அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

வியாழன், மார்ச் 31, 2011

பட்டுகோட்டை தொகுதி வேட்பாளர்கள் - சட்டமன்ற தேர்தல் 2011


தமிழக சட்டமன்ற தேர்தல் 2011  மொத்தம் 9 பேர் போட்டியிடுகின்றனர். காசாங்காடு கிராம மக்கள் இவர்களில் ஒருவருக்கு தான் வாக்களிக்க வேண்டும்.

அவர்களின் பெயர் பட்டியல்.
  1. தேசிய அளவில் அங்கிகரித்த கட்சிகளின் வேட்பாளர்கள்:
    1. இன்பரசன் சிதம்பரம், ஆவிட நல்ல விஜயபுரம் [பகுஜன் சமாஜ் கட்சி] [யானை]
    2. முரளிகணேஷ் வைத்தியநாதன், பட்டுக்கோட்டை [பஜக] [தாமரை]
    3. ரெங்கராஜன் ராமசாமி, மயில்பாளையம் [இந்திய தேசிய காங்கிரஸ்] [கை]

    மாநில அளவில் அங்கிகரித்த கட்சிகளின் வேட்பாளர்கள்:
    1. சரவணன் அண்ணாமாலை, நாஞ்சிக்கோட்டை [இந்திய ஜனநாயக கட்சி] [மோதிரம்]
    2. செந்தில்குமார் நாடிமுத்து , பட்டுக்கோட்டை [தேசிய முற்போக்கு திராவிட கழகம்][முரசு]

    சுயேட்சை வேட்பாளர்கள்:
    1. ஐரின் அந்தோணி, அணைக்காடு [சுயேட்சை][தொலைக்காட்சி]
    2. சிங்காரவடிவேலன் ராமலிங்கம், மதுக்கூர் வடக்கு [சுயேட்சை][மெழுகுவர்த்தி]
    3. செந்தில்குமார் செல்வராஜ், பட்டுக்கோட்டை [சுயேட்சை][கூடை]
    4. யோகானந்தம் மாரிமுத்து, ஆலத்தூர் [சுயேட்சை][கோட்]
ஒவ்வொருவரும் அரசாங்கத்திடம் சமர்பித்த பிரமான வாக்குமூலம் (Affidavit) அவர்களின் பெயர்களில் சொடுக்கினால் கிடைக்கும். பிரமான வாக்குமூலம் மூலம் அவர்களின் அசையும், மற்றும் அசையா சொத்துகளின் விபரங்கள் தெரிந்து கொள்ளலாம். (உங்களின் உறவினராக இருந்தால் அவர்களின் நேர்மையும் அதில் தெரியும்)

மொத்தமாக அனைவரின் பிரமான வாக்குமூலம் வேண்டுமெனின் இங்கே சொடுக்கவும்.

தேர்தல் 2011 பற்றிய தகவல்கள்:  http://rti.kasangadu.com/tertal/2011-manila-cattaperavai

தகவல் உதவி: தேர்தல் ஆணையம், சென்னை

செவ்வாய், மார்ச் 29, 2011

கிராமிய வேலை வாய்ப்பு திட்டம் - 10.1 இலட்சம் (2010-2011)


கிராமிய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 2010-2011  வருடத்திற்கு 10.1  இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவை கீழ்க்கண்ட வேலைகளுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

  1. அனைத்து ஏரி பாசன வாய்க்கால்களை தூர் வாருவதற்கும், துப்புரவு பணிக்காகவும் - 3.4 இலட்சம் (2913012010/IC/59892)
  2. மஞ்சுகுப்பன் ஏரி, குண்டுக்கட்டை ஏரி தூர் வாருவதற்கும், துப்புரவு பணிக்காகவும் - 3.7 இலட்சம் (2913012010/WH/83398)
  3. மஞ்சுகுப்பன் ஏரி கரையோர சாலை பணிக்காக - 3 இலட்சம் (2913012010/RC/33710)
சான்றாதரவு:

சனி, மார்ச் 26, 2011

வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கைகள்


எவர் பதவிக்கு வந்தாலும் எங்களின் வேண்டுகோள்:

கொடுக்கும் இலவச பொருட்களை அரசாங்கமே நேரடியாக அளிக்க வேண்டாம். ஏனெனில் இவை தர மட்டத்தில் கீழ் தரமாகவே உள்ளது. அரசாங்கம் அளிக்கும் அரிசியும் சரி மற்ற உணவு பொருட்களும் தரத்தில் குறைவாகவே (கடைசி மட்ட தரம்) உள்ளது. எனவே பொருட்களுக்கான பற்றுரிமைச் சீட்டு (Coupon) கொடுக்கவும். அருகாமையில் உள்ள கடைகளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்கள்  விருப்பபடி அந்த பொருட்களை வாங்கி கொள்வார்கள். இதன் மூலம் ஒவ்வொரு கடைகளில் விற்பனை அதிகரிக்கும், அரசாங்கம் கொடுக்கும் சலுகை திருப்திகரமாக குடும்பங்களை போய் சேரும்.

இவ்வாறே வெளிநாடுகளில் முறையாக குடிமகன்களின் அரசாங்க சலுகைகள் கையாளபடுகின்றது.


தற்போதைய முறைகளில் செய்வது அரசாங்க முறைகேடுகள் அதிகம்.  (இதற்காக தான் இந்த சலுகைகள் வழங்கபடுகின்றதா என்பது தெரியவில்லை)  இந்திய அரசாங்கத்தின் பணம் வீண் செய்யபடுவதே அதிகம். முறைகேடுகள் செய்யபடுவது மட்டுமன்றி அதை விசாரிப்பதற்கு விசாரணை குழு போன்று மேலும் மேலும் பணம் வீணாகின்றது. வருடங்கள் பலம் ஆகியும் பல முறைகேடுகளுக்கு முடிவே காண்பதில்லை.

திராவிட முன்னேற்ற கழகம்:

  1. இலவச கிரைண்டர் அல்லது மிக்சி வழங்கப்படும்.
  2. அரசுக் கல்லூரிகளில் படிக்கும் அனைத்துப் பிரிவு மாணவ, மாணவியர்களுக்கும் இலவச மடி கணினி வழங்கப்படும்.
  3. 58 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் அரசு உள்ளூர் பஸ்களில் இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்துவோம்.
  4. பரம ஏழைகளுக்கு 35 கிலோ அரிசி இலவசம்.
  5. மகளிர் சுய உதவிக் குழுவுக்கு ரூ.4 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும். அதில் ரூ.2 லட்சம் மானியமாக வழங்கப்படும்.
  6. முதியோர், ஆதரவற்ற பெண்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மாத உதவித் தொகை ரூ.750.
  7. திருமண உதவித் தொகை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்படும். 
  8. மகப்பேறு விடுப்பு 3 மாதங்கள் என்பது 4 மாதங்களாக உயர்த்தப்படும். கர்ப்பிணிகளுக்கான நிதி உதவி ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும்.
  9. கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் உதவி மானியம் ரூ.75 ஆயிரம் என்பது ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும்.
  10. நடக்க முடியாத முதியோருக்கு வீட்டுக்கே சென்று மருத்துவப் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
  11. பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக 3 சீருடைகள் வழங்கப்படும்.
  12. ஊக வணிகத்தைத் தடை செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம்.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்:

  1. ஒரு மிக்சி, ஒரு கிரைண்டர், ஒரு ஃபேன் ஆகிய மூன்று பொருள்கள் இலவசமாக வழங்கப்படும்.
  2. பள்ளியில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் இலவசமாக வழங்கப்படும்.
  3. 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர், அரசுப் பேருந்துகளில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.
  4. குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடரும் என்ற நிலையை மாற்றி பயனாளிகள் அனைவருக்கும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.
  5. சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் உதவி. அதில் 25 சதவீதம் மானியம்.
  6. முதியோர், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகளுக்கு மாத உதவித் தொகை ரூ.ஆயிரம்.
  7. திருமண உதவித் தொகையாக வழங்கப்படும் ரூ.25 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கம் தாலி செய்ய இலவசம். 
  8. இளநிலை பட்டம் அல்லது  பட்டயம் பெற்ற பெண்களுக்குத் திருமண உதவித் தொகை ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கம் தாலி செய்ய இலவசம்.
  9. குழந்தையைப் பேணி பாதுகாக்க பணிபுரியும் தாய்மார்களுக்கு மகப்பேறு காலச் சலுகையாக 6 மாத விடுமுறை, ரூ12 ஆயிரம் நிதி உதவி.
  10. அனைவருக்கும் குறைந்த விலையில், சூரிய வெளிச்சம், காற்றோட்டம் உள்ள சூரிய சக்தி மின்சார பயன்பாட்டோடு கூடிய நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்.
  11. கிராமம்தோறும் நடமாடும் மருத்துவமனை கிராமத்துக்கே வரும் உன்னத திட்டம் செயல்படுத்தப்படும் 1500  கிராமங்களில் 24 மணி நேரமும் செயல்படும் தொலைதூர மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும்.
  12. பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக 4 சீருடைகளும், காலணிகளும் வழங்கப்படும்.
  13. ஊக வணிகம் தடுக்கப்பட்டு, பதுக்கல் ஒழிக்கப்படும்.
  14. கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு உதவும் வகையில் வழங்க இருந்த விவசாயக் கருவிகளை, தி.மு.க. அரசு கொடுக்க மறுத்ததால் அத்தொழிலாளர்களுக்கு உதவுகிற வகையில் மீண்டும் விவசாயக் கருவிகளை வழங்குவோம்.
  15. வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள அடித்தட்டு குடும்பங்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும். கால்நடை வளத்தைப் பெருக்கும் வகையில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.
  16. தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினருக்கு வேலை வாய்ப்பு பெருகி உள்ள துறைகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் வேலை வாய்ப்புக்கு தகுதி உடையவர்களாக உருவாக்கப்படுவர்.
  17.  திருநங்கைகளுக்கான சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தொழில் தொடங்க ஏற்பாடு செய்து அவர்கள் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும்.
  18.  அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மும்முனை மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்படும். மின்சாரத் திருட்டை ஒடுக்க முன்னாள் ராணுவத்தினரைக் கொண்டு மின்சாரப் பாதுகாப்புப் படை அமைக்கப்படும்.

சுயேட்சையில் போட்டியிடுபவர்கள் தாங்களின் தேர்தல் அறிக்கை இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/f70fc0c42a24c6a2

செவ்வாய், மார்ச் 22, 2011

கீழத்தெரு கள்ளிகாட்டான்வீடு சந்திரசேகரன் செந்தமிழ்செல்வி இல்ல முகூர்த்த ஓலை நிகழ்ச்சி


தேதி மற்றும் நேரம்: 21.03.2011 ( பங்குனி 07 விக்ரதி  வருடம்) மாலை 6:00  மணியளவில்
எழுதும் இடம்:  காசாங்காடு, அருள்மிகு மாரியம்மன் கோவில் வளாகம்.

மண உறுதி செய்யப்பட்ட பெண் பற்றிய விபரம்:
பெயர்:  ச.கயல்விழி
கல்வி: B.Sc
வீட்டின்/ஊரின் பெயர்: கள்ளிகாட்டான்வீடு, கீழத்தெரு
பெற்றோர் பெயர்: திரு.சந்திரசேகரன், திருமதி.செந்தமிழ்செல்வி


மண உறுதி செய்யப்பட்ட ஆண் பற்றிய விபரம்:
பெயர்: சி.ஸ்டாலின்
கல்வி: B.E, MBA
வீட்டின்/ஊரின் பெயர்:  குஞ்சாயிவீடு, மேலதெரு
பெற்றோர் பெயர்: திரு. ரெ. சின்னையன், திருமதி.சி.மணிமேகலை


முகூர்த்த ஓலை நிகழ்ச்சி இனிதே நடக்க இணைய குழுவின் வாழ்த்துக்கள்.

சனி, மார்ச் 19, 2011

காசாங்காடு கிராம தேர்தல் களம் - 2011

நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் காசாங்காடு கிராமத்தின் பங்கு, மற்றும் தேர்தல் பற்றிய அரசாங்க தகவல்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

தேர்தல் நாள்: விக்ருதி பங்குனி 30  [13 ஏப்ரல் 2011] 
உட்பிரிவு: (Ward)


1. நடுத்தெரு
2. கீழத்தெரு மற்றும் தெற்குதெரு
4 . வடக்குத்தெரு மற்றும் மேலத்தெரு
(உட்பிரிவு 3 அரசு பதிவேட்டில் இல்லை)

உட்பிரிவு - 2  க்காண  வாக்கு சாவடி:
அரசு மேல் நிலை பள்ளி 


(வடக்குபார்த்தஒட்டுக்கட்டிடம்) 
மேற்குபகுதி,
காசாங்காடு 614613



உட்பிரிவு - 1,4  க்காண  வாக்கு சாவடி:
அரசு மேல் நிலை பள்ளி 
(வடக்குபார்த்தஒட்டுக்கட்டிடம்)
கிழக்குபகுதி,
காசாங்காடு 614613


வடக்கு பார்த்த ஒட்டு கட்டிடம் உள்ளதா என்பது தெரியவில்லை, ஏனெனில்  மேல் நிலை பள்ளிக் கட்டிடங்கள் அனைத்தும் புதுபிக்கபட்டுள்ளது.



காசாங்காடு கிராமத்தில் வாக்களிக்கும் தகுதி உடையோர் பற்றிய விபரங்கள்.

ஆண்கள் - 1055
பெண்கள் - 1204
----------------------
மொத்தம் - 2259
----------------------

இது பட்டுகோட்டை தொகுதிக்கு வாக்களிக்க தகுதியானவோர் 182,191 ஒப்பிடுகையில் 1.23% சதவிகிதமாகும். தஞ்சை மாவட்டம் முழுவதும் வாக்களிக்க தகுதியானவோர் 1,521,430 ஒப்பிடுகையில் 0.15% சதவிகிதமாகும்.

அது மட்டுமன்றி காசாங்காடு கிராமத்திளிரிந்து வெளிநாடுகள் சென்றவர்கள் எண்ணிக்கை அதிகம், அவர்களின் பட்டியலும் இதில் அடங்கும்.

போட்டியிடும் வேட்பாளர்கள் விபரங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும். கடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கபட்ட மக்கள் பிரதிநிதிகள் காசாங்காடு கிராமத்திற்கு என்ன செய்தார்கள், கிராம மக்களின் வாழ்க்கை தரத்தினை எவ்வாறு உயர்த்தி இருகின்றார்கள் என்பதும் பகிர்ந்து கொள்ளப்படும்.

வாக்களிக்கும் உரிமையை முழுமையாக பயன்படுத்துவோம். மேலும் சிறந்த ஆட்சியாளர்கள் மூலம் தேசத்தை முன்னேற்றமடைய செய்வோம்.

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/d33ca1a406d77e74

புதன், மார்ச் 16, 2011

நடுத்தெரு தாண்டாம்வீடு வினைதீர்த்தான் காந்திமதி அவர்களுக்கு பேத்தி பிறந்துள்ளது


பிறப்பின் பால்: பெண் குழந்தை
பெற்றோர்களின் பெயர்: திரு. மணிவண்ணன் & திருமதி. சித்ரா
வீட்டின் பெயர்: தாண்டாம் வீடு
பிறந்த நாள்(தோராயமாக): 15 மார்ச் 2011
பிறந்த இடம்: தஞ்சாவூர், தமிழ்நாடு

குழந்தையும் தாயும் நலமாக உள்ளனர்.

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு மனமார்ந்த மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறது.

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/457d89ea05639d0f

செவ்வாய், மார்ச் 15, 2011

ஜப்பான் நிலநடுக்கம் - காசாங்காடு கிராமத்தினரின் பங்கு

சமீபத்தில் ஜப்பானில் நிலநடுக்கம் நடந்தது அனைவருக்கும் தெரிந்த விடயமே. ஜப்பான் நாட்டில் வாழும் மக்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

காசாங்காடு கிராமம், கீழத்தெரு, வெல்லாம் வீட்டை சேர்ந்த திரு. பழனிவேல் அவர்கள் சில காலமாக ஜப்பானில் குடிபெயர்ந்துள்ளார். பாதுகாப்பாக இருகின்றேன் என்று தனது குடும்பத்திற்கு தொலைபேசியில் தெரிவித்ததோடு, வீட்டில் உள்ள உறவினர் அனைவரும் ஊருக்கு வரும்படி வற்புறுத்தினர். தான் வசிக்கும் நாட்டில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் தம்மால் முடிந்த உதவியை தான் வசிக்கும் நாட்டிற்கு செய்ய வேண்டும். இந்த நிலையில் ஊர் வருவது என்பதிற்கு இடமில்லை என்று மறுத்துவிட்டார்.



காசாங்காடு கிராமத்தை பெருமை படுத்தும் வகையில் தான் வசிக்கும் இடத்தில் சிரமங்கள் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில் தம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று முன் வந்ததற்கு இணைய குழுவின் வாழ்த்துக்கள். விரைவில் ஜப்பான் இந்த  சிரமமான சூழலில் இருந்து வெளிவர இறைவனை வேண்டுகிறோம்.

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/97e1c2ba953b1acf