அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

செவ்வாய், ஏப்ரல் 14, 2015

முதியவர்கள் கிராமத்தில் அநியாயமா ? - விளக்கம் தேவை


http://news.kasangadu.com/2015/04/150000.html

தொடரில் -  முகநூலில் இம்முதியவர்கள் கிராம மக்களுக்கு அநியாயம்  செய்வதாய் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான முழு விபரங்கள் தேவை. உண்மையில் இம்முதியவர்கள் கிராம மக்களுக்கு அநியாயம் செய்திருந்தால் இவர்கள் இருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை, காசங்காடு கிராமம் அல்ல.

இத்தகவல் கொடுத்த அவையாம்வீடு திரு. முருகபதி பன்னீர்செல்வம் அவர்களுக்கும், இது உண்மை என்று சொன்ன திரு. பிரேம்குமார் வீரப்பன் அவர்களுக்கும் நன்றி.

இதற்கான விளக்கமான தகவலை news@kasangadu.com  என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.


தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

கிராம மக்களுக்கு இணையகுழுவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

தமிழாண்டு தருகின்ற சித்திரைப் பெண்ணே!
அமிழ்துண்டு உனை அனைத்த காரணத்தால்
உமிழ்நீராம் உந்தனது வைகாசி பெருக்கெடுக்க!
ஆனித்தரமாக நீ ஆடிவருகையிலே
உன் தாவணியில் ஆவணியை மறைத்திட்டாய்!
இப் புரட்டாச்சியை அழிப்பதற்கு புரட்டாசியை படைத்திட்டாய்!
பிற ஐயத்தை தீர்பதற்கு ஐப்பேசியாய் மாறுகின்றாய்!
கார்குடலை கொண்டு கார்த்திகையாய் பின்னிநின்றாய்!
நின் மார் மீது கை வைத்து துணி கழித்தேன் மார்கழியாய் மார்கின்றாய்!
புடம்போட்ட தையவலே,மாசியிலே மாக்கவிஞன் படம் பிடித்தேன் நின் அழகை.
பங்குனியில் நீ எனக்கு பதுமையில் நீயேயாகும்.

கவிதை:  தீபக்குமார், குட்டச்சிவீடு, காசாங்காடு

வெள்ளி, ஏப்ரல் 10, 2015

காசாங்காடு ஞாயகாரர்கள் வயதான முதியர்வர்களிடம் பணம் 1,50,000 கொள்ளை !


காசாங்காடு ஞாயகார கமிநாட்டிகளே !

காசாங்காடு கிராமத்தில் உயிரோடு வயதான முதியவர்கள் வாழவென்றுமென்றால் 1,50,000 ரூபாய் வேண்டும் என்று ஞாயகாரர்கள் பணம் பறித்துள்ளனர்.

எதற்காக முதியர்வர்களிடம் பயமுறுத்தி பணம் பறித்தீர்கள்?

இந்த ஊரில் இனி மனிதர்கள் வாழ்வதா அல்லது சாவதா?

வாழ்வதற்காக தானே நிர்வாகத்திற்கு மக்கள் பிரநிதிகளுக்கு வாக்களித்தோம். இதற்க்கு காசாங்காடு நிர்வாகமும்  உடந்தையோ ?

உப்பு தின்று தானே வளர்ந்தீர்கள். இரண்டு நபரின் பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம் என்றால் ஞாயகார கமிநாட்டிகள் எதற்காக மறுபடியும் ஈடுபடுகிறீர்கள்?



பணம் கொடுத்ததில் உங்களின் சேவைக்காக எவ்வளவு பணம் பறித்து கொண்டீர்கள்? அல்லது வேலை இல்லாமல் அடுத்தவனின் குடும்பத்தை சீரழிக்க கிளம்பி உள்ளீர்களா?

ஒரு குடிமகனின் உரிமையில் தலையிட எவன் உங்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது ?

முறையாக அந்த பணம் திருப்பி அந்த முதியர்வர்களிடம் போய்  சேர வேண்டும். இல்லையென்றால் கிராமத்தில் நடக்கும் அநியாயம் அனைத்தும் இங்கு விவரிக்கப்படும்.

காசாங்காட்டு ஞாயகார கமிநாட்டிகளே, நீங்கள் சோற்றை திங்கீர்களா அல்லது மனிதனின் கழிவையா ?

இது கிராமமா அல்ல பணத்திற்காக பிசாசுகள் அலையும் நரகமா ?