இப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.
அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.
காசாங்காடு அய்யனார் கோவிலில் மிருகங்களை பலியிடுவது கிராமத்தில் தடை செய்யபட்டுள்ளது. சமீப காலத்தில் நடுத்தெரு தாண்டாம் வீட்டை சேர்ந்த வினைதீர்த்தான் மகனான கோவிந்தராசு (சிங்கப்பூரில் வசிப்பவர்), அய்யனார் கோவிலில் ஆடுகளை பலியிட்டுள்ளார். கிராம சட்டங்களை மீறியதற்கு ரூபாய் 10,000 அபராதமாய் கிராமம் விதித்துள்ளது.
நமது ஊரில் இன்று 16.01.2009 கானுப்பொங்கலை முன்னிட்டு விளையாட்டுப்போட்டிகள்,இலக்கியப்போட்டிகள் கிராமத்தின் சார்பாக ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைப்பெற்றது,இப்போட்டியில் சிறுவர்கள்,சிறுமியர்கள்,பெரியோர்கள் கலந்துகொண்டனர்.வெற்றிப் பெற்றவர்களுக்கு ஊரட்சி மன்றத்தின் சார்பாக பரிசளித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
காசாங்காடு கீழத்தெரு வண்டிகருப்பனம் வீட்டு மறைந்த திரு.பெத்து வேளாளர் மகன் திரு.கபிலன் அவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்த போது சுற்றி உள்ளவர்கள் அதை பார்த்து அவரை பட்டுக்கோட்டை சங்கீதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.அவரின் இந்த செயலுக்கு என்ன காரணமென்று தெரியவில்லை.