அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

ஞாயிறு, ஜூலை 31, 2011

தகவல் உரிமை சட்டம் - கிராமத்தானின் நிலைமை - கடைசியாக கிடைத்த தகவல்


எங்கள் நாட்டிலும் தகவல் உரிமை சட்டம் உள்ளது என்று தோள் தட்டி கொள்ளும் இந்தியாவின் தகவல் உரிமை சட்டத்தின் உண்மையான நிலவரம் என்ன என்பதை ஒரு கிராமத்தானின் பார்வையில் முன்பு பார்த்தோம். அதன் தொடரே இது. இன்னும் பதில் கிடைத்த பாடில்லை என்பதே அதன் உண்மையான நிலவரம்.

இதுவே அதன் சுட்டி.


மனு அனுப்பிய நாள்: 13 அக்டோபர் 2010 
அனுப்பிய மனு: https://docs.google.com/Doc?docid=0Ad79pv5cgYSiZGd6d3BxeHhfMTQzZ3p3OHN0cmo&hl=en
மேல் முறையீட்டு விண்ணப்பம்: https://docs.google.com/document/d/1kffFmQ8EM3E0yDUeLcjRvJ7ffzYHEg8uEn0Mm2P9jGw/edit?hl=en
அனுப்பிய மனுவின் பதிலாக அனைத்து தரப்பிலும் மாவட்ட அலுவலகம், ஊராட்சி இயக்குனர் அலுவலகம், தற்போது ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து பதில் ரூபாய். 1100/- (550 பக்கங்களுக்கு, ஒரு பக்கத்திற்கு இரண்டு ரூபாய் வீதம்).

மனு அனுப்ப எவ்வளவு தொகை என்று அனுப்புவதற்கு இதுவரை சரியாக 250 நாட்கள் ஆகியுள்ளது. 13 நவம்பர் 2010  க்குள் பதில் அனுப்பினால் மட்டுமே அதற்கான தொகையை விண்ணப்பதாரர் செலுத்த வேண்டும். இல்லையெனில் தகவல் உரிமை சட்டம் 2005  கீழ் எந்த வித தொகையையும் விண்ணபதாரர் செலுத்த தேவையில்லை


பொது தகவல் அலுவலர், குறிப்பிட்ட கால கெடுவிற்குள் தகவல்களை அளிக்க தவறுமிடத்து தகவல் பெறும் உரிமை சட்டம் 2005,   பிரிவு 7, உட்பிரிவு 5 இன் படி நிர்ணநியிக்கபட்ட கட்டணமின்றி, விண்ணப்பதாரருக்கு கேட்கப்பட்டுள்ள தகவலை அளிக்க வேண்டும்.

இந்த மனுவின் மூலம் தனது கடமையை செய்ய தவறிய காசாங்காடு கிராம ஊராட்சி தலைவர் காசாங்காடு கிராமத்திற்கு ரூபாய். 1100 /- இழப்பீடு செய்துள்ளார். இது போன்று எத்தனை இழப்பீடுகள் என்று தெரியவில்லை. கிராமத்தின் விபரங்கள் தெரிந்தால் தான் அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும்.

மேலும் கேட்கப்பட்டுள்ள தொகைக்கு எந்த வித விபரமும் இல்லை. எப்படி மதுக்கூர் ஒன்றியம் இந்த தொகையை முடிவு செய்துள்ளது என்பதை விண்ணபதாரருக்கு தெளிவாக அளிக்க வேண்டும். 

இந்த சட்டத்தை பற்றிய தெரியாத அரசு அதிகாரிகளுக்கு / மக்கள் பிரதிநிகளுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகலம் அவர்களுக்கு தேவையான கல்வியை அளிக்குமாறு பரிந்துரைகின்றேன். மேலும் கேட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் இலவசமாக அளிக்குமாறு  கேட்டுகொள்கிறேன்.

மதுக்கூர் ஒன்றிய அனுப்பியுள்ள தகவலின் மின்னணு பிரதி உங்கள் பார்வைக்கு.


தகவல் மூலம்: கண்ணையன்


புதன், ஜூலை 27, 2011

ஆடி பூஜை அழைப்பிதழ் - அருள்மிகு முனீஸ்வரர் சுவாமி திருக்கோவில்


தேதி மற்றும் நேரம்: கர வருடம் ஆடி 23  [ 8/8/2011 ] திங்கள்கிழமை 9:15 க்கு மேல் 10:30 க்குள்

இது சமயம் அனைத்து கிராமத்தினரும் பங்கு கொண்டு முனீஸ்வரர் அருள் பெருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

குறிப்பு: அன்றைய தினம் 12:00  மணியளவில் அன்னதானம் நடைபெறும்.

இப்படிக்கு,
நிர்வாகிகள் மற்றும் கிராமவாசிகள்


திங்கள், ஜூலை 25, 2011

தண்டோரா: மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு

இன்று மாலை மாரியம்மன் கோவில் உண்டியல் திறக்கபடுகின்றது. கிராம மக்கள் பங்கு கொண்டு காணிக்கைகளின் விபரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இந்த தகவல் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

திங்கள், ஜூலை 11, 2011

மன்னங்காடு / மூத்தாக்குறிச்சி / ஆலடிக்குமுளை கிராமங்கள் அதன் இணைய தளங்களை தொடங்கியது

நமது கிராமத்திற்கு தென் திசையில் அமைந்திருக்கும் கிராமமான மன்னங்காடு அதன் இணைய தளத்தை தொடங்கியது.

மன்னங்காடு இணைய சுட்டி: http://www.mannankadu.org/

நமது கிராமத்திற்கு வடக்கு திசையில் அமைந்திருக்கும் கிராமமான மூத்தாகுருச்சி அதன் இணைய தளத்தை இன்று தொடங்கியது.

மூத்தாக்குறிச்சி இணைய சுட்டி: http://www.moothakurichi.com/

பட்டுக்கோட்டை நகரத்திற்கு வடமேற்கு திசையில் அமைந்திருக்கும் கிராமமான ஆலடிக்குமுளை அதன் இணைய தளத்தை தொடங்கியது.

ஆலடிக்குமுளை இணைய சுட்டி: http://aladikkumulai.blogspot.com/

இந்த தளங்களை பின்வருவருபவர்கள் நிர்வகிக்கின்றார்கள்.

மன்னங்காடு: டாக்டர். துரைசாமி நவநீதம்
மூத்தாகுருச்சி: பொறியாளர். முருகேசன்
ஆலடிக்குமுளை:  திரு. சத்தியமூர்த்தி

மேம்படுத்திய காசாங்காடு பக்கம்: http://www.kasangadu.com/mucukunta-camutayam
மேம்படுத்திய முசுகுந்த சமுதாய பக்கம்: http://www.musugundan.com/villages

குறிப்பு: அலுவலத்தில் இருப்பின் ஒலிபெருக்கியின் அளவை சரிபார்த்து கொள்ளவும், அனுமதியில்லா ஒலியினை மேலே குறிபிட்டுள்ள சுட்டிகள் ஏற்படுத்தலாம்.

வெள்ளி, ஜூலை 08, 2011

மேலத்தெரு பள்ளிகொடுத்தான் வீடு சின்னையன் வளர்மதி அவர்களுக்கு பேத்தி பிறந்துள்ளது
பிறந்தவர் பெயர் (வைக்கபட்டிருந்தால்): திக்ஷித்தா
வீட்டின் பெயர்: பள்ளிகொடுத்தான் வீடு
பெற்றோர்களின் பெயர்: திரு. முருகபிரகாஷ் & திருமதி. கவிதா
பிறந்த நாள்(தோராயமாக): மே 28 2011
பிறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: ஐக்கிய இராட்சியம்


தாயும் குழந்தையும் நலம்.
குடும்பத்தினருக்கு இணையகுழுவின் பாராட்டுக்கள்.வியாழன், ஜூலை 07, 2011

மேலத்தெருவில் அய்யனார் கோவில் கட்ட திட்டம்

காசாங்காடு பெரமநாத அய்யனார் திருக்கோயில் திருப்பணி தொடங்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலத்தெரு, வடக்குத்தெருவைச்சேர்ந்த சில குடும்பத்தினரும் குலதெய்வமாக வழிபடுவதால் அவர்களும் இணைந்து இந்த திருப்பணியை செவ்வனே செய்ய இருக்கிறார்கள். குலதெய்வ வழிபாட்டை காசாங்காட்டிற்குள்ளேயே கொண்டு வரும் மேலத்தெரு மற்றும் வடக்குத்தெரு வாசிகளின் முயற்சி வெற்றிபெற கிராமத்தினர் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்ற உறுதியை அளித்து வரவேற்போம்.

மேலத்தெரு, வடக்குத்தெரு மக்களால் ஒன்றுகூடி கிராமத்தில் கோவில் எழுப்ப வேண்டுமென முடிவு செய்யபட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள இடத்தில் அந்த கோவில் கட்ட உள்ளதாக திட்டமிடபட்டுள்ளது. இந்த நிலப்பகுதி மேலத்தெரு சுந்தாம்வீட்டை சேர்ந்ததாகும். கிராமத்தில் சாலை வசதிக்காக இந்த நிலபகுதி துண்டுபட்டது. அதன் பின்னர் பொது மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்த இந்த பகுதி தற்போது அந்த இடத்தில் கோவில் எழுப்ப பயன்படுகிறது.

இந்த கோவில் கருப்பூராம் வீட்டை சேர்ந்த திரு. திருநாவுக்கரசு தலைமையில் கட்ட திட்டமிடபட்டுள்ளது.

கிராமத்தில் ஒரு நல்ல தேவைக்காக அந்த இடத்தை வழங்கிய குடும்பத்தினர்களுக்கு இணைய குழுவின் சார்பில் நன்றிகள்.


நடுத்தெரு குட்டச்சிவீடு தம்பிஅய்யன் ஜெயம் திருமண அழைப்பு

திருமண தேதி மற்றும் நேரம்: 10 சூலை 2011 10:30 க்கு மேல் 12:00 க்குள்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், காசாங்காடு

மணமகன் பெயர்: செல்வன். அருள்குமார் தம்பிஅய்யன்
மணமகன் வீட்டின் பெயர்: குட்டச்சிவீடு, நடுத்தெரு
மணமகன்  பெற்றோர் பெயர்: 
திரு. தம்பிஅய்யன் & திருமதி. ஜெயம்
மணமகன்  தொழில் விபரம்: சிங்கப்பூர் நிரந்தர வாசி 

மணமகள் பெயர்: செல்வி. பார்கவி
மணமகள்  ஊரின் பெயர்: வடக்கு வாட்டகுடி
மணமகள்  பெற்றோர் பெயர்: திரு. மகேந்திரன் & திருமதி. வைடூரியம்
மணமகள்  தொழில் விபரம்: கணினி திட்ட அமைப்பாளர் B,Sc 

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்:  http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam
முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.