அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

வெள்ளி, டிசம்பர் 31, 2010

அருள்மிகு மாரியம்மன் கோவிலில் இன்று திருவிளக்கு பூஜை

அருள்மிகு மாரியம்மன் கோவிலில் இன்று இரவு எட்டு மணிக்கு மேல் திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. பக்தகோடிகள் பங்குகொண்டு திருவிளக்கு பூஜையினை சிறப்பிக்குமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள்.

இங்ஙனம்,
காசாங்காடு கிராம திருவிளக்கு பூஜை பொறுப்பேற்று நடத்தும் கிராமவாசிகள்,
காசாங்காடு

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/71ac25ad51072f2b

செவ்வாய், டிசம்பர் 28, 2010

விவசாயிகள் தேசிய உதவி தொலைபேசி எண்: 1800-180-1551

விவசாயிகளுக்கு விவசாயம் சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளிக்க இந்திய அரசாங்கம் வருடம் 365 நாட்களும்  தொலைபேசி மூலம் சந்தேகங்களை தீர்த்து விவசாயத்தை முன்னேற்றும் நோக்கத்தில் தொலைபேசி வசதியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாய தேசிய உதவி தொடர்பு எண்: 1800-180-1551

தகவல் உதவி: திரு. சிவராமன்


கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/eb502a3a10c9938e

திங்கள், நவம்பர் 29, 2010

2014 ஆம் ஆண்டு முதல் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை

தேர்தல் ஆணையம் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை 2014 ஆம் ஆண்டு முதல் அறிமுகபடுத்துகிறது. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஒரு இந்தியனின் உரிமையை வெளிநாட்டில் இருந்தாலும் அதை நிலைபடுத்தும்  உரிமையை உச்ச நீதிமன்றத்தில் கேட்டு கொண்டதின் பெயரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

http://www.inneram.com/2010110611692/nris-can-vote-2014-expects-election-commisioner

நன்றி.

தகவல் உதவி: திரு. சிவகுமார், காசாங்காடு

வியாழன், நவம்பர் 25, 2010

கிராமத்தில் பெய்த மழையின் நிழற்படங்கள்

கிராமத்தில் இன்று கன மழை. கிராமத்தின் அழகான தோற்றங்களின்   நிழற்படங்கள்.







தகவலுக்கு நன்றி.

தகவல் உதவி: திரு. சிலம்பரசன், காசாங்காடு
கிராம விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/cfc6d7eaa7226b4e

ஞாயிறு, நவம்பர் 14, 2010

காசாங்காடு "கிராமிய வேலை வாய்ப்பு" திட்ட பணிகள்

காசாங்காடு கிராமத்தில் மத்திய அரசின் கிராமிய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடந்த வேலையின் ஒரு நிழற்படம்.



நீர் நிலையான பசுங்குளத்தில் நிறைவுபெற்ற வேலைகளின் பலனாக நீர் தேக்கத்தின் ஒரு அழகிய காட்சி.

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/ca0be820d1578ffa

வெள்ளி, நவம்பர் 05, 2010

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

காசாங்காடு கிராம வாழ் மக்களுக்கு இணைய குழுவின் தீபாவளி வாழ்த்துக்கள்.

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/460be063d91cf9bf

சனி, அக்டோபர் 30, 2010

மேலத்தெரு உதயகுமார் சரஸ்வதி இல்ல திருமணம்


திருமண தேதி மற்றும் நேரம்: விக்ருதி, ஐப்பசி 17 (03 நவம்பர் 2010) 
திருமணம் நடக்கும் இடம்: MNR திருமண அரங்கம், நாட்டுச்சாலை

பெண் அழைப்பு இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், காசாங்காடு

மணமகள் பெயர்: உ. யாசிகா, DP.T.Ed., B.A
மணமகள் வீட்டின் பெயர்:  பள்ளிகொடுத்தான் வீடு, மேலத்தெரு, காசாங்காடு
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. ப.சி. உதயகுமார் & திருமதி. உதய. சரஸ்வதி

மணமகன் பெயர்: மு. முருகானந்தம் B.P.T
மணமகன் ஊரின் பெயர்: ஆத்திக்கோட்டை
மணமகன் பெற்றோர் பெயர்: தெய்வத்திரு. வ.சு.முத்துசாமி & திருமதி. மு. பார்வதி


மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

அரசாங்க பரிவர்த்தனை: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam
தகவல் உதவி: திரு. ஞானம் சேகர்
கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/d3b990fa51509895

திங்கள், அக்டோபர் 25, 2010

பட்டதாரிகள்/ஆசிரியர்கள் வாக்காளர் பதிவு கடைசி நாள், 1 நவம்பர் 2010

தமிழ்நாட்டு சட்ட மேல் சபை வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் மையம் தயாரித்து  வருகின்றது. தங்களின் பதிவை பட்டுக்கோட்டை வட்ட அலுவலகத்திடம் சமர்பிக்கவும். வெளி ஊர்களில் இருந்தால் அங்கு உள்ள வட்ட அலுவலகத்திடம் சமர்பியுங்கள்.

பதிவு செய்ய கடைசி நாள்:  விக்ருதி, ஐப்பசி 15  [ 1 நவம்பர் 2010 ]

பட்டதாரிகளுக்கு: படிவம் 18 தமிழில் / ஆங்கிலத்தில்
ஆசிரியர்களுக்கு: படிவம் 19 தமிழில் / ஆங்கிலத்தில்

தேவையான ஆவணங்கள்: வசிக்கும் இடம் பற்றிய சான்று, பட்டம்/பட்டயம், வாக்காளர் படிவம்

ஒப்புகை: சமர்பித்த பிறகு அலுவலர் பெற்று கொண்டதன் ஒப்புகையை (படிவத்தின் கீழே இருக்கும்) பெற்று கொள்ளுங்கள்.

தகவல் உதவி: திரு. செந்தில் ஆறுமுகம், சென்னை
கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/7b08bb2d23a2a584

சனி, அக்டோபர் 16, 2010

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்

உலகெங்கும் கிராம மக்கள் கொண்டாடும் ஆத பூஜை நிகழ்ச்சியின் போது ஒப்பிவிக்கபடும் உலக நீதியின் சுட்டி இங்கே.



காசாங்காடு கிராம மக்களுக்கு இணைய குழுவின் இனிய ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.

குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/069fd37e28a3bcbc

திங்கள், செப்டம்பர் 27, 2010

70 இலட்சம் ரூபாயில் சாலை 3.8 கி.மி விரிவு படுத்துதலும் 7.0 கி.மி மேம்படுத்தலும்

 காசாங்காடு கிராமத்தில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளதால் அரசாங்கம் 70  இலட்சம் ரூபாயில் இந்த சாலையை மேம்படுத்த ஒப்பந்தபனி (Tender) அறிவித்து முடிவுபெற்று உள்ளது.

இதம் விபரம்:

ஒப்பந்த பனி சான்றாதரவு: TN.No. 8/2010-11/HDO/ Dated. 09.08.2010

முதல் 3.8 கிலோமீட்டரக்கு விரிவுபடுத்தவும்
 பிறகு 7 கிலோமீட்டருக்கு மேம்படுத்தவும்

மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள.

http://www.tenders.tn.gov.in/innerpage.asp?choice=tc5&tid=hwa49407&work=28

இது பற்றி மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள,

மின்னஞ்சல்: tnsehtry@sify.com


தொலைபேசி: 0431-2465636
 
முகவரி:
 
The Superintending Engineer (H)Pudukottai Road,
Subramaniapuram,
Tiruchirappalli - 20.
 
அணுகவும்.

குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/069fd37e28a3bcbc

ஞாயிறு, செப்டம்பர் 26, 2010

சிங்கப்பூர் தமிழ் முரசில் - தலைவர்களுக்கு நன்றி

இன்று (26/09/2010) ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் தமிழ்முரசில் காசாங்காட்டினர் சார்பில் தமிழக அரசு தென்னை விவசாயிகள் நல வாரிய உறுப்பினராக திரு.இரா.கலைச்செல்வன் அவர்களை நியமித்ததற்கு நன்றி தெரிவித்து 4-ஆம் பக்கத்தில் சிங்கப்பூர் வாழ் காசாங்காடு கிராம மற்றும் பட்டுக்கோட்டை வட்டார வாசிகளால் வாழ்த்து  செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


தகவல் உதவி: திரு. சுகுமாரன் அருணாசலம், துபாய்
கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/1872ecb0c8aeed22

சனி, செப்டம்பர் 18, 2010

மேலத்தெரு அவையாம் வீடு ராஜேஸ்வரி அன்பழகன் புதிய மளிகை கடை

மேலத்தெரு, அவையாம் வீட்டை சேர்ந்த திரு. அன்பழகன் & திருமதி. ராஜேஸ்வரி புதிதாக மளிகை கடை திறந்துள்ளார். அப்பகுதி மக்களுக்கு பரட்டையாம் வீட்டு மாவடி வந்து வாங்குவதை விட மிகவும் எளிதாக அமையும். இதன் அமைவிடம் காசாங்காடு வடக்கு நீர் நிலை தொட்டி கிழக்கு பகுதியில் அவர்களின் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது.

சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட கடை. கிராம மக்களுக்கு இவை மேலும் சிறந்த வகையில் அமைய வாழ்த்துக்கள்.

தொழில் சிறப்புற இணைய குழிவின் வாழ்த்துக்கள்.

நிழற்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.

தகவல் உதவி: திரு. சாமிநாதன், காசாங்காடு


கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/d0299da06c8f6a0c

புதன், செப்டம்பர் 15, 2010

நடுத்தெரு மேலவீடு திரு. இரா. கலைச்செல்வன் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் நலவாரியத்தின் உறுப்பினராக நியமிக்கபட்டுளார்



நமது கிராமத்தை சேர்ந்த திரு. இரா. கலைச்செல்வன், மேலவீடு, நடுத்தெரு அவர்கள் தமிழக முதல்வர் திரு. மு. கருணாநிதி அவர்களால் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் நலவாரியத்தின் உறுப்பினராக நியமிக்கபட்டுளார்.


தினகரனில் வெளிவந்த செய்தியின் பிரதி இங்கே.




தென்னை விவசாயிகள் நலவாரியத்தின் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டி.ஏ.கிருஷ்ணசாமி  மற்றும் உறுப்பினர்கள், சென்னை கோட்டையில் முதல்வர் கருணாநிதியை நேற்று சந்தித்து பேசினர். அருகில், அமைச்சர்கள் பொங்கலூர் பழனிசாமி, வெள்ளக்கோவில் சாமிநாதன்.

தகவல் மூலம்: தினகரன்
தகவல் உதவி:  திரு. அன்பழகன் வெங்கிடாசலம், கருப்பூர்
கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/cd037673dcec5bc1

திங்கள், செப்டம்பர் 13, 2010

கிராமத்திற்கு காவிரி பாசன நீர் - 2010

இந்த ஆண்டிற்கான காவிரி பாசன நீர், கடந்த 05 செப்டம்பர் 2010 முதல் நம் ஊரின் வடகாடு வாய்க்கால் வழியாக காவிரி நீர் கல்லணை கால்வாயிலிருந்து திருப்பிவிடப்பட்டுள்ளது.


தகவல் உதவி: திரு. சுகுமாரன் அருணாசலம், துபாய்
கிராம குழும விவாத சுட்டிhttp://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/f3c4c611d0c3765f

இணைய தளத்தை 412 உலக நகரங்களிலிரிந்து 61929 பக்கங்களை காண வருகை

செப்டம்பர் 3, 2009 முதல் செப்டம்பர் 2, 2010 வரை இணையதள பார்வையாளர்களின் புள்ளிவிபரங்கள். இணைய தளத்தை 412 உலக நகரங்களிலிரிந்து (54 நாடுகள்) 61929 பக்கங்களை 21604 பார்வையாளர்கள் காண வருகை புரிந்துள்ளனர்.
மேலும் சில பார்வையாளர்கள் (4944) இணையத்தில் 747 சொற்கள் மற்றும் வாக்கியங்களை தேடி நம் இணைய தளத்திற்கு வந்தார்கள் என்பதன் பட்டியல்.

https://spreadsheets.google.com/ccc?key=0At79pv5cgYSidGUtVExEamN6WW9tUG01UkNiTUpRUXc&hl=en#gid=1

இணைய சுட்டி: http://statistics.kasangadu.com/2010-am-antu/inaiyatala-pulliviparankal

மேலும் புள்ளிவிபரங்கள் வேண்டுமெனின் அதன் விரிவான விளக்கங்களை கொண்டு பகிர்ந்து கொள்ளவும்.

குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/9c36566254d48891


சனி, செப்டம்பர் 11, 2010

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

கிராம மக்களுக்கு, இணைய குழுவின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/89e33cc29e63734b

சனி, செப்டம்பர் 04, 2010

வடக்குதெரு வீரப்பன் பாப்பா இல்ல திருமணம்


திருமண தேதி மற்றும் நேரம்: விக்ருதி ஆவணி 20 (09:00 க்கு மேல் 11:00 க்குள்) [05 செப்டம்பர் 2010]
திருமணம் நடக்கும் இடம்: அருள்மிகு பலசுப்பிரமணிசுவாமி சன்னதியில், மஞ்சவயல்

மணமகன் பெயர்:  செல்வன்.  ராமசந்திரன்
மணமகன் வீட்டின் பெயர்: வடக்குத்தெரு, காசாங்காடு
மணமகன்  பெற்றோர் பெயர்: திரு. வீரப்பன் & திருமதி. பாப்பா

மணமகள் பெயர்: செல்வி. மாலினி
மணமகள்  ஊரின் பெயர்: நாட்டுச்சாலை
மணமகள்  பெற்றோர் பெயர்: திரு. செல்வமூர்த்தி & திருமதி.  மகமாயி அம்மாள்

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

தகவல் உதவி: திரு. சுகுமாரன் அருணாசலம், துபாய்

 கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/2d8b5b2f43f4693f

வெள்ளி, செப்டம்பர் 03, 2010

நடுத்தெரு வேலிவீடு வெங்கடாசலம் தனரோஜா இல்ல திருமணம்

திருமண தேதி மற்றும் நேரம்: விக்ருதி ஆவணி 20 (09:00 க்கு மேல் 10:30 க்குள்) [05 செப்டம்பர் 2010]
திருமணம் நடக்கும் இடம்: M.N.R திருமண மண்டபம், நாட்டுச்சாலை

மணமகன் பெயர்: செல்வன். விஸ்வநாதன் B.E
மணமகன் ஊரின் பெயர்: நாட்டுச்சாலை
மணமகன்  பெற்றோர் பெயர்: திரு. கணேசன் & திருமதி. கணேசன்
மணமகன் தொழில் விபரம்: பொறியாளர்

மணமகள் பெயர்: செல்வி. பிரியதர்ஷினி B.E
மணமகள்  வீட்டின் பெயர்: வேலிவீடு, நடுத்தெரு, காசாங்காடு
மணமகள்  பெற்றோர் பெயர்: திரு. வெங்கடாசலம் & திருமதி. தனரோஜா

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/716fa20a908e7158

வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010

முனியன் கோவில் கணக்கு தணிக்கை விபரங்கள்

சோழமண்டலத்திலேயே உயரமான அருள்மிகு. முனீஸ்வரர் சாமி உருவாக காரணமாக இருந்த அனைத்து பொது மக்களுக்கும் இணைய குழுவின் நன்றிகள். காசாங்காடு கிராம மக்கள் மட்டுமன்றி சுற்றி உள்ள அனைத்து பொது மக்களின் பங்கும் இதில் அடங்கும் என்பது குறிபிடத்தக்கது.

விரிவான கணக்கு தணிக்கை விபரங்கள் தகவல் உரிமை தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

http://rti.kasangadu.com/muniyan-kovil-kanakkukal

கணக்கு சுருக்கம்:


.

1காசாங்காடு - கீழத்தெருரூ 61,752.00

2காசாங்காடு - தெற்குதெருரூ 23,050.00
.
3காசாங்காடு - நடுத்தெரு & பிலாவடிகொல்லைரூ 248,576.00
.
4காசாங்காடு - மேலத்தெருரூ 73,956.00
.
5காசாங்காடு - ரெகுநாதபுரம்ரூ 5,300.00
.
6காசாங்காடு - வடக்குத்தெருரூ 43,826.00
.
7வெளியூர்ரூ 30,551.00
.
8சிலம்பவேளாங்காடுரூ 45,700.00
.
9நாட்டுச்சாலைரூ 12,100.00
.
10மன்னங்காடுரூ 3,300.00
.
11வாட்டாகுடிரூ 2,101.00
.
12புலவஞ்சிரூ 3,000.00
.
13சிங்கப்பூர்ரூ 10,000.00
.
உண்டியல்ரூ 54,736.00
.
.
மொத்த வரவு:ரூ 617,948.00
.
.
மொத்த செலவு:ரூ 512,067.00
.
.
மீதி இருப்பு தொகை:ரூ 105,881.௦௦


மிக கடின உழைப்புடன் முயற்சி செய்து இத்திட்டத்தை வெற்றியுடன் முடித்த குழுவிற்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

நிறைகள், குறைகள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.

தகவல் உதவி: திரு. இளங்கோ அண்ணாமலை, மேலத்தெரு, காசாங்காடு
குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/949760c3f7f42edf

புதன், ஆகஸ்ட் 25, 2010

நடுத்தெரு மணிமேகலை முருகையன் இல்ல திருமணம்



திருமண தேதி மற்றும் நேரம்: விக்ருதி வருடம் ஆவணி மாதம், 20 (5 செப்டம்பர் 2010) 11:00  மணிக்கு மேல் 12:00 மணிக்குள்
திருமணம் நடக்கும் இடம் பற்றிய விவரம்: V.P.S திருமண அரங்கம், வடசேரி சாலை, பட்டுக்கோட்டை

மணமகன் பெயர்: செல்வன். கருணாநிதி
மணமகன் வீட்டின் பெயர்: ஆட்டுக்காரன் வீடு, நடுத்தெரு, காசாங்காடு
மணமகன்  பெற்றோர் பெயர்: ஐயா. முருகையன் & திருமதி. மணிமேகலை
மணமகன் தொழில் விபரம்: பொறியாளர்

மணமகள் பெயர்: செல்வி. சரண்யா
மணமகள்  ஊரின் பெயர்: புலவஞ்சி
மணமகள்  பெற்றோர் பெயர்: திரு. வேதாசலம் & திருமதி. சுலோமணி

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/173f58f1a021613b

செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

வடக்குதெரு திரு.பஞ்சநாதன்- திருமதி.திலகவதி இல்ல திருமணம்





திருமண தேதி மற்றும் நேரம்: ஆவணி மாதம் 6 ஆம் தேதி (22/08/2010) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் 
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சித் திருமண அரங்கம் 

மணமகன் பெயர்: அ.இராஜகுமார் DME., B.Tech 
மணமகன் ஊரின் பெயர்: மன்னங்காடு-வடக்கு 
மணமகன் பெற்றோர் பெயர்: திரு.அருணாசலம்-திருமதி.பஞ்சாட்சரம் 
மணமகன் தொழில் விபரம் (இருந்தால்): பொறியாளர் 
மணமகன் தொடர்பு எண்: 9943759093 

மணமகள் பெயர்: ப.தீபா D.Pharm
மணமகள் வீட்டின்/ஊரின் பெயர்: வெள்ளேரியன்வீடு, வடக்கு தெரு 
மணமகள் பெற்றோர் பெயர்: திரு.பஞ்சநாதன்-திருமதி.திலகவதி 
மணமகள் தொழில் விபரம் (இருந்தால்): மருந்தாளுநர் 

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்
  
தகவல் உதவி: திரு. சுகுமாரன் அருணாசலம், துபாய்
கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/8a6ff3bae3d6bfd1

ஞாயிறு, ஆகஸ்ட் 15, 2010

அறுபத்து நான்காம் சுதந்திர தின வாழ்த்துக்கள்

கிராம மக்களுக்கு இணைய குழுவின் இனிய அறுபத்து நான்காம் சுதந்திர தின வாழ்த்துக்கள். முழுமையான சுதந்திரத்தை ஒவ்வொரு இந்தியனும் அனுபவிக்க வழி வகுப்போம். காசாங்காடு கிராமம் முன்னோடியாக அமைய உறுதுணையாக இருப்போம்.

(2010) சுதந்திர தின விழாவில்:
பிரதமரின் ஆங்கில உரையின் அசல் தகவல்கள்: http://www.ndtv.com/article/india/complete-text-of-pm-s-independence-day-address-44512
மாநில முதலமைச்சரின் தகவல்கள்: http://www.dinamani.com/edition/print.aspx?artid=287927

கடந்த ஆண்டு (2009) சுதந்திர தின விழாவில்:
பிரதமர் ஆற்றிய உரை: http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=107064&SectionID=128
மாநில முதலமைச்சர் ஆற்றிய உரை: http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0908/15/1090815024_1.htm

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/58796110c92e5063

ஞாயிறு, ஆகஸ்ட் 08, 2010

தண்டோரா: மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு

இன்று காலை அருள்மிகு மாரியம்மன் கோவில் உண்டியல் திறக்கபடுகின்றது. கிராம மக்கள் பங்கு கொண்டு காணிக்கைகளின் விபரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.  இந்த தகவல் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

தகவல் உதவி: திரு. கிருஷ்ணன், காசாங்காடு


கிராம குழு விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/949dbf4b4670aa92

திங்கள், ஆகஸ்ட் 02, 2010

அருள்மிகு மின்னடியார்,அருள்மிகு நொண்டிமுனியன் திருப்பணி

இன்று (02/08/2010) இரவு 7.00 மணியளவில் காசாங்காடு அருள்மிகு முனீஸ்வரர் ஆலயத்தில் 11 அடி உயரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மின்னடியார் மற்றும் 7 அடி உயரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு நொண்டி முனியன் சாமி சிலைகளின் கண்திறப்பும், சுடுமண்ணால் செய்த அருள்மிகு முனீஸ்வரர் சாமி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு முனீஸ்வரர் ஆலயத்தில் நிலைநிறுத்தப்பட்டு கண்திறப்பு மற்றும் சிறப்புவழிபாடும் செய்யப்பட உள்ளது. அது சமயம் பக்தகோடிகளும் மெய்யன்பர்களும் தவறாது கலந்துகொண்டு முனீஸ்வரர் அருளைப் பெற்றுய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இங்ஙனம்,
ஆலய பொதுநிர்வாகக்குழு மற்றும் கிராமவாசிகள்

தகவல் உதவி: திரு. சுகுமாரன் அருணாசலம், துபாய்
கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/1fd2b6bdac69fb1e



வெள்ளி, ஜூலை 30, 2010

அப்பாதுரை செவநாது அம்மாள் இல்ல பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ்

இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், காசாங்காடு
தேதி மற்றும் நேரம்: விக்ருதி, ஆடி மாதம் 16 (1/8/2010) ஞாயிற்றுகிழமை, 10:30 முதல் 12:00  க்குள்
வீட்டின் பெயர்: அவையாம்வீடு, மேலத்தெரு

நீராட்டு விழா செல்வி: பவித்ரா இராமச்சந்திரன்
பெற்றோரர்கள்: திரு. இராமச்சந்திரன் & திருமதி. ரெங்கநாயகி
பாட்டன் பாட்டி: ஐயா. அப்பாதுரை & அம்மையார். செவநாது அம்மாள்

அன்புடன் அழைக்கும் நீராட்டு விழா செல்வியின் சகோதரர் மணிகண்டன் இராமச்சந்திரன்.


கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/160abfecb01ff438

செவ்வாய், ஜூலை 27, 2010

முசுகுந்தன் குடும்பநலக் குழுவின் குடும்பதின விழா - 2010

முசுகுந்தன் குடும்பநலக் குழு 2010
சிங்கப்பூரில் வாழும் முசுகுந்த நாட்டைச்சேர்ந்தவர்களால் தொடங்கி "முசுகுந்தன் குடும்பநலக் குழு" நடத்தப்பட்டு வருகிறது. இதன் குடும்பதின விழா- 2010, கடந்த 25/07/2010 அன்று மாலை 4.00 மணியளவில் சிங்கப்பூர் டெசன்சன் சாலையில் உள்ள சிலோன் விளையாட்டு மையத்தில் நடைபெற்றது.

அதனை முன்னிட்டு குழந்தைகள் பெரியவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகளும், குழந்தைகள் பங்கேற்ற பாட்டு மற்றும் பேச்சு நிகழ்சிகளும் பரிசளிப்பும் அரங்கேறின. தொடர்ந்து முசுகுந்த நாட்டைச்சேர்ந்த சிங்கப்பூர் பெரியவர்களின் கலந்துரையாடல்கள் நடைபெற்றது. பின்பு அனைவருக்கும் சுவையான விருந்து கொடுக்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை முசுகுந்தன் குடும்பநலக்குழு சிறப்பாகச் செய்திருந்தது.

நிகழ்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.

தகவல் & நிழற்பட உதவி: திரு. சுகுமாரன், துபாய்
கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/7cfa8ae708cec2b7

கிராமத்தில் தற்போது நடைபெறும் பணிகள்

பசுக்குளத்தில் மழைநீர் சேமிப்புத்திட்டத்தின் கீழ் குளம் ஆழப்படுத்தப்பட்டு அதன் நடுவில் கான்க்ரீட் கலவையினாலான சுவற்றுடன் கூடிய நீர்சேமிக்கும் வகையில் ஒரு அமைப்பினை ஏற்படுத்தியுள்ளனர். அதன் கிழக்குக்கரையில் ஒரு படித்துறை புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது.

மஞ்சுகுப்பன் ஏரியில் ஊரகவேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ஆழப்படுத்தும் பணி நம் ஊரைச் சார்ந்தவர்களால் செய்யப்பட்டுவருகிறது.

மேலும் மஞ்ச்க்குப்பன் ஏரியின் மழைவெள்ளத்தால் உடைந்த மதகு கடந்த ஆண்டு புதிதாகக்கட்டப்பட்டது. அதன் உயரம் முன்பு இருந்ததைவிட குறைவாக கட்டப்பட்டிருந்தது. இதனை அரசுகவனத்திற்கு கொண்டுவரப்பட்டு மீண்டும் பழைய உயரத்திற்கு உயர்த்தவும் இதன் மூலம் ஏரியின் கொள்ளளவை அதிகப்படுத்தி நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தப்ப்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.



இது சம்பந்தமாக நிகழ்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.


தகவல் & நிழற்பட உதவி: திரு. சுகுமாரன், துபாய்
கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/58b689921cacdce5

சனி, ஜூலை 17, 2010

வருமுன் காப்பீட்டு திட்டம்



இன்று கிராமத்தில் அரசாங்கத்தால் வருமுன் காப்பீட்டு திட்ட மருத்துவ முகாம் காலை 09:00 முதல் நடைபெறுகின்றது.  கிராம மக்கள் அனைவரும் பங்கு கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல் உதவி: திரு. குலோத்துங்கன், பட்டுக்கோட்டை

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/6236168b4a845e67

வெள்ளி, ஜூலை 16, 2010

வைத்திலிங்கம் நல்லம்மாள் இல்ல திருமணம்


திருமண தேதி மற்றும் நேரம்: 32 ஆனி விக்ருதி (16 சூலை 2010) வெள்ளிகிழமை 09:30 மேல் 10 :30 மணிக்குள்
திருமணம் நடக்கும் இடம்: பூங்கொடி திருமண மண்டபம், அதிரை ரோடு, மதுக்கூர்


மணமகள் பெயர்: செல்வி. சுமதி
மணமகள்  வீட்டின் பெயர்: லெட்சுமான்வீடு

மணமகள்  பெற்றோர் பெயர்: திரு. வைத்திலிங்கம் & திருமதி. நல்லம்மாள்

மணமகன் பெயர்: செல்வன். ராஜபாண்டியன்
மணமகன் ஊரின் பெயர்: மூத்தாகுருச்சி
மணமகன்  பெற்றோர் பெயர்: திரு. திருநாவுக்கரசு & நினைவில் வாழும். சிந்தாமணி

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.



கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/1b56c634da067735

திங்கள், ஜூலை 12, 2010

குழந்தைசாமி ரெத்தினத்தம்பாள் இல்ல திருமணம்


திருமண தேதி மற்றும் நேரம்: விக்ருதி ஆணி 31 [15 சூலை 2010], வியாழக்கிழமை
திருமணம் நடக்கும் இடம்:  கோமள விலாஸ் ராஜூ திருமண மஹால், பட்டுக்கோட்டை

மணமகள் பெயர்: செல்வி. பிரியங்கா
மணமகள்  வீட்டின் பெயர்: கருப்பூராம்வீடு, மேலத்தெரு
மணமகள்  பெற்றோர் பெயர்: திரு. கென்னெடி & திருமதி. வெற்றிச்செல்வி


மணமகன் பெயர்: செல்வன். முத்துமகேஷ்
மணமகன் ஊரின் பெயர்: நடுத்தெரு, ஆலத்தூர்
மணமகன்  பெற்றோர் பெயர்: திரு. அருணாசலம் & திருமதி. பொன்மொழி
மணமகன் தொழில் விபரம் (இருந்தால்): மருத்துவர் (காது, மூக்கு தொண்டை நிபுணர்)

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.


கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/3138ba2298370dff

சனி, ஜூலை 10, 2010

அருள்மிகு முனீஸ்வரர் கண்திறப்பு - நிழற்படங்கள் - செய்திகள்


(மேலும் தெளிவாக தெரிய ஒவ்வொரு நிழற்படத்தின் மீது சொடுக்கவும்)

முனீஸ்வரர் - மேலோட்ட பார்வை 

பொது மக்களின் பார்வைக்கு கண் திறக்கும் முன், தன் முகத்தை தானே பார்த்து கொள்ளும் முனீஸ்வரர் சுவாமி.

தினசரி நாழிதள்களில் வந்த செய்திகள்:




நன்றி.

தகவல் & நிழற்பட உதவி: திரு. சுகுமாரன் அருணாசலம், துபாய்
கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/1777d29caf7b37ab

சனி, ஜூலை 03, 2010

கிராமத்தில் உலாவரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவங்கள்

உலகம் முழுவதும் 2010 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து கொண்டிருகின்றது. கிராமத்தில் தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து கொண்டிருகின்றது. அந்த படிவங்களின் சுட்டிகள்.

மக்கள் தொகை பதிவேடு படிவம்: 

http://www.censusindia.gov.in/2011-Schedule/Shedules/NPR%20Tamil.pdf

வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு படிவம்:

http://www.censusindia.gov.in/2011-Schedule/Shedules/Houselist%20Tamil.pdf

தமிழில் படிவங்கள் வெளியுட்டுள்ளதை கண்டதும் மிக்க மகிழ்ச்சி.

அதில் தமிழில் விளங்காத வார்த்தைகள் பின் வருமாறு:

மக்கள் தொகை பதிவேடு படிவத்தில்:


தாலுகா:
வீட்டுப்பட்டியல் பிளாக் எண்:
வார்டு எண்:

வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு படிவத்தில்:

தாலுகா:
வீட்டுப்பட்டியல் பிளாக் எண்
வார்டு எண்:
சென்சஸ் வீட்டு எண்:
ஷே. வகுப்பு
ஷே. பழங்குடி
ரேடியோ / டிரான்சிஸ்டர்:
இன்டர்நெட்-இணைப்புடன்:
சைக்கிள்:
ஸ்கூட்டர் / மோட்டார் சைக்கிள்  / மொபெட்:
கார் / ஜீப் / வேன் :
சிமெண்ட்:
மொசைக் / தரை ஓடுகள்:
பிளாஸ்டிக் / பாலிதீன்:
கைபம்பு:

ஆங்கிலேயன் நம் நாட்டை தெளிவாக ஆண்டுள்ளான் என்பதற்கு இதுவே சாட்சிகள்.

கம்பன் கட்டுத்தறியும் கவிபாடும், உலக அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் போன்ற எண்ணற்ற தமிழ் புலவர்கள் பெருமை அடைய மொழியை நமது அரசாங்கம் தமிழ் மொழியின் தரத்தை இது போன்ற படிவங்கள் மூலம் குறைகின்றது.

முறையான மொழிபெயர்ப்பாளர்கள் அரசாங்கத்தில் இல்லையெனில், எங்கள் கிராமத்தில் இருந்து வேலையற்றோரை வேலைக்கு கொடுத்து  நியமியுங்கள். அரசாங்கத்தில் இது போன்ற மொழி கலவை தவறுகள் ஏற்படாமல் இருக்க உதவி புரிகின்றோம்.

அமெரிக்க அரசாங்கத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு படிவத்தில் எதாவது தமிழ் எழுதப்பட்ட ஆங்கில வார்த்தைகள் இருகின்றதா என்று தேடி பார்த்தோம்.


மற்ற நாடுகளில் தமிழ் மொழி நல்ல முறையில் தான் பயன்படுத்தபடுகின்றது. இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் தான், அதுவும் சங்கத்தமிழை மக்களுக்கு புகட்டும் அரசாங்கத்தில் பயன்படுத்தப்படும் படிவங்களில் தான் தமிழ் மொழியின் தரம் கீழே தள்ளபடுகின்றது.

இறைவன் தான் இது போன்று மொழி கொண்டு மக்களை ஏமாற்றும் திட்டங்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். மக்கள் கேட்பதாக தெரியவில்லை. ஏனெனில் இங்கு அரசியல் செய்வதற்கே பயன்படுத்தபடுகின்றது மக்கள் நலனுக்காகவோ அல்லது மொழி வளர்சிக்க்காகவோ பயன்படுத்துவதாக தெரியவில்லை.

வாழ்க ஜனநாயகம் !

தகவல் உதவி:  திரு. கோ. வீரமணி, சென்னை
கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/60aa4cbbcf2ed09c?hl=ta_US

வெள்ளி, ஜூலை 02, 2010

அருள்மிகு முனீஸ்வரர் கண்திறப்பு மற்றும் பொதுச்சிறப்பு அழைப்பிதழ்


அருள்மிகு முனீஸ்வரர் கண்திறப்பு மற்றும் பொதுச்சிறப்பு அழைப்பிதழ்    
அன்பார்ந்த பக்தகோடிகளே! மெய்யன்பர்களே!!
நிகழும் விக்ருதி ஆண்டு ஆனி மாதம் 21 ஆம் நாள் (07 சூலை 2010) திங்கட்கிழமை காலை மணி 9.00க்கு மேல் 10.30குள் சோழமண்டலத்திலேயே உயரமான அருள்மிகு. முனீஸ்வரர் சாமி கண்திறப்பும் கிராமபொதுச்சிறப்பும் நடைபெற உள்ளது. அதுசமயம் பக்தகோடிகளும் மெய்யன்பர்களும் தவறாது கலந்து கொண்டு முனீஸ்வரர் அருளைப் பெற்றுய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு: அன்று மதியம் ஆலயப்பகுதியில் அன்னதானம் நடைபெறும்.

இங்ஙனம்,
நிர்வாகக் குழு மற்றும் கிராமவாசிகள்
காசாங்காடு.  

தகவல் உதவி: திரு. சுகுமாரன் அருணாசலம், துபாய்

வியாழன், ஜூன் 24, 2010

முருகையன் இல்ல திருமணம்


திருமண தேதி மற்றும் நேரம்: விக்ருதி ஆனி 10 (24 சூன் 2010) காலை 07:30 முதல்  09:30 வரை
திருமணம் நடக்கும் இடம்: MNR திருமண மண்டபம், நாட்டுச்சாலை

மணமகள் பெயர்: செல்வி. அறிவழகி
மணமகள்  வீட்டின்/ஊரின் பெயர்: பஞ்சாம்வீடு, காசாங்காடு
மணமகள்  பெற்றோர் பெயர்: முருகையன் குடும்பத்தினர்


மணமகன் பெயர்: செல்வன். செந்தமிழ்செல்வன்
மணமகன் வீட்டின்/ஊரின் பெயர்: ஆத்திக்கோட்டை
மணமகன்  பெற்றோர் பெயர்: பெற்றோர் பெயர் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளவும்.



சிறப்பு அம்சம்: வரதட்சணை இல்லாமல் நடந்த திருமணம்

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

புதன், ஜூன் 23, 2010

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு - கிராம பங்கேற்ப்பு

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு இன்று கோவையில் துவங்கியது. கிராமத்தில் இருந்து இரண்டு பேருந்து நிறைய மக்கள் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ளார்கள்.

செம்மொழி மாநாடு இணைய தளம்: http://ulakathamizhchemmozhi.org/

அங்கு நடக்கும் நிகழ்சிகளை நேரடியாக இணையத்தில் காணாலாம். அதன் சுட்டி இங்கே.


நன்றி.

வெள்ளி, ஜூன் 18, 2010

வீராசாமி ரெத்தினம்பாள் இல்ல திருமணம்


திருமண தேதி மற்றும் நேரம்: விக்ருதி ஆனி 10 (24 சூன் 2010) காலை 07:30 முதல்  09:30 வரை
திருமணம் நடக்கும் இடம்: அருள்மிகு சுவாமிநாத சுவாமி சன்னதி, சுவாமிமலை

வரவேற்ப்பு தேதி மற்றும் நேரம்: விக்ருதி ஆனி 10 (24 சூன் 2010) மாலை 05:30 அளவில்
வரவேற்ப்பு நடக்கும் இடம்: கன்ஸ்சரஸ் திருமண மகால், தஞ்சாவூர்

மணமகன் பெயர்: செல்வன். மாரிமுத்து
மணமகன் வீட்டின் பெயர்: சுந்தாம் வீடு
மணமகன்  பெற்றோர் பெயர்: ஐயா. வீராசாமி & திருமதி. ரெத்தினம்பாள்
மணமகன் தொழில் விபரம்: மருத்துவர்

மணமகள் பெயர்: செல்வி. ஹேமா அகிலாண்டேஸ்வரி
மணமகள்  ஊரின் பெயர்: அண்ணா நகர், தஞ்சாவூர்
மணமகள்  பெற்றோர் பெயர்: திரு. சரன்தாசன் & திருமதி. சேது
மணமகள் தொழில் விபரம்: மருத்துவர்

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

வியாழன், ஜூன் 17, 2010

சுப்பிரமணியன் வளர்மதி இல்ல திருமணம்



திருமண தேதி மற்றும் நேரம்: விக்ருதி, ஆனி 3 [17 சூன் 2010]
திருமணம் நடக்கும் இடம்: 
அருள்மிகு பழனி ஆண்டவர் கோவில், பட்டுக்கோட்டை


மணமகள் பெயர்: செல்வி. ஜெயா
மணமகள்  வீட்டின்/ஊரின் பெயர்: பொன்னாங்கண்ணி வீடு, நடுத்தெரு

மணமகள்  பெற்றோர் பெயர்: திரு. சுப்பிரமணியன் & திருமதி. வளர்மதி

மணமகன் பெயர்: செல்வன். பிரபாகரன்
மணமகன் வீட்டின்/ஊரின் பெயர்: சூரப்பள்ளம்
மணமகன்  பெற்றோர் பெயர்: திரு. பிரமைய்யன் & திருமதி. தமிழ்மணி

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.


புதன், ஜூன் 16, 2010

அருணாசலம் லக்ஷ்மி இல்ல திருமணம்



திருமண தேதி மற்றும் நேரம்: விக்ருதி, ஆனி 3 [17 சூன் 2010]
திருமணம் நடக்கும் இடம்: நியூ வுட்லாண்ட்ஸ் ஹோட்டல், மயிலாப்பூர், சென்னை

வரவேற்ப்பு தேதி: விக்ருதி, ஆனி 6 [20 சூன் 2010]
வரவேற்ப்பு நடக்கும் இடம்: ஊராட்சி திருமண அரங்கம், காசாங்காடு

மணமகன் பெயர்: செல்வன். துரையரசன்
மணமகன் வீட்டின்/ஊரின் பெயர்: அம்மிவீடு, பிலாவடிகொல்லை
மணமகன்  பெற்றோர் பெயர்: ஐயா. அருணாசலம் & திருமதி. லக்ஷ்மி
மணமகன் தொழில் விபரம்: Project Manager, Polaris Software Limited. Chennai.

மணமகள் பெயர்: செல்வி. ஜெயலக்ஷ்மி
மணமகள்  வீட்டின்/ஊரின் பெயர்: அசோக் நகர், சென்னை
மணமகள்  பெற்றோர் பெயர்: திரு. ராமசந்திரன் & திருமதி. உமாமகேஸ்வரி
மணமகள் தொழில் விபரம்: Project Manager, Wipro Technologies, Chennai


மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

ஞாயிறு, ஜூன் 13, 2010

கிராமத்தில் அரசு தொழில்களின் மொழி கலவை

கிராமத்தில் அரசால் இயக்கி வரும் "BSNL" தொலைபேசி நிறுவனத்தின் தொலைபேசி சேவையின் ஒரு வாசிப்பு இது. "இந்த  தொலைபேசி எண் பிஸியாக இருப்பதால் சிறிது நேரம் கழித்து டயல் செய்யவும்". என்ன ஒரு சுத்தமான தமிழ் !!!! .

மிகவும் சிரமத்துடன் மக்களின் முயற்சியில் இந்த தொலைபேசி இணைப்பகம் காசாங்காடு கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. "தமிழ் தமிழ்" என்று மக்களுக்கு அரசு புகட்டும் முன், தனது நிர்வாகத்தில் எடுத்துக்காட்டாக அமைந்தால் நன்றாக அமையும்.

சமீபத்தில் செம்மொழிக்கு வெளிவந்த ஒளிதோற்றத்தை காண்போம். எங்கள் செம்மொழியில் முன்பு வடமொழி சொற்கள் மற்றும் எழுத்துக்கள் நிறைய புகுந்து விட்டது. தற்போது ஆங்கில சொற்கள்.



தகவல் உதவி: திரு. ராமசுப்ரமணியன், சென்னை

வியாழன், ஜூன் 10, 2010

கிராமத்தினரின் "பெண்ணின் பெருமை" என்ற கவிதை படைப்பிற்கு பாராட்டு


சிங்கப்பூரில் நடந்த மகளிர் தின சிறப்பு கவிச்சோலையில், "பெண்ணின் பெருமை" என்ற தலைப்பில் பதினைந்து கவிஞர்கள் கவிதை படைத்தனர். இருவரின் சிறந்த படைப்புகள் தேர்ந்தேடுக்கபட்டதில், காசாங்காடு கிராமத்தை சேர்ந்த கவிஞர். அமிர்தலிங்கம் அவர்கள் ஒருவராக தேர்ந்தெடுக்கபட்டார்.

அதுபற்றி தினமலரில் வெளிவந்த செய்தியின் சுட்டி இங்கே.

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=4067&Country_name=South%20East%20Asia&cat=new

அந்த கவிதை இங்கே.

http://article.kasangadu.com/kavitai/kavinar-amirtalinkam/pennin-perumai


>>>>>>>>>>>>>>>>
சிங்கப்பூர் : சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக்கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து மாதந்தோறும் நடத்தும் இலக்கிய நிகழ்வு மார்ச் 07ம் தேதியன்று மாலை மகளிர் தின சிறப்பு கவிச்சோலையாக மலர்ந்தது. கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் வரவேற்புரை நிகழ்த்தி, சிறப்புப் பேச்சாளர் புலவர் அரங்க நெடுமாறனை அறிமுகப்படுத்தினார். முதல் அங்கமாக படித்த, பிடித்த, வடித்த கவிதைகளைக் கவிஞர்கள் படித்தனர். இம்மாதக் கவிதைப் போட்டியின் தலைப்பு, பெண்ணின் பெருமை.
5 பெண்பாற் கவிஞர்கள் உள்ளிட்ட பதினைந்து கவிஞர்கள் தங்கள் கவிதைகளைப் படைத்தனர். இவர்களில் கவிஞர் கி.கோவிந்தராசு, காசாங்காடு அமிர்தலிங்கம், சுப.சத்தியமூர்த்தி ஆகியோரின் படைப்புக்கள் இம்மாத சிறந்த கவிதைப் படைப்புகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ரொக்கப் பரிசு அளிக்கப்பட்டது. அரங்க நெடுமாறன் பரிசளித்துச் சிறப்பித்தார். கேரளக் கவிஞர் செருதுருத்தி உன்னிகிருஷ்ணன் தமது கவிதையை மலையாளத்திலும் பின்னர் தமிழிலும் படைத்தார். இவருக்குப் பொன்னாடை போர்த்திச் சிறப்பிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர் அரங்க நெடுமாறன் பெண்பாற் புலவர்கள் என்ற பொருளில் சுமார் ஒரு மணி நேரம் இசைச்சுவை கலந்த சொற்பொழிவை நிகழ்த்தி அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றார். கழகத் தலைவர் ஆண்டியப்பன் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். செயலாளர் கவிஞர்.இராம.வைரவன் நன்றி நவில, நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.
>>>>>>>>>>>>>


கவிஞர் அவர்களுக்கு காசாங்காடு இணைய குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வியாழன், ஜூன் 03, 2010

பெரியாச்சி கோவில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ்



பிள்ளையார் குளம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பெரியாச்சி கோவில் நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் இருந்தது. கீழத்தெரு திரு.கோவிந்தசாமி தலைமையில் அக்கோவில் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு  இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பொது மக்கள் அனைவரும் பங்கு கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டு கொள்கிறோம்.

தகவல் உதவி: திரு.பாலசுப்பிரமணியன், காசாங்காடு

சனி, மே 29, 2010

இந்திய நீதிமன்றங்கள், அரசின் மீது கிராம குடிமகனின் நம்பிக்கை

தினமணி நாழிதளில் சமீபத்தில் வெளிவந்த செய்திகளில் கிராம குடிமகன் தனது கருத்துக்களை தெரிவிக்கையில் இந்திய அரசாங்கத்தின் மீதும், நீதிமன்றங்கள் மீதும் உள்ள நம்பிக்கை பற்றி தெளிவாக விளக்கியுள்ளார். மேலும் இந்திய மக்களின் வரிப்பணம் எவ்வாறு அரசாங்கத்தால் செலவிடப்படுகிறது என்பதையும், நீதி மன்றத்தில் நீதி கிடைக்கும் கால தாமதத்தையும் விளக்கியுள்ளார்.

தினமணியின் அந்த செய்தி சுட்டி இங்கே,

http://dhinamalar.info/topnewsdetail.asp?News_id=1932

கிராம குடிமகனின் அதே பக்கத்தில் உள்ள கருத்துக்கள் இங்கே. (சில வரிகள் விலக்கப்பட்டுள்ளது)

 இந்திய அரசாங்கமே வருக...இவளை கைது செய்து முதல் வகுப்பு சிறையில் வைத்து,இவ விருப்பப்படி படிக்க புத்தகம் கொடுங்க,இவ விரும்புற சாப்பாட்ட போடுங்க..பேன் போட்டு விடுங்க...இந்த வழக்கு இன்னும் பத்து வருஷம் ஆனா கூட ஒரு ஸ்டெப் கூட முன்னேறாது...அது வரைக்கும் இவளுக்கு போலீஸ் பாதுகாப்பு,கோர்ட்டுக்கு போக வர என்று லட்சகணக்குல செலவு பண்ணுங்க....நம்ம சட்டம் சூப்பர் சட்டமடா சாமி... மாத்துங்கடா சட்டத்த...சுட்டு தள்ளுங்க தேச துரோகிகள....கடுமையான தண்டன இருந்தா இப்படி யாரும் செய்யமாட்டாங்க. இந்த கையாலாகாத அரசு பெருசா என்ன பண்ண போறாங்க??? விசாரணை என்கிற பெயரில் வருஷக்கணக்கா இழுத்தடிப்பாங்க,,, அதுக்குள்ளே இவ சம்பாதிச்ச பணத்தை இவளும் இவ சொந்தபந்தமும் நல்லா ஆண்டு அனுபவிசிடுவாங்க,, சீக்கிரமா ஒரு முடிவெடுத்து இவளை எல்லாம் போட்டு தள்ளுங்கய்யா,,, அப்போ தான் இந்த மாதிரி நாட்டை காட்டிகொடுகிற ...,  ஒரு பாடமா இருக்கும்,,,, ஜைஹிந்த்  
by p gnanasekaran,kasangadu,India    29-04-2010 19:52:39 IST 


வியாழன், மே 27, 2010

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா

அருள்மிகு.முத்துமாரியம்மன் திருக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா விக்ருதி வருடம் வைகாசித் திங்கள் 13 ஆம் நாள் (27/05/2010) சிறப்பாக
நடைபெற உள்ளது.

நிகழ்ச்சிநிரல்:

வைகாசி 11 (25/05/2010) முத்துமாரிஅம்மனுக்கு பூச்சொரிதல் மற்றும் உற்சவர் சாமி வெளியில் எடுத்துவைத்தல்

வைகாசி 12 (26/05/2010) முத்துமாரிஅம்மன் அன்னவாகனத்தில் மன்னங்காடு செல்லுதல் (இரவு திரைப்படம் காண்பிக்கப்படும்)

வைகாசி 13 (27/05/2010) மதியம் முத்துமாரிஅம்மன் மன்னங்காட்டிலிருந்து திரும்புதல், மாலை அம்மனுக்கு பால் காவடி, பால்குடம் எடுத்தல் மற்றும் பாலாபிஷேகம் இரவு அம்மன் வீதியுலா-முதற்சுற்று (கிராமியக்கலை நிகழ்ச்சி-தப்பாட்டம்)

வைகாசி 14 (28/05/2010) இரவு முத்துமாரிஅம்மன் வீதியுலா-இரண்டாம் சுற்று (கிராமியக்கலை நிகழ்ச்சி- தப்பாட்டம்)

வைகாசி 15 (29/05/2010) இரவு முத்துமாரிஅம்மன் முத்துப்பல்லக்கில் எழுந்தருளல் (இரவு இன்னிசைக்கச்சேரி நிகழ்ச்சி)

வைகாசி 16 (30/05/2010) இரவு முத்துமாரிஅம்மன் தெப்பதில் எழுந்தருளல் மற்றும் வானவேடிக்கை (இரவு நடன-நாட்டிய நிகழ்ச்சி)

வைகாசி 18 (01/06/2010) விடையலாற்றி உற்சவர் சாமி உள்ளே எடுத்துவைத்தல்

முத்துமாரிஅம்மன் வெளியில் எடுத்தது முதல் விடையலாற்றி உள் எடுத்து வைக்கும் வரை ஒவ்வொரு நாள் இரவும் 9 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் தீபாராதனை நடைபெறும்.

பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு அருள்மிகு.முத்துமாரிஅம்மனின் ஆசி பெற்றுச்செல்ல அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

இங்ஙனம்,
அறங்காவலர்கள் மற்றும் கிராமவாசிகள்,
காசாங்காடு.

தகவல் உதவி: திரு. சுகுமாரன், துபாய்