அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

புதன், டிசம்பர் 24, 2008

வெள்ள நிவாரண நிதி வழங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது

தமிழக அரசால் வழங்கப்பட்ட வெள்ள நிவாரண நிதியில் நமது கிராமத்தில் தவறுகள் நடந்த காரணத்தால் மேல் அதிகாரிகளுக்கு தெரிய வந்து விசாரணைக்கு கொண்டு வரப்பட்டு முழுவதுமாக நிவாரண நிதி வழங்காமல் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

செவ்வாய், டிசம்பர் 23, 2008

நாளை நமது ஊரில் 1000 பேருக்கு அன்னதானம் நடைபெருகிறது

நாளை மார்கழி மாதம் 9ஆம் தேதி நமது ஊர் அய்யனார் கோவிலில் 1000 பேருக்கு அன்னதானம் நடைபெற உள்ளது.



புதன், டிசம்பர் 17, 2008

தியாகத்திற்கு நேர்ந்த துரோகம் - மக்கள்குரல்

தியாகத்திற்கு நேர்ந்த துரோகம்


முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

- குறள் (388) அதிகாரம்-39.

என்ற வள்ளுவன் வாய்மொழிக்கு ஏற்ப,

வயதில்,அறிவில்,முதியோர்-ஊரின்
வாய்மைப் போருக் கென்றும் இளையார்
உயர் எண்ணங்கள் மலரும் சோலை!
ஓங்கும் அமரர் இரா.விஸ்சுவநாதன்

இவர் தான் எமது கிராமத்தின் மாபெரும் தலைவர்,சட்டம் பயிலாத சட்ட மேதை,நீதி மன்றம் போகாது நீதியை காத்த நீதி அரசர்,ஊருக்கே உழைத்த உத்தமர்,தன் வாழ்க்கை பேனாதா தியாக செம்மல்.இவர் வாழ்ந்த காலத்தை சொன்னால் பதினைந்து ஆண்டுக்கு மேல் கணக்கு பணியாளராகவும்,மேலும் இருபது ஆண்டுக்கு மேல் ஊராட்சி மன்ற தலைவராகவும் செயல்ப்பட்டு வரலாற்று பாத்திரதில் கால் பதித்தவர் எமது அய்யா விஸ்சுவநாதன் அவர்கள்.

இந்த மகாத்மா அன்று செய்த முயற்சியும் செயல்பாடும் தான் இன்றைக்கு காசாங்காடு கிராமத்தைப் பற்றி நாடு எங்கிலும் மக்கள் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது பெருமைக்கு உரிய ஒன்று. இவர் ஆற்றிய தொண்டு,வழங்கிய நீதி எமது கிராமத்திற்கு மட்டும் அல்லாமல் சுற்றுப் பட்ட கிராமத்திற்கும் செய்து உள்ளார்,அதனால் இது நாள் வரையிலும் சுற்றி உள்ள கிராமங்களில் இவருக்கென்று தனிப் பெருமையும் புகழும் உண்டு என்பதை அனைவரும் அறிவார்கள்.

ஒவ்வொரு சூழ்நிலையிலும் எப்படி செய்ய வேண்டும் என்பதை தனிச்சையாக முடிவு செய்யாமல் அனைவர்களின் கருதுகளை எடுதுக்கொண்டு அதற்கு ஏற்றார் போலும் செயல்பாட்டிற்றிக்கு தகுந்தார் போலும் நீதியையும் பணிகளையும் ஆற்றி வந்தார்.இவர் ஆற்றிய பணிகளை பட்டியியல் இட்டு பார்த்தால் ஒரு சகாப்த்தம் படைத்து விடலாம் என்பது உண்மை.இன்றைக்கு எத்தனையோ செய்திகளை பெருமைக்குரிய செய்திகளாக குரிப்பிட்டு காட்டி உள்ளோம் அத்தனையும் இவர் கண்ட கனவு எடுத்த முயற்சிகள் பொக்கிசமாய் காக்கப் பட்டு வருகிறது.

அப்படி பட்ட மாமனிதனுக்கு ஒரு துரோகம் இழைக்கப்பட்டதை அறிந்தவர்கள் இன்று வரையிலும் மறக்க இயாலது என்பது உண்மை.அறியாதோர் இது நாள் வ்ரையிலும் எவரும் ஆராய்ந்து பார்க்கவில்லை அதனால் பொய்கள் மறைக்கப்பட்டு விட்டது.அன்று அவரின் மேல் சுமத்தப் பட்ட ஒரு குற்றசாட்டு அவரை மரண ஏக்கத்திற்கு கொண்டு சென்று விட்டது.

பல தரப்பு மக்களுக்கும் நீதி வழங்கிய அவருக்கு நீதி சொல்ல எவருமே இல்லை என்பதனால் அவர் எம்மையெல்லாம் ஏங்க வைத்து விட்டு சென்று விட்டார். ஆகையால் அவர் செய்த தியாகத்திற்கு இப்படிப் பட்ட துரோகம் இழைக்கப்பட்டதே அவர் மரணத்திற்கு காரணமாயிற்று.

பல்லார் பகைகொளலின் பத்துஅடுத்து தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.

- குறள்(45)- அதிகாரம் 45.

இந்த குறளடிக்கு ஏற்ப இவரை கைநழுவ விட்டு விட்டோம் என்பது மனதை காயப்படுத்தும் செய்தியாகும்

செவ்வாய், டிசம்பர் 16, 2008

ஊரில் நேற்று இரவு கனத்த மழை

ஊரில் நேற்று இரவு கனத்த மழை பெய்துள்ளது.

புதன், டிசம்பர் 10, 2008

முதல் புகார் கடிதம் - கிராமவாசிகள்

புகார் கடிதம்
அனுப்புதல்:
பொதுநலவிரும்பிகள்,
காசாங்காடு கிராமம்,
மதுக்கூர் ஒன்றியம்,
பட்டுக்கோட்டை வட்டம்.
பெறுநர்:
கோட்டாச்சியர் அவர்கள்,
கோட்டாச்சியர் அலுவலகம்,
பட்டுக்கோட்டை.
ஐயா,
பொருள்: மழை நிவாரணம் குறைபாடுகள் பற்றி.

நாங்கள் அனைவரும் காசாங்காடு கிராமத்தில் வசித்து வருகிறேம் தற்போது ஏற்பட்ட வெள்ளத்திற்க்காக அரசு நிவாரண நிதி வழங்க உள்ளதை சரியாக கணக்கீடு செய்யாமல் ,மேல் மட்டத்தில் உள்ளவர்களின் பேச்சை கேட்டு கிராமநிர்வாக அலுவலகர் எங்களை போன்ற ஏழைக் குடும்பங்களுக்கு ஓட்டு வீடு என்று எழுதி நிதி வழங்க உள்ளார்கள்,ஆனால் எங்களாது குடும்பங்கள் வசிப்பது கூரை வீட்டில் தான்.நாங்கள் இது நாள் வரையிலும் வீட்டு வரி கட்டுவது கூட கூரை வீட்டுக்குதான்.

மேலும் கிரமத்தில் உள்ள அரசியல் குலர்படியின் காரணமக மாடி வீட்டில் இருப்பவருக்கு கூட அவர்களுக்கு உரிமைப்பட்ட கூரை போடப்பட்ட குடிசைகளை வீடு என்று எழுதப்பட்டுள்ளது.இதனை தாங்கள் விசரனைக்கு கொண்டு வந்தால் அனைத்தையும் ஆதாரத்தோடு நிருபணம் செய்ய தயராக உள்ளோம். நாளை(11.12.2008) வெள்ளம் நிவாரண நிதி வழங்க உள்ளதக அறிவிக்கப்பட்டுள்ளது அதற்குமுன்னதாக தாங்கள் இதனை விசாரனைக்கு கொண்டு வருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
கிராமநலவிரும்பிகள்,
காசாங்காடு.

செய்தி உதவி: பெயர் வெளியிட விரும்பாத நபர்.
இதன் பதிப்பு மாவட்ட ஆட்சியாளருக்கும், கோட்ட ஆட்சியாளருக்கும் அனுப்பபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிராமத்தின் சில பகுதி மின்சாரம் இல்லாமல் 10 நாட்கள்

கிராமத்தின் சில பகுதிகள் மழை புயல் காரணமாக 10 நாட்களாக மின்சாரம் வழங்கப்படவில்லை.

ஊரில் மக்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்தை அணுகி முயற்சிகள் செய்த பின் தான் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

என்று தான் அரசின் அமைப்புகள் குடிமகன்களின் இன்றியமையாத தேவைகளை முயற்சிகள் இல்லாமல் பூர்த்தி செய்ய போகின்றது?

மாநகரத்தில் நடக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சட்டம் பற்றிய அனுபவ கட்டுரை இங்கே.

சனி, நவம்பர் 29, 2008

மின் உற்பத்தி இயந்திரம் மூலம் மோட்டார்களை இயக்கி குடிதண்ணீர்.

பட்டுகோட்டையில் இருந்து வாடகைக்கு மின் உற்பத்தி இயந்திரம் எடுத்து வந்து, அதன் மூலம் மேல் தொட்டி மோட்டார்களை இயக்கி ஊர் முழுவதும் குடிதண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

பட்டுகோட்டையில் இருந்து நேரடியாக வரமுடியாததால், (ரோடுகளில் எங்கு பார்த்தாலும் மரங்கள் விழுந்து கிடக்கின்றது) பல ஊர்கள் கடந்து ஊர் மக்கள் இந்த முயற்சிகளை செய்துள்ளனர்.

முயற்சி செய்த அனைத்து கிராமத்து மக்களுக்கும் காசாங்காடு இணைய குழு சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

வெள்ளி, நவம்பர் 28, 2008

மாவட்ட ஆட்சியாளர் வெள்ள நிவாரணம் பற்றி அறிவிப்பு

தகவல் உதவி: தேசிய தகவல் மையம், தஞ்சாவூர்.
இதன் இணைய இணைப்பு இங்கே.


கிராம முன்னேற்றதுக்கு உதவி புரியும் சக்திதரனுக்கு எமது நன்றி


காசாங்காடு கிராமத்து மக்களின் முன்னேற்றதுக்கு வழி காட்டி கொடுக்கும் சக்திதரனுக்கு எமது நன்றி.

அவர் எழுதிய நம் கிராமத்திற்கு உதவும் வகையில் தொழில்கள் என்ற கட்டுரை இங்கே . குறுகிய முதலீட்டில் வருமானம் தேடும் தொழில் என்று அந்நிறுவனம் குறிபிட்டுள்ளது. ஆர்வம் உடையோர் அந்நிறுவனத்தை இங்கே அணுகவும்.

நான்கு நாட்களாக மின்சாரம் இல்லை, குடிதண்ணீர் இல்லாமல் கிராமம் பரிதவிப்பு


பருவ மழை நின்று விட்டாலும், தற்போது மின்சாரம் இல்லாததால் மக்களுக்கு குடிதண்ணீர் இல்லை. காசாங்காடு கிராமத்தில் குடிதண்ணீர் விநியோகிக்கும் மேல் தொட்டிகள் அனைத்தும் ஆழ் குழாய் கிணறு மூலம் இயங்குகின்றன. மின்சாராம் இல்லாததால் தற்போது கிராமம் முழுவதும் குடிதண்ணீர் இல்லை.

இதற்கான தீர்வு, மின் உற்பத்தி இயந்திரம் (Generator) மூலம் மேல் தொட்டி மோட்டார்களை இயக்க முயற்சி.


செய்தி உதவி: தமிழழகி, காசாங்காடு

வியாழன், நவம்பர் 27, 2008

தொடர் வெளியீடு: மஞ்சுகுப்பம் ஏரி உடைப்பு


முந்தைய செய்தியின் தொடர் வெளியீட்டு பகுதி இது.

முனியன் கோவில் தென்புரத்தில் உள்ள ஆலமரத்தில் ஆரம்பித்து ஏரியின் தெற்கு சருக்கை வரையில் மஞ்சுகுப்பம் ஏரி உடைந்து தண்ணீர் புரண்டு ஓடியது.

இதனால் சிலம்பவேலாங்கட்டிர்க்கும் காசாங்காட்டிர்க்கும் இடையிலான போக்குவரத்து தற்போது துண்டித்து உள்ளது.

தற்போது கிடைத்த தகவல் படி கிராமத்தில் மழை நின்று விட்டது.


செய்தி உதவி: தாமரை

மஞ்சுகுப்பம் ஏரி முனியன் கோவில் அருகே உடைந்து விட்டது

கிராமத்தில் மஞ்சுகுப்பம் ஏரி முனியன் கோவில் அருகே உடைந்து விட்டது.
சேதம் என்னவென்ற விவரம் தெரியவில்லை. ஊரில் அனைத்து தெருக்களிலும்
வெள்ளம்.

இரண்டு நாட்களாக மழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மரங்கள் ரோடுகளில் விழுந்து கிடப்பதாலும் மற்றும் ரோடுகளில் தண்ணீர்
தேக்கம் அதிகம் இருப்பதாலும் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.

தொலைபேசி இணைப்பகம் இயல்பாக இயங்கி வருகிறது. பெரும்பாலோர் வீட்டின் தொலைபேசி இணைப்புகள் புயல் மற்றும் மரகிளைகள் முறிவால் வேலை செய்யவில்லை.

காசாங்காட்டில் உள்ளோர் யாரேனும் வெள்ளம் சம்பந்தமாக புகைப்படங்கள்
மற்றும் செய்திகள் இருந்தால் இணைய குழுவிற்கு உடன் தெரியப்படுத்தவும்.

புதன், நவம்பர் 26, 2008

கனத்த மழை நீடிக்கின்றது. புயல், வெள்ளம் அபாய எச்சரிக்கை.

கிராமத்தில் கனத்த மழை நீடிக்கின்றது. புயல், வெள்ளம் அபாய எச்சரிக்கை.
ஏரிகள், குளங்கள் அனைத்திலும் தண்ணீர் பொங்கி வழிகின்றன
.
மாலை 5 மணிக் கோடியக்கரை அருகே கரையை கடக்கும் என்று தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

ஞாயிறு, நவம்பர் 23, 2008

கிராமத்தில் இன்று கனத்த மழை


இன்று கிராமத்தில் கனத்த மழை பெய்துள்ளது. மிகவும் வரட்சியான இந்த தருணத்தில் இந்த மழை மிகவும் உதவியாக இருக்கும்.

செய்தி உதவி: முகில், காசாங்காடு

சிறந்த சுகாதார கிராமம், ஜனாதிபதி விருது


காசாங்காட்டிற்கு சிறந்த சுகாதார கிராமம், ஜனாதிபதி திருமதி. பிரதிபா தேவிசிங் பாட்டில் விருது.

காசாங்காடு கிராமம் சார்பாக ஊராட்சி மன்ற தலைவர் திரு.சிதம்பரம் அவர்களுக்கு வழங்கப்படும்

செய்தி உதவி: தீபக் குமார், சென்னை

சனி, நவம்பர் 15, 2008

தேசிய தகவல் மைய தொழில் நுட்ப இயக்குனர் பாராட்டு

தேசிய தகவல் மையம், தஞ்சாவூர் . இயக்குனர் திரு. இராயப்பன் காசாங்காடு இணையம் பற்றி பாராட்டு.

இதுவே அவர் மின்னஞ்சலின் தமிழாக்கம்,

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

அன்பின் அய்யா,

தங்கள் காசாங்காடு கிராம இணையதளம் உருவாக்குவதற்க்கான முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள். முதலில் அவை வடிவைமக்கப்பட்ட விதமும் மற்றும் கிராம சம்பந்தமான தகவல்களை தெரிந்து கொள்வதற்கும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இரண்டாவது அவை முற்றிலும் தமிழில் இருப்பதை பார்த்தவுடன் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

அய்யா, மேலும் தாங்கள் அரசு சம்பந்தமான தஞ்சாவூர் மாவட்ட இணைய தளங்களை உருவாக்குவதற்கு எங்களால் ஆன உதவியை தங்களுக்கு தருவதில் பெருமிதம் கொள்கிறோம். தங்களின் உதவி தஞ்சாவூர் மாவட்ட இணைய தளத்தை சிறந்த முறையில் உருவாக்குவதற்கு பெரிதும் துணை புரியும் என நம்புகிறோம்.

அய்யா, தங்களை தேசிய தகவல் மையம், மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம், தஞ்சாவூர் வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அவசியம் பார்வையிடவும். தங்களை இங்கு பார்ப்பதில் எங்களுக்கு பெரு மகிழ்ச்சி.

நன்றியுடன்,
அ. இராயப்பன்,
தொழில் நுட்ப இயக்குனர் மற்றும் மாவட்ட தகவல் அதிகாரி,
தேசிய தகவல் மையம், தஞ்சாவூர்


<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

காசாங்காடு கிராம மற்றும் இணையதள முன்னேற்றத்திற்கு உதவி புரியும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் எமது நன்றி.

வெள்ளி, நவம்பர் 14, 2008

காசாங்காடு பள்ளியில் புகையிலை எதிர்ப்பு பேரணி


அதை பற்றிய செய்தி இங்கே.


பட்டுக்கோட்டை அடுத்த காசாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் என்.எஸ்.எஸ். மாணவ மாணவிகள் புகையிலை எதிர்ப்பு பேரணி நடத்தினர்.
என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் வினோத்குமார் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் பெரியசாமி பேரணியை தொடங்கி வைத்தார். ஆசிரியர்கள் சீனிவாசன், செல்வகுமார், சரவணகுமார், தனலெட்சுமி, மைதிலி, பூங்கொடி, துரைராஜ், முருகேசன், ஞானபிரகாசி, லலிதா, வானதி, மாதவி உள்பட 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


செய்தி உதவி: மதுக்கூர் இணையம்

திங்கள், அக்டோபர் 27, 2008

தஞ்சை மாவட்ட ஆட்சியாளர் காசாங்காடு இணையத்தளம் பற்றி பாராட்டு

தஞ்சை மாவட்ட ஆட்சியாளர் திரு. சண்முகம் IAS (இந்திய நிர்வாக சேவை) காசாங்காடு இணைய தளம் பற்றி பாராட்டு.

இதுவே அவர் எழுதிய மின்னஞ்சல்,

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Dear Thiru Kannaiyan
I am very happy to see that you have taken the efforts to develop a
website for Kasangadu village. It is very well-done. My congratulations to
you.
We will be able to give you the data required soon through e-mail shortly.
I also request you to get in touch with Asst Director (Panchayats)
Thanjavur in this regard.


With Good wishes,
M.S.Shanmugam,IAS
District Collector
Thanjavur.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

அதன் தமிழாக்கம் பின் வருமாறு,

>>>>>>>>>>>>>

அன்பின் திரு. கண்ணையன்,

தாங்கள் காசாங்காடு கிராம இணையத்தளம் அமைப்பதற்கான முயற்சிகளை பாராட்டுகிறேன்.
அவை மிகவும் சிறப்பாக வடிவமைக்கபட்டுள்ளது. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
தாங்கள் காசாங்காடு கிராமம் பற்றி கேட்ட தகவல்களை மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிறோம்.

மேலும் தாங்கள், உதவி தலைமை நிர்வாகி (பஞ்சாயத்து), தஞ்சாவூர் அவர்களையும் இது சம்பந்தமாக அணுகவும்.

நல் வாழ்த்துகளுடன்,
M.S. சண்முகம், [இந்திய நிர்வாக சேவை]
மாவட்ட ஆட்சியாளர்,
தஞ்சாவூர்.

>>>>>>>>>>>>>>>

எங்கள் கிராமம் முன்னேற உதவி புரியும் ஒவ்வொருவருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றி.

ஞாயிறு, அக்டோபர் 26, 2008

தீபாவளி நல் வாழ்த்துக்கள்


காசாங்காடு இணைய குழு அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

மத்திய நடுபயிர் ஆராய்ச்சி கழகம் 54 லட்சம் ரூபாயில் ஆராய்ச்சி

மத்திய நடுபயிர் ஆராய்ச்சி கழகம் 54 லட்சம் ரூபாய் ஆராய்ச்சிக்காக ஒதுகபட்டத்தில், 27 லட்சம் ரூபாய் காசாங்காடு கிராமத்தில் ஆராய்ச்சிக்காக 2002 ஆண்டு முதலீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய நடுபயிர் ஆராய்ச்சி கழகத்திடம் இதற்கான கணக்குகள் மற்றும் ஆராய்ச்சியின் முடிவுகள் பற்றி கேட்டுள்ளோம்.

அதை பற்றிய பத்திரிக்கை செய்தி இங்கே .
காசர்கோட்டில் உள்ள மத்திய நடுபயிர் ஆராய்ச்சி கழகம் பற்றி இங்கே தெரிந்து கொள்ளவும்.

முடிவுகள் கிடைத்தபின் அவைகள் இந்த இணையதளத்தில் பகிர்ந்து கொள்ளப்படும். இம்முடிவுகள் மேலும் பல ஆராய்ச்சிகள் செய்ய விரும்பும் நிறுவனங்கள் முதலீடு செய்ய உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.

செய்தி உதவி: தீ ஹிந்து

செவ்வாய், அக்டோபர் 14, 2008

வானிலை: இன்று கனத்த மழை பெய்துள்ளது.

வெகு நாட்களுக்கு பிறகு இன்று நம் கிராமத்தில் கனத்த மழை. இவை தற்போது நெல் பயிர் நடவு நட மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்ப படுகிறது.

செய்தியாளர்: ராஜலக்ஷ்மி, சென்னை

புதிய துணை ஊராட்சி மன்ற தலைவர் நியமனம்


புதிய துணை ஊராட்சி மன்ற தலைவராக நடுத்தெரு குப்பாயி வீடு கருணாநிதி தேர்ந்தெடுக்க பட்டார்.


செய்தியாளர்: ராஜராஜசோழன், சென்னை

ஞாயிறு, அக்டோபர் 05, 2008

காந்தி ஜெயந்தி அன்று காசாங்காடு கிராமம் பற்றி பேச்சு

காந்தி ஜெயந்தி அன்று காசாங்காடு கிராமம் பற்றி நினைவு கூறிய சக்திதரன்க்கு எமது நன்றி.

அதை பற்றிய கட்டுரை இங்கே .

சனி, அக்டோபர் 04, 2008

அலமேலு, காரிமுத்து அவர்களுக்கு பேத்தி பிறந்துள்ளது.

நடுத்தெரு வேலிவீடு அலமேலு, காரிமுத்து மகனான செல்வர் தம்பதினியர்களுக்கு சனிக்கிழமை அன்று பெண் குழந்தை பிறந்தது.காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறது.

செய்தியாளர்: ராஜராஜசோழன், சென்னை.

சனி, செப்டம்பர் 06, 2008

காசாங்காடு ஊராட்சி தலைவர் ப. சிதம்பரம் பதவி நீக்கம்

காசாங்காடு ஊராட்சி தலைவர் ப. சிதம்பரம் பதவி நீக்கம் என்று மாவட்ட ஆட்சியாளர் ஆணையிட்டு உள்ளார்.

கிராமிய வேலை வாய்ப்பு திட்டத்தில் மோசடி செய்ததாக இந்த குற்றச்சாட்டு.

தினமணி இணையத்தில் இது சம்பந்தமான தகல்வல்கள்.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080903114249&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&ndate=9/4/2008&dName=No+Title&Dist