

காசாங்காடு கிராமம் முழுவதும் கேபிள் தொலைகாட்சி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக கேபிள் தொலைகாட்சி இணைப்பு இல்லை, என்று கிடைக்கும் என்பதும் தெரியவில்லை. இதற்கான முன் அறிவிப்புகளும் இந்த நிறுவனத்திடமிருந்து மக்களுக்கு தர படவில்லை.

தொலைகாட்சி இணைப்பு துண்டிக்கபட்டுள்ளதால் கிராமம் முழுவதும் செய்திகள், பொழுதுபோக்கு போன்ற தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மக்களிடம் போய் சேரவில்லை.

இந்த பிரச்னை ஒரு பக்கம் இருக்க, நிலையான இணைப்பை வழங்குவதற்கு மக்கள் மற்ற நிறுவனங்களிடம் கேட்டுள்ளனர். அதில் ஹாத்வே நிறுவனமும் அடங்கும்.

முறையாக இயக்கபடாத நிறுவனங்கள் இவ்வாறு சேவைகளை துண்டிப்பது எந்த நாட்டிலும் இருக்க தான் செய்கின்றது. அனைத்திலும் அவதிப்படுவது அப்பாவி மக்களே. இதை கண்டிக்க கிராமத்திலும் ஒரு முறையான கட்டுபாடுகள் இல்லை.

என்று தான் இந்திய கிராமங்களுக்கு முறையான சேவைகள் தரும் நிறுவனங்கள் வரபோகின்றதோ? இதை அரசாங்கம் இவ்வாறு பிரச்சனைகள் வராமல் தடுக்க நடைமுறை முறைபடுத்த போகின்றதோ?

இரநூருக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் உள்ள இந்த கிராமத்திலே இந்த நிலை !!!
கிராமத்தில் அனைவரும் சேர்ந்து இதற்கான தீர்வை கொண்டு வர முயற்சிக்கலாமே?


வீடு வீடாக வந்து ஓட்டு வாங்கிய கிராம தலைவர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இந்த போன்ற பிரச்சனைகளுக்கு என்ன பதில் தர போகின்றார்கள்?செய்தி உதவி: கிருபாகரன், பட்டுக்கோட்டை

சனி, நவம்பர் 21, 2009

நடுத்தெரு குப்பாயீவீடு ராமசந்திரன் இல்ல திருமணம்திருமண தேதி மற்றும் நேரம்: ஞாயிற்றுகிழமை 11/22/2009 10:00 முதல் 11:00 வரை
பெண் அழைப்பு இடம்: காசாங்காடு திருமண மண்டபம், காசாங்காடு

திருமணம் நடக்கும் இடம் அல்லது நாடு பற்றிய விவரம்:  MNR திருமண மண்டபம்.
மணமகன் பெயர்: நக்கீரன்
மணமகன் வீட்டின்/ஊரின் பெயர்: நாட்டுச்சாலை
மணமகள் பெயர்: அனிதா
மணமகள்  வீட்டின்/ஊரின் பெயர்:
குப்பாயீவீடு, நடுத்தெரு, காசாங்காடு
மணமகள்  பெற்றோர் பெயர்: ராமசந்திரன் பொன்னம்மாள்


வெள்ளி, அக்டோபர் 30, 2009

கிராமத்தில் கன மழை

கிராமத்தில் நேற்று இரவு முதல் கன மழை.

தகவல் உதவி: தவமணி, பட்டுக்கோட்டை

சனி, அக்டோபர் 17, 2009

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

கிராம மக்களுக்கு இணையகுழுவின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.


நன்றி.

ஞாயிறு, அக்டோபர் 11, 2009

கிராமத்தில் நடைபெற்ற கபாடி போட்டி முடிவுகள்


10-10-09  சனி அன்று இரவு நடைபெற்றது,
அதில் வெற்றி பெற்ற அணியினர் பின்வருமாறு.

உள்ளூர் புதுக்கோட்டை அணியினர் முதல்யிடத்தையும், 
காசாங்காடு-A அணியினர் இரண்டாம்யிடத்தையும்,
முள்ளூர் பட்டிக்காடு  அணியினர் மூன்றாம்யிடத்தையும்,
காசாங்காடு-B அணியினர் நான்காம்யிடத்தையும் தட்டிச்சென்றனர்.

செய்தி உதவி: முத்துக்குமார், காசாங்காடு 

திருமண நிகழ்ச்சிகளின் வடிவம்

திருமண நிகழ்ச்சிகளின் மாதிரி வடிவம் தரபட்டுள்ளது. திருமணம் சம்பந்தமான தகவல் தரும் பொது கீழ்க்கண்ட படிவத்தை பயன்படுத்தவும்.

http://groups.google.com/group/kasangaducom/web/marriageinfoformat

-------------------------------------------------
திருமண செய்திகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
திருமண செய்திகள் அனுப்பும் வடிவம்:

மணமகன் அல்லது மணமகள் காசாங்காடு கிராமத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

தலைப்பு:  {மணமகன்/மணமகள் பெயர்}  திருமணம்

அவசிய தகவல்:

திருமண தேதி மற்றும் நேரம்:
திருமணம் நடக்கும் இடம் அல்லது நாடு பற்றிய விவரம்:
மணமகன் பெயர்:
மணமகன் வீட்டின்/ஊரின் பெயர்:
மணமகன்  பெற்றோர் பெயர்:
மணமகள் பெயர்:
மணமகள்  வீட்டின்/ஊரின் பெயர்:
மணமகள்  பெற்றோர் பெயர்:

புகைப்படம்:

மணமகன் மணமகள் அவர்களின் புகைப்படம் மற்றும் குடும்பத்தாரின் புகைப்படங்கள் இருந்தால் அனுப்பவும்.

மேலும் தகவல் இருந்தால்:

மணமகன்/மணமகள், கிராமம் பெருமை அடையும் அளவுக்கு ஏதேனும் செய்தார்களா?:
ஆம் என்றால், அவர் செய்தது என்ன? மக்களுக்கு அவை எவ்வாறு பயன்பட்டது?

அனுப்பும் தகவல்கள், சரி பார்த்தபின் செய்திகள் இணைய தளத்தில் பதிவு செய்யப்படும்.

---------------------------------------------------

அனைவரின் ஒத்துழைப்பிற்கும் நன்றி.

இவன்,
காசாங்காடு இணைய குழு

ஞாயிறு, செப்டம்பர் 27, 2009

ஆயுத பூஜை, நவராத்திரி வாழ்த்துக்கள்

கிராம மக்களுக்கு இணைய குழுவின் ஆயுத பூஜை வாழ்த்துக்கள்.

நவராத்திரி திருவிழா ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 9 நாட்களில்  நடைபெறும்.   நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு. ஒன்பது இரவுகள் தொடர்ந்து நடைபெறுவதால், இதற்கு நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.  துர்க்கா, லெஷ்மி, சரஸ்வதி  ஆகிய    மூன்று தெய்வங்களும் ஒன்று சேர்ந்து உருவான பராசக்தியால்  மகிஷாசுரனை     வதம்     செய்வதைத்தான்       நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.
இதில் முதல் மூன்று நாட்கள் துர்க்கா பூஜையாகவும் அடுத்த மூன்று நாட்கள் லெஷ்மி பூசையாகவும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி பூசையாகவும் ஆக மொத்தம் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.     இந்நாளில் வீடுகளிலும், கோவில்களிலும் கொலு வைத்து வழிபடுவார்கள்.


சிலர் வீடுகளில்  கொலு வைப்பதற்கென்றே தனியாக படிகள் வைத்திருப்பார்கள்.  நவராத்திரி நாட்களில்.அப்படிகளில் அவரவர்கள் தகுதிக்கேற்றவாறு விதவிதமான பொம்மைகள் வைத்து வழிபடுவார்கள்.இந்த நாட்களில் துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி மூலமும் ஒன்று சேர்ந்து பராசக்தியாக கொலு வீற்றிருப்பதாக ஒரு ஐதீகம்.  ஒன்பது நாட்களும் மவுன விரதம் கடைப்பிடித்தால் உடல் உள்ளத்திற்கு நன்மை உண்டு


வீடுகளில் கொலு வைத்திருப்பவர்கள் மாலை நேரத்தில் தினமும் ஒவ்வொரு வகையான சுண்டல்கள் அல்லது ஏதாவது ஒரு பதார்த்தங்கள் செய்து கொலுவிற்கு வைத்து வழிபட்டு பின்பு அவரவர்களுக்கு தெரிந்தவர்கள்,  அக்கம் பக்கம் குடிஇருப்பவர்கள் எல்லோரையும் அழைத்து அவர்களுக்கும் வெற்றிலை, பாக்கு, பழம், மற்றும் அவர்கள் செய்த பிரசாதங்களையும் கொடுத்து மகிழ்வார்கள்.


சரஸ்வதி பூஜை அன்று அனைத்து அலுவலகங்கள், கடைகள் மற்ற எல்லோரும் சரஸ்வதிக்கு பூஜை செய்து வழிபடுவார்கள்.


கடைசி நாளான விஜய தசமி அன்று பராசக்தியானவள்   மகிஷாசுரனை  வதம் செய்வதாக ஐதீகம். இதையே நாம் நவராத்திரியாக கொண்டாடி மகிழ்கிறோம்.


மேலே கூறியவைகளை அனைவரும் கொண்டாடுவார்கள்  என்று சொல்லமுடியாது. ஆனால் விஜய தசமிக்கு  அடுத்த நாள்  ஆயுத பூஜை வெகு சிறப்பாக பட்டி தொட்டிஅனைத்து இடங்களிலும் கொண்டாடப்படும். உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை .ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.


விஜய தசமியன்று புதிதாகத் தொழில் தொடங்குவோர், கல்வி பயில ஆரம்பிப்போர் தங்கள் பணிகளை ஆரம்பித்தல் நன்று.


வாழ்த்துக்கள் கருத்து உதவி: வெங்கட், கோயம்புத்தூர்

செவ்வாய், செப்டம்பர் 22, 2009

இணையத்தில் காசாங்காடு கிராம சந்தை

இணையத்தில் கிராம சந்தை வேண்டுமென கிராமத்திலிருந்து மக்களின் வேண்டுகோளின் படி இந்த இணையம் வெளியிடப்பட்டுள்ளது.

http://market.kasangadu.com

இதில் கிராமத்தில் உற்பத்தியாகும் விவசயாம் சம்பந்தமான பொருட்கள், அவற்றை எவ்வாறு கொள்முதல் செய்வது பற்றி விளக்கம் அளித்துள்ளோம்.

உற்பத்தியாகும் பொருட்கள் விடுபட்டு இருந்தால் இணைய குழுவிற்கு தெரியபடுத்தவும். இது விவசாயிகள் முன்னேற வழி வகுக்கும் என நம்புகிறோம்.

தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.

நன்றி.

இவன்,
காசாங்காடு இணைய குழு

திங்கள், செப்டம்பர் 21, 2009

தொலைபேசி வழி காசாங்காடு இணையதளத்திற்கு செய்திகள் தெரிவிக்க வசதி.

தொலைபேசி வழி காசாங்காடு இணையதளத்திற்கு செய்திகள் தெரிவிக்க வசதி. உலகெங்கிலும் இருந்து தெரிவிக்க தொலைபேசி எண்கள் விரைவில் அறிவிக்க படும். இந்தியாவிலிருந்து இணைய தளத்திற்கு செய்திகள் தர அழைக்க வேண்டிய,

தொலைபேசி எண்: 9962545926
வெளிநாட்டிலிரிந்து அழைக்க வேண்டிய எண்: +91-9962545926

இணைய வசதி இல்லாமல் செய்திகளை தெரிவிக்க இவை பயனுள்ள வகையில் அமையும் என நம்புகிறோம்.

நன்றி.

பயன்படுத்தும் முறை:
  1. தாங்கள் பெயர் பதிவு செய்ய விரும்பவில்லை எனில் நீங்கள் அளித்த ஒலி அஞ்சலில் தெரிவிக்கவும்.
  2. தங்கள் இந்த எண்ணை அழைத்த பின் ஒரு சிறு ஒலிக்கு பிறகு நீங்கள் தெரிவிக்க வேண்டிய செய்திகளை தெளிவாக பேசவும்.
  3. செய்திகளை பேசி முடித்த பிறகு தாங்கள் யார் என்பதை குறிப்பிடவும். இணையத்தளத்தில் தகவல் தந்தவரின் பெயர் வெளியிட வசதியாக இருக்கும்.

வியாழன், செப்டம்பர் 17, 2009

இரண்டு நாட்காளாக இரவில் கடும் மழை

கிராமத்தில் இரண்டு நாட்காளாக இரவில் கன மழை.

செய்தி உதவி: தவமணி, பட்டுக்கோட்டை

சனி, செப்டம்பர் 05, 2009

253 உலக நகரங்களிலிரிந்து இணையதளத்திற்கு 25871 பக்கங்களை காண வருகை
ஒரு வருடத்திற்குள் 253 உலக நகரங்களிலிரிந்து இணையதளத்திற்கு 25871 பக்கங்களை காண வருகை புரிந்துள்ளனர்.
கிராமத்தின் நடவடிக்கைகளை காண வந்த அனைவருக்கும் இணையக்குழு நன்றியை தெரிவித்து கொள்கிறது.

இத்தகவலின் விரிவான கோப்பு இங்கே.


வெள்ளி, செப்டம்பர் 04, 2009

கிராமத்தில் ஏரி கட்டுமான பணி துரிதமாக நடைபெறுகின்றதுகடந்த பெரும் வெள்ளத்தில் நம் கிராம ஏரி உடைந்து விட்டதை அனைவரும் அறிவோம்.
கிராம இணையத்தளம் அத்தகவலை உடனுக்குடன் தெரியப்படுத்தியது.

ஆற்றில் தண்ணீர் வரப்பு தொடங்கிவிட்டதால், கிராமத்தில் ஏரி கட்டுமான பணி துரிதமாக நடைபெற்று வருகின்றது.
மிக வரைவில் இப்பணி முடிவடையும் என எதிர்பார்க்க படுகின்றது.

தகவல் உதவி: ராம்பிரகாஷ், காசாங்காடு

வியாழன், செப்டம்பர் 03, 2009

காசாங்காடு இணையதளம் முதலாம் ஆண்டு நிறைவு


அனைவருக்கும்:

காசாங்காடு இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டு இன்றோடு முதல் ஆண்டு நிறைவு பெறுகின்றது.

கிராமத்தில் உள்ள அனைவரின் ஒத்துழைப்பால் இந்த நிறைவு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.

எதிர்பார்த்ததை விட பன்மடங்கு தகவல்கள் மக்களுக்கு சென்றடைந்துள்ளது.

வரும் ஆண்டுகளில் மேலும் பல பயனுள்ள செய்திகள், மற்றும் உலகெங்கிலும் பறந்து கிடக்கும் காசாங்காடு கிராம மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் அமையும் என்று நம்புகிறோம்.

கிராம மக்கள் மட்டுமன்றி வெளி ஊர்களிரிந்து கிராமம் சம்பந்தமான தகல்வல்கள் மற்றும் கிராமம் முன்னேறுவதற்கான குறிப்புகளை அளித்த உள்ளங்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

அனைவரின் நல்ல உள்ளங்களுக்கும், ஒத்துழைப்புக்கும் மிகவும் நன்றி.

இவன்,
காசாங்காடு இணையக்குழு

ஞாயிறு, ஆகஸ்ட் 30, 2009

காசாங்காடு PLB - அணியினர் முதல் பரிசு

நாட்டுச்சாலை கிராமத்தில் நேற்று இரவு(28.08.2009) முசுகுந்த அளவிளான கபடிப் போட்டி நடைபெற்றது இதில் காசாங்காடு PLB-அணியினர் முதல் பரிசு பெற்று சாதனை படைத்தனர். இவர்களுக்கு காசாங்காடு இணையக்குழு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறது.

தகவல் உதவி: தீபக் குமார், காசாங்காடு


வியாழன், ஆகஸ்ட் 27, 2009

ஏழை மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன்


தகவல் உதவி: வீரபால், காசாங்காடு


தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களின் கல்விக் கடனுக்கான முழு வட்டியையும் மத்திய அரசே மானியமாக ஏற்றுக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று புதுடெல்லியில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

முழு வட்டி மானியத்தை பெற மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 4.5 லட்சமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்வியானாலும், பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு கிடைப்பதற்கு, இந்த வட்டி மானியம் உதவும் என்றும் அவர் கூறினார்.

நாடு முழுவதும் இத்திட்டத்தால் மொத்தம் 5 லட்சம் மாணவர்கள் பலனடைவார்கள் என்றும் கூறிய சிதம்பரம், கடந்த மார்ச் 31ஆம் தேதி வரையிலான காலத்தில் மொத்தம் 16 லட்சம் மாணவர்கள் கல்விக்கடன் பெற்றுள்ளதாகவும், 24 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மாதம் ரூ. 1500/- யில் 60 நாடுகளுக்கு அளவில்லாமல் தொலைபேசி மூலம் பேசலாம்

உலகத்தில் எப்பகுதியிலிரிந்தும் இந்தியாவிற்கு ஒரு மாதத்திற்கு அளவில்லாமல் பேச ரூ. 1500/- மட்டுமே. இதை அமெரிக்காவில் உள்ள "வோநேஜ்" என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து தொலைபேசி எண்களுக்கும், கை தொலைபேசி எண்களுக்கும் இதன் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் உங்களுக்கு தெரிந்தவர்கள் இதே சேவையில் இருந்தால் நீங்கள் இரண்டு மாதம் இலவசாமாக பேசலாம்.

இந்த சேவை மூலம் இந்தியா மட்டுமன்றி மேலும் 60 நாடுகளுக்கும் அளவில்லாமல் பேசலாம். அதில் சிங்கப்பூர், ஐரோப்பா நாடுகள், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் அடங்கும்.

இது ஒலியை இணையம் மூலம் அனுப்பும் தொழில் நுட்பத்தால் ஆனது.

கிராம மக்கள் தங்கள் வசிக்கும் நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து இந்த சேவையை பயன்படுத்தவும்.

நன்றி.

சனி, ஆகஸ்ட் 22, 2009

கிராமத்தில் ஒரு வாரமாக இரவில் கனத்த மழை

கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக இரவில் கனத்த மழை பெய்துள்ளது. கடுமையான வெயிலில் தவித்து கொண்டிருந்த கிராமத்திற்கு இது பெரும் அளவில் வெப்பத்தை தனிக்க உதவும் என நம்புகிறோம்.

தகவல் உதவி: தவமணி, பட்டுகோட்டை

ஞாயிறு, ஆகஸ்ட் 16, 2009

கிராமத்தில் நடந்த கபடி போட்டி முடிவுகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு ,காசாங்காடு PLB 25-வது வெள்ளி விழா கபடி போட்டியில்

உள்ளூர் புதுக்கோட்டை அணியினர் முதல்யிடத்தையும்,
ஆலம்பள்ளம் அணியினர் இரண்டாம்யிடத்தையும்,
பள்ளத்தூர் அணியினர் மூன்றாம்யிடத்தையும்,
காசாங்காடு அணியினர் நான்காம்யிடத்தையும்

தட்டி சென்றனர்.வெற்றிப் பெற்ற அணியினருக்கு விழாக்குழுவினர் பரிசு வழங்கி பாராட்டினர்.
வெற்றிப் பெற்ற அணியினருக்கு காசாங்காடு இணையக்குழுவின் வாழ்த்துக்கள்.

தகவல் உதவி: தீபக் குமார், காசாங்காடு

வெள்ளி, ஆகஸ்ட் 14, 2009

கிராமத்தில் மாபெரும் கபடி போட்டி

62-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, காசாங்காடு கிராமத்தில் இளைஞர்களால் நடத்தப்படும் PLB, 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மாபெரும் கபடி தொடர்ப்போட்டி வரும் 15.08.2009, சனிக்கிழமை இரவு 9-மணி அளவில் மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற உள்ளது.

அனைவரும் பங்குகொண்டு சிறபிக்க வேண்டுகிறோம்.

மேலும் கபடியை பற்றி தெரிந்து கொள்ள,

சர்வதேச கபடி பேரவை
சர்வதேச கபடி பேரவை


தகவல் உதவி: தீபக்குமார், காசாங்காடு

மாரியம்மன் கோவிலில் லட்ச அர்ச்சனை

காசாங்காடு மாரியம்மன் கோவிலில் இன்று மாலை 05:00 மணியளவில் லட்ச அர்ச்சனை நடைபெற இருக்கின்றது. பொது மக்கள் அனைவரும் பங்கு கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

நன்றி.

தகவல் உதவி: நெடுஞ்செழியன், காசாங்காடு

புதன், ஆகஸ்ட் 12, 2009

பன்றி காய்ச்சல் - கிராமத்திற்கு தெரியவேண்டியவை

காசாங்காடு கிராமத்தில் இருந்து வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அதிகம். வெளிநாட்டு போக்குவரத்து அதிகம் இருப்பதால் பன்றி காய்ச்சல் பற்றி விழிப்புணர்வு மிகவும் அவசியம்.

பின்வரும் இணைய சுட்டிகள், கிராம மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் என நம்புகிறேன்.

பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க‌ சில யோசனைகள்
பன்றி காய்ச்சல்
ஸ்வைன் ஃப்ளு - சில குறிப்புக்கள் (பன்றி காய்ச்சல்)
பன்றி காய்ச்சல் H1N1 பரவலும், கணிதமும்
பன்றி காய்ச்சல் பரவுவது எப்படி?
பன்றி காய்ச்சல் நோய் பரவுவதை தடுக்க ...
பன்றி காய்ச்சல்: பலியான மாணவியின் குடும்பம் ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு
கூகிள் செய்திகள் தேடு தளத்திலிருந்து

தகவல் உதவி: ஞானசெல்வி, திருநெல்வேலி

செவ்வாய், ஆகஸ்ட் 11, 2009

கிராமத்தில் கன மழை

கிராமத்தில் தற்போது இடியுடன் கூடிய கனமழை பெய்து கொண்டு இருக்கின்றது.

நன்றி.

தகவல் உதவி: தவமணி, பட்டுகோட்டை.

ஞாயிறு, ஆகஸ்ட் 09, 2009

பட்டுக்கோட்டை Times பத்திரிக்கையில் காசாங்காடு இணையத்தளம் பற்றி

பட்டுக்கோட்டை Times வார இதழ் பத்திரிக்கையில், 07.08.2009 அன்று வெளியான செய்தி பற்றிய தொகுப்பு கீழே.
நன்றி.
தகவல் உதவி: பட்டுக்கோட்டை Times, பட்டுக்கோட்டை .

சென்னை பல்கலைகழகத்தில் செல்வி. வித்யா தங்க பதக்கம்

சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரிந்து வரும் திரு. ஷண்முகம் & தேன்மொழி அவர்களின் மகள் செல்வி. வித்யா அவர்கள் சென்னை பல்கலைகழகத்தில் M.Sc Bioinformatics பிரிவில் மூன்றாம் இடம் பெற்று தங்க பதக்கம் பெற்றுள்ளார்.

கிராமத்திற்கு பெருமை சேர்க்கும் செல்வி. வித்யாவை காசாங்காடு இணைய குழு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

நன்றி.

புதன், ஜூன் 24, 2009

தமிழ்நாடு கால் பந்தாட்ட அணியில் இளமுருகன்

காசாங்காடு, நடுத்தெரு, முத்தாம் வீட்டை சேர்ந்த இளமுருகன் (த/பெ மாரிமுத்து) தமிழ்நாடு கால் பந்து அணியில் இடம் பெற்றுள்ளார். இவர் இந்தியன் வங்கியின் ஆட்டக்காராக இடம் பெறுவார்.கிராமத்தில் இருந்து மாநிலம் மற்றும் தேசிய அளவில் விளையாட்டுகளில் பங்கு பெறுவது கிராமத்தை மேலும் பெருமை அடைய செய்கிறது.

சமீபத்தில் நடந்த சந்தோஷ் பரிசுகோப்பையில் இவர் கலந்து கொண்டு விளையாடியுள்ளார் என்பது குறுப்பிடத்தக்கது.

இணையத்தில் மேலும் இது சம்பந்தமான 82 சுட்டிகள் இங்கே.

இவரின் பங்கு மேன்மேலும் வெற்றியடைய இணைய குழுவின் வாழ்த்துக்கள்.

செய்தி உதவி: அருள்செல்வன், சென்னை

செவ்வாய், ஜூன் 23, 2009

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் நேரில் சந்திப்பு

காசாங்காடு, நடுத்தெரு குட்டச்சி வீட்டை சேர்ந்த தீபக்குமார் தனது தொழில் நுட்ப உதவியை, பொது தொண்டு நிறுவனங்களுக்கு, சமீப காலாமாக தனக்கு கிடைக்கும் நேரங்களில் செய்து வந்தார். இதில் ஒரு நிறுவனத்திற்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பார்வையிட வரும் பொது அவருடன் கலந்துரையாடும் புகைப்படம்.


இவரின் பணிகள் மேன் மேலும் தொடர இணைய குழுவின் வாழ்த்துக்கள்.

ஞாயிறு, ஜூன் 21, 2009

விருது பெற்ற காசாங்காடு ஊராட்சி மன்ற தலைவருக்கு எமது பாராட்டு

தினமணியில் வெளிவந்த செய்தியின் தொகுப்பு இங்கே.
விருது பெற்ற காசாங்காடு ஊராட்சி மன்ற தலைவருக்கு எமது பாராட்டு


தஞ்சை மாவட்டத்தில் விருது பெற்ற ஊராட்சிகள்

First Published : 19 Jun 2009 10:32:47 AM IST


தஞ்சாவூர், ஜூன் 18: தஞ்சாவூர் மாவட்டத்தில் 2007-08 ஆம் ஆண்டுக்கான நிர்மல் கிராம் புரஸ்கார் விருது பெற்ற ஊராட்சிகள் (அடைப்புக்குறிக்குள்) மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பெயர் விவரம் வருமாறு:

தஞ்சாவூர் வட்டாரம் பி. கலைச்செல்வி (பிள்ளையார் நத்தம்), பூதலூர் வட்டாரம் தமிழ்செவ்வி ரஞ்சன் (கடம்பங்குடி), திருவையாறு வட்டாரம் ஷேக் அலாவுதீன் (முகாசாகல்யாணபுரம்), கே. இளவரசி (வடுககுடி), ஒரத்தநாடு வட்டாரம் கை. கோவிந்தராஜன் (அருமுளை), ரமாதேவி அன்புமணி (புலவன்காடு), செல்வி (உரந்தராயன்குடிகாடு), திருவோணம் வட்டாரம் சௌந்தரராஜன் (அம்மங்குடி).

கும்பகோணம் வட்டாரம் தமிழ்செல்வி (கீழபாளையார்), நல்லப்பன் (திருநல்லூர்), ப. ஜெயபால் (உத்தமதாணி), திருவிடைமருதூர் வட்டாரம் ஆர். யசோதா (ஸ்ரீநிவாசநல்லூர்), ஜி. முல்லைவேந்தன் (திருநீலக்குடி), எஸ். விஜயா (ஆண்டலம்பேட்டை), ஆர். கருணாநிதி (மஞ்சமல்லி), திருப்பனந்தாள் வட்டாரம் ஜி. குணசேகரன் (குறிச்சி), ஜி. முருகன் (கஞ்சனூர்).

பாபநாசம் வட்டாரம் என். நாசர் (சக்கராப்பள்ளி), ஆர். வசந்தா (கணபதி அக்ரஹாரம்), து. சௌந்தர்ராஜன் (ராமானுஜம்), அம்மாபேட்டை வட்டாரம் சுப்பிரமணியன் (புலவர் நத்தம்), பட்டுக்கோட்டை வட்டாரம் ஏ. ஜெர்மான்ஸ் (அணைக்காடு), எஸ். ஜெகதீசன் (பொன்னவராயன்பேட்டை), மைக்கேல்சாமி (வீரக்குறிச்சி).

மதுக்கூர் வட்டாரம் வி.ஆர். வீரசுப்ரமணியன் (வேப்பங்குளம்), எஸ். மரகதம் (மதுக்கூர் வடக்கு), கே. மீனாட்சி (வாட்டக்குடி உக்கடை), ப. சிதம்பரம் (காசாங்காடு), ஆர். ராசேந்திரன் (கருப்பூர்), பேராவூரணி வட்டாரம் த. இளங்கோ (வளபிரம்மன்காடு), சேதுபாவாசத்திரம் வட்டாரம் ஏ. சரவணன் (கட்டயங்காடு உக்கடை), வேலுசாமி (வீரய்யன்கோட்டை).
செய்தி உதவி: தினமணி

செவ்வாய், ஜூன் 09, 2009

பழனிவேலு-ஜெயம் அவர்களுக்கு பேத்தி பிறந்துள்ளது


நடுத்தெரு ஆட்டுக்காரன் வீடு,
பழனிவேலு-ஜெயம் மகனான ரெங்கபாஷ்யம் தம்பதினியர்களுக்கு செவ்வாய்கிழமை அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறது.

செய்தி உதவி: ரெங்கபாஷ்யம், காசாங்காடு

புதன், ஜூன் 03, 2009

காசாங்காடு மாரியம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா


காசாங்காடு மாரியம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா வரும் வெள்ளிகிழமை வைகாசி 22, ஆம் நாள் நடைபெற உள்ளது.
பொது மக்கள் அனைவரும் பங்கு பெற்று சிறபிக்க வேண்டுகிறோம்.

தகவல் உதவி: மாரிமுத்து, காசாங்காடு

சனி, மே 09, 2009

பாராளுமன்ற உறுப்பினர் போட்டியாளர்கள் - தேர்தல் 2009

தேர்தல் 2009 (தஞ்சாவூர் தொகுதி) பாராளுமன்ற உறுப்பினர் போட்டியாளர்கள்:

சரவணன் 40/ஆண் பகுஜன் சமாஜ்
துரை பாலகிருஷ்ணன் 64/ஆண் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்
பழனிமாணிக்கம் 58/ஆண் திராவிட முன்னற்ற கழகம்
ராமநாதன் 38/ஆண் தேசிய முற்போக்கு திராவிட கழகம்
வீரமணி 42/ஆண் சமாஜ்வாதி கட்சி
கார்த்திகேயன் 38/ஆண் சுயேட்சை
சிவகுமார் 31/ஆண் சுயேட்சை
சோழமன்னர் கனகராஜா 63/ஆண் சுயேட்சை
பாலு (A) பாலன் 37/ஆண் சுயேட்சை
பிரசன்னா 26/ஆண் சுயேட்சை
முருகராஜ் 30/ஆண் சுயேட்சை
ராஜாமணி 54/ஆண் சுயேட்சை
விஜயலட்சுமி 36/ஆண் சுயேட்சை

செய்தி மூலம்: தலைமை தேர்தல் ஆணையம், புது டெல்லி

வியாழன், மே 07, 2009

சித்திரை பௌர்ணமி சுப்பிரமணியர் கோவில் திருவிழா
சித்திரை பௌர்ணமி சுப்பிரமணியர் கோவில் திருவிழா, வரும் வெள்ளிகிழமை சித்திரை மாதம் 25 ஆம் நாள் நடைபெற உள்ளது. கிராம மக்கள் அனைவரும் பங்கு பெற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.

நன்றி.

சனி, மே 02, 2009

பட்டுக்கோட்டையார் கலை இலக்கிய விழா சிறப்பாக நடைபெற்றது

பட்டுக்கோட்டையார் கலை இலக்கிய விழா, நெல்லைக்கண்ணன் அவர்களின் இலக்கிய பேருரையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.மேலும் நெல்லைக்கண்ணன் அவர்கள் விஜய் தொலைக்காட்சி் "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு" நிகழ்ச்சியில் பிரபலாமானவர்.

நன்றி.

செய்தி மூலம்: Infoline, Singapore

வெள்ளி, மே 01, 2009

கழனிக்கவி மலர் - பட்டுக்கோட்டையார் கலை இலக்கிய விழா, சிங்கப்பூர்

கழனிக்கவி மலர் - பட்டுக்கோட்டையார் கலை இலக்கிய விழா, சிங்கப்பூர்.
மே 1, 2009 சிங்கப்பூரில் நடப்பதை முன்னிட்டு இலவச வெளியீடாக, சமுதாயம் வெளியிட்டுள்ள மலர்.

இதுவே அந்த மலரின் தொடர்பு சுட்டி.

முயற்சி செய்து இந்த மலரை வெளியிட்டுள்ள அனைவருக்கும் காசாங்காடு இணையக்குழுவின் மனமார்ந்த நன்றிகள்.

நன்றி.

செய்தி மூலம்: காசிநாதன், சிங்கப்பூர்

செவ்வாய், ஏப்ரல் 28, 2009

தென்னை மரங்களில் புதிய வியாதி - கிராமம் பாதிப்பு

சில மாதங்காளாக தென்னை மரங்களில் புதிய வியாதியால் மரங்கள் அடியோடு சாய்ந்து விடுகிறது. இதனால் தென்னை மகசூல் பெருமளவில் பாதித்துள்ளது.

காசாங்காடு இணைய குழு, விளக்கமான படங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப பரிந்துரை செய்கிறது. மேலும் தாங்கள் அனுப்பிய விபரங்களுக்கு தகவல் உரிமை சட்டத்தின் கீழ் என்ன நடவடிக்கை எடுக்கபட்டது? அல்லது அதற்க்கு தீர்வு இருக்குமாயின் அந்த தகல்வளையும், பதிலில் அனுப்புமாறு அதில் குறிப்பிடவும்.

அனைத்து தேங்காய் சம்பந்தமான தகவல்களுக்கும்:

Coconut Development Board,
Kera Bhavan, SRVHS Road, Kochi, Kerala State - 682011, INDIA
http://coconutboard.nic.in/

or

Central Plantation Crops Research Institute,
Kasaragod 671 124, Kerala, India

அனைத்து விவசாய ஆராய்ட்சி மற்றும் விவசாய முறைகள் சம்பந்தமான தகவல்களுக்கும்:

Vice Chancellor
Agricultural College and Research Institute
Tamil Nadu Agricultural University Coimbatore-641003 India

மேலும் இம்முகவரிகள் தகவல் உரிமை சட்டத்தின் இணைய தள, முகவரிகள் பக்கத்தில் குறிப்புக்காக பதிக்கபட்டுள்ளது. http://rti.kasangadu.com/mukkiya-mukavarikal

நன்றி.

செய்தி உதவி: ராஜராஜசோழன், சென்னை

சனி, ஏப்ரல் 25, 2009

கோபால் ஆசிரியரை நினைவு கூர்ந்த பாரி அரசுக்கு எமது நன்றி


கோபால் ஆசிரியரை நினைவு கூர்ந்த பாரி அரசுவிற்கு (சிலம்பவேளாங்காடு) காசாங்காடு இணைய குழுவின் மனமார்ந்த நன்றிகள்.

அவர் எழுதிய கருத்துக்கள் இதுவே.

நீயா! நானா! பார்ப்பதை நிறுத்தி சில மாதங்களாகிவிட்டது! ஆகையால் நிகழ்வை பற்றி கருத்து எதுவுமில்லை!

ஆனால்...
ஆசிரியன் என்பவன் யார்?
அவனுக்கு என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்?

கற்றல், கற்பித்தல்... இவற்றின் நோக்கம் என்ன?


எதுவெல்லாம் உனக்கு தெரியும்... என்று ஒரு ஆசிரியனிடம் கேள்வி கேட்கும் முட்டாள்தனத்தை! அதை ஆராதிக்கும் மனோநிலையை வன்மையாக கண்டிக்க வேண்டியுள்ளது.

உங்களுக்கு ஒரு நிகழ்வை மட்டும் சொல்லிவிடுகிறேன்...

பட்டுக்கோட்டை வட்டம், காசாங்காடு கிராமத்தில் பணியாற்றிய கோபால் என்கிற ஆசிரியர்...
இந்த உலகத்தை பற்றி அறிவற்றவர்...
உங்களை போல உலகசினிமா, உள்ளூர் சினிமா அறிந்திராதவர்...
அவரை தெரியுமா? இவரை தெரியுமா? என்கிற கேள்விக்கும் அவரிடம் விடை இருந்திருக்காது! நீங்க கடைசியா படித்த நூல் எதுவென்றால்.. விடை அவருடைய பாடநூலாக கூட இருந்திருக்கலாம்...!?

கோபால் ஆசிரியர் ஆசிரியனாக வாழ்ந்தார்!
அதன் தடங்கள் அந்தபகுதியெங்கும் இருக்கு!

வியாழன், ஏப்ரல் 16, 2009

தேர்தல் முக்கிய நாட்கள் - 2009

1. அறிவிப்பு வெளியிடப்படும் நாள், சித்திரை 4 (Friday Apr 17, 2009)

2. வேட்பு மணு தாக்க கடைசி நாள், சித்திரை 11 (Friday Apr 24, 2009)

3. வேட்பு மணு பரிசீலனை நாள், சித்திரை 12 (Saturday Apr 25, 2009)

4. வேட்பு மணு விலக கடைசி நாள், சித்திரை 14 (Monday Apr 27, 2009)

5. தேர்தல் நாள், சித்திரை 30 (Wednesday May 13, 2009)

6. வாக்கு எண்ணிக்கை,  வைகாசி 2 (Saturday May 16, 2009)

செவ்வாய், ஏப்ரல் 14, 2009

கிராமத்தில் அய்யனார் கோவில் திருவிழா

கிராமத்தில் இன்று அய்யனார் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

செய்தி உதவி: தமிழ்மாறன், காசாங்காடு

மரபு படியான தமிழ் புது வருட வாழ்த்துக்கள்

மரபு படியான தமிழ் புது வருட வாழ்த்துக்கள்.

நன்றி.

ஞாயிறு, ஏப்ரல் 12, 2009

கிராமத்தில் கன மழை

கிராமத்தில் சில நாட்களாக மழையும், நேற்று இரவு கனத்த மழை.

செய்தி உதவி: செந்தமிழ்செல்வி, காசாங்காடு

திங்கள், ஏப்ரல் 06, 2009

நாடாளுமன்ற தொகுதி மாற்றம்

2009 ஆம் ஆண்டிலிருந்து காசாங்காடு கிராமம் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதிக்கு வாக்களிப்பார்கள். இந்த திருத்தத்தை தமிழக தேர்தல் ஆணையம் 2007 ஆம் ஆண்டு செய்தது. இதற்க்கு முன்பு புதுகோட்டை பாராளுமன்ற தொகுதிக்கு வாக்களித்தார்கள்.

மேலும் வேட்பாளர்களின் (பாராளுமன்றம் & சட்ட சபை) அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விபரங்கள், குற்றவியல் நீதிமன்ற வழக்குகள் இருப்பின் அதை பற்றிய விபரங்கள் அனைத்தும் தகவல் உரிமை சட்டத்தின் படி தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வெளியிடப்படும்.

நன்றி.

செய்தி உதவி: காஞ்சனா, சென்னை

புதன், மார்ச் 25, 2009

தமிழ்நாடு அரசு பாட புத்தகங்கள் - 1 முதல் 12 வரை

ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை இணையத்தில் அனைத்து பாட புத்தகங்களும் தமிழ்நாடு நாடு அரசு கல்வி துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி ஆசிரியர் தொழிலில் டிப்ளோமா படிப்பிற்குரிய அனைத்து அரசு பதிப்புகளும் இதே இணையத்தில் உள்ளது.


திங்கள், மார்ச் 23, 2009

நெஞ்சை கவர்ந்த ஆத்மாக்கள் - செந்தில்குமார், சிலம்பை

1999 ஆம் ஆண்டு, மே மாதம், 23 தேதி, கிராம முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் திரு. விஸ்வநாதன் அவர்களை பற்றி "ஜூனியர் விகடனில்", சிலம்பவேளாங்காட்டை சேர்ந்த திரு. நடேசன். செந்தில்குமார் அவர்கள் எழுதிய "நெஞ்சை கவர்ந்த ஆத்மாக்கள்" கட்டுரை இங்கே.

இக்கட்டுரை ரூ. 250/- பரிசையும் பெற்றது குறுப்பிடத்தக்கது.

செய்தி உதவி: இளம்பரிதி தங்கராசு, சிலம்பவேளாங்காடு

நல்ல உள்ளங்களுக்கு காசாங்காடு இணையக்குழு நன்றியை தெரிவித்து கொள்கிறது.


ஞாயிறு, மார்ச் 22, 2009

கிராம வாக்காளர் பட்டியல் - 2009

2009 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல்.

மொத்த வாக்காளர்கள்: 2296 (ஆண் 1080, பெண் 1216)

தெற்குதெரு, கீழத்தெரு வாக்காளர் கோப்பு - 1211 (ஆண் 558, பெண் 653)
நடுத்தெரு, வடக்குதெரு, மேலதெரு வாக்காளர் கோப்பு - 1085 (ஆண் 522, பெண் 563)

வெள்ளி, மார்ச் 20, 2009

அனைத்து பக்கங்களும் 2007-2008 வரவு செலவு கணக்குகள்

அரசாங்கத்தில் அனுப்பிய அனைத்து பக்கங்களும் உங்கள் பார்வைக்கு. இணையத்தில் அதன் கோப்புக்கான தொடர்பு சுட்டி இங்கே.

கடவுச்சொல்: kasangadu.com


புதன், மார்ச் 18, 2009

2007-2008 13 கூட்டமும் 64 தீர்மானங்களும்

2007- 2008 ஆம் நிதியாண்டில் 13 கூட்டங்களும், 64 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு கூட்டத்திலும் ஒன்பது நபர்கள் மற்ற மக்களுக்கு பிரதிநிதிகளாய் இருப்பவர்கள் என்று எண்ணுகிறோம் !. அந்த ஒன்பது நபர்களின் பெயர்கள் கூடிய கோப்பு விரைவில் வெளியிடப்படும். அவர்களை ஊராட்சி எவ்வாறு தேர்வு செய்தது என்பதும் வெளியிடப்படும்.கண்ணெதிரே மாறிய கணக்குகள்


கண்ணுக்கு தெரியாத கணக்குகள் ஏதும் இங்கு உண்டோ?
கண்ணெதிரே மாறிய கணக்குகள்.
நன்றி.

செவ்வாய், மார்ச் 17, 2009

குடிநீர் கட்டண மோசடியா? ரூ. 72850 எங்கே?

தனி இணைப்பு குடிநீர் கட்டணம் ரூ. 360 (ஒரு வருடத்துக்கு)

மொத்தம் உள்ள இணைப்புகள் - 423
மொத்த கட்டணம்: 360 * 423 = 152280

கணக்கில் காண்பித்துள்ள தொகை ரூ. 79430.

மீதமுள்ள ரூ.72850 எங்கே?

கிராம தலைவர் இதற்கான பதிலை நேரடியாக அளிக்கலாம். kasangaducom@googlegroups.com என்ற மினஞ்சல் முகவரிக்கு விளக்கத்தை அனுப்பவும்.

நன்றி.