அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

செவ்வாய், செப்டம்பர் 27, 2011

தகவல் உரிமை சட்டம் - கிராமத்தானின் நிலைமை - மாவட்ட நிர்வாகம் ஆணை - 349 நாட்கள்


எங்கள் நாட்டிலும் தகவல் உரிமை சட்டம் உள்ளது என்று தோள் தட்டி கொள்ளும் இந்தியாவின் தகவல் உரிமை சட்டத்தின் உண்மையான நிலவரம் என்ன என்பதை ஒரு கிராமத்தானின் பார்வையில். அதன் தொடரே இது. இன்னும் தகவல் கிடைத்த பாடில்லை என்பதே அதன் உண்மையான நிலவரம்.

http://news.kasangadu.com/search/label/rti 

மேல் முறையீட்டு விண்ணப்பத்திற்கு மாவட்ட அதிகாரி அனுப்பியுள்ள பதில் கீழே காண்பிக்கப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்போம் எப்போது பதில் வருகிறது என்று. முழுமையாக கேட்ட தகவல்களை கிராம நிர்வாகம் அளிக்க வேண்டும்.

மேலும் அனைத்து தகவல்களையும் எந்தவித கட்டணமின்றி இலவசமாக அளிக்க உத்தரவிட்டதையும் காணலாம்.ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

போட்டியின்றி கிராம தலைவர் தேர்ந்தெடுக்க முயற்சி


கிராம தலைவரை போட்டியின்றி (Unopposed President) தேர்ந்தெடுக்க கிராமத்தில் நேற்று மாலை ஊர் கூட்டம் நடைபெற்றது. மிகவும் பெரிய முயற்சி என்பதில் சந்தேகம் இல்லை. மாலை நான்கு மணி அளவில் தொடங்கிய கூட்டம் இரவு ஒன்பது மணி வரை நீடித்தது. முடிவில் போட்டியின்றி தலைவரை தேர்ந்தெடுக்க ஒருமித்த கருத்து நிலவவில்லை.

அரசியல் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து மக்களின் நலத்தை பற்றி சிந்திக்க இது போன்ற முயற்சிகள் உதவும்.

கிராமத்தினரின் இந்த முயற்சிக்கு இணைய குழுவின் வாழ்த்துக்கள்.

வியாழன், செப்டம்பர் 22, 2011

2011 ஊராட்சி தேர்தல் விபரங்கள்


காசாங்காடு ஊராட்சி தேர்தல் 2011 சம்பந்தமாக தகவல்கள் அறிந்து கொள்ள தகவல் உரிமை தளத்தில் அதற்கான பக்கத்தை வடிவமைத்து வருகிறோம். தகவல் கிடைக்கும் போது அந்த தகவல்கள் உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளப்படும். இந்த தகவல்களை தமிழ்நாடு தேர்தல் ஆணைய இணைய தளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

அரசாங்க தகவல்கள், வேட்பாளர் பற்றிய தகவல்கள், தேர்தல் முடிவுகள் இங்கு பகிர்ந்து கொள்ளப்படும்.

காசாங்காடு தகவல் உரிமை தளம்: http://rti.kasangadu.com/tertal/2011-uratci-tertal

வியாழன், செப்டம்பர் 15, 2011

கீழத்தெரு காத்தவேளாம் வீடு மாரிமுத்து கோமளா அவர்களுக்கு பேத்தி பிறந்துள்ளது


பிறந்தவர் பெயர்: அபிநயா
பிறப்பின் பால்: பெண்
வீட்டின் பெயர்: காத்தவேளாம் வீடு
பெற்றோர்களின் பெயர்: திருமதி. சுபத்ரா & திரு. குமரன்
பிறந்த நாள்(தோராயமாக): ஆகஸ்ட் 17 2011
பிறந்த நாடு: வட கரோலினாஐக்கிய அமெரிக்கா

தாயும் சேயும் நலம்.

குடும்பத்தினருக்கு இணைய குழுவின் வாழ்த்துக்கள்.

செவ்வாய், செப்டம்பர் 13, 2011

நடுத்தெரு, வேளாம்வேடு, திரு. கபிலன் அப்பாகண்ணு - பொது சேவை பதக்கம்


நடுத்தெரு, வேளாம்வேடு, திரு. கபிலன் அப்பாகண்ணு அவர்களுக்கு சிங்கப்பூரில் பொது சேவை பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இவர் டங்களின் (Tanglin) குமுகாய உறவு மையத்தின் இந்திய நடவடிக்கை நிர்வாக குழிவின் (CC IAEC) தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


காசாங்காடு இணைய குழு, திரு. கபிலன் அவர்கள்,  இந்த பதக்கம் பெற்றமைக்கு  மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறது.

தகவல் உரிமை சட்டம் - கிராமத்தானின் நிலைமை - கிராம நிர்வாக கேவலம்


எங்கள் நாட்டிலும் தகவல் உரிமை சட்டம் உள்ளது என்று தோள் தட்டி கொள்ளும் இந்தியாவின் தகவல் உரிமை சட்டத்தின் உண்மையான நிலவரம் என்ன என்பதை ஒரு கிராமத்தானின் பார்வையில் தொடரும் தொடரே இது.

இது சம்பந்தமான முந்தைய தகவல்.


தற்போது இந்த நிகழ்ச்சி மிகவும் கேலி கூத்தாக அமைந்துள்ளது.

விண்ணப்பதாரர் தகவல் கேட்டு அனுப்பியுள்ள விண்ணப்பத்திற்கு காசாங்காடு கிராம நிர்வாககிகள் அதே பெயர் கொண்ட நபரின் வீட்டிற்கு நேரடியாக சென்று   கேள்விகளை கேட்டுள்ளனர்.

இதில் சம்பந்த பட்டவர்,

காசாங்காடு கிராமம், கீழத்தெரு, காத்தான்வீடு கணக்கபிள்ளை என்று அழைக்கப்படும் திரு.வீரப்பன் அவர்களின் மகன் திரு. ஜெயவேல்.
திரு.ஜெயவேல் காசாங்காடு கிராம மக்கள் நல பணியாளாராக பணிபுரிபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரோடு மற்றொவரும் துணை சென்றுள்ளார். அவரை பற்றிய தகவல் கிடைத்ததும் விபரங்கள் வெளியிடப்படும்.

இந்த செயல் மக்கள் நல பணியாளரின் செயல் போன்று தோன்றவில்லை. அமைதியாக இருக்கும் கிராம சூழ்நிலைகளில் மக்களை மிரட்டும் பணியாக  தான் தெரிகின்றது.

  1. யார் இவர்களுக்கு விண்ணப்பதாரரின் வீடு புகுந்து கேள்வி கேட்கும்  அதிகாரம் / உரிமையை வழங்கியது?
  2. இவ்வாறு தான் காசாங்காடு நிர்வாகம் கிராமத்தை நிர்வகிகின்றதா? அல்லது மக்களுக்கு நல பணியாளாராக சேவை செய்கின்றாரா?
  3. ஒரு வருடம் ஆகியும் கிராம கணக்குகளை தர முடியாத நிலையில், இவர்கள் பொது சொத்துகளிலும் அரசாங்க பணத்திலும் ஊழல் செய்துள்ளார்களா? அல்லது கணக்குகளை சரி செய்கின்றார்களா?
  4. தனது பதவி காலம் முடியும் வரை இவ்வாறு தள்ளி போட்டு அடுத்து வரும் கிராம தலைவர் மீது இந்த சுமையை தள்ளி விடும் முயற்சி என்பதும் இதில் புலானாகின்றது.

நேர்மையான நிர்வாகமாக இருந்தால் விண்ணப்பத்தாரர் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டுமே தவிர எந்த விண்ணப்பாதரரின் வீட்டிற்க்கும் சென்று பேரம்/குறுக்குவழி கேட்கவேண்டியதில்லை. விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பற்றிய தெளிவான விளக்கம் வேண்டுமெனின் நிர்வாகத்தின் அதிகாரிகளை அல்லது விண்ணப்பத்தாரரை விண்ணபத்தின் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இது காசாங்காடு கிராம நிர்வாகத்திற்கு மட்டும் ஏற்பட்ட அவலம் அல்ல, ஒவ்வொரு காசாங்காடு கிராம குடிமகன்களுக்கும் ஏற்பட்டுள்ள அவலம். எங்கள் கிராமம் இப்படி தான் என்று எங்கள் கிராம நிர்வாகிகள் வெளி உலகிற்கு எடுத்துரைக்கும் விதம்.

கிராமத்தை பற்றிய தகவல் கேட்கும் ஒவ்வொரு இந்திய குடிமகன்களிடமும் கிராம நிர்வாகம் பற்றி நேர்மையை விளக்கும் விதமும் ஆகும்.

காசாங்காடு கிராம நிர்வாகம் மூலம் உங்களின் அமைதியான வாழ்வில் இடர்பாடுகளின் நடந்திருப்பின் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


செவ்வாய், செப்டம்பர் 06, 2011

நடுத்தெரு குட்டச்சிவீடு துரைசாமி சவுந்திரம் இல்ல திருமணம்திருமண தேதி மற்றும் நேரம்: 11 செப்டம்பர் 2011  09:00 மணிக்கு மேல் 10:30 க்குள்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், காசாங்காடு

பெண் அழைப்பு இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், காசாங்காடு

மணமகன் பெயர்: செல்வன். திருநாவுக்கரசு
மணமகன் வீட்டின் பெயர்: குட்டச்சி வீடு, நடுத்தெரு
மணமகன்  பெற்றோர் பெயர்: திரு. துரைசாமி & திருமதி. சவுந்திரம் 

மணமகள் பெயர்: செல்வி. விஜி
மணமகள்  வீட்டின் பெயர்: தவுடம்வீடு, தெற்குதெரு
மணமகள்  பெற்றோர் பெயர்: திரு. விஸ்வலிங்கம் & திருமதி. கலைச்செல்வி


திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்:  http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam
முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.comமணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

சனி, செப்டம்பர் 03, 2011

காசாங்காடு இணைய தளம் - நான்காம் ஆண்டு தொடக்கம்


காசாங்காடு இணைய தளம் இன்று அதன் நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது.

தகவல் பகிர்ந்து கொண்ட அனைத்து பொது மக்களுக்கும், காசாங்காடு கிராமத்தின் பெருமையை உயர்த்தும் வகையில் உலகின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் அனைத்து காசாங்காடு குடிமகன்களுக்கும், தொழில்நுட்ப திறமையுடன் எவ்வித தகவல் தொழில்நுட்பங்களையும் காசாங்காடு கிராமத்திற்கு கொண்டு வரும் இணைய குழுவிற்கும் எமது பாராட்டுக்கள்.

வருடாந்திர இணைய புள்ளிவிபரங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்.

கிராமத்தின் வாழ்க்கை தரம் மற்றும் குடிமகன்களின் சுதந்திரம் மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்.

தொடர்ந்து  அனைவரின் ஆதரவும் ஊக்கமும் காசாங்காடு இணைய தளத்தை  மேம்படுத்த உதவும் என நம்புகிறோம்.

அன்புடன்,
காசாங்காடு இணைய குழு

வியாழன், செப்டம்பர் 01, 2011

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்


கிராம மக்களுக்கு, இணைய குழுவின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.