அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

ஞாயிறு, ஏப்ரல் 15, 2012

நிர்வாகம் எவ்வழியோ - மக்கள் அவ்வழி

கிராமத்தில் உதயமாகும் பதாகைகள்.


சில நாட்களுக்கு முன்பு நிர்வாகம் கொண்டாடிய பிறந்த நாள் விழா.

http://news.kasangadu.com/2012/03/blog-post_08.html


வெள்ளி, ஏப்ரல் 13, 2012

இனிய நந்தன தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


கிராம மக்களுக்கு இணைய குழுவின் இனிய நந்தன தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வியாழன், ஏப்ரல் 12, 2012

நடுத்தெரு ஏவலாம் வீடு கோவிந்தன் நாகம்மாள் அவர்களுக்கு பேரன் பிறந்துள்ளார்


பிறப்பின் பால்: ஆண்
வீட்டின் பெயர்: ஏவலாம் வீடு
பெற்றோர்களின் பெயர்: திரு. ராமதாஸ் & திருமதி. மீனா
பிறந்த நாள்(தோராயமாக): ஏப்ரல் 9
பிறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: பட்டுக்கோட்டை

தாயும் சேயும் நலம்.

இணையகுழு அக்குடும்பத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

அய்யனார் திருக்கோவில் நந்தன வருடபிறப்பு திருவிழா அழைப்பிதழ்


கிராம மக்களுக்கு இணைய குழுவின் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அருள்மிகு ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பால் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனார் திருக்கோவில் சித்திரை வருடபிறப்பு திருவிழா அழைப்பிதழ்
காசாங்காடு மன்னங்காடு ரெகுநாதபுரம்

அன்புடையீர்,

நிகழும் மங்களகரமான நந்தன வருடம் சித்திரை மாதம் 1 தேதி, 13/04/2012 வெள்ளிகிழமை பூராட நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பாள் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனாருக்கு சிறப்பு அபிஷேக ஆரதனை உள்ளது.

அது சமயம் பக்த கோடிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பாள் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனார் சுவாமி அருள்பெற வேண்டுகிறோம்.

நிகழ்ச்சி நிரல்:
நந்தன சித்திரை மாதம் 1, 13/04/2012 வெள்ளிகிழமை:

காலை 9 மணி:
சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.

மாலை 5 மணி அளவில்:
காவடி, பால்குடம், மாவிளக்கு அர்ச்சனைகள் நடைபெறும்.
இரவு 9 மணி:
சிறப்பு ஆராதனை பிரசாதம் வழங்குதல்.

பால் குடம் எடுப்பதற்கு 100 ரூபாய் வசூல் செய்யப்படும்.
வசூல் செய்யப்படும் தொகைக்கு பின்வரும் சேவை மற்றும் பொருட்கள் வழங்கப்படும்.
மாலை 
இலை
சூடம்
சாம்பிராணி
மஞ்சள் துணி
வாழைப்பழம்
மேளம், தாரை, தப்பட்டை விளம்பரகார்

இங்ஙனம்,
கிராமவாசிகள்
காசாங்காடு, மன்னங்காடு, ரெகுநாதபுரம்


கிராமத்தில் ஆன்மீக உணர்வை வளர்க்கும் நாட்டண்மைகளுக்கு இணைய குழுவின் நன்றிகள்.

புதன், ஏப்ரல் 11, 2012

நிலநடுக்கம் - வதந்தி


அமெரிக்க நிலநடுக்க கண்காணிப்பு அமைப்பின் படி தமிழ்நாட்டிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் நில நடுக்கம் ஒன்றும் ஏற்படவில்லை. 


இந்தோனிசியாவில் உள்ள சுமாத்ரா தீவில் (கடலுக்கடியில் 22 கிலோமீட்டர் ஆழத்தில்) ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அதன் தாக்கம் சுனாமியாக ஏற்பட வாய்ப்புள்ளது. 

நிலநடுக்கம் நடைபெற்ற அருகாமையில் இருக்கும் சிங்கப்பூர் (வெளிநாட்டில் காசாங்காடு மக்கள் அதிகம் வாழும் நாடு) அளித்துள்ள தகவல்.


இந்தோனிசியாவில் தற்போது ஏற்பட்ட நிலடுக்கம் பற்றிய விபரங்கள் இங்கே.


நிலநடுக்க வதந்திகள் தகவல் கிடைத்தால் மேற்கூறிய சுட்டிகளில் சென்று உண்மையான நிலவரம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

வதந்திகளை தவிர்ப்போம்.