தனி நபர் தேசிய அடையாள எண் (ஆதர் - தேசிய அடையாள அட்டை) பதிவு மற்றும் உடலியலளவு (biometrics) தகவல்களை இன்று செகரிக்கபடுகின்றது. எதிர்வரும் காலங்களில் அரசு பரிவர்த்தனைகள் அனைத்தும் இந்த எண் கொண்டு வழங்கப்படும்.
சேகரிக்கப்படும் உடலியலளவு தகவல்கள்:
முக அளவுகள்
கண்ணின் கருவிழி அளவுகள்
கைரேகை
இதனோடு தங்களின் நிழற்படமும் (இலக்கமுறை நிழற்படமாக) சேகரிக்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு அரசாங்க இணைய தளத்தை அணுகவும்: http://uidai.gov.in/
கிராம மக்கள் தவறாது பங்கு கொண்டு தாங்கள் தேசிய அடையாள அட்டைக்கான தகவல்களை பதிந்து கொள்ளுங்கள்.