அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

வெள்ளி, டிசம்பர் 30, 2011

ஆங்கில புத்தாண்டு (1/1/2012) முதல் - சிகரெட், பீடி, பான்பராக் விற்க தடை
ஆங்கில புத்தாண்டு முதல் (1/1/2012) காசாங்காடு கிராம கடைகளில் சிகரெட், பீடி, பான்பராக் விற்க தடை.

தகவல் மூலம்: காசாங்காடு ஊராட்சி

புகை பழக்கத்தை விடுவிக்க வழிகள்: (இணைய சுட்டிகள்)ஞாயிறு, டிசம்பர் 25, 2011

மாரியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை நிழற்படங்கள்நிழற்படங்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.
தாங்களின் தனியுரிமை மீறபட்டிருப்பின் இணைய குழுவில் பகிர்ந்து கொள்ளவும்.


வெள்ளி, டிசம்பர் 23, 2011

மாரியம்மன் கோவிலில் இன்று விளக்கு பூஜை


காசாங்காடு அருள்மிகு மாரியம்மன் கோவிலில் இன்று விளக்கு பூஜை.

அனைவரும் பங்குகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

குறிப்பு: தகவல் தாமதமாக பெறப்பட்டது.

சனி, டிசம்பர் 17, 2011

காசாங்காடு மேலத்தெரு & வடக்குதெரு அய்யனார் கோவில் கட்டும் பணிநிழற்படத்தை பகிர்ந்து கொண்ட உள்ளங்களுக்கு எமது நன்றிகள்.


சனி, டிசம்பர் 03, 2011

ஆறுமுகம் மாமணி இல்ல திருமண விழா
திருமண தேதி மற்றும் நேரம்: Dec 5, 2011 , 10:30 மேல் 11:30 க்குள்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், காசாங்காடு

மணமகன் பெயர்: செல்வன். அய்யநாதன்
மணமகன் வீட்டின் பெயர்: பொன்னிவீடு, கீழத்தெரு
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. ஆறுமுகம் & திருமதி. மாமணி
மணமகன் தொழில் விபரம்: M.Sc (Comp)

மணமகள் பெயர்: செல்வி. மங்கை
மணமகள் ஊரின் பெயர்: வேலியாவீடு, தெற்குதெரு
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. திருவேங்கடம் & திருமதி. சரோஜா
மணமகள் தொழில் விபரம்: G.N.M

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்:

http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய:

http://matrimony.musugundan.கம


மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.


வெள்ளி, டிசம்பர் 02, 2011

ஆத்திக்கோட்டை கிராம இணைய தளம்

ஆத்திக்கோட்டை இணையதளத்திற்கு தங்களை வரவேற்கிறோம் !!

http://athikkottai.yolasite.com/

குறிகிய வரவேற்புரை:

"அடி ஆத்தி!" யென்று மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்கு நஞ்சையும்,புஞ்சையும் கொஞ்சி கூடி விளையாடும் குதூகல ஊரிது கண்ணில் ஏற்றிக் கொள்ள வைக்கும் பச்சைப் பசேலென்ற பாங்கான ஊரிது கிராமம் என்ற பேர் இருந்தபோதும் நகரத்திற்குரிய நாகரிகம் தழைத்த நறுக்கென்ற நல்லூரிது பலரின் மனக்கோட்டைகளுக்கு பாதை வகுத்துக் கொடுத்த ஊரிது கோட்டை போட்டுக் கொண்டு கோட்டைக்கு செல்லவும் வழிகாட்டும் ஊரிது வயிற்றுப் பசியையும்,அறிவுப் பசியையும் ஒரு சேர தீர்க்கும் ஒய்யார ஊரிது இந்த அழகிய ஆத்திக்கோட்டையை என்றென்றும் ஆராதிப்போம்!!!

வியாழன், டிசம்பர் 01, 2011

காசாங்காடு இளைஞர் கலந்துரையாடல் கூட்டம் - 27.11.11 அவைக் குறிப்பு


புதிய ஊராட்சி மன்றம் செயல் படுத்த ஏதுவான திட்டங்களை அடையாளம் காண 27.11.11 அன்று  நடைபெற்ற இளைஞர் கலந்துரையாடல் கூட்டம்

அவைக் குறிப்பு 
1.  கூட்டம்  3.00 மணிக்கு துவங்கி 5.30 மணி வரை நமது மேனிலைப் பள்ளியில் நடை பெற்றது.
2. ஊராட்சி மன்றத் தலைவர் திரு சதாசிவம்,   ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர் திரு வீரய்யன்,  மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு மெய்க்கப்பன் மற்றும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் திரு இராசராச சோழன் உட்பட 25 பேர் கலந்து கொண்டனர். 
3.  அனைவரையும்  திரு முத்துசாமி வரவேற்றார். திரு நடராசன் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கினார்.  மேலும் இணையம் மூலம் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை வாசித்தார்.
4.  கூட்டத்தில் கீழ்க் காணும் பொருட்கள் பற்றி விவாதிக்கப்பட்டது:
    அ.  திட்டக்குழு அமைத்தல் -  நல்ல ஆலோசனையாக ஏற்கப்பட்டது; 
        குழு அமைப்பு, உறுப்பினர் பெயர் பற்றி அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யலாம்
    ஆ. நீண்டகாலத் திட்ட வரைவு தயாரித்தல்
        திட்ட அறிக்கை தயார்ச செய்து சுற்றுக்குவிடலாம்;  அடுத்த கூட்டத்தில் விவாதித்து                 முடிவு செய்யலாம்
    இ. அறக்கட்டளை  ஏற்படுத்துதல்
        அறக்கட்டளை அமைப்பு, விதிகள் , உறுப்பினர் நிதி  பற்றி அடுத்த கூட்டத்தில் முடிவு                 செய்யலாம்
    ஈ. உழவர் சங்கம் ஏற்படுத்துதல்
        ஊராட்சித் தலைவர் உடனடியாக சங்கத்தைபதிவுசெய்ய்ய நடவடிக்கை எடுப்பது; 
        திரு மாரிமுத்து நாபார்டு வங்கி உதவிக்கு ஏற்பாடு செய்வார்
    உ.  பாசன விவசா யிகள் சங்கம் ஏற்படுத்துதல்
        சங்க அமைப்பு, பதிவு செய்தல்  பற்றி அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யலாம்
    ஊ. சில முக்கியத் திட்டங்கள்: (அரசு சார்ந்தவை)
        ஊராட்சி மன்ற வளாகத்தில் கொட்டகை அமைத்தல்
        - ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர் திரு வீரய்யன் நிதிக்கு ஏற்பாடு செய்வார்
        ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தல்
        -  அரசு அனுமதி கிடைத்து பணிகள் துவங்கி விட்டன
        நெல் கொள்முதல் நிலையம் அமைத்தல்
        -  அரசு அனுமதிக்கு  முயற்சி  மேற்கொள்ளுதல்
        துணை மின் நிலையம் அமைத்தல்
        -  அரசு அனுமதிக்கு  முயற்சி  மேற்கொள்ளுதல்
         மண் பரிசோதனை நிலையம் அமைத்தல்
         - நடமாடும்  நிலையத்தை முதலில் பயன் படுத்தலாம்;  பின்னர் நிலையத் தேவை பற்றி                     ஆலோசிக்கப்படும் 
        வடகாடு வாய்க்கால் (பெரிய ஆறு) கரையை தார் சாலையாக்குதல்
        -  அரசு அனுமதிக்கு  முயற்சி  மேற்கொள்ளுதல்
    எ.  மற்ற திட்டங்கள்:
        வேலை வாய்ப்பு உருவாக்கம்
        பெண்களுக்கு உள்ளூரில் வேலை
        இளைஞர் தொழிற் பயிற்சி
    ஏ.  காசாங்காடு ஊராட்சிப் பணிகளை கணனி மயமாக்குதல்
        - ஊராட்சித் துணைத்தலைவர் திரு இராசராச சோழன் ஏற்பாடு செய்வார்
    ஐ. ஊராட்சி அலுவலகத்திற்கு இணைய இணைப்பு பெறுதல்
        - ஊராட்சித் துணைத்தலைவர் திரு இராசராச சோழன் ஏற்பாடு செய்வார்

5.  அடுத்த கலந்தாய்வுக் கூட்டத்தை ஒரு மாத இடைவெளியில்  நடத்துவது என்றும் அடுத்த கூட்டத்திற்கு இன்னும் அதிக எண்ணிக்கையில்  இளஞர்களைத் திரட்டுவது என்றும் ஊரின் நீண்ட காலத்திட்டத்தின் முதல் வரைவை  தயார் செய்து  ஆலொசனை செய்வது என்றும் முடிவு செய்ய்யப்பட்டது.

தகவல் உதவி: Prof. Dr.V.Natarajan BTech (PSG Tech) MTech (IIT-D)PhD(TUL,Czech Rep.), Chennai